Pages

Back to Top

பரணீயம்(1)

 40   வயசுலேந்து இந்தமுட்டிவலி ப்ராப்ளம் பாடா படுத்தி எடுத்தது.
                             யாரு என்ன வைத்தியம் சொன்னாலும் கேக்கெலாம்னு தோணிடும்.
                             2 வருஷம் முன்ன ஈரோட்ல  மகன் வீட்டுக்குப்போயிருந்தேன்.
                             மருமகளின் அக்கா திருவனதபுரத்தில் இருக்கா. அங்க ஒரு ஆயுர்வேத
                             வைத்தியர் இருப்பதாகவும் முட்டிவலியை குணப்படுத்துவதாகவும்
                             சொன்னா. அதையும்தான் என்னதுன்னு பாக்கலாமேன்னு கிளம்பினோம்.
                             திருவனந்தபுரம் ஸ்டேஷனிலிருந்து கிட்டட்தட்ட 30. 40 கிலோமீட்டர் உள்ள
                             தள்ளி இருந்தது, நாங்க போகவேண்டிய இடம். ஆட்டோ ஏற்பாடு பண்ணியிருந்தா.
                             வைத்தியரிடம் காலி வயிற்றுடந்தான் போகனுமாம். அதனால எதுவுமே சாப்பிடாம
                             ஸ்டேஷனில் இருந்து8 மணிக்கு கிளம்பி ஆட்டோவில் ஒன்னரை மணி நேரம்
                             பிரயாணம் செய்ய வேண்டி இருந்தது.                              கேரளாவே பரசுராம ஷேத்திரம்தானே. நல்ல செழிப்பு. நகர பரபரப்பு, ஆர்பாட்டங்கள்
                              ஓய்ந்து கிராமஎல்லை நெருங்க 10 கிலோ மீட்டர் இருக்கும்போதே போகும் வழி
                              நெடுக ஒருபுறம் பூராவும் அப்போதுதான் பறித்துப்போட்ட தேங்காய்கள் கொப்பரைக்காக
                              காய்ந்துகொண்டிருந்தன. பச்சைத்தேங்காய் வாசம்.  இன்னொரு புறமோ குட்டிசைஸ்,
                              பெரியசைஸ் என்று மீன்களும் காய்ந்து கொண்டிருந்தன. மூக்கு மூக்கா இல்லை.
                              இவ்வளவு நாத்தம் அடிக்கரதே இதைப்போயி எப்படித்தான் சாப்பிடராளோ???
                              சுற்றிவர மாமரங்கள், தென்னைமரங்கள், பலா மரங்கள் என்று நல்ல பசுமைச்செழிப்பு.
                              ஒருவழியா 91/2 க்கு வைத்தியர் வீடு போயிச்சேந்தோம். அந்த இடம் பேரு பரணீயம்
                              என்று சொன்னா.பெரிய பண்ணை வீடுமாதிரி, பச்சபசேல் தோப்புக்கு நடுவில் வீடு.
                              வீட்டைச்சுற்றி பச்சைபசேல் மூலிகைத்தாவரங்கள். அதைப்பறித்து கல் உரலில் இடித்து
                              சாறு பிழிந்து தேங்கா எண்ணையுடன் சேர்த்து மூலிகை எண்ணெய் தயார்செய்கிரார்கள்.
                              அந்த வாசனை அந்த இடத்தைச்சுற்றி வீசிக்கொண்டிருக்கிரது.

                              ஆர்ப்பாட்டமில்லாத வைத்தியரின் ரூம்.ஒரு நீள பெஞ்ச், ப்ளாஸ்டி நாற்காலிகள்
                              வைத்தியரின் மேஜை, ஒருசேர். சிம்பிளா இருந்தது. வைத்தியரும் உடனே வந்தார்.
                              பார்க்க தமிழ் பட வில்லன்  செந்தாமரைபோல முறுக்கின மீசை, உயரமான தோற்றம்
                             என்று இருந்தார். தமிழ் புரிஞ்சுக்கரார். பேசுவது மலையாளம்தான். என்ன ப்ராப்ளம்
                             எவ்வளவு வருஷமா இருக்கு, என்னன்ன ட்ரீட் மெண்டெலாம் எடுத்தின்ங்கன்னு
                             விபரம் எல்லாம் கேட்டுத்தெரிஞ்சுண்டார்.  முட்டிகளில் லேசாக எண்ணெய் தடவி
                             நீவி விட்டு கால் விரல்களில் சொடக்கு எடுத்தார். என்னால குணப்படுத்த முடியும்.
                            ஆனா ஒருவாரம் என்கண்காணிப்புல இருக்கணும். தினசரி எண்ணெய்தடவணும், உள்ளுக்கும்
                            கஷாயம் கொடுக்கணும்,என்ன ரியாக்‌ஷன்னு உடனுக்கு உடன் பாக்கனும்.அதனால
                            ஒரு வாரம் இங்க தங்கி வைத்தியம் பாத்துக்கணம் என்றார்.

                           நாங்க தங்கற ஐடியாவோ, ஏற்பாடுகளுடனோ வரலை. அவரிடம் நாளை வருவதாகச்
                          சொல்லிவிட்டு கிள்ம்பினோம். மணி 12. எல்லாருக்கும் நல்ல பசி. ரோட்டில் அடிக்கும்
                          நாத்தத்தில் எதுவும் சாப்பிட முடியும்னு தோணலை.ஆளுக்கு ஒருகாபி 4, 4மேரிபிஸ்கட்
                          சாப்பிட்டு மறுமகளின் அக்காவீடு போனோம். நல்ல வரவேற்பு, நல்ல உபசாரம் பண்ணினா.
                         வைத்தியர் வீட்டில் நானும் மறுமகளும் தங்குவது பற்றி பேசினோம்.மகனுக்கு லீவு
                         இல்லை. அதனால் அவன் மறு நா கிளம்பி  எங்களை டாக்டரிடம் கொண்டு விட்டுட்டு
                         திரும்ப ஈரோட் பாவதாக ப்ளான் பண்ணினோம்.

                        அங்கு தங்க ஒரு ரூம் மட்டுமே தருவார்கள், பக்கத்தில் ஹோட்டல்கள் என்று எதுவும்
                        கிடையாது ரூமில் நாம சமையல் செய்து சாப்பிடலாம். அதற்குவேண்டிய சாமான்களை
                        மறுமகளும் அவஅக்காவும், அக்கா புருஷனும் ஏற்பாடுசெய்த்துதந்தனர்.2, 3 லிட்டர்
                        பிடிக்குமளவில் அடுப்புடன் கூடிய சிலிண்டர்முதல்,சமையலுக்குவேண்டிய உப்பு, புளி, மிளகா
                       முதற்கொண்டு. ப்ரஷர்பேன்முதல் சமையலுக்கு தேவையான பாத்திரங்கள் என்று பார்த்த்ப்
                       பார்த்து பேக் பண்ணி தந்தார்கள். ரொம்பவே ஹெல்ப்பிங்க் நேச்சர். இரவும் அதுபற்றியே
                      பேசிட்டு 12 மணிக்குத்தான் தூங்கப்போனோம். எனக்கு இதுபோல வெளியில் தங்கின
                      பழக்கமே கிடையாது. கொஞ்சம் படபடப்பாகத்தான் இருந்தது வைத்தியத்திற்கென்று வந்தாச்சு
                      என்ன தான் ஆகுது பாக்கலாமேன்னு ஒரு நினைப்பு..
    

31 comments:

பார்வையாளன் said...

ennathan aachu ?

Lakshmi said...

அது வரும் வாரங்களில் தெரியும். தொடர்ந்து படித்து வரவும் நன்றி

Lakshmi said...

அதுதானே வரும்வாரங்களின் மேட்டர்.

Gayathri's Cook Spot said...

Very interesting.

Lakshmi said...

காயத்ரி வருகைக்கு நன்றி, தொடர்ந்து வாங்க.

Chitra said...

சுவாரசியமாக இருக்குதுங்க.

Lakshmi said...

வாங்க சித்ரா. வருகைக்கு நன்றி.

ஆமினா said...

என்ன லெட்சுமிம்மா ??
அடுத்து என்ன ஆச்சுன்னே தெரியலையே

சீக்கிரம் சொல்லிடுங்க

Lakshmi said...

ஆமி நம்ம பக்கம் வந்து நாளாச்சே. வாங்க உங்க அளவுக்கு நம்மால எழுத முடியாதப்பா. நீங்க கல்க்கரீங்க ஆமி.

Lakshmi said...

ஆமி என்னோட இன்னொருப்ளாக் குறையொன்றுமில்லை பக்கமும் வந்து பாத்து கருத்துக்களைச்சொல்லுங்க ஆமி.

விடுதலை said...

இதையும் கொஞ்சம் படிக்கலாமே


பெண்ணெழுத்து: உடலரசியலும் உலக அரசியலும்!

http://maattru.blogspot.com/2010/12/blog-post_07.html

Lakshmi said...

விடுதலை நீங்க சொன்னதையும் படிச்சுப்பார்க்கிரேன் தகவலுக்கு நன்றி

பிரபு . எம் said...

சீக்கிரம் தொடருங்க அம்மா...
ரொம்ப சுவாரஸ்யமான துவக்கம்...

Lakshmi said...

பிரபு வருகைக்கு நன்றி. மீண்டும் வருக.

ஜெய்லானி said...

ஏதாவது வித்தியாசம் தெரியுதா..? இல்லை இதுவும் மத்த விளம்பரம் மாதிரிதானா ..?

Lakshmi said...

இந்த இடம்பத்தி எதிலும் விளம்பரம் வல்லீங்க. எல்லாம் சுகப்பட்டவங்க வாய்வழி சொல்லி கேள்விபட்டதுதான். வித்யாசம் தெரியுதா.
கட்டுரையின் கடைசி பகுதி வரை பொறுமையா படிச்சு பாருங்க.

பாரத்... பாரதி... said...

அமர்க்களமான ஆரம்பம்.

பாரத்... பாரதி... said...

//ஆமி என்னோட இன்னொருப்ளாக் குறையொன்றுமில்லை பக்கமும் வந்து பாத்து கருத்துக்களைச்சொல்லுங்க //
நாமும் சொல்வோம்...

Lakshmi said...

பாரத் பாரதி என் இர்ண்டு ப்ளாக் பக்கமும் வந்து கருத்துக்கள்சொன்னதுக்கு மிகவும் நன்றி. அடிக்கடி வந்து கருத்துக்கள் சொல்லவும்.

umaasvini.asvini said...

ஓ. பரணீயம் பத்தியா. படிக்கும்போது அங்கபோனதுபோலவே இருக்கே.

Lakshmi said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

சிவகுமார் said...

உயர்திரு லக்ஷ்மி அவர்களுக்கு வணக்கம். இன்றுதான் தங்கள் பக்கங்களை பார்த்தேன்.

தங்கள் பதிவுகளை Follow செய்பவர்கள் பட்டியலில் இணைகிறேன், இன்று முதல்! நேரம் இருப்பின்....நான் குப்பை கொட்டும் இடத்திற்கு வருக.... madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com

kavisiva said...

லெக்ஷ்மிம்மா என்னாச்சுன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கு :). தொடருங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_12.html

நன்றி!

Lakshmi said...

சிவகுமார் என்ரெண்டு ப்ளாக் வந்து கருத்து சொன்னதற்கு மிக, மிக ந்ன்றி.

Lakshmi said...

கவி ஊருக்கு போகும் அவசர நேரத்திலும் வந்து
கருத்து சொன்னதுக்கு நன்றி. என்ன இவ்வளவு
நாளா காணோம்னு நினைச்சேன்.

Lakshmi said...

திரு ராம்சாமி அவர்களுக்கு என்னையும் மதித்து வலைச்சரத்தில்
சேர்த்திருப்பதற்கு மிகவும் நன்றிகள். அடிக்கடி நம்ம பக்கமும் வந்து கருத்துசொல்லுங்க.

சத்ரியன் said...

அம்மா,

வலைச்சரம் மூலம் உங்கள் பக்கன் வந்தேன். அந்த மூட்டு வைத்தியத் தகவல் தேவை. என் அம்மாவை அழைத்துக்கொண்டு போக இருக்கிறேன். இந்த பதிவின் தொடர்ச்சியை விரைவாய் எழுங்கள். அல்லது உங்களை தொலைப்பேசி(யில் தொடர்புக் கொள்ள)எண்ணை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ramheartkannan@gmail.com

அன்புடன்,
கண்ணன்

Lakshmi said...

சத்ரியன், உக்களுக்கு மெயில் அனுப்பி இருக்கேன்
என்போன் நம்பரில் 2600 ந்னு வதிருக்கு.260 மட்டுமேசரி.ஓ.கே வா? பதிலனுப்பவும்.

LK said...

ஹ்ம்ம் இதை அன்றே படித்தேன். பின்னூட்டம் இட மறந்து விட்டேன்,. மன்னிக்கவும்

கீதா சாம்பசிவம் said...

ஆயுர்வேதம் பிழிச்சலா?? ம்ம்ம்ம், எதுக்கும் அசையாத மூட்டு வலியும் இருக்கே.

Related Posts Plugin for WordPress, Blogger...