Pages

Back to Top

கோகுலம் ட்ரஸ்ட்

 இப்பவும் ஈரோடு பதிவுதான். ஒரு பள்ளியின் பிரின்சிபால் அம்மா என்னை வீட்ல வந்து பாத்தாங்க. அவங்க என்கிட்ட அம்மா நாங்க மன வளர்ச்சி குன்றிய குழந்தகளுக்கான ஒரு பள்ளி நடத்துரோம். நீங்க  நிறையா ப்ளாக் எல்லாம் எழுதுரீங்கன்னு உங்க வீட்ல சொன்னாங்க. எங்க பள்ளி பத்தியும் கொஞ்சம் எழுதமுடியுமா என்றார்கள். சொல்லுங்க என்ரேன். ஆண்டவன் படைப்பில் இது போல மன வளர்ச்சி குறைந்த குழந்தைகளின் படைப்பு ரொம்ப பரிதாபம். ஏன் என் ரெண்டு பசங்களுமே அப்படியான பசங்கதான்.  நாங்க ஓரளவு வசதியா இருப்பதால இது போல குழந்தைகளுக்காக ஒரு பள்ளிக்கூடம் நடத்தனும்னு நினைச்சு ஈரோட்ல நடத்துரோம் அம்மா. கவர்மெண்ட்ல பதிவும் செய்திருக்கோம். ஆனா எந்த சாரிட்டி மூலமாகவோ எந்த டொனேஷன் மூலமகவோ இந்தபள்ளியை நடத்தலேம்மா. முழுவதும் எங்க சொந்த செலவுலதாமா பன்ரோம். இப்பத்தைக்கு 20- குழந்தைகள் எங்க பள்ளியில் இருக்காங்க. 4- ஆசிரியர்களும் இருக்காங்க. அவங்களும் சேவை மனப்பான்மையுடன் தான் இந்தப்பணியை பொறுப்பாகவும் பொறுமையாகவும் செய்து வராங்க. ஆனாலும் கூட அவங்களுக்கும் குடும்பம் குழந்தைன்னு இருக்கே. அவங்களையும் கவனிக்கணுமே. அதுக்கு வருமானம் வேனுமில்லியா. எங்களால முடிஞ்ச அளவுக்கு அவங்களுக்கு சம்பளம் கொடுக்கிரோம்மா.                                          

இந்தமாதிரி குழந்தைகளைப்பார்க்கும்போதே ஆண்டவன் மேல கோவம் கூட வருதும்மா. சரி பிறந்தாச்சு தூக்கி போட்டுடவா முடியும் நம்மளால முடிந்தவரை அந்தக்குழந்தைகளுக்கும் நல்ல கவனம் கொடுத்துகவனிச்சுதானே ஆகனும்மா.பிள்ளைக்குழந்தைகளை விட பெண்குழந்தைகள் நிலமை கொஞ்சம் யோசிச்சு பாருங்க. வயசுக்கு வரும் சமயம் எவ்வளவு பிரச்சினைகள் சமாளிக்கவேண்டிவரும் இல்லியா. இப்ப எங்க ஸ்கூலில் 5-குழந்தைகலுக்கு ஒரு டீச்சர் இருப்பதால உயர்ந்தபட்ச கவனிப்ப கொடுக்க முடியுது. ஆனா அந்தக்குழந்தைகளுக்கு இன்னும் கொஞ்சம் வசதிகள் செய்துகொடுத்தால் நல்லா இருக்கும்மா. இப்ப தரையில்
                                                  
தான் உக்கார வைக்கிரோம். டேபிள் சேர்னு இருந்தா குழந்தைகளுக்கு சவுரியமா இருக்குமில்லையா? விளையாட ஒரு ப்ளே க்ரவுண்டும் இருந்தா அந்த குழந்தைக ஓடி ஆடி உற்சாக மா விளையாடி மகிழ்ச்சியா இருக்கமுடியும் இல்லியாம்மா. ப்ளே க்ரவுண்ட் அங்கு விளையாட சில பொருட்கள் தேவைப்படுது. எந்தக்குழந்தைக்கு எந்த விஷயத்தில் ஆர்வம் இருக்கோ அதில் அவங்களுக்கு பயிற்சி கொடுத்து உற்சாகப்படுத்தினா நல்ல முன்னேர்றம் இருக்கும் இல்லியா? அதுக்கெல்லாம் தகுந்த பயிற்சி யாளர்களை ஏற்பாடு செய்யணும். சேவை மனப்பான்மையில் அவங்க வேலைக்குவந்தாலும் தகுந்த ஊதியம் கொடுத்தாதானே அவங்களும் உற்சாகமா குழந்தைகளை கவனிக்க முடியும் இல்லியா?
                                                
 இப்போதெக்கு 6-வயது முதல் 18- வயதுவரை உள்ள 20- குழந்தைங்க இருக்காங்க. வாரம் ஒருமுறை அக்கம்பக்கம் இருக்கும் கோவிலுக்கோ ஏதானும் பிக்னிக் இடங்களுக்கோ அந்தக்குழந்தைகளை அழைத்து செல்கிரோம். அதுக்கு ஒரு பிக் அப் வேன் இருந்தா இன்னும் வசதியா இருக்கும். எங்க எண்ணம் எல்லாம் அந்தக்குழந்தைகள் எதிர்காலத்தில் கஷ்ட்டப்படாம அவங்க காலில் நிக்கணும் யாரையும் எதிர்பார்க்கும் நிலைமை வந்துடக்கூடாதுன்னு ரொம்ப கவனமா பயிற்ச் இகொடுத்துவரோம்ம்மா. ஆனாலும் வெரும் கையால் முழம் போட முடியாதே. கொஞ்சம் பொருள் உதவியும், பண உதவியு தேவைப்படுதும்மா. உங்க ப்ளாக் படிக்கிரவங்க யாரானும் கொஞ்ச பேராவது உதவ முன்வந்தால் ரொம்ப நன்றி உள்ளவளாக இருப்போம்மா. என்றெல்லாம் உருக்கமாக பேசினாங்க. எனக்கும் என்ன
                                                        
சொல்ரதுன்னே தெரியல்லே. 6 வயசு குழந்தைக்கு 1-வயசுக்குழந்தையின் மன வளர்ச்சிதான் இருக்கு. 18- வயசு குழந்தைகளுக்கு 5- வயசு குழந்தையின் மன வளர்ச்சிதான் இருக்கு. அதனால அவங்களுக்கு படிப்பு சம்பந்தபட்டவிஷயங்களை கிரஹிச்சுக்க முடியல்லே. அதனால நல்ல பழக்கவழக்கங்கள் மத்தபசங்க கூட ஒத்துமையா விளையாட கீழ சிந்தாம சாப்பிட தன் வேலை யை தானே செய்து கொள்ளும் பழக்கங்கள் தான் கற்பிக்க முடியுது. அதெல்லாம் சொல்லிக்கொடுக்கவே ரொம்ப பொறுமை வேணுமில்லியா? அதே சமயம் போதுமான நிதி உதவி கிடைச்சா இந்த குழந்தைகளை இன்னும் சிறப்பாக கவனிக்க முடியும்மா. அதான் உங்க கிட்ட சொன்னேன். உங்க ப்ளாக்கில் எழுதுரீங்களான்னு கேட்டாங்க.
                                                      
 என் பேரனும் அந்தஸ்கூலிதான் படிக்கிரான். பிறவியிலேயே மனவளர்ச்சி குன்றிய குழந்தையாகத்தான் பிறந்தான். ஒருவயசுவரையிலும் எங்களுக்கு இந்தக்குழந்தை குறைபாடுள்ளகுழந்தைன்னு தெரியவே இல்லே. பால்குடிச்சு விளையாடிண்டுன்னு இருந்தான். பிறகுதெரி யவந்து ஊர் ஊரா டாக்டர் டாக்டரா அலைஞ்சோம். பிறவிலயே இந்தக்குறைபாடு இருப்பதால சரிபண்ணமுடியாதுன்னு சொல்லிட்டாங்க. அதுக்கே 3-வருஷம் ஆச்சு. பேச்சும்வரல்லே நடக்கவுமில்லே. கேரளா கூட்டிப்போயி  ஆயுர்வேத வைத்தியம்லாம் பார்த்து நடக்க முடிந்தது. பேச்சு வரல்லே. வீட்டிலேதான் அந்தக்குழந்தையின் அப்பாவும் அம்மாவும் பயிற்சி கொடுத்து பேச வச்சாங்க. இதெல்லா விஷயமுமே ஏர்கனவே ஒரு பதிவில் விவரமாக எழுதி இருக்கேன் அதனால இங்க இவ்வளவு போரும்னு நினைக்கிரேன். அந்த பெத்தவங்க மனசு என்ன பாடு படும் இல்லியா?
                                                  
 என் பேரன் படிக்கும் பள்ளி என்பதால இந்தப்பதிவை நான் போடல்லே. இதுபோல குழந்தைகளுக்கு நம்மால எதாவது செய்யமுடியனும் என்றுதான் . நம்மால அங்க்போயி உக்காந்து அந்தக்குழந்தைகளை கவனிச்சுக்க முடியாது. ஆனா கூட நம் எல்லார் மனதிலும் தயவும், இரக்கமும்  எந்த விதத்திலாவது உதவனும் என்கிர உத்வேகமும் இருக்கு.( அப்படின்னு நினைக்கிரேன்)
 நம்மால் முடிந்த பொருள் உதவியோ பண உதவியோ செய்ய்முடிந்தால் அந்தக்குழந்தைகளை சந்தோஷப்படுத்த நாமும் ஒரு காரணியாக இருக்கமுடியும்.   நாம் செய்யும் பண உதவிக்கு 80 ஜி வரி விலக்கும் உண்டாம்
NAME OF MADAM : MRS. UMA MAHESWARI.

NAME OF SCHOOL : GOKULAM TRUST SCHOOL FOR SPECIAL CHILDREN.

ADDRESS: H/656, MUTTAMPALAYAM HOUSING UNIT
                  PHASE III
                  ERODE-638009

REG NO. 539/2005 DT 23-06-2005
PHONE NO: 0424-2277324

EXEMPTION UNDER 80G OF IT ACT 1961 VIDE ORDER NO 227(40)/2009-10
28 comments:

மகேந்திரன் said...

கோகுலம் டிரஸ்ட் பணிகளுக்கு வாழ்த்துக்கள்...
நம்மால் இயன்ற உதவிகள் செய்வோம்..

அமைதி அப்பா said...

இந்த மாதிரி குழந்தைகளுக்கு நிச்சயம் உதவிக் கிடைக்கும்.

கோவை2தில்லி said...

படிக்கவே கஷ்டமா இருக்கு. அவங்க இவ்வளவு தூரம் செய்யறதே நல்ல விஷயம். நிச்சயம் உதவலாம்.

கோவை நேரம் said...

நல்ல பகிர்வு..நம்மால் முடிந்ததை செய்வோம்..

♔ம.தி.சுதா♔ said...

குழந்தைகள் மேல் தாங்கள் எடுத்துள்ள சிரத்தை வரிகளில் தெரிகிறது அம்மா..


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைப் பதிவரின் முதல் குறும்பட வெளியீடும் தமிழ் இணைய உலகில் வித்தியாசமான வெளியீடும்

வெங்கட் நாகராஜ் said...

நல்ல முயற்சிம்மா! நிச்சயம் ஏதாவது செய்வோம்!

ஸ்ரீராம். said...

பாராட்டப் படவேண்டிய பணி.

சசிகலா said...

அவங்களுக்கு எவ்வளவு பெரிய மனசு நம்மால் ஆனா உதவியை செய்வோம் .

radhakrishnan said...

உங்கள் பேரனின் முன்னேற்றத்தில்
இந்தப பள்ளி பெரும் பங்கு வகிக்கிறது என்று நினைக்கிறேன்.பிரத்தியடசமாகத்
தெரியும் இந்த மாதிரி சேவைக்குஎன்ன செயதாலும் தகுமே. இயன்றதைக்கண்டிப்பாகச் செய்வோம்
அம்மா.பகிர்வுக்கு நன்றி

அன்புடன் அருணா said...

பூங்கொத்துப் பதிவு!!!

Lakshmi said...

மஹேந்திரன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

அமைதி அப்பா, கண்டிப்பா உதவி கிடைக்கனுங்க. நன்றி

Lakshmi said...

கோவை2தில்லி உதவலாம்னு சொன்னதைக்கேக்கும்போதே சந்தோஷமா இருக்கு. நன்றி

Lakshmi said...

கோவை நேரம் ஆமாங்க நம்மால் முடிந்ததைச்செய்வோம் நன்றி

Lakshmi said...

ம. தி. சுதா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

வெங்கட் ஆமாங்க கண்டிப்பா நம்மால் ஆன உதவி செய்யனுங்க. நன்றி

Lakshmi said...

ஸ்ரீ ராம் வருகைக்கு நன்றி

Lakshmi said...

சசிகலா உதவி செய்ய எவ்வளவு பேரு ஆர்வமா இருக்கோம் இல்லியா நன்றிம்மா.

Lakshmi said...

ராதாகிருஷ்னன் சார் அவங்க செய்யும் பணி மகத்தானது. என் பேரனுக்கு மட்டுமில்லேஅங்கே இருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தனி கவனம் எடுத்துக்கராங்க. கண்ணுக்கு நேரா பார்க்கும் போதுதானே தெரிய வருது . நாமும் ஏதாவது செய்யனும்.

Lakshmi said...

அன்புடன் அருணா வருகைக்கு நன்றி

கணேஷ் said...

இப்பத்தான் இந்த விஷயத்தைக் கவனிச்சேன். இந்த மாதிரிக் குழந்தைகள் மேல எனக்கு எப்பவுமே அனுதாபம் அதிகம் உண்டு. பார்த்தாலே மனசைப் பிசையும். நம்மால இயன்ற அளவு சின்ன உதவியா இருந்தாலும் அவசியம் செய்யணும்மா. நல்லதொரு பகிர்விற்கு நன்றி.

Lakshmi said...

ஆமா கணேஷ் நாம எல்லாரும் அந்தக்குழந்தைகளுக்காக ஏதானும் செய்தே ஆகணும். நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஆனா எந்த சாரிட்டி மூலமாகவோ எந்த டொனேஷன் மூலமகவோ இந்தபள்ளியை நடத்தலேம்மா. முழுவதும் எங்க சொந்த செலவுலதாமா பன்ரோம்//

மிகவும் கஷ்டம் தான். டிரஸ்ட் பற்றி நல்லாவே தெரிவித்துள்ளீர்கள்.

சீக்கரமாக அவர்களுக்கு அரசாங்க உதவிகள் கிடைக்கட்டும்.

இங்கு திருச்சி BHEL பகுதியில் இதுபோலவே “அறிவாலயம்” என்று ஒரு பள்ளியை சிறப்பாக நடத்துகிறார்கள்.

எப்போதாவது சென்று ஏதாவது சிறுசிறு உதவிகள் செய்வதுண்டு.

ஹேமா said...

இப்படியான குழந்தைகளைக் கண்டாலே மனம் கனக்கும்.ஆனால் ஒன்று இந்தக்குழந்தைகள் நல்ல புத்திசாலித்தனமாக அன்பாக இருப்பார்கள் !

Lakshmi said...

கோபால் சார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அந்தக்குழந்தைகளுக்காக ஏதானும் செய்யனும்னுதான் இந்தப்பதிவே போட்டேன்.

Lakshmi said...

ஆமா ஹேமா எல்லா குழந்தைகளும் அன்புக்கு ஏங்குராங்க. நாம் ஏதானும் செய்யனும்

Aravinth said...

Hi Madam

I just want to donate small amount to this school. Could you please send me your mail-id.

my mail id is

baluaravinth@yahoo.co.uk

thanks
Aravinth

Lakshmi said...

அரவிந்த், வருகைக்கும் உதவி செய்யனும் என்கிற மனதுக்கும் நன்றி
என் மெயில் echumi@gmail.com

Related Posts Plugin for WordPress, Blogger...