Pages

Back to Top

எதிர்காலம்(3)மஹாராஷ்ட்ரா பேங்க் நாங்க இருக்கும் ஊரிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலை
வில் உள்ளடங்கி இருந்தது. ரொம்பவே பட்டிக்காடு. காலை ஒரே ஒரு பஸ் சிட்டி
லேந்து வரும்.அதில்தான் அந்த ஊருக்கு வேண்டிய காய்கறிகள்,பலசரக்கு எல்லாம் வரும். திரும்ப இரவு அந்தபஸ் சிட்டி போயிடும். பேங்கே ஒரு பெட்டிக்கடை அளவுக்கு மிகவும் சின்ன ஒரு ரூமில் தான் இருந்ததுஅந்த ஊரு
 பெயர், அஹேரி(அஹோரிஇல்லைபேர்கூடயாரும்கேள்விபட்டிருக்கமாட்டாங்க
 பேங்கில் மொத்தமே 5 பேர்தான். ஒரு மேனேஜர்,ஒரு கேஷியர், ஒருக்ளர்க்,ஒரு
அட்டெண்டர்,ஒரு ப்யூன். அவ்வளவுதான்.எங்க பையன் முதல் முதலா வீட்டை
 விட்டு எல்லரையும் பிரிஞ்சு தனியா இருக்கப்போரான்.அந்தஊரில் நல்ல
 ஹோட்டலோ, மெஸ்ஸோ எதுவுமே கிடையாது. தனியாதான் சமைச்சு சாப்பிட
நும். நல்ல வேளை அவனுக்கு சமையல் எல்லாம் நல்லாவே தெரியும். அங்க
 அவன் கிளம்பினப்போ, பெட்டியில் அவனுக்கு தேவையான துணிமணிகள்,முக்
யமான சாமான்களுடன்,சமையல் செய்து சாப்பிட ஒரு திரிஸ்டவ், தேவையான
 பாத்திரபண்டங்கள் எல்லாம் ரெடி பண்ணினோம்.
அவனும் அங்கபோயி ஒரு சின்ன ரூம் வாடகைக்கு எடுத்தான், பேங்க் ஆளுன்னா நல்ல மறியாதை கொடுக்கராங்க. அதனால ரூம் ஈசியா கிடைச்சது.
10 மணிக்கு பேங்க் போகணும். காலை சீக்கிரமே எழுந்து ரூம்பெருக்கி துடைத்து
 குளித்து சமையல் பண்ணி சாப்பிட்டு, இரவுக்கும் மூடி வைத்துவிட்டு பேங்க்
போவான்.  என் மகனோ ரொம்ப சின்சியர் ஆளு. பேங்க் பற்றி
 எல்லாவேலைகளும் தேடிப்பார்த்து தெரிந்து கொள்ளும் ரகம்.எந்த டேபிளில்
உக்காந்தாலும் அந்த வேலை பற்றி நன்றாக தெரிந்து கொண்டான். மேனேஜரே
என்ன சந்தேகம் என்றாலும் இவனைத்தான் கூப்பிடுவார்.எல்லாரோடு வேலை
களையும் இழுத்துப்போட்டுண்டு செய்து கொடுப்பான்.
அப்படி இவன் இருந்ததால எல்லாரும் பிழைக்கத்தெரியாத ஏமாளியா இருக்கியேன்னு கேலி பேசுவாங்க. இவன் காதிலேயே போட்டுக்கமாட்டான்
 ரூம்லபோயித்தான் என்ன செய்யன்னு நிறைய நேரம் பேங்க்லயே இருப்பன்.
மத்யானம் 12மணிக்குத்தான் ரூமில் தண்ணிவரும். அப்ப மட்டும் ஒன் அவர்
பர்மிஷன் கேட்டுண்டு போயி தண்ணி பிடிச்சு வச்சுட்டு வருவன்.வேறு எந்த
பொழுதுபோக்குகளுமே கிடையாது. அப்ப டி, வி, லாம் வந்திருக்கலை. போனும்
கிடையாது. தனிமைதான். முதல்ல கொஞ்ச் நாள் வீட்டு நினைவு வந்துஇரவெல்
லாம் அழுதிருக்கான். அப்பரம் பழகிடுத்து தனிமை வாழ்க்கை.அப்பவே 30-வயசு
 ஆச்சு.15 வயசிலேந்து பிரச்சினைகளை சந்திது, சந்தித்து ரொம்பவேபக்குவ
பட்டுட்டான்.
எங்களுக்குத்தான் பாவம் பையன் என்ன பண்ணரானோ சரியா சாப்பிட்டானோ
எப்படி தனியா இருக்கானோன்னு மனசு பூரா கவலை இருந்தது.சரி அவனுக்கு
 ஒரு நல்ல பெண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வைக்கலாம். என்று எல்லா
 பெற்றோரும் யோசிக்கரமாதிரியே நாங்களும் யோசிச்சோம். மாசா,மாசம்
சம்பளம் வாங்கியதும் இங்கு வந்து எங்க கிட்ட சம்பளத்தைக் கொடுத்து நமஸ்
காரம்பண்ணிட்டு போவன். இந்த தடவை வரும்போது அவனிடம் இதுபத்தி பேசிடனும்னு நினைச்சோம். எங்க ஐந்து குழந்தைகளுக்குமே ஒரு வயசு
ஒன்னரை வயசுதான் வித்யாசம் இருந்தது. எல்லாருமே கல்யாண வய்சில்
இருந்தார்கள்.

20 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

it's too another different experience!

i feel listening stories from my mum!

Chitra said...

பக்கத்தில் இருந்து பேசுகிற மாதிரியே எழுத்து நடை உள்ளது.

ஹைதர் அலி said...

பகிர்வுக்கு நன்றி சகோ

//ஆச்சு.15 வயசிலேந்து பிரச்சினைகளை சந்திது, சந்தித்து ரொம்பவேபக்குவ
பட்டுட்டான்.//

இந்த விஷயத்தில் எனக்கும் அவருக்கும் பெரும் ஒற்றுமை இருக்கிறது

நான் 13 வயசிலேந்து பிரச்சினைகளை எதிர்க் கொண்டு வாழ்க்கையின் நுனுக்கங்களை தெரிந்துக் கொண்டேன்

Lakshmi said...

மாத்தி யோசி, வருகைக்கும் கருத்துக்கும்
நன்றிங்க.

Lakshmi said...

சித்ரா வருகைக்கு நன்றிம்மா.

Lakshmi said...

ஹைதர் அலி முதல் முறையா
வரிங்களா? இனி அடிக்கடி வாங்க.

கோமதி அரசு said...

உங்கள் வாழ்க்கை அனுபவம் நல்லா இருக்கு.

உங்கள் மகனின் நல்ல குணத்திறகு ஏற்றார்ப் போல் நல்ல வாழ்க்கை துணை கிடைத்து இருக்கும்.

Lakshmi said...

கோமதிஅரசு, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

உங்களுக்கு என் அன்பான நமஸ்காரங்கள்.

இன்று முதன் முதலாகத்தாங்கள் என் வலைப்பூவுக்கு வருகை தந்து என்னையும் உங்கள் வலைப்பூவுக்கு வரவழைத்ததற்கு மிகவும் நன்றி.

OFK கமேரியாவில் (Jabalpur) என் மைத்துனர் B V ராமரத்தினம் என்பவர் வேலை பார்த்தபோது, 1985 இல் நான் என் குடும்பத்துடன் காசிக்குப்போய் விட்டு நடுவில் இறங்கி ஒரே ஒரு நாள் மட்டும் அங்கு வந்து போனேன்.

உங்களுக்குக்கூட அவரைத் தெரிந்திருக்குமோ என்னவோ?
அவ்ர் மனைவி எப்போதும் மடிசார் புடவையுடன் இருப்பார்கள். ஜயலக்ஷ்மி / வாஹிணி என்று பெயர். 3 பெண்கள் + கடைசியில் 1 பையன் அவர்களுக்கு.

அதுபோல குண்டக்கல் ரயில் நிலையத்திலிருந்து ஒரு பாசிஞ்சர் ரயிலில் சென்றால் ஹகரி என்ற ஸ்டேஷன் ஒரு மணி நேரத்தில் வரும். அங்கு 1976 இல் காஞ்சி மஹாஸ்வாமிகள் முகாமிட்டிருந்தார்கள். அது சமயம் நான் ஹகரிக்கு குடும்பத்துடன் தரிஸனம் செய்ய்ப்போனேன்.

நீங்கள் சொல்லும் ஹகரியா எனத்தெரியவில்லை. நேரம் கிடைக்கும் போது மீண்டும் வந்து உங்கள் எழுத்துக்களை படிக்கிறேன்.

நான் திருச்சியில் இருக்கிறேன்.
என் ஈ.மெயில் விலாசம்:

valambal@gmail.com

ஏதேனும் சொல்லவேண்டும் என்றால் எனக்கு மெயில் கொடுக்கவும்.

அன்புடன்,
vgk

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் அனுபவங்கள் நிறைய பேருக்கு பாடம்! தொடருங்கள்.

chandru2110 said...

உங்க எழுத்து நடை மிகவும் இயல்பா இருக்கும்மா.

Lakshmi said...

திரு வை. கோ. அவர்களுக்கு. உங்க முதல் வருகை பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஜபல்பூரில் எலாருமே குவார்ட்டர்சில் தானே இருந்தோம்.ராமரத்னம் கேள்விபட்டபெயராதான் இருக்கு. வருஷம் ஆச்சு இல்லியா? முகம் நினைவில் வரலை. விவரங்களுக்கு நன்றி. அடிக்கடி வாங்கோ.

Lakshmi said...

வெங்கட் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

சந்த்ரு நன்றி.

எல் கே said...

ஹ்ம்ம் வழக்கம் போல் அம்மா அருகே அமர்ந்து கதை கேட்கும் தொனி. உங்கள் மகனின் கதை எங்களுக்கு நல்ல ஒரு அனுபவத்தை தரும்

Lakshmi said...

நன்றி கார்த்தி.

இராஜராஜேஸ்வரி said...

அனுபவப் பகிர்வு அருமை.அம்மா தொடருங்கள்.

Lakshmi said...

இராஜராஜேஸ்வரி வருகைக்கு நன்றி.

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

I really feel/see a natural experience in all most all your posts. One or the other message I will get always. Thanks for the lovely post. Expecting more!!!

Lakshmi said...

பிரனவம் ரவிகுமார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா.

Related Posts Plugin for WordPress, Blogger...