Pages

Back to Top

M. P. TO M. S.

m p to m s

தலைப்பைப்பார்த்தால் எதுவுமே புரியலையா?:)
மத்யபிரதேசத்திலிருந்து மஹாரஷ்ட்ரா. இதுதான்.
என் வீட்டுக்காரர் செண்ட்ரல் கவர்மெ ண்டில் வேலை பார்ப்பதால்
5- வருடத்தில் வேறு, வேறு ஊர் மாற்றி விடுவார்கள். போய்த்தான்
ஆகணும். குழந்தைகளுக்கு ஸ்கூலில் ஃபைனல் எக்சாம் முடிந்ததும்
கிளம்பும்படி இருக்கும். அதுபோல அந்த வருடமும் மாற்றல் வந்தது.
அதுல ஒரு சிக்கல் என்னன்னா, வக்கேஷன் டைம்ல ட்ரெயின், பஸ்
எல்லாமே ஃபுல் ஆயிடும். எதிலுமே டிக்கட் கிடைக்காது. அந்த தடவை
யும் அப்படியே.என்னபண்றதுன்னு ரொம்ப யோசிச்சோம். சாமான்களை
எல்லாம் அனுப்ப ஒரு ட்ரக் புக் பண்ணி இருந்தோம். அhந்த ட்ரைவரிடம்
ரிக்வெஸ்ட் பண்ணி, எங்களையும் ட்ரக்ல கூட்டிண்டு போகமுடியுமா.?ஒரு பஞ்சாபி, தாடிவாலா ட்ரைவர், ஒரு க்ளீனர் என்று இரண்டுபேர்
இருந்தார்கள். அவர்களுக்குள் கூடிப் பேசி சரி என்றார்கள். சாப், பகலில்
வண்டி ஓட்ட மாட்டோம். இரவுதான் ட்ரைவிங்க். ஓ. கே, வா? என்ரான்.
மத்யபிரதேசத்தில் எல்லா க்ளைமேட்டுமே எக்ஸ்டீம்தான்.. வெயில்னா
வெய்யில் நாமளே வெந்துடுவோம். குளிர்னா பேசும்போதே வாய் மூக்கு
எல்லாத்லேந்தும் புகைவரும், தேங்கா எண்ணை நெய் போல உறைஞ்சு
போகும். மத்யானம் ஸ்கூலில் இருந்து வரும் குழந்தைகள் எல்லாரும்
டெரசில் வெய்யிலில் உக்காந்து தான் சாப்பிடுவா.


வெய்யில் காலத்தில் மொட்டை மாடியில் தண்ணீர் ஊற்றி ஒர் மணி
நேரம் தேக்கி வச்சு பிறகு அதை திறந்து விட்டு இரவு அங்கதான் எல்லாரும்
படுக்கை. வீட்டுக்குள்ள இருக்கவேமுடியாது.வெக்கை தாங்கவே தாங்காது.
அப்படி இருக்கும்போது எப்படி பகலில் வண்டி ஓட்ட முடியும்? நாங்களும்
அதனால என்ன எங்களை அங்க கொண்டு சேர்த்துட்டா போறும். ஆமா
எவ்வளவு நேரம் ஆகும் என்றோம். சாப் இங்கேந்து 800, 900 கிலோ
மீட்டர் போகணும். மூணூ பகல், ரெண்டு இரவு ஆகும் என்றான். ஏ அப்பா,
அவ்வளவு நேரம் ஆகுமா?சரி, நாங்க கணவன்,மனைவி, எங்க 5 குழந்தைக
மொத்தம் 7 பேரு. என்றோம்.ரெண்டு நாள் கழிச்சு வரேன்னு அட்வான்ஸ்பணம் வாங்கிண்டு அவர்கள் போனபிறகு அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்க்க வந்தார்கள். பேக்கிங்க்ல ஏதானும் ஹெல்ப்பண்ணனுமா என்று கேட்டு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆமாஎப்படி போரீங்கன்னு கேட்டார்கள். நாங்க ட்ரக்ல போகும் விபரம் சொன்னோம்.
என்னங்க? இது லேடீஸைக்கூட்டிண்டு ட்ரக்லயா குழந்தைகள் வேற சின்னவா.இது ரிஸ்க் இல்லியான்னு ஆளாளுக்கு பயம் காட்டினா. என்னபண்ண?எதிலுமே டிக்கட் கிடைக்கலியே, கரெக்டா சொன்னதேதியில் அங்க டியூட்டியில்ஜாயின் பண்ணனுமே? இதை விட்டா வேர வழி தெரியல்லைன்னு எல்லாரிடமும்சமாதானம் சொன்னோம்.
கரெக்டாக ரெண்டு நாள் கழித்து ட்ரெக்கோட ட்ரைவரும் க்ளீனரும் வந்துட்டா.
சாமான் களை ட்ரெக்கிலேற்ற அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லாருமே மிகவும்உதவியாக இருந்தார்கள். ட்ரைவரும் ரொம்ப நல்ல மாதிரி இருந்தான். பெரும்பான்மையான ட்ரக் ட்ரைவர்கள் பஞ்சாபி காராளாவே இருக்கா. இந்தட்ரைவர்கொஞ்சம் வயசானவராகவே இருந்தார். எல்லாசாமானும் ஏற்றி முடித்ததும்மேல ட்ரக்ஃபுல் ஆச்சு.தார்பாலின், கயறு கொண்டு இறுக்கமா கட்டினார்கள்.ட்ரைவர் உக்காரும் சீட் மேல்புறம் ட்ரக்கின்மேல் குழந்தைகள் உக்கார சாக்குஎல்லாம் போட்டு மெத்தை போல ஏற்பாடு பண்ணி இருந்தார். நான்,வீட்டுக்காரர்ட்ரைவர்,க்ளீனர் வண்டிக்குள்ள உக்காந்தோம்.

24 comments:

எல் கே said...

ட்ரக்கில் அவ்வளவு தூரமா ?? ரொம்ப துணிச்சல்தான்

Lakshmi said...

சில சந்தர்ப்பங்கள் நம்மை துணிச்சலான முடிவுஎடுக்க வைக்குதே?
முதல் கருத்துக்கு நன்றி, கார்த்திக்.

Chitra said...

உங்கள் அனுபவத்தை நல்லா எழுதி இருக்கீங்க.. தொடருங்கள்!

வெங்கட் நாகராஜ் said...

ட்ரக்கில் 800-900 கிமீ தூரம் பயணமா! ஓ! குறைந்த தூரம் பயணம் செய்வதே கடினமாச்சே...

துணிச்சலான முடிவு! அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்..

Lakshmi said...

என் எல்லா பதிவிலும் வந்து கருத்துக்களைச்சொல்லும் அன்பு சித்ராவுக்கு நன்றிம்மா.

Lakshmi said...

அதுதான் வெங்கட், வித்யாசமான பயணம் அதனால தான் உங்க எல்லார் கூடவும் ஷேர் பண்ணிக்கரேன்.

மாத்தி யோசி said...

இன்றுதான் உங்கள் வலைப்பக்கம் முதல்முறையாக வருகிறேன் அம்மா. இன்ட்லியில் உங்களுக்கு தொடர்ச்சியாக வாக்களித்து வந்த போதும் கமென்ட் போடுவது இதுதான் முதல் முறை! இப்போது அவசரமாக வேலைக்கு கிளம்புவதால் பின்பு விரிவாக பின்னூட்டம் இடுகிறேன்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!ஜீவன்ராஜ்

பாரிஸ்

பிரான்ஸ்

ஆமினா said...

முன்னமே ரிஷர்வேஷன் பண்ணிக்கலாமேம்மா.....

ஊருக்கு போறதுன்னாலே இதே தொந்தரவு தான். டிக்கெட் கிடைக்கிறது ரொம்ப கஷ்ட்டமாகிடுது :(

Lakshmi said...

ஆமி ட்ரான்ஸ்பர் ஆர்டர் எப்ப கைக்கு வரும்னு தெரியாம எப்படி டிக்கட் எடுக்க முடியும்?

Lakshmi said...

ஜீவன் முதல் வருகைக்கு நன்றி இனிமேல அடிக்கடி வாங்க.

vanathy said...

Aunty, super. Waiting for the next part.

அஞ்சா சிங்கம் said...

ரொம்ப சவாலான பயணமா இருந்திருக்கும் .............

நான் சிறு வயதில் இருந்த இடம் அங்க குளிர் கொஞ்சம் ஜாஸ்திதான் ரொம்ப அருமையான மனிதர்கள்...............

Lakshmi said...

vanathi varukaikku nanri

Lakshmi said...

anja singam varukaikku nanri ninga jappalpur-la irunthingala?

♠புதுவை சிவா♠ said...

நானும் ஒரு தடவை பஞ்சாபி பீடி (தாடி) வாலா ட்ரைவர் கூட பயணம் செய்த அனுபவம் உண்டுமா. இரவு உணவாக அவர்கள் செய்த மக்கி ரொட்டியும் அதுக்கு கீரையில் செய்த துவையலும் தந்தார்கள் பசியில ஒன்றை முழுமையாக சாப்பிட முடியல..

:-))))

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!

Lakshmi said...

எல்லாருக்குமே இதுபோல ஏதாவதுஒரு
அனுபவம் கிடைத்து விடுகிரது. நினைத்துப்பார்க்கும் போது, மாவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது சந்தோஷமா இருக்கு. உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

அன்னு said...

பரவாயில்லையே, துணிச்சலான பயணம்தான்...அடுத்த பகுதியை விரவில் போடவும் :)

Lakshmi said...

அன்னு வருகைக்கு நன்றிம்மா.

ஜிஜி said...

ட்ரக்கில் 800-900 கிமீ தூரம் பயணம் எப்படி செஞ்சீங்க?உடம்பெல்லாம் வலி எடுத்திருக்குமே?பாவம். ரொம்ப கஷ்டப்பட்டிருப்பீங்க. சீக்கிரம் அடுத்த பதிவு எழுதுங்கம்மா.

Lakshmi said...

ஜி, ஜி முதல் முறையா என் ப்ளாக் வரீங்களா. வருகைக்கு நன்றிம்மா.

ஹேமா said...

அம்மா...ரொம்பவும் துணிச்சல்தான்.

முன்னைய பதிவில் சொன்னமாதிரித்தான் இப்பவும் சொல்கிறேன்.பக்கமிருந்து உங்களின் முன்னைய அனுபவம் கேட்கும் சுவாரஸ்யம் !

Lakshmi said...

ஹேமா மீண்டும் வருகைக்கு நன்றிம்மா.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அடேங்கப்பா..என்ன ஒரு ரிஸ்க்கான காரியம்! உங்க கணவருக்குத் தான் joining time leave கொடுப்பாளே,சென் ட்ரல் கவர்ன்மெண்ட்ல!

Lakshmi said...

ராமமூர்த்தி சார் ஜாயினிங்க் டைம் கொடுப்பாங்கதான். வக்கேஷன் டைம் பூரா டிக்கட் ப்ராப்லம் இருக்கும்தானே?

Related Posts Plugin for WordPress, Blogger...