Pages

Back to Top

பரணீயம்(4)

பரணீயம்(4)

இரவு சரியாதூக்கமில்லை. எழுந்தக்கும்போதே டல்லா இருந்தது.
உமா 7மணிக்கு எழுந்து ப்ரெஷ் பண்ணிட்டு பால்வாங்கபோனா.
பாத்ரூம்னு தனியா எதுவும் கிடையாது.வைத்தியத்துக்கு வரும்
பெஷண்ட்கள் குளிக்கக்கூடாதுன்னுதான், பாத்ரூமே கட்டலை
போல இருக்கு கூட துணைக்கு இருப்பவர்கள் என்ன செய்வான்னு
ஒருயோசனையே. கிடையாது.அhந்த சின்ன ரூம்க்குள்ளயே ஒரு
குட்டி வெஸ்டன் டாய்லட்(அப்பாடா)!!!!!!! மட்டும் இருந்தது.அங்க
தான் உமா குளிக்க வேண்டி வந்தது. கொறத்தி பிள்ளைபெத்தா
குறவன் பத்தியம் சாப்பிடுவனாம்.அதுபோல எனக்கு வைத்யம் பாக்க
என்கூட அவளையும் கஷ்டப்படுத்தவேண்டியிருக்கு. என்ன பண்ண?
அவபால்வாங்கிவரும்போதே ந்யூஸ்பேப்பரும் வாங்கி வந்தா. நல்லா
சூடு,சூடா, டேஸ்டா காபி,தொட்டுக்க ந்யூஸ்பெப்பர்.னிதானமா ரசிச்சு
காபி குடிச்சு பேப்பர் படிச்சு வைத்யரிடம் எண்ணைதடவிக்க நாங்க
எல்லாரும் போனோம். வந்து, நல்லா பெரிய வாக் போனேன். என்ன
அற்புதமான அனுபவம்தெரியுமா. தென்னை, மா,பலா மரங்களின் ஊடே
சூரியக்கதிர்கள் வந்து நம் மேல படும்போது ஆஹா, சூப்பரா இருக்கு.
மாமரத்திலிருந்து,குயில்களின்,குக்கூ, கிளிகளின் கீ,கீ,மைனாவின் ,குருவி
யின் இனிமையான சங்கீதம்.அருமையான காலைப்பொழுது.எனக்குன்னு
வேலை எதுவும்கிடையாது, மன்சை அமைதியா வச்சுண்டு இதுபோல ஒரு
வாக்கிங்க் இங்கதான் சாத்தியம்.வாழை மரங்கள்பக்கம் மட்டும் போகலை.
சின்ன வயசுல எங்கவீட்டு வேலைக்காரி( ஆத்தான்னுதான் கூப்டுவோம்)
சொல்லுவா, கண்ணு, வாழைமரங்ககிட்ட போகாதேம்மா. வாழை இலையோடு
இலையா பச்சை பாம்பு படுத்திருக்கும்..கடிச்சுடும்னு. அந்த நினைவுதான்
இத்தனை வருடங்களுக்குப்பிறகும் இப்பவும் நினைவுக்குவந்தது. சிரிப்பாகவும்
வந்தது. கீழே உள்ள மண் பூராவும் சப்பலுக்குள்புகுந்து எண்ணைதடவிய கால்
பாதங்கள் செருப்பிலிருந்து வழுக்கிக்கொண்டே இருந்தது.கால்பாதம் செப்பல்
பூராவும் ப்ரௌன் ஷூ போட்டதுபோல மண் அப்பியிருந்தது.அரைமணி
நடக்கப்போயி ஒரு மணி நேரம் நடந்துட்டுதான் வந்தேன். அலுப்பே தெரியலை.
சுகமான வாக்.உமாவும் பக்கத்து ரூம்காராளும் வராண்டாவில் உக்காந்து பேசிண்டுஇருந்தா. என்னைப்பார்த்ததும் எங்க போனாய் என்றா. வாக்கிங்க் என்ரேன்.எண்ணைவைத்தியம் தொடங்கி24 மணி நேரம் ஆச்சே இன்னும்உன்கக்கு வலிஆரம்பிக்கலியான்னு கேட்டா. எனக்கும் எக்ஸ்ட்ராவா எந்த வலியும்கூடலை.எப்பவும் உள்ள வலிமட்டும் இருந்தது. எங்களுகெல்லாம் மறுனா தொடங்கிபொறுக்கமுடியாம வலி தொடங்கிச்சு. தாங்கவே முடியாம வைத்தியரிடம் போனோம்.உனக்கு ஏன் இன்னம் வலி வல்லைங்கரா. நான்என்ன சொல்ல. வைத்தியர் நான்வாக்கிங்க்போனபோது வந்துபாத்தார்.உனக்கு இன்னம் வலி ஆரம்பிக்கலியா என்றார்.
இவர்களும் திரும்ப அதப்பற்றியே கேக்கவும் எனக்கு ஒரு புறம் சிரிப்பாதான் வரது.ப்ரெக்னட் லேடியை லேபர் வார்ட் க்குள்ள அனுப்பிட்டு இன்னும் வலி வல்லியான்னுஒவ்வொருவ்ராக விசாரிப்பா இல்லியா? அதுதான் நினைவுக்கு வந்தது.


மருந்துக்கு எந்த எபக்டும் இல்லை போல இருக்கு அதுதான் எந்த ரியாகஷனும்
இல்லைனு எனக்கு தோனித்து. எங்க ரும்பக்கத்லயே இன்னொரு சின்ன ரூமும்இருந்தது. அங்கு ரெண்டு விறகடுப்பு, கீழே கொஞ்சம் விறகுகள்,ரெண்டு அலிமினியகுண்டான் இருந்தது. பக்கத்ல ஒருபெரிய அம்மி+குழவி, கீழ ஒர்ரமா ஆட்டுக்கல்எல்லாம் இருந்தது. ஓரமா ஒரு தண்ணி பைப்பும் இருந்தது.
எப்பவும் தண்ணி வந்தது.மிக்சி, ஃப்ரிட்ஜ்,இல்லாம அம்மில அரைச்சே உமா சூப்ப்ரா சமையல் பண்ணி போட்டா.அவகுளிச்சுட்டு ப்ரேக்ஃபாஸ்ட் பண்ணினா.சுடா ப்ரேக்ஃபாஸ்ட்,காபி. அவளுக்குதான்
பூரா வேலையும். நான்பூரா நாளும் சும்மதான் இருக்கவேண்டி இருந்தது.திரும்பவழிய, வழிய எண்ணை தடவிக்க வேண்டிய வேலை மட்டுமே. மனசும் ரிலாக்சாஇருக்கு. எனக்கு டெய்லி டைரி எழுதும் பழக்கம் உண்டு.எண்ணை வழுக்கும்கையோடுடைரி எழுதி செல்லுல மலையாலப்பாட்டுகேட்டு நல்லவேளையா நிரைய பாக்கெட்
நாவல் கொண்டு போயிருந்தோம். அதைபடிச்சுண்டு இருப்பேன். கோழி, பூனை, நாய்எல்லா வற்றையும் கொஞ்ச நேரம் வேடிக்கை.அணில்கள் வேகவேகமா வாலைத்தூக்கிண்டுமரத்திற்கு,மரம்தாவும் அழகு கொஞ்சம். எவ்வளவுஅழகைஎல்லாம் மிஸ்பண்ரோம்னு
தோனுது.

26 comments:

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

வாழ்வில் நிறைய இலந்துவிட்டீர்கள் . பதிவு நல்ல இருக்கு

வெங்கட் நாகராஜ் said...

நல்லா போகுதும்மா பரணீயம்! அந்த தங்கும் அறையில் எதைத் தொட்டாலும் எண்ணைப் பிசுக்கு இருப்பது போல இருக்குமே….. தரையில் கால் வைக்கும்போது கால் ஒட்டுவது போல கூட இருக்குமில்லையா? தொடருங்கள் அம்மா!

Lakshmi said...

பனித்துளி சங்கர். கீதை வாக்கியம்தான் நினைவுக்கு வருது, நாம எதைக்கொண்டு
வந்தோம் இழப்பதற்கு?

Lakshmi said...

வெங்கட் கூட இருந்து பார்த்ததுபோலவே சொல்கிரீர்களே. உண்மையும் அதுதான்.

ஆமினா said...

வழக்கம் போல அருமையா இருந்தது மா...

கலக்குங்க

Lakshmi said...

நன்றி ஆமி.

vanathy said...

சூப்பர், ஆன்டி. அடுத்த பாகத்தை விரைவில் போடுங்கோ.

Lakshmi said...

வானதி எல்லாரும் ஆவலுடன் படிப்பதைப்பார்த்தால்
நன்னாதான் எழுதரேன் போல இருக்கு.:)

ம.தி.சுதா said...

ஃஃஃஃஎவ்வளவுஅழகைஎல்லாம் மிஸ்பண்ரோம்னுஃஃஃஃ

நிசமாவே தான்... நல்ல எழுத்து நடை அம்மா..

Lakshmi said...

ம.தி. சுதா வருகைக்கு நன்றி.

ஆனந்தி.. said...

மன்னிச்சுக்கோங்க ஆன்ட்டி..தாமதமான வருகைக்கு..எப்படி இருக்கீங்க? இப்போ எப்படி இருக்கு வலி?? அருமையா சொல்லிட்டு போறீங்க உங்க அனுபவத்தை...ரொம்பவே வலி அனுபவிசிருக்கிங்களே நீங்க...ம்...போனதெல்லாம் போகட்டும்...ஹாப்பி நியூ இயர் ஆன்ட்டி..:)))

ஆமினா said...

உங்களுக்கு விருது கொடுத்துருக்கேன்!!!

மறக்காம/மறுக்காம வாங்கிக்கோங்க

http://kuttisuvarkkam.blogspot.com/

எல் கே said...

சீக்கிரம் அடுத்த பாகம் போடுங்கள் அம்மா

Lakshmi said...

ஆனந்தி தாமதமானாலும் வந்து பாக்கரீங்க இல்லியா.அதுதானே வேனும். ஹேப்பி ந்யூ இயர்.

Lakshmi said...

என்ன ஆமி, எனக்கு விருதா. ஆமி இந்த 63 வயதுவரை ஒரு விருது கூட வாங்கியதே இல்லை. நீங்க என்ன விருது கொடுத்திருக்கீங்க்ன்னு தெரிஞ்சுக்க மிகவும் ஆவலா இருக்கேன்.

Lakshmi said...

வாரம் ஒரு பதிவு போட்டுடரேனே கார்த்திக்.

Srini said...

" கொறத்தி பிள்ளைபெத்தா
குறவன் பத்தியம் சாப்பிடுவனாம் ".. இந்த மாதிரி பழமொழியயெல்லாம் எங்க கண்டுபுடிக்கறீங்க ?! “ தென்னை மரத்துல தேள் கொட்டுனா பனை மரத்துல நெறி ஏறுச்சாம் “ங்கற மாதிரி..!! நல்ல நடை, “மனத்தின் கனிவு எழுத்தின் வெளிப்பாடாக “..!! வாழ்துக்கள் பணி தொடர !! Happy New Year

Srini said...

அருமை..!!

Lakshmi said...

ஸ்ரீ நி, வருகைக்கு நன்றி. தமிழில் பழமொழிகளுக்கா பஞ்சம்? அப்பப்போ எடுத்து விட வேண்டியத்துதான்.:)

சத்ரியன் said...

அம்மா,

இன்னிக்கு எல்லா பரணீயத்தையும் படிச்சாச்சு. பரணீயம் 5 எப்ப வரும்...?

அம்மாவிற்கு புத்தாண்டு வாழ்த்துகள்.

Lakshmi said...

சத்ரியன் வருகைக்கு நன்றி நாளை அடுத்த பகுதி வரும். அம்மாவை கூட்டிப்போனார்களா?

Lakshmi said...

சத்ரியன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

kasthurirajam said...

beautiful.Belated wishes for the happy and properous new year 2011

Lakshmi said...

thankyou very much. happy new year.

கீதா சாம்பசிவம் said...

போறது, இனிய இயற்கைக் காட்சிகளாவது கிடைச்சதே.

Lakshmi said...

ஆமா கீதா.

Related Posts Plugin for WordPress, Blogger...