Pages

Back to Top

ஆசை


ஓர் எளிய கீரைக்குக் கூட ஆசைப்படக்கூடாது 
அன்றாட பூஜைகளை முடித்தபின் பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் அளித்துவிட்டு, பிட்சைக்கு செல்வது 
காஞ்சி மகானின் தினசரி வழக்கம். பிச்சையில் கிடைக்கும் உணவையே அவர் உண்பார்.  
ஒரு சமயம், வழக்கம்போல் பூஜைகளை முடித்த பின்னர், பிட்சைக்கு செல்லாமல் மடத்திலேயே
இருந்துவிட்டார் மகான். பிட்சைக்கு செல்லாததால், அவர் உணவு எடுத்துக்கொள்ளவில்லை. 

பலரும் வற்புறுத்தியும் உண்ண மறுத்துவிட்டார்.
இது மறுநாளும் தொடர்ந்தது. அன்றும் மகான் உணவருந்தவில்லை.  

மூன்றாம் நாளும் மகாசுவாமிகள் பிட்சைக்கு செல்லவில்லை . எனவே, மடத்தில் உள்ளோருக்கு
பயம் தொற்றிக் கொண்டது.  மடத்தில் உள்ளோர் எதாவது தவறு செய்துவிட்டால், அவர்களை தண்டிப்பதற்கு

பதில் மகான், தம்மையே இப்படி வருத்திக்கொள்வது வழக்கம் என்பதால் அவர்களின் அச்சம் அதிகரித்தது.
அதனால், எல்லோரும் சேர்ந்து சுவாமிகள் முன் நின்றார்கள்.  

"எங்களில் யார் என்ன பிழை செய்திருந்தாலும் தயவு செய்து மன்னித்து, உணவு ஏற்கவேண்டும்..!" 
எனப் பணிந்து வேண்டினர்.  
மகா பெரியவர் சிரித்துகொண்டே,  "நீங்கள் யாரும் எந்த தவறும் செய்யவில்லை. உங்கள் மேல் எனக்குக் 
கோபமும் இல்லை. என்னை திருத்திக்கொள்ளவே நான் இப்படி உண்ணாவிரதம் இருந்தேன்.
கொஞ்சம் நாட்களுக்கு முன் பிச்சையில் கிடைத்த உணவில் வெகு சுவையாக கீரை சமைத்து இட்டிருந்தார்கள். 

அதனை மீண்டும் சாப்பிடவேண்டும் என்ற ஆசை எழுந்தது.  பூஜைகளை முடித்ததுமே, இன்றைய பிச்சையில்
கீரை இருக்குமா?' என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிட்டது. 

மூன்று நாட்களாக அந்த எண்ணம் மனதில் நின்றதால்தான், வயிறைப் பட்டினி போட்டு அந்த ஆசையை விரட்டினேன். 
ஒரு சந்நியாசிக்கு இது மாதிரியான ஆசைகள் வரக்கூடாது" என்றார்.  
ஓர் எளிய கீரைக்குக் கூட ஆசைப்படக்கூடாது என்பதில் வைராக்கியமாக இருந்ததால்தான் மகாபெரியவரின் 
பெருமை என்றும் மதிப்பு குன்றாத வைரமாக மின்னுகிறது.

Hara Hara Sankara Jai Jai Sankara...

19 comments:

Ramani said...

தெளிவூட்டும் அருமையான பதிவு
பகிர்வாக்கித் தந்த்மைக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்

பழனி.கந்தசாமி said...

சந்நியாசி என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று காட்டிய பெரியவர்.

பழனி.கந்தசாமி said...

கமென்ட் போடும் கட்டத்தை எங்கோ ஒளித்து வைத்திருக்கிறீர்களே? கொஞ்சம் கண்ணில் படுகிற மாதிரி வைக்கப்படாதா?

வை.கோபாலகிருஷ்ணன் said...

எனக்கும் இது மெயிலில் வந்தது.

இதுபோல தினமும் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல மெயில்கள் எனக்கு ஒரு சிலர் மூலம் கிடைத்து வருகின்றன.

விரும்பிக்கேட்கும் பலருக்கு அதை என் மூலம் forward செய்து வருகிறேன்.


அருமையாக எழுதியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.

கோவை2தில்லி said...

ஒரு சந்நியாசி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டியவர். அதனால் தான் அவரை இன்னும் நாம் நினைவில் வைத்துக் கொண்டாடுகிறோம்.

அருமையான பகிர்வும்மா.

Anonymous said...

அவர் பெரியவர்... ஆனால் இன்று சாமியார்களே கோடி கோடியாக சேர்த்து வைத்திருக்கிறார்கள்...

கணேஷ் said...

அசல் சன்னியாசி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணம்! இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமும் கூட! பகிர்ந்தமைக்கு நன்றி!

விச்சு said...

சந்நியாசி எப்படி இருக்க வேண்டும் என மகான் இருந்து காண்பித்தார். இப்போதுள்ளவர்கள்?????

வெங்கட் நாகராஜ் said...

எத்தனை உணமையான சன்னியாசி! ஒரு பிடி அவலை மட்டுமே உண்டு வாழ்ந்தவர் அல்லவா....

இன்று இருப்பவர்கள் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.

நல்ல விஷயத்தினை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றிம்மா.

ஸ்ரீராம். said...

சிலிர்க்க வைக்கும் எண்ணங்கள்...

Lakshmi said...

ரமணி சார் வருகைக்கு நன்றி

Lakshmi said...

பழனி கந்த சாமி சார் வருகைக்கு நன்றி
தலைப்பிலேயே கமெண்ட் பக்கத்ல ஒரு ப்ராக்கெட் குள்ள எவ்வளவு பேரு கமெண்ட் போட்டிருக்காங்கன்னு நம்பரில் வருது இல்லியா அதை க்ளிக் பண்ணினா கமெண்ட் பாக்ஸ் ஓபன் ஆகும். இல்லேனா read more க்ளிக் பண்ணினாலும் போச்ட் கமெண்ட் ஆப்ஷன் வரும்

Lakshmi said...

கோபால் சார் மெயிலில் அனுப்புரவங்க மத்தவங்களுக்கு ஃபார்வேர்ட் பண்ணசொல்ராங்க இங்க பதிவா போட்டா நிறையா பேரு பாக்க முடியும் இல்லியா. ஃபார்வேர்ட் பண்ணும்போது ஒரு சிலருக்குத்தானே அனுப்பமுடியும். நம்ம நோக்கம் என்ன? நல்ல விஷயங்கள் 4-பேரை சென்று அடையனும் அதானே.அதான் இங்க போட்டேன்

Lakshmi said...

கோவை2 தில்லி வருகைக்கு நன்றி ஆமா காஞ்சி பெரியவர் நமக்கெல்லாம் நல்ல உதாரண புருஷரா வாழ்ந்து காட்டி இருக்காங்க.

Lakshmi said...

ஹாட் லைன் தமிழ் திரட்டி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

கணேஷ் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, நமக்கு தெரிய வரும் நல்ல விஷயங்களை நாலு பேருடன் பகிர்ந்து கொள்வது நல்லவிஷயம் தானே?

Lakshmi said...

விச்சு வருகைக்கு நன்றி,. நாம நல்லவிஷயங்களை மட்டும் எடுத்துக்கலாமே?

Lakshmi said...

வெங்கட் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

ஸ்ரீ ராம் வருகைக்கு நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...