Pages

Back to Top

படித்ததில் பிடித்தது (மீள் பதிவு)


சில பாக்கியசாலிகள்,தியாகம் செய்யாமலேயே பெயர் வாங்கி விடுகிறார்கள். சில துர்பாக்கியசாலிகள்

கடுமையான தியாகத்துக்கும், விளம்பரமில்லாமல் மறைந்து விடுகிறார்கள். அவர்களை மன்னரும்

மறந்து விடுகிறார்கள்,கவிஞரும் மறக்கிறார், உறவினர்களும் மறக்கிறார்கள்.




ராமாயணம் முழுவதிலும் யார், யாருடைய பெருமைகளோ பேசப்படுகின்றன. கணவனோடு காட்டுக்குச்

சென்ற சீதாவைப்பற்றி கம்பன் உருகுகிரான், கம்பனைப்படித்த ரசிகன் உருகுகிரான், கம்பனது சிருஷ்ட்டியில்

ராமனும் உருகுகிரான்.






ஆனால் பதினான்கு ஆண்டுகள்கணவனைப்பிரிந்து, கைம்பெண் போலவே வாழ்ந்த இலக்குவன் மனைவி

ஊர்மிளாவுக்காக யார் கண்ணீர் வடித்தார்கள்.? கம்பனுக்கும் கூடக்கருணை இல்லாமல் போயிற்றே?

கணவனோடு காட்டுக்குச்செல்வதுமட்டுமே தியாகம் இல்லை. கணவனைப்பிரிந்து நோன்பு ஏற்பதே

அதைவிடப் பெரிய தியாகமாகும்.










கொஞ்சகாலமாவது ஆரணயத்தில் சீதா வாழ்ந்திருந்து,கணவனுடைய காதலைப்பெற்றிருக்கிராள்.

ஊர்மிளாவுக்கு அதுவுமில்லையே? சீதா அசோகவனத்தில் இருந்தது பெரிதாகப்பேசப்படுகிரதே?

ஊர்மிளா அயோத்தியில் கண்வனைபிரிந்திருந்து பட்ட அவதியை யார் எண்ணுகிரார்கள்?




ஊர்மிளா ஒரு தேவமகள். மாமியார் சுமத்திரையை விட பவித்ரமானவள்.சொல்லப்போனால்

சீதாவை விடவும் ஊர்மிளா உயர்ந்தவள். காட்டுக்குப்போகிரான், கணவன் என்றதும் நானும்

வருவேன் என்று அடம் பிடித்து சீதா சென்று விட்டாள். வாயைக்கூடத்திறக்காமல் ஒரு மூலையில்

நின்று விட்டாளே ஊர்மிளா. பிரிவினும் சுடுமோ, பெருங்காடு?என்று அவளோன்றும் ததுவம் பேச

வில்லையே?




சீதையின் உணர்வுகள் ஊர்மிளாவுக்கு இல்லை என்று அர்த்தமா? அவள் கணவனை நேசிக்கவில்லை

என்று அர்த்தமா? ஊர்மிளா ஒரு லட்சிய மனைவி. அவள்பாடியது ஒருதலை ராகம். கணவன் என்ன

சொல்கிரானோ அதுவே நியாயம், அங்கே கேள்விக்கே இடமில்லை. எண்ணிப்பார்த்தால் பெருமைக்

கணக்கில் ஊர்மிளாவுக்கே முதல் இடம். சீதாவுக்கு இரண்டாவது இடம்தான்.




இன்னொரு துர் பாக்கியசாலி சிலப்பதிகாரத்து மாதவி.கண்ணகி கற்போடு வாழ்ந்த மரபு.அது குலஒழுக்கம்.

மாதவிக்கு என்னதேவை? ஆயினும் அவள் வாழ்ந்தாள். தனதுமகள் மணிமேகலையை தன்மகளல்ல

என்றும் மாபெரும் பத்தினி மகள் என்றும் வாழ்த்தினாள். கற்புடையோர் மறைவத்போல நான் மறையவில்லையே

என்று கலங்கினாள். தன்மகளைத் துறவி ஆக்கினாள்.பேசப்பட வேண்டியது கண்ணகியா?, மாதவியா?.

கன்ணகி கடைப்பிடித்தது ஒரு நீதிபதி கடைப்பிடிக்கும் சட்ட நெறிகளே. மாதவி அனுசரித்தது குற்றத்தில்

பிறந்து ஞாயத்தில் வளர்ந்த சந்த்ரோதயம்.




எவ்வகையாயினும் களங்கமில்லாதவள் மாதவி. அவளுக்குத்தரப்படவேண்டிய நியாயமான இடம்

தரப்படவில்லையே? கண்ணகிக்கு கடற்கரையில் சிலை என்றால் மாதவிக்கு நதிக்கரையிலாவது வேண்டாமா?

வேண்டாம் உயர்ந்த மனிதர்களுக்கு இந்த விளம்பரங்கள் தேவை இல்லைதான்.




மேகங்க வைரங்களைச்சிந்துவதில்லை. ஆனால் அவை இல்லை என்றால் நீங்களும் இல்லை நானும் இல்லை.

12 comments:

Yaathoramani.blogspot.com said...

இப்போதுதான் முதன்முறையாகப் படிக்கிறேன்
இதில் எழுப்பியுள்ள கேள்விகள் எல்லாம்
மிகச் சரியாகத்தானே உள்ளன
மனம் கொள்ளைகொண்ட பதிவு
பகிர்வுக்கு நன்றி

Yaathoramani.blogspot.com said...

tha.ma 1

எல் கே said...

ஊர்மிளை ஓரளவு நடக்கப் போவதை அறிந்தவள் என்று பெரியவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.

மாதவி பற்றி நோ கமெண்ட்ஸ்.

திண்டுக்கல் தனபாலன் said...

மீள்பதிவா... நாம் படித்ததில்லை அம்மா...
சிந்திக்க வைக்கும் பகிர்வு....

த.ம. 2

Anonymous said...

அருமையான பதிவு...

இனிவரும் காலங்களில் கண்ணகியையும் மாதவியையும் அடுத்த தலைமுறை அறியாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...

மகேந்திரன் said...

கேட்கப்படவேண்டிய கேள்விகள் இங்கே
கணைகளாய் ...

Athisaya said...

அருமையான கதிவு.தத்தனையும் கேட்க வேண்டிய நியாயமான கேள்விகளே!!!!!!!!வாழ்த்துக்கள்.

குறையொன்றுமில்லை. said...

அதிசயா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Vijayan Durai said...

ஊர்மிலை பற்றி தங்கள் பதிவு மூலமே அறிய வருகிறேன்.சிந்திக்க வைக்கும் விசயங்கள் .நன்றி அம்மா.

குறையொன்றுமில்லை. said...

விஜயன் வருகைக்கு நன்றி நம்ம புராணங்களில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விஷயங்கள் இருக்கு

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஊர்மிளா பற்றி நம் ரிஷ்பன் அவர்கள் கல்கியில் ஓர் கதையே எழுதியுள்ளார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு வெளியானது.

தாங்களும் அருமையாகவே சொல்லியுள்ளீர்கள்.

தங்களுடன் ஓர் விருதை பகிர்ந்து கொண்டுள்ளேன். தயவுசெய்து ஏற்றுக் கொள்ளவும்.

Link: http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html

vgk

குறையொன்றுமில்லை. said...

ஊர்மிளா பற்றிய கதை கல்கியில் நானும் படிச்சு ரிஷபன் அவர்களின் பதிவில் பின்னூட்டமும் போட்டிருக்கேன் சார்.எனக்கு விருது கொடுத்து பெருமைப்படுத்தியதற்கு நன்றிகள் கோபால் சார்

Related Posts Plugin for WordPress, Blogger...