Pages

Back to Top

m.p. to m. s.(2)

                         mp  to  ms.(2)

   நாங்க இருந்தது  ஜபல்பூரிலிருந்து50- கிலோ மீட்டர் உள்ளே
  தள்ளி இருந்த கமேரியா என்னுமிடம். காலை12மணிக்கு ட்ரக்
  கிளம்பியது. சாப் இன்னிக்கு முதல் நாள் இல்லியா சிட்டிவரை
  முதல்ல போயிடலாம். அங்கபோன பிறகு ஒரு தாபா போலாம்.
   உள்ளே இஞ்சின் உள் புறமாக இருந்தது. நல்ல தகர மூடியால மூடி
   தான் இருந்தது. க்ளீனர் 15 நிமிஷ்த்துக்கு ஒருமுறை கனத்த சாக்கை
   தண்ணீரில் நனைத்து நல்ல ஈரமுடன் அந்த  இஞ்சினின் மூடி மேல
  போட்டுண்டே தான் இருன்தான். ஆனால் கூட வெப்பமும் சூடும் ரொம்ப
   அதிகமாவேதான் இருந்தது. குழந்தைகளுக்கு இதுபுதுவித பிரயாணமாக
  இருக்கவே மேலே தாளம் போட்டு பாடிண்டு நல்லா எஞ்சாய் பண்ணினா.
  நாங்களுமே முதல் முறையா ட்ரக் பயணம்தான்.



  க்ளீனர் அடிக்கடி மேலபோயி பாத்து கீழ எட்டிப்பாக்கக்கூடாது, நிக்கக்கூடாதுன்னு குழந்தைகளை எச்சரிக்கை பண்ணிக்கொண்டே வந்தான்.2, 3 மணி நேரம் ட்ரைவ்பண்ணி ரோட்டோரமா ஒரு பஞ்சாபி தாபா பக்கமா ட்ரக்கைநிப்பாட்டினான்.இதேபோலநிறையட்ரக்அங்கேநின்றுகொண்டிருந்தது.ட்ரக் ட்ரைவர்கள் எல்லாருமேஇதுபோல தாபாவில் தான் லஞ்ச் எல்லாம் சாப்பிடுவா போல இருக்கு. ஒவ்வொருட்ரைவருமே தெரிந்தவர்களாகவே இருக்கா. இன்னிக்கு எங்க ட்ரிப்? எத்தனை நாள்என்று அவர்கள் சிரித்துபேசி கொண்டிருந்தார்கள். குழந்தைகளை கீழே இறங்கச்சொல்ல  எல்லாரும் தாபாவுக்குள்ள போனோம்.

 

அங்கயும் நல்ல வெய்யில்தான். 10 கயத்துக்கட்டில் போட்டிருந்தது. மேலே நிழலுக்காக  பந்தல் போல போட்டிருந்தார்கள். பக்கத்தில் கொஞ்சம் மரங்களும் இருந்தது.எல்லாரும்கட்டிலில் உக்காந்தோம். அன்கே 4 பஞ்சாபி தாடிவாலாக்கள் இருந்தார்கள். எங்களிடம்வந்து என்ன சாப்பிடரீங்கன்னு அன்பா கேட்டாங்க. யாருக்கு எது வேணுமோ ஆர்டர்பண்ணுங்க என்று ட்ரைவர் சொல்லவும் எல்லாரும் லஞ்ச் ஆர்டர் பண்ணினோம்.

  ஒரு ஒரமாக தரையில் பதித்த்துபோல ஒரு ச்சூலா(கரிஅடுப்பு)பெரிய அளவில் இருந்தது.பக்கத்தில் ஒன்னும் ரெண்டுகரி அடுப்புகள். யாரானும் வந்து ஆர்டர் பண்ணிய பிறகுதான்சமையலே ஆரம்பிக்கிரார்கள். அதுவரையில் க்ரீன் சலாட், வெள்ளரிக்காய்,கேரட்,தக்காளி,
  வெள்ளை வெங்காயம்  முள்ளங்கி எல்லாம் மெல்லிசா, வட்ட, வட்டமாக கட்செய்துபெரிய பெரிய ப்ளேட்களில் தந்தார்கள்.உப்போ, எலுமிச்சையோ எதுவுமே சேர்க்காமலேஅத்தனை டேஸ்டாக இருந்தன, காய்கள். காய்கள் வேகமாக ஒருவர்,கட்செய்ய,மற்றவர்நி...............ரை................ய........ ஆட்டா ஒரு பெரிய பேசினில் போட்டு ரெண்டு கைகளாலும்அடித்து, அடித்து மாவு பிசைகிரார். நான் அந்த இடத்திலேயே போய் ஒரு கல்லில் உக்காந்து
  எப்படி சமையல் செய்கிரார்கள் என்று பார்த்துக்கொண்டிருந்தேன். கொஞ்சம் தள்ளீ கை அடிபம்ப் இருந்தது. குழந்தைகளுக்கு அது வேடிக்கையாக இருந்தது. அதில் தண்ணீர் அடித்துஎல்லாரும் முகம் கை, கால் அலம்பிக்கொண்டே இருந்தார்கள். அந்த தண்ணீர் எவ்வளவ  ஜில்லுன்னு இருந்ததுதெரியுமோ. உப்பாகவும் இல்லாமல் அதைதான் குடிக்க சமைக்க யூஸ்
  பண்ணுகிராரகள்.

 

சப்பாத்தி இடுவதற்கு குழவியோ பலகையோ இல்லாமல் கைகளினால் தட்டி, தட்டியே பெரிய  பெரிய சப்பாத்திகளாக பண்ணி கரி அடுப்பில் போடுகிறார்கள். உடனேயே பூரி போல உப்பி வருகிரது.(எண்ணையே இல்லாதபூரி:)) என்ன வேகம், என்ன வேகம். இன்னொரு அடுப்பில் தொட்டுக்கொள்ள
   பாஜியும் தயாராகிக்கொண்டிருந்தது. நல்ல வாசனை. மசாலா அரைக்காமல் கேரட் துருவியிலேயேஇஞ்சி, பூண்டு, வெங்காயம் துருவி மசாலா தயார் செய்கிரார்கள். ரொம்ப நல்ல டேஸ்ட்.அந்த இடத்துக்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல் ஒரு பெரிய ஃப்ரிட்ஜ், ஒரு வாஷிங்க் மிஷின்
  இரண்டும் ஒரு ஓரமாக இருந்தது. ஃப்ரிட்ஜாவது காய் வைக்க தயிர் வைக்க யூஸ்பண்ணலாம்.ஆனா இந்த வாஷிங்க் மிஷின் இங்க எதுக்குன்னு ரொம்ப நேரமா யோசிச்சுண்டே இருந்தேன்.அவர்கள் நாலு பேரும் எப்பவும் அடுப்பு சூட்டிலும் வெக்கையிலும் வேர்த்துக்கொட்டிண்டு தான்நாள்பூரா இருப்பா. தாடி, தலையில் டர்பன். கல்ர்முண்டாபனியன், அழுக்கு கலரில் லுங்கி என்று
 பார்க்கும்போது இவர்கள் இந்த மிஷினில் துணி துவைப்பதுபோலவே தெரியலியே இது இங்கஎதுக்கு? அவர்களிடம் கேக்கவும் தயக்கமா இருந்தது.

28 comments:

Prabu Krishna said...

எனக்கும் பஞ்சாபி சப்பாத்தி சாப்பிட ரொம்ப ஆசை. ஆனால் எப்போது அங்கெல்லாம் போக போறேனோ. கண்டிப்பா சாப்பிடணும்.(சப்பாத்தி தான் என் favorite food.)

குறையொன்றுமில்லை. said...

பிரபு எங்க வீட்டுக்குவாங்க நான் சூப்பரா சப்பாத்தி, பரோட்டா எல்லாம் பண்ணித்தரேன்.

ஆமினா said...

லெட்சுமிம்மா

உங்களுக்கு அது இனிய பயணமா அமைஞ்சுருக்குன்னு உங்க எழுத்திலேயே தெரியுது

அடுத்த பாகமும் சீக்கிரம் போடுங்க

Prabu Krishna said...

@Lakshmi
கண்டிப்பா அம்மா.

உங்கள் பெயர் http://bloggersbiodata.blogspot.com/ வில் இணைக்கப்பட்டு உள்ளது.

விழியே பேசு... said...

புடிச்சிருக்கு உங்கள் எழுத்து ....

Chitra said...

எனக்கு தெரியுமே... எனக்கு தெரியுமே..... லஸ்ஸி!!!!!!!!!!!!

எல் கே said...

ஹ்ம்ம் தொடருங்கள்

வெங்கட் நாகராஜ் said...

பயண அனுபவங்களை அழகாய் சொல்லிக் கொண்டு போறீங்கம்மா. சில சமயம் இந்த மாதிரி தாபாக்களில் சுவையான, ஆரோக்கியமான உணவு கிடைக்கும். நான் நிறைய சாப்பிட்டு இருக்கிறேன். பகிர்வுக்கு நன்றிம்மா..

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
http://venkatnagaraj.blogspot.com/2011/01/blog-post_17.html

http://rasithapaadal.blogspot.com/2011/01/blog-post_18.html

குறையொன்றுமில்லை. said...

ஆமினா, வருகைக்கு நன்றிம்மா.

குறையொன்றுமில்லை. said...

பிரபு தேங்க்யூ வெரிமச். எப்ப என் வீட்டுக்கு வரீங்க

குறையொன்றுமில்லை. said...

விழியே பேசு வருகைக்கு நன்றி.

குறையொன்றுமில்லை. said...

சித்ரா வெரிஸ்மார்ட். கரெக்டா கண்டு பிச்சுட்டீங்களே.

குறையொன்றுமில்லை. said...

கார்த்திக் நன்றி.

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் உண்மைலயே வித்யாசமான பயணமாகத்தான் இருந்தது.அதனால தான் உங்க எல்லார் கூடவும் பகிர்ந்து கொள்கிரேன்.

Prabu Krishna said...

இன்னும் மூன்று மாதத்தில் படிப்பு முடிந்துவிடும்(B.E). அப்புறம் நான் "உலகம் சுற்றும் வாலிபன் " தான். அட்ரஸ் இருக்குல அப்புறம் என்னம்மா கவலை.

vanathy said...

நல்லா இருக்கு, ஆன்டி. எப்ப அடுத்த பாகம்?

ம.தி.சுதா said...

எனக்கும் நல்லதொரு அனுபவம் அம்மா....

மதி.சுதா.
தமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.

குறையொன்றுமில்லை. said...

பிரபு வெற்றிகரமா படிப்பை முடிச்சுட்டு வாங்க. நான் காத்துகிட்டிருப்பேன்.

குறையொன்றுமில்லை. said...

வானதி கூடிய விரைவில் வரும்.

குறையொன்றுமில்லை. said...

ம்.தி. சுதா, வருகைக்கு நன்றிப்பா.

Geetha6 said...

ரொம்ப அழகா சொல்லிஇருக்கீக மேடம்
நான் பூனா போகிறேன் ..

குறையொன்றுமில்லை. said...

கீதா, பூனா போரேன்னா ட்ரான்ஸ்பரா?

ஆனந்தி.. said...

aunty super o super....

athira said...

முதன்முதலில் வந்திருக்கிறேன். அழகாக எழுதியிருக்கிறீங்க பொறுமையாக வாசிக்கணும், இப்போ ஒண்ணுமே புரியாதமாதிரி இருக்கு.

லஷ்மி அக்கா படத்தில் இருப்பது நீங்கள்தானா? அது சும்மா ஒரு படம் என ஆரம்பம் நினைத்தேன்.

குறையொன்றுமில்லை. said...

ஆனந்தி ஏன் லேட்டு?

குறையொன்றுமில்லை. said...

அதிரா, முதல் வருகைக்கு நன்றிம்மா. இனிமே அடிக்கடி வாங்க.

Vijiskitchencreations said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இன்று தான் முதல் வருகை மிக அழகாக எழுதியிருக்கிங்க. மீண்டும் மீண்டும் வருகிறேன்.

குறையொன்றுமில்லை. said...

vijisveg kitchen வருகைக்கு நன்றி. மீண்டும், மீண்டும் வந்து கருத்துக்களை
பகிர்ந்துகொள்ளவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...