Pages

Back to Top

பரணீயம்(3)

பரணீயம்(3)

சாயந்தரம் பக்கத்து ரூம்காரா, நாங்க வராண்டாவில் உக்காந்து அரட்டை.
அவா, பூரா,பூரா மலையாளத்திலேயே சம்சாரிக்கரா. எனக்கு மலையாளம்
தெரியாது. என்மறுமகளுக்குத்தெரியும். அவாஎன்னசொல்ரான்னு எனக்கு
தமிழ்ல சொல்லுவா. அங்கியும் ஒருவயசான பாட்டி இருhந்தா.என்னிடம்
எத்தரை திவசம் தாமசிக்கும் நுகேட்டா. நான் உமா(ம்ருமக பேரு) விடம்
உமா நான் உயிரோட இருக்கும்போதே எனக்கு தெவசம்லாம் சொல்ராளே
என்ரேன். அவ சிரிச்சுண்டே அம்மா, மலையாளத்ல திவசம்னா நாள்னு
அர்த்தம்,எத்தனை நாள் தங்குவீங்க்னு கேக்கரா.என்ராள். நல்ல பாஷை போ.
தமிழ்ல தெவசம் நா அர்த்தமே வேர.!!!!!!!!!!
அவாளுக்கு எண்ணை தடவிக்க ஆரம்பிச்ச அடுத்த நாள்லேந்து உடம்பு பூரா
பயங்கர வலி ஆரம்பிச்சுதாம். வைத்யரிடம் கேட்டதுக்கு ஆயுர்வேத மருத்து
வத்தில் முதல்ல உடம்பில் உள்ள வலி பூரா வெளியே கொண்டு வரும். பிறகு
தான் படிப்படியாக குணம் தெரியும் என்றாராம். நாளை முதல் உங்களுக்கும்
வலி ஆரம்பிச்சுடும், அப்போ இப்படி சிரிச்சுண்டெல்லாம் இருக்கமுடியாதுன்னு
வேர பயங்காட்டினா. என்னோட ஆர்த்த்ரைட்டீஸ் ப்ராப்ளம் கடந்த 10. 15 வருட
மாகவே தொந்தரவுபண்ணிட்டுதான் இருக்கு. கீழதரைல உக்காந்துக்க முடியாது,கீழபடுக்க
முடியாது.முட்டியை மடக்கவேமுடியாது, சேர்லதான் உக்காரமுடியும், கட்டில்லதான்
படுக்க முடியும். நான் இருப்பது மூணாவது மாடியில். வெளில போகவர, மூணு
மாடி ஏறி, இறங்கரதுக்குள்ள வலி பின்னிஎடுக்கும். ரோட்ல நடக்கவும் சிரமம்தான்.
எனக்குத்தெரிந்த கை வைத்தியமெல்லாம் பண்ணிப்பாப்பேன்.எனக்கு அலோபதி சூட்
ஆகாது.

ஓமியோபதி 6 மாசம் ட்ரை பண்ணினேன். மருந்து எடுக்கும்வரை வலி பொறுக்கும்
படிதான் இருந்தது. ஸ்டாப் பண்ணினதும் திரும்ப வலிக்க ஆரம்பிச்சுடுத்து. நானும்
எதுவைத்தியம் தொடங்கினாலும் ஒரு மாசம் இரண்டுமாசத்தில் நிறுத்தமாட்டேன்.
குறைந்தது 6 மாசம் கண்டின்யூ பண்ணிபாப்பேன்.இப்படி கடந்தவருடங்களில் நிறைய
வைத்தியம்பாத்தும்கூட இந்த வலிகளுக்கு என்னை ரொம்பவே பிடிச்சு போச்சு போல
இருக்கு. என்னை விட்டு போகமாட்டேன்னு என்கூடவே தங்கிடுத்து. அப்பப்போ ஜாஸ்தி
அப்பபோ கம்மி என்று விளையாட்டுகாட்டிண்டு இருக்கு. நான் டேக் இட் ஈசின்னு இருந்தா
கூட என் பசங்களுக்கு நான் அவஸ்தைப்படரதை பாக்கசகிக்கலை. அதுதான் இப்ப இங்க
வைத்தியத்துக்கு படை எடுப்பு.

இன்னிக்கே காலேலந்து 3 தடவை எண்ணை குளியல் பண்ணிண்டாச்சு.காயக்காய தடவின்
டே இருக்கணும். ஒரு பால்காரன் வந்து பால்கொண்டுதரான் காபி, தயிருக்கு சரியா இருக்கு.
கேரளா பூராவும் நாங்க இருந்த இடத்தில் 8மணிமுதல்8 3/4 வரை கரண்ட் போயிடுமாம்.
உமா இரவு சமையல் முடித்ததும் கரண்ட் போச்சு. மறுபடி வராண்டா திண்ணை அரட்டை.
நீங்க எங்கேந்து வரீங்க வீட்லயாரெல்லாம் இருக்கீங்க்ன்னு குடும்ப கதைகள் பேசினா.
அவங்களும் அவங்களைப்பத்தி சொன்னா.கேண்டில் ஏத்தி வைச்சுனு பேசிண்டே 9 மணி
வரையிலும் வராண்டாலயே உக்காந்தோம். லைட் வந்தபிறகு அவாளுக்கு சாப்பாடு வாங்க
போனார். நாங்க நானும் உமாவும் சாப்பிட்டு முடிச்சு அவள் பாத்திரங்கள்தேச்சு அலம்பி
வந்தபிறகுதான் அவால்லாம் சாப்பிட்டா. 10மணிஆச்சு மொபைல்ல பாட்டுகேக்கலாம்னா
ஒரே மளையாளப்பாட்டாதான் வரது. ஏற்கனவே ரிக்கார்ட் பண்ணின பாட்டுக்கேட்டுட்டு
11 மணிக்கு ரூம்குள்ள போனோம்.
ரூம்ல ஒருவெண்டிலேட்டரும் கிடையாது,கதவை சாத்தினா ஜீவ சமாதிதான் இருட்டு
எண்ணைபிசுக்குவாடை கட்டில் கைவச்சா ஒட்டுது.படுத்தா கேக்கவே வேண்டாம். இந்த
அழுக்கு கட்டில்ல படுத்தா இல்லாதபுது வியாதியும் ஒட்டிக்குமேன்னுதான் தோணித்து.
நான் அந்தகட்டில்லயும் உமா சின்னபெஞ்சிலுமா படுத்தோம் . எங்கதூக்கம்வரும்? புது
இடம் வேர. உடம்பு பூரா எண்ணை,வேர்வைன்னு ஒருவழி பன்னிடுத்து. மேல ஒரு
ஃபேன் ஒடனுமா, வேண்டாமான்னு யோசிச்சு,யோசிச்சு சுத்திட்டு இருந்தது.

22 comments:

ஹுஸைனம்மா said...

சுவாரசியாமப் போகுது உங்க அநுபவம். இந்த வகை சிகிச்சை எடுத்துக்க நினைக்கிறவங்களுக்கு பயன்படும்.

LK said...

மூட்டு வலி என் பாட்டி அவஸ்தை பட்டு பார்த்து இருக்கேன். ரொம்ப கஷ்டமா இருக்கும்

LK said...

ரொம்ப நன்னா போகுதுமா

Lakshmi said...

ஹுசைனம்மா அதுக்க்காகத்தான் பதிவே போடரேன். யாருக்காவது பயன்பட்டா நல்லதுதானே.

Lakshmi said...

அதுதான் கார்த்திக் அவஸ்தைப்படரவங்களைவிட
அவங்களைப்பாக்கரவங்க ரொம்பவே கஷ்டமா ஃபீல்
பண்ணுவாங்க.

Lakshmi said...

கார்த்திக் இப்ப படிக்க ஈசியா இருக்கா. ரோஜா எல்லாம் போயே போச்.

LK said...

இப்ப ஓகே மா. நானும் இந்த மாதிரி நட்சத்திரம் விழும் வண்ணம் வைத்திருந்தேன். பிறகு எல்லோரும் படிக்க முடியவில்லை என்று சொன்னப் பின் நீக்கிவிட்டேன். ரொம்ப நன்றிமா

Chitra said...

சுவாரசியமாக நீங்கள் சொல்லும் விதம், நல்லா இருக்குதுங்க.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வும்மா. போன பதிவுல நான் பார்த்த பரணீயம் பத்தி கேட்டு இருந்தீங்க. அது காலடி பக்கத்தில இருக்கு. கொச்சின்ல இருந்து என்னோட அக்கா வைத்தியம் பண்ணிக்கப்போனப்ப நான் பார்த்து இருக்கேன். உங்களுக்கு அந்த சிகிச்சைல குணம் ஆச்சான்னு நான் அடுத்த பதிவுகளைப் படிச்சி தெரிஞ்சிக்கிறேன்..... :)

Lakshmi said...

கார்த்திக் இதுபோல என்னன்னாலும் சொன்னாதானே தெரியவரும் இல்லியா? இதுல தேங்க்ஸ் லாம் எதுக்குப்பா.

Lakshmi said...

சத்ரா நீங்களும் என் எல்லா பதிவும் படிச்சு பின்னூட்டம் கொடுத்து என்னை உற்சாகப்படுத்தி வருகிரீர்கள். நன்றிம்மா.

Lakshmi said...

வெங்கட் உங்க பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.இந்த பரணீயம் திருவனன்த புரம் பக்கம் இருக்கு.இதுபோல இயற்கை வைத்யத்திற்கு கேரளாவில் நிரைய இடங்கள் இருக்கு போல இருக்கு,

LK said...

//என்னன்னாலும் சொன்னாதானே தெரியவரும் இல்லியா? //

இனி கண்டிப்பா சொல்றேன்

Lakshmi said...

தேங்க்யூ கார்த்திக்

vanathy said...

ஆன்டி, நல்ல விறு விறுப்பா போகின்றது.

Lakshmi said...

தேங்க்யூம்மா.

மனோ சாமிநாதன் said...

உங்கள் அனுபவங்களை எழுதி வருவது மகிழ்ச்சியாக உள்ள‌து. இது பல பேருக்கு தீர்வாக இருக்கலாம். மூட்டு வலி இப்போது சின்ன பெண்களுக்குக்கூட இருக்கிறது. எல்லோருக்குமே உங்கள் அனுபவம் பலனளிக்கக்கூடும். தொடர்ந்து எழுதுங்கள்!

Lakshmi said...

முதல் முறையா என்ப்ளக் வந்திருக்கீங்க்ன்னு நினைக்கிரேன். அடிக்கடி வாங்க.

..... said...

யோசிச்சு...
யோசிச்சி
படிக்க வைசிட்டீங்க...

Lakshmi said...

யாருங்க நீங்க? யாரானுலும் என்ன வருகைக்கு நன்றிகள்.

கீதா சாம்பசிவம் said...

அலோபதி, நேச்சுரோபதி எதுக்கும் அசையாது. இப்போல்லாம் மருந்தே சாப்பிடறதில்லை, மூட்டுவலியும் ஒரு நண்பனா மாறிடுச்சு.
ஹிஹிஹி திவசம் நல்லா இருக்கே/

Lakshmi said...

கீதா நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...