Pages

Back to Top

DIVINE ACU THERAPY

போன மாசம் ஈரோடு போனதில் சில சு  சுவாரசியமான  அனுபவங்கள். அதில் ஒன்று இந்த ஹெல்த் கேர் அனுபவம்.இங்கு வந்தபிறகு ஒரு மாற்று மருத்துவ முறையைப்பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மருந்தில்லா மருத்துவம் என்று அதற்குப்பெயர். இந்தமருத்துவ மையத்தை நடத்துபவர் பெயர்  E. R. திரு ஞானம் அவர்கள்..கடந்த 23 ஆண்டுகளாக அவர் இந்த சிகிச்சையை செய்து வருகிரார். அவர்  ACU THERAPY  மட்டுமல்லாது  DIVINE HEALING, MAGNETIC THERAPY,   FLOWER MEDICINE,  REIKI HEALING  போன்ற பலவிதமான மாற்று மருத்துவ முறையில் பலவித நோய்களுக்கு மருத்துவம் செய்து வருகிரார்.கடந்த 6- வருடங்களாக பலவித நோய்களை குணப்படுத்தி இருக்கிரார். 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்தபயிற்சி முறைகளை கற்றுக்கொடுத்தும் வருகிரார். அவரிடம்  கற்றுக்கொண்ட சிலர் தனியாக செண்டர் வைத்து மருத்துவம் செய்து வருகிரார்கள்.



                                                                                         
அவர் இந்த மருத்துவ முறைகளை பல குருமார்களிடம் கற்று தேர்ந்திருக்கிரார். மஹான் வேதாத்ரி மஹ்ரிஷிகளிடம் தீட்சை பெற்றிருக்கிரார். இந்தமுறையில் அலோபதி வைத்திய முறையில் தீர்க்கமுடியாத வியாதிகளைக்கூட குணமாக்கமுடிகிரது என்கிரார்கள்..
குறிப்பாக ஆஸ்துமா, மூட்டுவலி, போன்ரவைகளுக்கு உடனடி நிவாரணம் கிடைத்திருப்பதாக சொல்கிரார்கள். நானும் இந்த மூட்டுவலி பிரச்சினையில் கடந்த 20- வருடங்களாக அவதிப்படுவதால் அவரை சந்திக்கச்சென்றேன்.
 அலோபதி வைத்திய முறையில் மருந்துகளால் ஒவ்வாமை, அசிடிடி போன்ற பக்கவிளைவுகளும் ஏற்படுவதால் அங்கு சென்ரேன். கையில் நாடி துடிப்பு பார்த்தே நமக்குள்ள பிரச்சினை என்ன என்று சரியாக கணித்து விடுகிரார். பலவித வைத்திய முறைகள் அவர் கற்று வைத்திருந்தாலும் கடந்த 6 -வருடங்களாக DIVINE ACU THERAPY  மட்டும் செய்து வருகிரார்
                                                 ஈரோடில்கலெக்டர் அலுவலகம் அருகில் ஒரு மருத்துவ மையம் தொடங்கி அனைவருக்கும் கடந்த 6 வருடங்களாக சிகிச்சை அளித்து வருகிரார். அவரிடம் தற்போது 5 அசிஸ்டெண்டுகள் வேலை செய்கிரார்கள்.இதைகற்றுக்கொள்வதற்கு முதலில் சில  உட்ற்பயிற்சி முறைகள் மூச்சு பயிறிசிகள் நாடிப்பரிசோதன எப்படி செய்வது என்பதற்கு பயிற்சி, மற்றும் எளிய வகை தியானமும் கற்றுக்கொடுக்கப்படுகிரது.சிகிச்சை
கொடுப்பவர் தினமும்  இந்தப்பயிற்சிகளை செய்துவிட்டுதான் மற்றவர்களுக்கு சிகிச்சை செய்ய தொடங்குகிரார்கள்.அப்படி செய்வதால் நல்ல பலன் கிடைக்கிரது. நாடி பரி சோதனை மூலம் உபாதைகளை கண்டறிந்து சிகிச்சையை ஆரம்பிக்கிரார்கள் நம் உடல் உறுப்புகளின் சக்தி ஓட்டப்பாதையில் உள்ள தேக்கம் அல்லது குறைபாடே நோயாகும். அக்குப்ரஷர் நாடி பரிசோதனை மூலம் சக்தி ஓட்ட குறைபாட்டின் மையத்தைக்கண்டறிந்து அதனைச்சரி செய்யக்கூடிய அக்கு புள்ளிகளில் அழுத்தம் கொடுப்பதின் மூலமாக நோய் களையப்படுகிரது.

                                                                                
 அக்கு ப்ரஷர் புள்ளிகள் உடம்பில் மொத்தம் 361- உள்ளது. இதற்கென்று தனி படிப்பு பரீட்சை எல்லாம் தேறியவர்கள்தான் இந்தபயிற்சி செய்ய அனுமதிக்கப்படுகிரார்கள்.அந்தத உறுப்புக்குண்டான புள்ளிகளை கண்டறிவத்ற்கு மிகவும் அனுபவமும் திறமையும் வேண்டும். அப்படி பட்டவர்களால் தான் பயிற்சி கொடுக்கப்படுகிரது இந்த செண்டரில்.
இந்தசிகிச்சை முறையை 1979-ல் நடை பெற்ற  WORLD HEALTH ORGANISATION
(WHO)  கூட்டத்தில் சுமாராக 105- நோய்களை குனப்படுத்தமுடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. உள்ளுக்கு சாப்பிட எந்த மருந்துகளும் கிடையாது. சாப்பாட்டில் பத்திய முறைகளும் எதுவும் கிடையாது முக்கியமாக பக்கவிளைவுகள் ஏதுமே உண்டாகாது. நம்பிக்கையுடன் சிகிச்சை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

25 comments:

கவி அழகன் said...

Valthukal udal nalan pera

கோவை நேரம் said...

நல்ல தகவல்...ஈரோடு சென்றால் நிச்சயம் செல்கிறேன்...

பால கணேஷ் said...

குறித்து வைத்துக் கொண்டேன். மிகமிகப் பயனுள்ள பகிர்வு. அருமை.

மகேந்திரன் said...

அருமையான ஆலோசனை அம்மா.
பகிர்வுக்கு நன்றிகள் பல...

கூடல் பாலா said...

வேதாத்ரி மகரிஷியிடம் தீட்சை பெற்றவரல்லவா ....நல்ல சிகிச்சையாளராகத்தான் இருப்பார் ...வேதாத்ரி மகிரிஷி அருளிய சில உடற் பயிற்சிகளை செய்து வருகிறேன்,மிகவும் பயனுள்ளதாய் இருக்கிறது...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல தகவல்.... பகிர்வுக்கு நன்றிம்மா.

மனோ சாமிநாதன் said...

இது மிகவும் உபயோகமான செய்தி! விலாசத்தையும் தொலைபேசி எண்ணையும் குறிப்பிடுங்கள் லக்ஷ்மி! உங்களுக்கு இந்த சிகிச்சை பலன் தருகிறதா? மூட்டு வலி குறைந்திருக்கிறதா? பொதுவாக Accu pressure சிகிச்சையில் அவர்கள் சிகிச்சை கொடுத்த பிறகு, நாம் அந்த சிகிச்சையைத் தொடர்ந்து செய்து வ‌ர வேன்டுமென்பார்கள்.

இராஜராஜேஸ்வரி said...

பயன் மிக்க பகிர்வு..பாராட்டுக்கள்..

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

எந்த முறையாக இருந்தால் என்ன நோயில் இருந்து விடுபட்டால் நல்லதுதானே.

குறையொன்றுமில்லை. said...

யதன் ராஜ் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோவை நேரம் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கணேஷ் எல்லாத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

மகேந்திரன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கூடல் பாலா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ம்னோ மேடம் நான் பதிவில் போட்டிருக்கும் பேனரில் போன் நம்பர் இருக்கே. நம்க்கும் அவங்க சில அழுத்தப்புள்ளிகளில் எப்படி அழுத்தம் கொடுக்கனும்னு சொல்லி தராங்க ஆனா நம்ம கையால் கொடுத்துக்கும் போது அவங்க கொடுக்கும் அழுத்தம் வரமாட்டேங்குது. எனக்கு இது 20 வருட ப்ராப்லம் இல்லியா குறைந்தது 3- மாசத்துக்கு ட்ரீட்மெண்ட் எடுத்தா பூரண குணம் கிடைக்குனு சொன்னாங்க நாதான் ஒரு மாசத்திலேயே திரும்பிட்டேனே? நோயின் தீவிரம் பொறுத்து சிகிச்சையின் கால அளவுகள் கூடக்குறையா இருக்கு. எனக்கு ஓரளவுக்கு குனம் இருக்கு.

குறையொன்றுமில்லை. said...

இராஜராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

டி. என். முரளீதரன் வருகைக்கு நன்றி முதல் முறையா வரீங்களா?

ஸ்ரீராம். said...

Accu-pressure சிகிச்சை பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன்.

குறையொன்றுமில்லை. said...

ஸ்ரீ ராம் வருகைக்கு நன்றி

radhakrishnan said...

பரவாயில்லையே. மருந்தில்லா மருத்துவமாக இருக்கிறதே.பகிர்வுக்கு
நன்றி அம்மா.

குறையொன்றுமில்லை. said...

ராதாகிருஷ்னன் வாங்க ரொம்ப நாள் கழிச்சு வரிங்க நன்றி

ADHI VENKAT said...

இது பயனுள்ள தகவல். மருந்தில்லா மருத்துவம் என்ற நூலை சில நாட்களுக்கு முன் படித்தேன்.

குறையொன்றுமில்லை. said...

கோவை2 தில்லி வருகைக்கு நன்றி

krishy said...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

http://tamil.dailylib.com

To get vote button
http://tamil.dailylib.com/static/tamilpost-vote-button/

உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

நன்றி
தமிழ் போஸ்ட்

Related Posts Plugin for WordPress, Blogger...