Pages

Back to Top

நாராயன்பூர்(3)


                                                       
நாராயனேஸ்வர்(3)

கூட வந்த ஒரு பக்தர் முகுந்தன்னு பேரு. அவர் வீட்டில் எல்லாருக்கும்
மதிய சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தார். நேரா பூனாவில் ஸ்வார்கேட்
என்னுமிடத்தில் உள்ள முகுந்த் நகர்(குல்டேக்டி) அவர் வீடு போனோம்.
சுற்றிவர பசுமையான மரங்கள் சூழ்ந்த குளுமையுடன் இருந்தது விஸ்தார
மான வீடு. வாசலில் பெரிய பந்தல் போட்டு 20. 30 சேர்கள் போட்டிருந்தார்கள்.
நாங்கள் எல்லாரும் போனதும் அவர்கள் வீட்டுப்பெண்கள் சிரித்த முகத்துடன்
இனிமையான வரவேற்பு கொடுத்தார்கள். பெரிசும், சிறிசுமாக ரெண்டு நாய்கள்
இருந்தது. பெரிய நாய் எங்களைக்கூட்டமாகக்கண்டதும் குலைக்க ஆரம்பித்தது.


                                                    

                                                 இவங்கதான் அன்னதாதா. முகுந்தன்&பிரதர்அந்த நாயை வீட்டின் பின் புறமாக கொண்டு கட்டிப்போட்டார்கள்.(ஐயோபாவம்.)சின்ன நாய் எல்லாருடனும் நன்கு விளையாடியது. கூடவந்திருந்த குழந்தைகளுக்குநாயுடன் விளையாடுவது மகிழ்ச்சியான பொழுது போக்காக இருந்தது.எல்லாரும் கை கால் அலம்பி ஃப்ரெஷ் ஆகி சாப்பிட உக்காந்தோம். பெரிய பெரியப்ளேட்களில் புலாவ், தக்காளிராய்த்தா, மெத்து, மெத்துனு பெரிசு, பெரிசாக 2, 2 சப்பாத்தி
கள் கூடவே ஆலு, ஃப்ளவர், பட்டாணி மிக்ஸ்ட் பாஜி ஜாங்கிரி என்று அமர்க்களமானசாப்பாடு. இன்னும் கொஞ்சம் போட்டுக்கோங்கன்னு அன்பான உபசரிப்பு. மனதும் வயிரும்நிறைந்தது. நாங்களே 40 பேர்வரை இருந்தோம், அவர்கள் வீட்டிலும் குறைந்தது 10 பேர்கள்இருந்தார்கள். 50 பேருக்கு சமையல் பண்ணனும்னா, அவர்கள் வீட்டு பெண்கள் எவ்வ்ளவுசீக்கிரம் எழுந்திருக்கணும்? எவ்வளவு நேரம் கிச்சனில் வேலை செய்திருக்கணும்? இதுக்கெல்லாம் ரொம்ப பெரியமனசு இருக்கணும். அவர்களிடம் இருந்தது.

                                        
                                
அவர்கள் வீட்டில் 50 வயதுமதிக்கத்தக்க ஒரு மராட்டி வேலைக்காரம்மா இருந்தாங்க. அவங்கதான் எல்லாம் பாத்துப்பாத்து ஏற்பாடுகள் செய்திருந்தாங்க. ரொம்ப ருசியான சாப்பாடு. ஒருஆளுக்கு 3 சப்பாத்தி என்று சாப்பிட்டால் கூட 50- பேருக்கு 150 சப்பாத்திகளாவது பண்ணி யிருக்
கணும். நினைக்கும்போதே மலைப்பா இருக்கு. அவர்களுக்கு வாய் வார்த்தையில் நன்றி சொல்வதுமிகவும் கம்மி. அவர்களை எல்லாம் கை எடுத்து கும்பிடனும்போல இருந்தது.அவ்வளவு அருமையான
மனிதர்கள். சாப்பிட்டு 2- மணி நேரம் அங்கியே உக்காந்து பக்கம் பக்கமா அரட்டை அடிச்சுண்டு இருந்தோம்.4.30-க்கு சுடச்சுட சாயும் கொண்டு தந்தார்கள். இரவும் சாப்பிட்டே போலாமே என்ரார்கள். ஐயோ பாம்பே
போகணூம்பா, இதுவே அதிகம் நாங்க கிளம்பரோம்னு கிளம்பினோம். தோட்டத்தை சுற்றிப்பர்த்துட்டுகிளம்பலாம் என்று சுற்றிப்பார்த்தோம். அரி நெல்லிக்கா மரம் பூரா காய் காய்ச்சு தொங்கிண்டு இருந்தது.
எல்லாருக்கும் கை நிறைய அரி நெல்லிக்கா தந்தார்கள். சுண்டைக்கா, பூச்செடிகள் என்று பசுமையானசுற்றுப்புறம் மனதுக்கு மிகவும் இதம்மா இருந்தது.
திரும்ப பஸ் ஏறி இரவு 9 மணி பாம்பே. இருட்டாயிட்டதால பஸ்ல வெளில சீனரி பாக்க முடியலை.மொத்தத்தில் மனசுக்குத்திருப்தியான பயணமாக இருந்தது. பொதுவாக நாம் எல்லாருமே ஒரு விதமான
மிஷின்லைஃப் தான் வாழ்ந்து கொண்டிருக்கோம். நம்மை சார்ஜ் பண்ணிக்கொள்ளும் விதமாக இதுபோல ஒரு சின்ன சுற்றுலாவோ., பிக்னிக்கோ மாதம் ஒருமுறை முடியலைனா இருமாதங்களுக்கு
ஏற்பாடு செய்துபோய்வந்தால் பேட்டரி சார்ஜ் செய்வதுபோல நாமும் சார்ஜ் ஆகி வரும் நாட்களைஉற்சாகமுடனும், சுறு, சுறுப்புடனும் எதிர்கொள்ள முடியும்.

27 comments:

Chitra said...

பொதுவாக நாம் எல்லாருமே ஒரு விதமான
மிஷின்லைஃப் தான் வாழ்ந்து கொண்டிருக்கோம். நம்மை சார்ஜ் பண்ணிக்கொள்ளும் விதமாக இதுபோல ஒரு சின்ன சுற்றுலாவோ., பிக்னிக்கோ மாதம் ஒருமுறை முடியலைனா இருமாதங்களுக்கு
ஏற்பாடு செய்துபோய்வந்தால் பேட்டரி சார்ஜ் செய்வதுபோல நாமும் சார்ஜ் ஆகி வரும் நாட்களைஉற்சாகமுடனும், சுறு, சுறுப்புடனும் எதிர்கொள்ள முடியும்.


...I totally agree with you.. :-)

வசந்தா நடேசன் said...

//மிஷின்லைஃப் தான் வாழ்ந்து கொண்டிருக்கோம்// உண்மை.

வெங்கட் நாகராஜ் said...

உங்களுடன் எங்களையும் நாராயண்பூர் அழைத்துச் சென்றதற்கு மிக்க நன்றிம்மா. நீங்கள் சொன்னது போல இயந்திரத்தனமான இந்த வாழ்க்கையில் நடுநடுவே இது போன்ற பயணங்கள் மிக அத்தியாவசியமாய் போய் விடுவது உண்மைதான்.

சுந்தர்ஜி said...

இந்த விதமான விருந்தோம்பல் இந்தியர்களின் அடையாளமாக இருந்தது.

அதை அறைகளுக்குள் குறுக்கிக் கொண்டு வாழும் முறைக்கு நம்மைத் தள்ளிவிட்டிருக்கிறது பொருளீட்டும் ஓட்டத்துக்ககாக எல்லாப் பண்புகளையும் விட்டுக் கொடுக்கும் செயல்.

அதை மிக அழகாகப் பாந்தமாக எழுதியிருக்கிறது உங்கள் மொழி.

அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் லக்ஷ்மியம்மா.

vanathy said...

உண்மை தான், ஆன்ட்டி. குடும்பமா எங்கையாச்சும் போனா மனசு நல்லா இருக்கும் என்பது உண்மை.

கோவை ஆவி said...

// 50- பேருக்கு 150 சப்பாத்திகளாவது பண்ணி யிருக்
கணும்.//

Wow..That's truly Amazing!!

//மிஷின்லைஃப் தான் வாழ்ந்து கொண்டிருக்கோம்//

That's 100% true!

Lakshmi said...

சித்ரா நாம எல்லாருமே அதே மனப்பான்மையில் தானிருக்கோம்.

Lakshmi said...

வசந்தா நடேசன், வருகைக்கு நன்றிம்மா.

Lakshmi said...

வெங்கட், வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

Lakshmi said...

சுந்தர் ஜி அழகாக பாராட்டி இருக்கீங்க. நன்றி.

Lakshmi said...

வானதி அது நம்ம கையிலதான இருக்கு.

Lakshmi said...

கோவை ஆவி வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

malgudi said...

மிகவும் சுவைபட எழுதியுள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்.

ஆனந்தி.. said...

//நாங்களே 40 பேர்வரை இருந்தோம், அவர்கள் வீட்டிலும் குறைந்தது 10 பேர்கள்இருந்தார்கள். 50 பேருக்கு சமையல் பண்ணனும்னா, அவர்கள் வீட்டு பெண்கள் எவ்வ்ளவுசீக்கிரம் எழுந்திருக்கணும்? எவ்வளவு நேரம் கிச்சனில் வேலை செய்திருக்கணும்? இதுக்கெல்லாம் ரொம்ப பெரியமனசு இருக்கணும். அவர்களிடம் இருந்தது.//
இதெல்லாம் பெரிய விஷயம் ஆன்ட்டி..ரொம்ப அருமையான பயண தொகுப்பு ஆன்ட்டி..அரை நெல்லிக்காய் எல்லாம் நம்ம ஊரு பக்கம் தான் கிடைக்கும் நினைச்சேன் ஆன்ட்டி...

Lakshmi said...

malgudi வருகைக்கு நன்றி.

Lakshmi said...

ஆமா ஆனந்தி, ரொம்ப சந்தோஷமான தருணங்கள். எங்களுக்கு கூட அரி நெல்லிக்கா பாத்தத்கும் அவ்வளவு சந்தோஷம். பாதிபேருக்கு அது என்னதுன்னே தெரியலை.

Lakshmi said...
This comment has been removed by the author.
Ramani said...

எங்களுக்குமாக நீங்கள் டூர் சென்றுள்ளதுபோல்
உணவு முதற்கொண்டு படமெடுத்துக்காட்டி
அசத்தியிருக்கிறீர்கள்.தொடர்ந்து பதிவை எதிர்பார்த்து
வாழ்த்துக்களுடன்

Lakshmi said...

ரமணி சார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

Kalidoss said...

ஆத்மார்த்தமா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க.இந்தப் பயணங்களும்,
அன்பு காட்டும் உள்ளங்களும் மிகப் பெரிய ரீ-சார்ஜ் தான்.

Lakshmi said...

aamaa kaalidoss. mikavum inimaiyana tharunagkal.

எல் கே said...

எனக்கு அப்டேட் வரவே இல்லையே ??

எல் கே said...

இந்த மாதிரி ஆட்கள் இன்னும் இருக்காங்களா ??

Lakshmi said...

ஆமா கார்த்தி இன்னமும் இது போல ஆட்கள் இருக்காங்கதான்.

Lakshmi said...

ஏன் உங்களுக்கு அப்டேட் வரலை?

இராஜராஜேஸ்வரி said...

பேட்டரி சார்ஜ் செய்வதுபோல நாமும் சார்ஜ் ஆகி வரும் நாட்களைஉற்சாகமுடனும், சுறு, சுறுப்புடனும் எதிர்கொள்ள முடியும்.//
உண்மைதான்.அவசியம் சிந்திக்க வேண்டிய விஷயம்.

Lakshmi said...

இராஜராஜேஸ்வரி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா

Related Posts Plugin for WordPress, Blogger...