Pages

Back to Top

வேலை ரெடி

ஹோட்டலில் சாப்பாடு  ரெடின்னு போர்டு போட்டிருப்பதுபோல இருக்கா?
 நான் பதிவு எழுத ஆரம்பித்து சுமாரா ரெண்டு வருடங்கள் ஆகிரது. பலதரப்பட்டவர்களின் நட்பு கிடச்சிருக்கு 20- வயது முதல் 60 வயதுவரை நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. எல்லாருமே என்னிடம் மெயிலிலும் சாட்டிங்கிலும் போனிலும் லஷ்மி அம்மான்னு அன்பாக பேசி பழகுராங்க. இது எவ்வளவு சந்தோஷமான விஷயம் இல்லியா? போனமாசம் ஒரு பையன் (25 வயசு) அம்மா படிச்சுட்டு கொஞ்ச நாளா வேலை இல்லாம இருக்கேன் மும்பையில் எனக்கு ஏதானும் வேலை கிடைக்குமான்னு அவன் பயோடேட்டா எனக்கு அனுப்பினான். நானும் மும்பையில் தெரிந்தவர்களிடம் கேட்டுகிட்டு இருக்கேன். போன வாரம் துபாயிலிருந்து ஒரு ஃப்ரெண்ட் போன்பண்ணி அம்மா எங்க கம்பெனியில் வேலைக்கு ஆள் வேணும். உங்களுக்குத்தான் நெட்டில் நிறையா ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களே தெரிஞ்சா சொல்ரீங்களான்னு கேட்டார். ஒருபக்கம் வேலை தேடும் இளைஞர்கள் இன்னொரு புறம் வேலைக்கு தகுந்த ஆட்கள் தேடும் பெரியவர்கள் எல்லாரும் என்னை அப்ரோச் பண்ணுவது சந்தோஷமா இருக்கு. அப்படி தனிதனியா யாரையும் விசாரிச்சுண்டு இருக்க முடியாதில்லியா அதனால அதையே ஒரு பதிவா போட்டுட்டேன்.
 துபாயில் ஆயில் கம்பெனியில் பொறுப்பான பதவியில் அவர் இருக்கார் அவங்க கண்டிஷன் சொன்னார் நானும் அதை கிழே சொல்லி இருக்கேன்.

 துபாயில் ஆயில் கம்பெனியில்  RIG SUPPLYARS  ஆக வேலை செய்ய ஆள் வேணுமாம்.
 கடுமையான உழைப்பாளியா இருக்கணும். அவங்களே ட்ரெய்னிங்கும் கொடுத்து நல்லா வேலையும் வாங்குவாங்க. ஹார்ட் ஒர்க்கரா இருக்கனும். இது ஜஸ்ட் டேபிள் ஒர்க் கிடையாது. அதே சமயம் கம்ப்யூட்டர் நாலட்ஜும் இருக்கணும் ஏதானும் ஒரு கிராஜுவேட் முடிச்சிருக்கணும். வயசு 26- க்குள் இருக்கணும் ஹிந்தி, இங்க்லீஷ், தமிழ்  நல்லா பேசத்தெரிஞ்சிருக்கணும் 50, லேந்து 55 -ஆயிரம் வரை சம்பளம் தருவாங்க. இதுதான் அவங்க கண்டிஷன்ஸ். இந்த தகுதி உள்ள பையன் யாரானும் தெரிஞ்சவங்க இருந்தா பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும். நான் அவங்க மெயில் ஐ. டி தரேன் நீங்க அவங்களுக்கே உங்க பயோடேட்டா அனுப்பலாம். நான் வெரும் கைகாட்டி மட்டும்தான்.

15 comments:

Anonymous said...

// ஒருபக்கம் வேலை தேடும் இளைஞர்கள் இன்னொரு புறம் வேலைக்கு தகுந்த ஆட்கள் தேடும் பெரியவர்கள் எல்லாரும் என்னை அப்ரோச் பண்ணுவது சந்தோஷமா இருக்கு.// படிப்தற்கு எனக்கும் மிகுந்த magilchiyaga உள்ளது . உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

அருமையான சேவை! இனிய பாராட்டுகள்.

நம்மால் யாருக்காவது நல்லது நடக்குதுன்னால் பதிவரா இருப்பதில் புண்ணியம்தான்:-)

Ramani said...

பதிவு உலகின் விஸ்தாரமும் பலனும்
பிரமிக்க வைக்கிறது
பதிவுக்கு மனமார்ந்த நன்றி

Ramani said...

tha.ma 2

பால கணேஷ் said...

வயசு மட்டும் அவங்க கேட்டதைவிட 20 கூடிப் போச்சே.... என்னம்மா பண்ணுறது நான்... என்ன பண்ணுறது... உஙகள் மூலம் பலர் பலன் பெற என் நல்வாழ்த்துக்களை சொல்லிக்கறேன்.

♔ம.தி.சுதா♔ said...

மிகவும் நல்ல செயல் அம்மா மிக்க நன்றி...


ம.தி.சுதா
தென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்

Lakshmi said...

seenuguru வருகைக்கு நன்றி

Lakshmi said...

துளசி கோபால் ஆமாங்க பதிவரா இருப்பதில் மகிழ்ச்சியாதான் இருக்கு.

Lakshmi said...

ரமணி சார் வருகைக்கும் கருத்துக்கும் ஓட்டுக்கும் நன்றி

Lakshmi said...

கணேஷ் உங்களுக்கு வயசாச்சுன்னா என்ன? தகுதி உள்ளவங்க யாருக்காவது சொல்லலாமே . யாருக்காவது பயன் படனும்னுதானே இந்தப்பதிவே போட்டேன்.

Lakshmi said...

ம. தி. சுதா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

radhakrishnan said...

என்னம்மா,புதிய சேவைக்குத் தயாராகிவி
ட்டீர்களே. வெளுத்துக் கட்டுங்கள்.
பரோபகாரம், இதம் சரீரம் என்பார்களே.
உங்கள் பதிவுகளின் வீச்சு அபாரமாக இருக்கிறதே?
வாழ்க்கையின் கடைப் பகுதி உங்களுக்கு
அருமையாக அமைந்திருக்கிறது.சாரி
அமைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.கேரி ஆன். தொடர வாழ்த்துக்கள். நன்றி அம்மா

Lakshmi said...

ராதாகிருஷ்னன்சார் வாங்க யாருக்காவது இந்த பதிவு பயன் பட்டா நல்லது தானே?

Athisaya said...

நல்லதொரு பணி அம்மா.நிச்சயம் பயன்டும்.வாழ்த்துக்கள்.!
முதல்முதலாய் முடிவாய்!!!! ..!!!!

Lakshmi said...

அதிசயா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...