Pages

Back to Top

நாராயன்பூர்(1)
நாராயன்பூர்

       குருஸ்வாமி& மனைவி   


பொங்கல் கழிந்து மறு நாள் நாங்கள் ஒரு 35 பேர்கள் மும்பை தாணாவிலிருந்து

ஒரு லக்சரி பஸ்ஸில் கிளம்பி பூனாவில் இருக்கும் நாராயன்பூரிலுள்ள பாலாஜிகோவில்போய்வந்தோம். என்மகன் வருடா வருடம்சபரிமலை செல்லும் வழக்கம்உள்ளவன். அந்த குருஸ்வாமி தான் இந்த ஏற்ப்பாட்டைச்செய்திருந்தார்.கரெக்டாககாலை5.30-க்கு வீட்டை விட்டுக்கிளம்பி, பிருந்தாவன் என்னும் இடம் போனோம்.


ஏற்கனவே கொஞ்சம் பேர் வந்துகாத்திருந்தார்கள். குருசாமியும் மனைவியுடன்வந்திருந்தார். ஒவ்வொருவராக வந்து சேர்ந்ததும் பஸ்ஸும் வந்தது. எல்லாரும்ஏறி அமர்ன்ததும் கரெக்டாக 7- மணிக்கு பஸ் கிளம்பியது                                         


                                                 
                                                   குருஸ்வாமி 


நல்ல குளிரான காலை நேர பயணம் எப்பவுமே சுகமான அனுபவமாக இருக்கும்.அதுவும் பாம்பே, பூனா ஹைவே பயணம் ஆனந்த அனுபவம். நான் இதுவரைக்ரூப்பா பயணம் செய்ததே கிடையாது. எங்க போனாலும் தனியாதான் போவேன்.குளிர்காலம்னால வெளிச்சம் வர நேரம் ஆனது. அந்த இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு மாறும் போது ஆகாயம் நிறம் மாறுவது கொள்ளை அழகு. வெளியில் வேடிக்கைபார்த்துக்கொண்டே வந்தேன். 8மணிக்கு காலாப்பூர் என்னுமிடத்தில் டோல்கேட் வந்தது.

அங்கியே ஒரு ரெஸ்டாரெண்டும் இருந்தது. பஸ்ஸை விட்டு இறங்கினதுமே எல்லாரும்குளிரில் வெட, வெடன்னு நடுங்கிட்டோம். வாயைத்திறந்தா வாயிலேந்து புகையாவருதுமூச்சு விடும்போது மூக்கிலேந்தும் புகை.

                                                     லோனாவாலா  


எல்லாரும் சூடு, சூடா ஒரு சாய் குடிச்சோம்.ப்ரேக்ஃபாஸ்ட் பார்சல் பண்ணீ வாங்கிண்டோம்.அங்க உக்காந்து சாப்பிட்டா ரொம்ப நேரமாகும் பஸ்லயே சாப்பிட்டுக்கலாம் என்றுதான்.எல்லாருடனும் க்ரூப், க்ரூப்பா போட்டோகள் எடுத்துண்டோம். குருசாமியின் மனைவிக்குஅன்று ஸ்டார் பர்த்டே இருந்தது, எல்லாரும் விஷ் பண்ணீனோம். 8.30-க்கு அங்கே இருந்து

கிளம்பினோம். 9 மணிக்கு வண்டிலயே டிபன். சப்பாத்தி,ஸ்ரீகண்ட்,பேடா, வடாபாவ்.பிஸ்லேரி வாட்டர் பாட்டிலும் நிறையா கொண்டு போயிருந்தோம். எல்லாரும் சாப்பிட்டுமுடித்தோம். நான் முன் சீட்டில் உக்காந்தேன். உள்ள அவங்க எல்லாரும் அரட்டை அடிச்சுசிரிச்சு பேசிண்டிருந்தா.
                                                டன்னலுக்குள்            
                                                


பிறகு பஜன் பாடல்கள் பாடத்தொடங்கினா.காதை பாடல்களிடமும் கண்களை சீனரிகளிலும்வைத்திருந்தேன்.ஹைவே ரோடு நல்ல ஸ்மூத்தா இருந்தது. இடை, இடையே நிறைய டன்னல்கள் வந்தது. டன்னலுக்குள் குட்டி குட்டியா லைட் எல்லாம் போட்டு அருமையான காட்ச்சிகள்.

லோனாவாலா, கர்ஜத், கண்டாலா என்று எல்லாமே பெரிய ஹில்ஸ்டேஷன்கள். சுற்றிவரஉயர, உயர, மலைத்தொடர்கள். மலை அரசிக்கு ஒட்டியாணம் அணிவித்ததுபோல நடுவில்புகையாக பனிமூட்டம் சுற்றியிருந்தது.. மறு புரம் கிடு,கிடு பாதாளம்.கீழ வீடுகள், கட்டிடங்கள்


                                                  மேடு&;பள்ளம்

எல்லாம் மினியேச்சர் மாதிரி தெரிந்தது. பார்க்கப்பார்க்க அலுக்காத காட்சிகள்.
சூரியபகவானே 9மணிக்கு மேல தான் வெளில வரவா, வேண்டாமான்னு யோசிப்பது போலமலை முகட்டில் ஆரஞ்ச் கலரில் எட்டிப்பார்த்தார். அப்ப ஆகாயம் பூரா ஆரஞ்ச் வண்ணமாகவேமாறி அபூர்வ அழகுடன் காட்சி 
ரசிப்பதில் கொள்ளை விருப்பமுண்டு. அதனால பயண நேரங்களில் புக் அளித்தது. நான் எப்பவுமே நேச்சர் லவ்வர். இயற்கை காட்சிகள்
படிக்கவோ, மற்றவருடன்பேசுவதோ, தூங்குவதோ தவிர்த்துவிடுவேன். மற்றவர்கள் மும்முரமாக பஜனை பாடிக்கொண்டிருந்தார்கள். நான் முன் சீட்டில் இருந்ததால், ஃப்ரெண்ட்ஸைட்வியூவும் கிடைத்தது, ஜன்னல் வழி
                                                     பனி மூட்டம்
யே சைடு வியூவும் கிடைத்தது. மிகவும் ரசிக்கத்தக்க காட்சிகள்.

27 comments:

NADESAN said...

nalla anupavam

nellai P. Nadesan
dubai

சுந்தர்ஜி said...

திரும்பிப் பாருங்க உங்க கூடவே நாங்களும் வந்துக்கிட்டு இருக்கோம்.

அழகான எளிமையான பதிவு.

நிறைவாய் இருந்தது.

Lakshmi said...

நடேசன், முதல், முதலா வரீங்களா. நன்றி

Lakshmi said...

ஆஹா, என்பின்னால எவ்வளவு பேரு வரீங்க சந்தோஷமா இருக்கு, சுந்தர்ஜி

கக்கு - மாணிக்கம் said...

மும்பை டு புனே நல்ல அனுபவம். புனே எனக்கு மிகவும் பிடித்த ஊர்.
படங்கள் அழகு.

Lakshmi said...

ஆமாங்க மாணிக்கம், நான் முதல்ல பூனாவில் தான் 15 வருடங்கள் இருந்தே, அருமையான ஊர். வருகைக்கு நன்றி.

Gayathri Kumar said...

Nice snaps and very nice post..

Lakshmi said...

thankyou gayathrikumar.

vanathy said...

ஆன்டி, நல்லா இருக்கு உங்கள் அனுபவங்கள். படங்கள் சூப்பர்.

Lakshmi said...

வானதி வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.

எல் கே said...

படங்கள் அனைத்தும் அருமை. தொடருங்கள்

Srini said...

" ஹையா..!! ரசனையோட எழுதியிருக்கீங்க... என் ஃப்ரெண்ட்ஸ் பல பேரை கூப்பிட்டு வந்து படிக்க சொன்னேன் (ட்ரேவெலிங்க்’ல ஆர்வம் உள்ளவங்க).. பாராட்டுனாங்க...
என்னோட வாழ்த்துகளும் அம்மாவுக்கு..!!!

Lakshmi said...

கார்த்தி, வருகைக்கு நன்றி.

Lakshmi said...

ஸ்ரீனி, நீங்க படிச்சு ரசித்ததுமில்லாம உங்கஃப்ரெண்ட்ஸையும் படிக்க வைத்து எனக்கு புது ந்ண்பர்களை அறிமுகப்படுத்தரீங்க. நன்றிகள். அவங்களையும் பின்னூட்டம் கொடுக்கச்சொல்லுங்க.

ஜிஜி said...

அருமையா உங்க பயணத்தை சொல்லி இருக்கீங்க. படங்களும் சூப்பர்மா.

Lakshmi said...

வருகைக்கு நன்றிம்மா.

Ramani said...

ஒரு அழகான பயணக்கட்டுரையை படித்த நிறைவு
படங்களும் அருமை
.வாழ்துக்களுடன்...

Lakshmi said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ரமணி சார்.

athira said...

அழகாக அனுபவித்து எழுதியிருக்கிறீங்க, படங்களையும் கிளிக் செய்து வந்து போட்டதைப் பார்க்க சூப்பராக இருக்கு.

Lakshmi said...

அதிரா,வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிம்மா.

ஆனந்தி.. said...

அருமையான எளிமையான நடையில் பெஸ்ட் பதிவு ஆன்ட்டி...

Lakshmi said...

தேங்க்யூ, ஆனந்தி.

Rajeswari said...

அனைத்து இட்ங்களுக்கும் எங்களையும் அழைத்துச் சென்ற்துபோல்
இனிமையாக இருக்கிறது.

Lakshmi said...

ராஜேஸ்வரி நன்றிம்மா.

பாரத்... பாரதி... said...

வணக்கங்களும்,வாக்குகளும்...

radhakrishnan said...

நல்ல பதிவு.நல்ல அநுபவம் .ஹைவே
அநுபவம் எங்கள்நினைவுகளைக்கிளறி
விட்டது.

Lakshmi said...

ராதாகிருஷ்னன், இவ்வளவு மாசம் ஆனபிறகும் படிச்சு பார்த்து பாராட்டி இருக்கீங்க நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...