Pages

Back to Top

சினேகிதனே, சினேகிதனே.........1

கல்யானத்துக்கு தேதி கூட குறிச்சாச்சு. முகூர்த்தத்துக்கு இன்னும் ஒருமாசம் கூட இல்லே. பணத்துக்கு என்னடி பண்ரது? வாசுவின் குரலில் ஆதங்கம்.
ஏன் ஆபீஸ்ல பிராவிடண்ட் பண்ட்ல லோன் போட்டிருந்தீங்க இல்லியா? அது என்னாச்சு? லதாவின் நியாயமான கேள்வி. அது இன்னிக்குதான் கிடைச்சது ஆனா நான் எவ்வளவு அப்ளை பண்ணி யிருந்தேனோ அதில் பாதி தான்  சாங்க்‌ஷன் ஆகியிருக்கு.பாக்கி பணத்துக்கு வெளில யாருகிட்டயாவது கடன் வாங்கித்தான் ஆகணும். யாருகிட்ட போயி கேக்கரது? எப்படியும் கடன் வாங்காம கல்யாணம் நடத்தணும்னு நினைச்சோம். எங்க நடுத்தர வர்க்கத்தினரின் சாபம் இது கடன் வாங்காம எந்த ஒரு காரியமும் பண்ணமுடியாது, சரி மேற்கொண்டு யாருகிட்ட கேக்கலாம் உனக்கு ஏதானும் தோனரதா? ஏண்டி நம்ம வெங்கு கிட்ட கேட்டு பாக்கலாமா? நம்மாத்துலயே10- வருஷமா பேயிங்க் கெஸ்ட்டா இருந்திருக்கானே . அவனை நண்பன் போலவா நடத்தினோம். நம்ம குடும்பத்தில் ஒருவனாகத்தானே நினைச்சோம்.. நம்ம நிலமை எடுத்துச்சொல்லி கேட்டு பாக்கலாமா? ஆமாங்க ஏற்கனவே அவரும் நம்மகிட்ட சொல்லி இருக்காரே. பொண் கல்யாணம் என்றால் நான் ஹெல்ப் பண்ரேன்னு. இப்போ அவரும் நல்லா வசதியாதானே இருக்கார். கேட்டுபாக்கலாம். ஆனா இப்போ அவர் வேர ஊர்லன்னா இருக்கார் லெட்டர்போட்டு பதில் வரதுக்கெல்லாம் டைம் இல்லே நாம நேரிலே போயி பத்ரிகை கொடுதுட்டு விஷயம் சொல்லிட்டு வரலாம்.



முதல்பொண் கல்யாணம் எப்படில்லாம் பண்ணனும்னு நினைச்சேன் பணம்னா ஆட்டிவைக்கரது.மாசாந்திர சம்பளம் வாங்குமொருவனால எவ்வளவுதான் சேமிக்க முடியும். அதுவும் நம்ம குடும்பமும் பெரிசு பெரியவா 5-பேர் சின்னவா 5-பேர்னு மொத்தம் 10 பேர் ஜீவிக்கணும்.பிள்ளை வீட்டுக்காரா வரதட்சிணை சீர்னு எதுவும் எதிர் பார்க்காத நல்லவாளா கிடைச்சது நம் பொண் அதிர்ஷ்ட்டம்  அதுக்காக நாம ஏனோ தானோன்னு கல்யாணம் பண்ணிகொடுக்கமுடியாதே. ஏகதேசம் சுமாராகவாவது பண்ணனும் இல்லியா? அதுக்கே இப்ப மத்தவா  கையை எதிர்பார்க்கும்படி இருக்கே..  எதுக்கு வருத்தப்படுரீங்க்? நம்ம கல்யாணம் நல்லா செலவு செய்து சீரும் சிறப்புமாதானே நடந்தது. இப்ப 25- வருஷத்துக்குப்பிறகு   நம்மிடம் என்ன மிச்சம்? ஒன்னுமில்லியே. நல்லா செலவு செய்து கல்யாணம் பண்ணினாதானா? பணம் இப்ப வரும் இப்போ போகும் சிக்கனமா பண்ணிட்டாபோச்சு. அவ தலை எழுத்து நல்லா இருந்தா நாளைக்கே அவ ஜாம் , ஜாம்னு இருப்பா. அதுக்காகமனசை கஷ்ட்டப்படுத்திக்காதீங்க மேற்கொண்டு ஆக வேண்டியதைப்பார்க்கலாம் என்னதான் வெங்கு நம்மகூடவே இருந்தாலும் மொத்தமா அவனிடம் பெரிய தொகையைக்கேக்க முடியுமா? பாதி அவனிடமும் பாதி வேர யாரிடமுமாவது கேட்டு பாக்கலாம். ஏங்க வெங்கு மூலம் நமக்கு அறிமுகமான நவனீத் கிட்ட கேட்டு பாக்கலாமா? கணவன் மனைவி இருவருமே ரொம்ப நல்ல மாதிரி. நம்மகுடும்பத்துமேல உண்மையான அக்கரையும் பாசமும் வச்சிருக்கா. இப்பவும் இதே ஊர்ல அடுத்த தெருலதானே இருக்கா. நாம இந்த ஊருக்கு மாத்தலாகி வந்தப்போகூட அவாதானே எல்லா உதவியும் பண்ணினா.

சரி, நீ சொல்ரபடி அவ்ர்களிடம் கேட்டு பாக்கலாம்தான் ஆனா அவனும் நம்மைப்போல மாசாந்திர சம்பளக்காரந்தானே?. ஆமாங்க ஆனா குடும்பம் சின்னதுதானே கணவன் மனைவி ரெண்டே குழந்தைகள் தானே. நம்மைப்போல செலவு இருக்காதே. ஒருவரிடம் பணம் கடன் கேக்கனும்னா என்னல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு சே என்று வாசு அலுத்துக்கொண்டான்.  நல்ல நட்பையெல்லாம் கடன் வாங்கி இழந்துடக்கூடாதுடீ. சரிங்க நாம வேர வழி இல்லாமதானே கடன் வாங்க்ரோம். சரி இன்னிக்கு ஆபீஸ்விட்டுவந்ததும் நவ்னீத் வீட்டுக்குபோகலாம் என்று வாசு ஆபீஸ்கிளம்பி போனான்.மாலை 6-மணிக்கு இருவரும் கிளம்பி நவ்னீத் வீடு சென்றார்கள்.மிகுந்ததயக்கத்துடனே சென்றார்கள் . அவர்கள் வீட்டுக்குள்ளிருந்து நவ்னீத்தும் கலாவும் சத்தமாக பேசிக்கொள்வது வெளியில் நின்றுகொண்டிருந்த இவர்களுக்கும் கேட்டது.  எங்களக்கண்டதுமே இருவருமே மகிழ்ந்துபோய் என்னமாமா, மாமி, இப்பதான் நம்மாத்துக்கு வழி தெரிஞ்சுதா?என்று கட்டிப்பிடித்து வரவேற்றார்கள். அதுவேமனதுக்கு இதமாக இருந்தது. என்னமோ ரெண்டுபேரும் சத்தமாக பேசிக்கொண்டிருந்தீர்கள் போல இருந்தது அதான் வெளியிலேயே நின்றுவிட்டோம் என்று வாசு இழுக்கவும்  நாங்க எப்பவுமே சத்தமாதானே பேசிப்போம் உங்களுக்கே தெரியுமே. ஒரு ஸ்கூட்டர் ஒன்னு விலைக்கு வந்திருக்கு நான் வாங்கலாம்ன்னேன் இவ வேண்டாம்னு சொல்ரா. அவ்வளவுதான் மேட்டர் நீங்க சொல்லுங்க . வாசு கல்யாண பத்திரிக்கை எடுத்து இருவரிடமும் கொடுத்துவிட்டு பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கோம் நவ்னீத். நீங்க குடும்பதோட வந்து நடத்தி தரணும். என்றான் வாசு. வாவ் சுதாவுக்கு க்ல்யாணமா மாப்பிள்ளை யாரு என்ன பண்ரார்னு எல்லாம் கலா விவரமாக கேட்டா. எல்லாம் சொன்னோம். ஸ்வீட் நியூஸ் சொல்லி இருக்கீங்க ஒரே நிமிஷம் ஸ்வீட் பண்ணி கொண்டுவரேன்னு கிச்சனுக்குள் போனாள் கலா.

கேசரி, ஓமப்பொடி, காபியுடன் ஹாலுக்கு வந்தாள் கலா. இவர்களின் அன்பில் நெகிழ்ந்துபோன வாசுவுக்கு பணம் கேட்க்கவே வாய் வரலை. அப்புரம் சொல்லுங்கோ என்று நவ்னீத் கேட்கவு ஒன்னுமில்லே நவ்னீத் கல்யாணத்துக்கு நான் ஆபீசில் லோன் போட்டிருந்தேன். நான் கேட்டதில் பாதி அமவுண்ட் தான் சாங்க்‌ஷன் ஆகியிருக்கு. மீதி பணத்துக்கு தட்டுப்பாடு அதான் உன்கிட்ட கேக்கலாம்னு வந்தோம்னு தயங்கிய வாரே சொன்னான் வாசு. அப்பாடா இதுக்கா இவ்வளவு தயக்கம் எவ்வளவு வேணும் சொல்லுங்கோ நான் தரேன்னான் நவ்னீத். இல்லே நீ ஸ்கூட்டர் வாங்கணும்னு சொல்லிண்டு இருந்தியேன்னு வாசு தயங்கவும் ஸ்கூட்டர் எப்ப வேனாலும் வாங்கிக்கலாம் பொண்ணோட கல்யாணம் முக்கியமில்லையா? சொல்லுங்கோ எவ்வள்வு வேனும் என்றான் நவ்னீத். இல்லேப்பா உன்னிடம்  முழு அமவுண்டும் கேக்க மனசில்லே பாதி நீகொடு பாதி நம்ம வெங்கு கிட்ட கேக்கலாம்னு இருக்கோம். என்றான் வாசு. ஓ வெங்கு உங்க வீட்டோடயே இருந்திருக்கானே 10- வருஷம் அவனும் கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவான் டோண்ட் ஒர்ரி என்று நாங்க கேட்ட பணத்தை உடனேயே தந்து எங்களைத்திக்கு முக்காட வச்சான் நவ்னீத்.

14 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஸ்கூட்டர் எப்ப வேனாலும் வாங்கிக்கலாம் பொண்ணோட கல்யாணம் முக்கியமில்லையா? சொல்லுங்கோ எவ்வள்வு வேனும் என்றான் நவ்னீத்.//

அருமை. நல்லதொரு பதிவு.
பாராட்டுக்கள்.

Avargal Unmaigal said...

அருமையான நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் லஷ்மியம்மா

கோவை2தில்லி said...

நல்ல பகிர்வு.

வெங்கட் நாகராஜ் said...

நல்லா இருக்கும்மா....

இராஜராஜேஸ்வரி said...

நிறைவான பதிவு..

Lakshmi said...

கோபால் சார் வருகைக்கு நன்றீ

Lakshmi said...

அவர்கள் உண்மைகள் வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோவை2தில்லி வருகைக்கு நன்ரி

Lakshmi said...

வெங்கட் வருகைக்கு நன்றி

Lakshmi said...

இராஜ ராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

vanathy said...

சூப்பரா இருக்கு.

ஹேமா said...

நல்ல மனங்களைச் சந்தித்த ஒரு திருப்தி கதையில்.இயல்பாயிருக்கம்மா கதை !

Lakshmi said...

வானதி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஹேமா வருகைக்கு நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...