Pages

Back to Top

ஈரோடு 3

இந்தவாரமும் ஈரோடு நினைவுகளைத்தான் பகிர்ந்து கொள்கிரேன்.அங்கு இருக்கும் பேரன் என்னை அவன் வயசுக்கே மாத்திடுவன். அவன் என்னல்லாம் சொன்னானோ அப்படில்லாம் நான் பண்ணியாகணும். இல்லைனா கோவிச்சுகிட்டு போயிடுவான். அவஙக்ல்லாம் சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுந்துடுவாங்க. நானோ லேட்டா தூங்கி லேட்டா எழுந்துப்பேன். காலேல்யே ஆரம்பிச்சுடுவான். பாட்டி என்ன நீ இவ்வள்வு நேரம் தூங்குரே. நான் சீக்கிரம் எழுந்திருச்சு உனக்காக வெயிட்பண்ணிட்டு இர்ப்பேன்னு உனக்கு தெரியாதா? சீக்கிரமா பல்தேய் நீ காபி குடிச்சுட்டு அதுல கொஞ்சம் எனக்கும் தா. என்பான் அப்பலேந்து அவன் ஆட்டி வக்கிரபடில்லாம் ஆடித்தான் ஆகணும். வேரவழி. அவங்கல்லாம் காலை 9-மணிக்கே ஃபுல் லஞ்ச் சாப்பிடுவாங்க. பாட்டி எனக்கு
சாப்பாடு ஊட்டிவிடும்பான். ஏண்டா நீ தான் பெரியபையனாச்சே நீ தன்னால சாப்பிடு என்பேன். அதெல்லாம் முடியாது நீ ஊட்டி விட்டாதான் சாப்பாடு டேஸ்டா இருக்குன்னு சொல்லிடுவன். அதுல அவனுக்கு ஒரு சந்தோஷம் (சின்ன சின்ன ஆசை)
    பிறகு டி வி. போட்டு அதில் வரும் பாட்டுக்கெல்லாம் நல்லா டான்ஸ் ஆடி என்னை கைதட்டசொல்வான். கரண்ட் போயிடுமே. அப்புரம் பெட் ரூம் போயி கேரம் ஆடலாம் அன்பான். அதில் அவன் சொல்வதுதான் ரூல். அதைத்தான்
                                             
 நான் கேட்கனும். ஒருமணி நேரம் போல கேரம் ஆடுவோம். அது போரடிச்சுடும். பாட்டி இது போரும் இப்ப பரமபதம் விளையாடலாம் என்பான்.
                                                     
 அதிலும் அவன் சொல்ரபடி தான் ஆடனும். கொஞ்ச நேரத்தில் அதுவும் போரடிக்குதுன்னு, பல்லாங்குழி ஆடலாம் என்பான் அதில் கொஞ்ச நேர.ம்

                                                         
                                    
                                
                                
அதுவும் போரடிச்சுதுன்னா தாயக்கட்டம். இப்படி நாள் பூரா ஏதானும் அவன் கூட விளையாடிண்டே இருந்தாதான் சும்மா இருப்பான்.  நான் புக் படிச்சா அவனுக்கு கோவம் வந்துடும் என் கைலேந்து புக்கை பிடுங்கி வீசி போட்டுடுவான். என் கூட விளையாடரதைவிட உனக்கு புக் படிக்கரதுதான் முக்கியமான்னு கோவப்படுவான்.   எனக்கு சிரிப்பா வரும் நான் சிரிச்சா இன்னும் கோவப்படுவான்
                                                               
 என்னை பிரம்பு ஊஞ்சலில் உக்காத்தி வேகமாக ஆட்டீவிடுவது அவனுக்கு பிடிச்ச விளையாட்டு. தல சுத்துதுடான்னாலும் விடமாட்டான். நானும் அவன் ஆட்டி வச்சபடில்லாம் ஆடிண்டே இருப்பேன். நாள்பூராவும் ஏதானும் விளையாடிகிட்டே இருக்கனும் ஒரு நிமிஷம் கூட சும்மா அமைதியா இருக்கவேமாட்டான்.  என் பையன் ஈரோடில் சின்னியம்பாளையம் என்னும்
                                                       
 இடத்தில் புது வீடு கட்டி இருந்தான். அதைபாக்கபோக கூட டைமே கிடைக்கலே. ஒரு நா சாயந்தரம்  கிளம்பினோம். காரில் ஏறினதுமே பாட்டி நீ தான் கார் ஓட்டனும் ட்ரைவர் மாமா வேனாம்னு பிடிவாதம் . நல்ல வேளை
                                                   
எனக்கு ட்ரைவிங்க் தெரிஞ்சிருந்தது. அங்க வீடுபோய் பார்த்தோம். பேரந்தான் ஒவ்வொரு ரூமாக கூட்டிண்டுபோயி விளக்கம் சொல்லிண்டே வந்தான். இப்படியே ஈரோடில் இருந்தஒருமாசமும் நானும் அவன் வயசு குழந்தையாக வே மாறிப்போயிட்டேன்.

24 comments:

வெங்கட் நாகராஜ் said...

பேரனோடு விளையாடி மகிழ்ந்ந பாட்டி! எங்களுக்கும் சந்தோஷம்மா!

பால கணேஷ் said...

பேரனின் வயதுக்கு மாறிட்டீங்களா... நல்ல அனுபவம்தாங்க. விளையாட்டுக்கு ரூல்ஸ் மட்டும் பேரனுக்கு கத்துக் குடுத்துடுங்க. இல்லாட்டி அவ்வளவுதான்... தோத்துட்டே இருப்பீங்க...

குறையொன்றுமில்லை. said...

சாரி இந்தபோட்டோல்லாம் எடுக்கும்போது கேமராவில் தேதி செட் பண்ண மறந்துட்டேன்

ப.கந்தசாமி said...

நல்ல அனுபவம்.

Sivakumar said...

nice happy

ADHI VENKAT said...

இனிமையான அனுபவங்கள். இப்படி இருந்தாத் தானே அவங்களும் சந்தோஷப்படுவாங்க..

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கணேஷ் பேரனிடம் தோற்றுப்போவதில் சந்தோஷம்தான்.

குறையொன்றுமில்லை. said...

பழனி கந்தசாமி சார் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

சிவகுமார் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி

radhakrishnan said...

விரிவான பதிவு அருமையாக உள்ளது.
ஒருமாதம் போதுமா? எப்படி உங்களை
ஊர் திரும்ப விட்டார்கள்?
ஹேட்ஸ் ஆப்ஃ டு யுவர் மகன், மருமகள்,. அருமையாக வளர்த்திருக்கிறார்கள். நல்ல பையன்.
பாட்டி எப்போதும் அருகில் இருந்தால்
மிகவும் சந்தோஷமாக இருப்பான்.
பகிர்வுக்கு நன்றி அம்மா

radhakrishnan said...

விரிவான பதிவு அருமையாக உள்ளது.
ஒருமாதம் போதுமா? எப்படி உங்களை
ஊர் திரும்ப விட்டார்கள்?
ஹேட்ஸ் ஆப்ஃ டு யுவர் மகன், மருமகள்,. அருமையாக வளர்த்திருக்கிறார்கள். நல்ல பையன்.
பாட்டி எப்போதும் அருகில் இருந்தால்
மிகவும் சந்தோஷமாக இருப்பான்.
பகிர்வுக்கு நன்றி அம்மா

radhakrishnan said...

விரிவான பதிவு அருமையாக உள்ளது.
ஒருமாதம் போதுமா? எப்படி உங்களை
ஊர் திரும்ப விட்டார்கள்?
ஹேட்ஸ் ஆப்ஃ டு யுவர் மகன், மருமகள்,. அருமையாக வளர்த்திருக்கிறார்கள். நல்ல பையன்.
பாட்டி எப்போதும் அருகில் இருந்தால்
மிகவும் சந்தோஷமாக இருப்பான்.
பகிர்வுக்கு நன்றி அம்மா

ஸ்ரீராம். said...

Interesting....

குறையொன்றுமில்லை. said...

ராதாகிருஷ்னன் சார் வருகைக்கு நன்றி
ஒருமாதம் மட்டுமீல்லே எவ்வளவு நாள் தங்கிட்டு நான் கிளம்பினாலும் ஏன் இவ்வளவு சீக்கிரமா போரேன்னுதான் கேப்பாங்க.

குறையொன்றுமில்லை. said...

ஸ்ரீ ராம் வருகைக்கு நன்றி

சசிகலா said...

எல்லா பாட்டிக்கும் அல்லது பேரக்குழந்தைக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை . மகிழ்ச்சி .

குறையொன்றுமில்லை. said...

சசி கலா முதன் முறையா வரீங்களா நன்றி அடிக்கடி வாங்க.

சசிகலா said...

கண்டிப்பாக வருவேன் நன்றிங்க .

குறையொன்றுமில்லை. said...

வாங்க சசி கலா ரொம்ப சந்தோஷம்

சாந்தி மாரியப்பன் said...

நல்லா எஞ்சாய் செய்யுங்க லக்ஷ்மிம்மா ;-))

குறையொன்றுமில்லை. said...

சாந்தி வருகைக்கு நன்றி

Mahi said...

Could not see the photos Lakshmi-ma...everything is black..

Related Posts Plugin for WordPress, Blogger...