Pages

Back to Top

நாராயன்பூர்(2)நாரயன்பூர்(2)                          

ஷிவ்பூர் டோல்கேட் தாண்டியதும் சிறிது நேரத்தில் பூனா எல்லை வந்தது.
11 மணி கோவில் வாசலில் இருந்தோம். பூனா மண்ணில் காலடி வைத்ததும்
உடம்பு, மனது பூராவும் ஒரு சிலிர்ப்பு. 15 வருடங்கள் வாழ்ந்த ஊர். வாழ்க்கை
தொடங்கியதே இங்குதான். சிரிப்பும், சந்தோஷமும், சோகமும் துக்கமும் என்றுகலந்துகட்டி அனுபவங்களைத்தந்த ஊர். அந்த உணர்வுகள் எல்லாம் மனதில்தோன்றி கண்களில் கண்ணீரைத்தேக்கி விட்டது.மற்றவர்கள் பார்த்தா என்னாச்சுன்னு கேப்பார்களென்னு கண்ணிரைக்காட்டாமல் இரிக்க ரொம்ப சிரமப்பட்டேன்.பூனாவை விட்டு இப்ப 35- வருடங்களுக்கு மேலேயே ஆச்சு. ஆனாலும் கூட நம்மனதுக்கு எவ்வளவு ஞாபக சக்தி இருக்கு.

பாலாஜி கோவில் சின்ன திருப்பதி போலவே செய்திருந்தார்கள்.விஸ்தாரமாக
ஓரளவு பெரிதாகவே இருந்தது. அதே சமயம் சுத்தமாகவும் இருந்தது. எல்லாரும்செருப்பை வெளியில் போட்டுவிட்டு உள்ளே போனோம். நாங்க போன சமயம்அவ்வளவா கூட்டமில்லை. நேரா பாலாஜி சன்னிதி போயாச்சு. அரெக்டாக தீபாராதனை,ஆரத்தி சமயம். கண்குளிர தரிசனம் கிடைத்தது,பத்மாவதி தாயார் சன்னிதிகுபேரர் சன்னதி, ஆஞ்ச நேயர் சன்னதி என்று ஆனன்தமான தரிசனங்கள்.கோவிலைவிட்டு வெளியில் வரும் போது பிரசாதமாக பெரிய லட்டு எல்லாருக்குமே கொடுக்கிறார்கள். மிகவும் நல்ல சுவையான லட்டு. பிரகாரத்திலேயே உக்காந்து சாப்பிட்டு சில
போட்டோக்கள் எடுத்து பேசிண்டு இருந்தோம்.
                                           
                                          

அங்கேந்து கிளம்பி நாராயனேஸ்வர்னு ஒரு கோவில் போனோம்.மிகவும் புராதனமானகோவில்.பூரா,பூரா கல் கட்டிடம்.உள்ளே இருட்டாகவும் மிக குளிர்ச்சியுடனும் இருந்தது.
படிக்கட்டு வழியாக உள்ளே இறங்கிபோனோம். கீழே பாதாளத்தில் நல்ல கோலடன்கவசம்தாங்கிய சிவலிங்கம் அழகாக காட்சி அளித்தார். தரையில் கருப்புக்கலரில் மார்பிளில் வட்டமாக ரவுண்டாக ஒருகல் பதித்து இருந்தது. அதில் அந்த கோல்டன் லிங்கம் பிரதிபலித்தது.
அங்கு தரிசனம் முடிந்து வெளியில் வந்தோம். சிவன்கோவில் போனால் வாசலில் ஒரு நந்திபகவான் காலை மடக்கி படுத்திருப்பார்.அங்கேயும் இருந்தார். நந்தியின் காதில் நம் குறைகளைச்சொன்னால் அவர் சிவனிடம் சொல்லி நம் குறைகளைத்தீர்த்துவைப்பார் என்று ஒரு நம்பிக்கை
உண்டு. எல்லாருமே நந்தியிடம் சென்றார்கள். ஆனா பாவம் அந்த நந்தியின் காதையே காணோம்.யாரோ உடைத்திருக்கலாம்.
                                                 


அடுத்து திகம்பரார் கோவில்போனோம். அங்கு சங்கு சக்ரதாரியாக விஷ்ணுவின் தரிசனம் செய்தோம்.எனக்குத்தான் எல்லாம் விலாவாரியாகத்தெரிந்துகொள்ளும் ஆர்வம் உண்டே. அங்கேயும் சில சந்தேகங்கள். அதாவது நாராயனேஸ்வர் என்றால் விஷ்னுவைத்தானே குறிக்கும், ஆனா அங்கே சிவலிங்கமிருக்கு.திகம்பரான்னு சிவனைத்தான் சொல்வார்கள். அங்கே விஷ்னு தரிசனம் தருகிரார். ஏன் அப்படின்னு கூட
வந்தவர்களிடம் கேட்டேன் யாருக்குமே சரியான பதில் தெரியலை.சரின்னு வெளியில் வந்தோம்.அதுஒரு சின்னகிராமம்தான். கோவில் வாசலிலேயே காய்கறிக்கூடைக்காரிகள் அப்போதுதான் தோட்டத்திலிருந்து பறித்துவந்த பச்சைப்பசேல்காய்கறிகள்கீரைவகைகள்னுவியாபாரம்செய்துகொண்டிருந்தார்கள்.
லேடீஸ் சும்மா இருப்பார்களா. கூடைக்கரிகளிடம் படை எடுப்புத்தான். மும்பயில் காய்கறி விலை எல்லாம்அனைவிலை, குதிரை விலை. இங்கெ நல்ல மலிவு.அதுவும்தவிர ஃப்ரெஷா கிடைச்சுது.பச்சைப்பட்டாணி,
காலிஃப்ளவர்,குடைமிளகாய், பாலக்கீரை, வெந்தயக்கீரை, சௌளிகீரை,கொத்துமல்லிக்கிரை எல்லாமே நல்லவாசனையுடனிருந்தது. அன்று கூடைக்காரிகளுக்கு நல்ல வியாபாரம்தான் அவங்க கூடை எல்லாமே
நிமிஷமா காலி ஆச்சு. பஸ்ஸில் வந்த லேடீஸ்கைகளில்தான் கீரைக்கட்டுகளும் காய்களும் இருந்தது.அவங்களை எல்லாம் பாத்தோடன எனக்கு மாரியம்மன் கோவிலில் வேப்பிலைக்கொத்துக்கள் கைகளில்
ஏந்தி ஆடுவாங்களே அவங்களை மாதிரித்தான் தெரிந்தது.(என்ன கொழுப்பு எனக்கு)!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!         
                                                              

46 comments:

எல் கே said...

//எனக்கு மாரியம்மன் கோவிலில் வேப்பிலைக்கொத்துக்கள் கைகளில்
ஏந்தி ஆடுவாங்களே அவங்களை மாதிரித்தான் தெரிந்தது.(என்ன கொழுப்பு எனக்கு)!!!!//

ஹிஹிஹி எனக்கும் இந்த மாதிரிலாம் தோணும்

எல் கே said...

ஒருவேளை ஈசனும் விஷ்ணுவும் ஒன்று என்றுக் காட்ட இப்படி ஒரு கோவிலா

பலே பிரபு said...

//நந்தியின் காதையே காணோம்.யாரோ உடைத்திருக்கலாம்.//

நம்ம நாட்டுல எந்த பொதுசொத்துதான் உருப்படியா இருக்கு.

ஆமாம் கோவிலின் பெயர்க்காரணம் இன்னும் தெரியவில்லையா அம்மா?

Chitra said...

very nice photos... very nice post.

அப்பாவி தங்கமணி said...

//ஆனாலும் கூட நம்மனதுக்கு எவ்வளவு ஞாபக சக்தி இருக்கு//
வாஸ்துவம் தாங்க லக்ஷ்மி அம்மா...எத்தனை வருஷம் ஆனாலும் சில நினைவுகள் மறப்பதில்லை... அழகா எழுதி இருக்கீங்க உங்க பயண அனுபவத்த... கூடவா கொஞ்சம் நகைச்சுவையும் கலந்து... நன்றி

Lakshmi said...

கார்த்தி, எனக்குமட்டும்தான் அப்படில்லாம் தோனும்னு நினைச்சேன் உங்களுக்குமா, எனக்கு ஒரு சப்போர்ட்டர் இருக்காரே. ஹரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு.

Lakshmi said...

பிரபு பொதுச்சொத்தை பொதுவான சொத்தா நினைச்சுகிட்டாங்கபோல. இன்னும் கோவில் கதையை தேடிகிட்டுதான் இருக்கேன்

Lakshmi said...

தேங்க்யூ சித்.

Lakshmi said...

தேங்க்யூ சித்.

Lakshmi said...

அப்பவி தங்கமணி, வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிகள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. உங்களுடன் எங்களையும் அழைத்துச் செல்வதற்கு மிக்க நன்றி.

Lakshmi said...

வெங்கட் வாங்க. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

சிவகுமாரன் said...

நான் புனேயில் படித்த காலத்தில் பாலாஜி கோயிலும் நாரயன்பூரும் சென்றிருக்கிறேன். செப்டெம்பர் மாதத்தில் செல்லவேண்டும் பச்சை மலைகளும் சின்ன சின்ன ஓடைகளும் ரம்மியமாக இருக்கும். மறக்க முடியாத நினைவுகளை கிளப்பி விட்டீர்கள் மேடம் .நன்றி

ஜீ... said...

நல்ல பகிர்வு! நன்றி எங்களையும் தரிசனத்துக்கு கூட்டிச் சென்றதற்கு! :-)

Lakshmi said...

சிவகுமாரன் நீங்க பூனாவில்தான் படிதீர்களா? அப்போ நான் சொன்ன் இடங்கள் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும் இல்லியா?

Lakshmi said...

ஜீ,வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

vanathy said...

நல்லா இருக்கு, ஆன்ட்டி. தொடருங்கோ.

Lakshmi said...

வருகைக்கு நன்றிம்மா.

தோழி said...

ஆனாலும் கூட நம்மனதுக்கு எவ்வளவு ஞாபக சக்தி இருக்கு.//

உண்மைதான்..

சிறப்பாக இருக்கிறது பதிவு.. படங்களும் அருமை..

Lakshmi said...

இனிய தோழி, வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிம்மா.

ஹேமா said...

ஞாபகங்களைத் தொலைச்சிட்டா வெறும் ஜடம் அம்மா.ஆனா தொலைக்காம வச்சிருக்கிறதும் ஒரு வேதனைதான் என் நிலைமையில் !

Lakshmi said...

ஹேமா,வருகைக்கு நன்றி. உங்களுக்கு என்னம்மா வேதனை>?

புலிக்குட்டி said...

நல்ல;ஆன்மீகம்+பயனகட்டுரை

Lakshmi said...

புலிக்குட்டி, வர்கைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

புலிக்குட்டி said...

Lakshmi said...
புலிக்குட்டி, வர்கைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

February 8, 2011 10:04 PM/////////////////// தப்பா எழுதிடீங்க போல.வர்கைக்கும்,வருகைக்கும்.

Lakshmi said...

புலிக்குட்டி தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.இப்போ சரியா?

ஆனந்தி.. said...

ஆன்ட்டி..அற்புதமான பயண கட்டுரை..கூடவே நாங்களும் கடவுளை சேவிச்ச மாதிரி இருந்தது..அந்த பொடியன் உங்க பேரனா ஆன்ட்டி..இந்த வயசிலும் எவளவு சுறு சுறுப்பு...உங்களை நினைச்சால் பெருமையா இருக்கு ஆன்ட்டி...வாழ்த்துக்கள் சொன்னால் நல்ல இருக்காது..வணக்கங்கள் ஆண்ட்டி..

கோமதி அரசு said...

15 வருடம் வாழ்ந்த பூனா பயணம் அனுபவம் நெகிழ்வாய் இருந்தது.


பாலாஜி கோவில் பகிர்வுக்கு நன்றி.

போளூர் தயாநிதி said...

நல்ல பகிர்வு.

Thanglish Payan said...

Vice nice post..

Lakshmi said...

ஆனந்தி, அழகா பின்னூட்டம் கொடுக்குரீங்க. அவன் என் நாலாவது பேரன்.வெரிஸ்மார்ட்.

Lakshmi said...

கோமதி அரசு வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்.

Lakshmi said...

போளூர் தயாநிதி, வருகைக்கு நன்றி.

Lakshmi said...

thanglish payan.
thank you very much.

Chitra said...

Nalla post. informative :)

Lakshmi said...

chitra, thankyou very much.

Tamil Home Recipes said...

Good blog is yours.

Lakshmi said...

thank you very much.

ஞாஞளஙலாழன் said...

>அந்த உணர்வுகள் எல்லாம் >மனதில்தோன்றி கண்களில் >கண்ணீரைத்தேக்கி விட்டது

பகிர்வுக்கு நன்றிங்க. அப்படியே உணர முடிந்தது. சில நினைவுகள் வாழ்நாள் முழுவதும் கூடவே வரும், வரட்டுமே!

Lakshmi said...

ஞா ஞா ள ஙலாழன் வருகைக்கு நன்றி. உங்கபேரு டைப் பண்ண
கஷ்டமா இருக்கெ.என்ன பேரு?

Ramani said...

எங்களையும் உங்களுடன் உணர்வுபூர்வமாக
அனத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்லுகிறீர்கள்
நன்றி.தொடர வாழ்த்துக்கள்

Lakshmi said...

ரமணி சார் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்.

இராஜராஜேஸ்வரி said...

ஆனந்த தரிசனம் செய்த உணர்வைத் தந்துவிட்டீர்கள்.

Lakshmi said...

இராஜராஜேஸ்வரி தேங்க்யூம்மா.

சிவகாமி கணேசன் said...

தங்களது கட்டுரைகளை
படிக்கும்போது
மிகசிறந்த கட்டுரையாளர்
எழுதுவது போல் உள்ளது.
வாழ்த்துக்கள்!
இன்னும் நிறைய விஷயங்களைப்பற்றி எழுதவும்!
இப்போது தாங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?

பொறியாளர்.கணேசன்/கோயம்புத்தூர்

Lakshmi said...

சிவகாமிகணேசன், முதல்முறை
யா வரீங்களா. மிகச்சிறந்த
எழுத்தாளர்லாம் இல்லே. மன
சில் தோன்றுவதை எனக்குத்தெ
ரிந்தபடி எழுதரேன்.அவ்வளவுதான்மா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அடிக்கடி வாங்க.

Related Posts Plugin for WordPress, Blogger...