Pages

Back to Top

எங்கேயும், எப்போதும்..............

இந்த சண்டே(8-1-2012) மகன்கள் , மறு மக்ள்கள், பேரக்குழந்தைகளுடன் சேர்ந்திருக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.( பத்து வருடங்களுக்குப்பிறகு.) அதில் எங்க எல்லாருக்குமே ரொம்ப சந்தோஷம். அன்று திருவாதிரையாக வேரு இருந்ததா? பிள்ளைகள் எல்லாரும் அம்மா , நாங்க களி, தாளகம் வெண்ணையெல்லாம் சாப்பிட்டே 10- வருஷம் ஆச்சு. இன்னிக்கு எல்லாரும் சேர்ந்து இருக்கோம். களி தாளகம் எல்லாம் வேணும் என்றார்கள். இவ்வளவு ஆசையாக பசங்க கேக்கும்போது செய்து கொடுக்காமல் இருக்க முடியுமா?காலை குளித்து மடியாக எல்லாம் செய்தேன். பசங்கல்லாம் ப்ரேக் ஃபாஸ்ட்டா சாப்பிட்டா கொஞ்சமாதான் சாப்பிட முடியும் . இதை லஞ்சுக்கு சாப்பிடலாம்னு சொல்லிட்டா அப்போதான் நிறைய சாப்பிட முடியுமாம். ஹா ஹா. சாபுதானா கிச்சடி ப்ரேக் ஃபாஸ்ட்டுக்கு பண்ணிக்கொடுதேன். பழயகதையெல்லாம் பேசினோம்..அம்மா, அப்பா இருக்கும் வரை எல்லா பண்டிகையும் க்ராண்டா பண்ணிண்டு இருந்தோம் என்னன்னென்ன பண்டிகைக்கு என்னல்லாம் பிரசாதம்லாம் பண்ணுவோம் அப்பா போனபிறகு ஆளுக்கொருபுற மாகபிரிஞ்சுட்டோம். என்னிக்கு என்ன பண்டிகைன்னே தெரிய மாட்டேங்குது. இயந்திர வாழ்க்கைக்கு பழக்கமாயிட்டோம். பண்டிகை நாட்களும் எல்லா நாட்களும் போல ஒரு சாதாரண நாளாதான் போகுது. அம்மாகைச்சமையல் டேஸ்ட் இன்னும் நாக்குலேயே ம் நிக்குதுன்னுலேல்லாம்பேசிண்டு இருந்தோம்.மதியம் எல்லாருமே ஆசை ஆசையா விரும்பி ரசித்து ருசித்து சாப்பிடுவதைப்பார்க்கும்போதே எனக்கும் மனசெல்லாம் நிறம்பிடுத்து.எல்லாரும் இப்போ 40+- வயசில் தான் இருக்கா. ஆனா அந்த நேரம் எல்லாருமே 10- வயசு குழந்தையாவே என் கண்களுக்குத்தெரிந்தார்கள்.  இதெல்லாமே சின்ன சின்ன சந்தோஷங்கள் தான், ஆனாலும் இந்தப்ளாஷ்பேக் தான் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கோன்னு தோனுது. அப்போ என் 10- வயது பேரன் சூப்பரா ஒரு கேள்வி கேட்டான். ஏன்பாட்டி  கிறிஸ்டியனுக்கெல்லாம் ஜீசஸ்ன்னு ஒரே சாமிதானே, முஸ்லீகளுக்கெல்லாம் அல்லானு ஒரேசாமி தானே? நமக்கு மட்டும் ஏன் சிவன், விஷ்னு, பிள்ளையார், முருகர், ஐயப்பா, கிருஷ்னா என்று நிறையபேர்களில் சாமி இருக்கான்னு கேக்கரான். இது நம்மைப்போல பெரியவர்களுக்குமே இன்னும் விடைதெரியாத கேள்வியாதானே இருக்கு. அவனுக்குபுரியும் விதத்தில் எப்படி சொல்வதுன்னு கொஞ்ச நேரம் யோசிச்சேன். பிறகு அவனிடம் பாரு இப்ப நான் யாரு உனக்குபாட்டி இல்லியா?உன் அப்பாவுக்கு, பெரிப்பா, சித்தப்பாவுக்கு நான் யாருன்னேன்? நீங்க அவங்களுக்கு அம்மா என்றான் பேரன். அதுபோல என் அப்பா அமாவுக்கு நான் பொண்ணு, என் கூடபிறந்தவர்களுக்கு நான் அக்கா, அவங்க குழந்தைகளுக்கு நான் பெரியம்மா, அத்தைன்னெல்லாம் மாறிடுவேன் இல்லியா. உன் அம்மாவுக்கு நான் மாமியார் இல்லியா. இப்போ பாரு நான் ஒரே ஆள் தானே. ஆனா ஒவ்வொருவருக்கு உறவுமுறையா பார்க்கும்போது வேர ,வேர பேர்ல வரேன் இல்லியா.? அதுபோல நமக்கும் சாமி ஒருவர்தான் நமக்கு பிடிச்ச பேர்ல நாம கூப்பிடரோம் கும்பிடரோம் இல்லியா என்ரேன். கொஞ்ச்ம் புரியுது, கொஞ்சம் புரியல்லே என்கிரான். அந்த நேரம் என்சின்னப்பையன் குழந்தே நாம இவ்வளவு சாமி ஏன் கும்பிடரோம் தெரியுமா அப்போதானே வித விதமா பட்சணங்கள் சாப்பிட கிடைக்கு ம் அதான் என்றான். பாட்டி சித்தப்பா சொன்னதுதான் சரின்னு சொல்லவும் எல்லாருக்கும் ஒரே சிரிப்பு.

                          

 அன்று சாயங்காலம் ஒரு ம்யூசிக் லைவ் இன் கான்செர்ட் இருந்தது அதுக்கு டிக்கட் புக் பண்ணி இருந்தா. எல்லாரும் போனோம். நான் ஏதானும் ஒரு ஹால் ல இருக்கும்னு நினைச்சேன் திறந்தவெளி மைதானத்தில் நடுவில் பெரிய மேடை போட்டிருந்தா. கிட்டத்தட்ட 50000, பேர் உக்காந்து பாக்கும்படி சேர் எல்லாம் போட்டிருந்தா.  1500.  1000,  500,  200- என்று டிக்கெட் வைத்திருந்தார்கள். நாங்க 1500- ரூபா டிக்கட் வாங்கி இருந்தோம் முன் வரிசையில் உக்காரலாம்னு நினைச்சோம் அதுக்குள்ள கூட்டம் சேந்திருந்தது. எங்களுக்கு 10-வது வரிசையில்தான் இடம் கிடைத்தது. கீழே பூராவும் மணல் தரைதான். ஸ்டீல் சேர்கள் நிறைய போட்டிருந்தா. 7-மணிக்குள் மைதானம் நிறம்பி வழிந்தது.
இடையில் கூல்ட்ரிங்க்ஸ் , பாப்கார்ன், பிஸ்லேரிவாட்டர், பர்கர் சாண்ட்விச் விக்கரவங்க குறுக்கும் நெடுக்குமாக போயிண்டும் வந்துண்டும் இருந்தா எனக்கு நான் சின்னவயதில் எங்க கிராமத்து டூரிங்க் டாக்கீசில் சினிமா பார்த்த நினைவுதான் வந்தது அங்கியும் இதுபோல மணல் தரைதான், கடலைமிட்டாய், சோடாகலர், முறுக்கு விக்கும் பசங்க குறுக்கும் நெடுக்குமா போவாங்க. அங்க ஓலைக்கூரை இருக்கும் இங்கு ஆகாயமே கூரையாக இருந்தது.. ஓபன் ப்ளேஸ், மேலே வானத்தில் ஃபுல் மூன் பாக்கவே அழகு. முதல்ல ஒருவர்வந்துஅன்று யார் கச்சேரி பண்ணுராரோ அவரைப்பற்றி இண்ட்ரோ கொடுத்தார். அவர் பேர் சோனு நிகம். வெரி பாப்புலர் சிங்கர். அவர் ஹரியானாவில் உள்ள பரீதாபாத்தில் பிறந்தவர்.3-வயதிலேயே பாட ஆரம்பித்தவர். 1990- லிருந்து ஃபிலிம் சாங்க்ஸ் பாட ஆரம்பித்து இன்று புகழினுச்சியில் இருப்பவர் என்று சொன்னார்.மேடயில் முழுவதும் நிறைய ம்யூசிக்கல் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ், பெரிய பெரிய லைட்டுகள் சுத்தி சுத்தி கண்களை கூச வச்சுது. ட்ரை ஐஸ் நு சொல்வாளே அதுவேருபுகைமண்டலம் கிளப்பியிருந்தது. மார்கழிமாசம் குளிர் வேறு ஜோரா இருந்தது. 7.30-க்கு ப்ரோக்ராம் ஸ்டார்ட் ஆச்சு. முதலில் ஒருபெண் பாடினா. அதன் பிறகு சோனு நிகம் பாட ஆரம்பித்து நான் ஸ்டாப்பாக தொடர்ந்து அடுத்தடுத்து சூப்பர் சாங்க்சாக பாடிக்கொண்டே இருந்தா. பின்னால் கொஞ்சம் பேரு நடனமும் ஆடினார்கள். மேடையில் மட்டுமில்லே. ஆடியன்சிலும் நிறையபேரு கைதட்டி தலை ஆட்டி எழுந்து ஆடவே தொடங்கினாங்க. மேடையில் அவர்கள் அடிக்கும் ம்யூசிக் இன்ச்ட்ருமெண்ட்ஸ் நம்ம உடம்புக்குள்ளே புகுந்து அடிப்பதுபோல எல்லார் உடம்பிலும் நல்ல வைப்ரேஷன்ஸ்.பாட்டு எல்லாமே ரொம்ப நல்லா இருந்தது. 10.30-வரை டைம் போனதே தெரியல்லே.மேலே நிலாவெளிச்சத்தில் இப்படி ஒரு ப்ரோக்ராம் பார்ப்பது கூட நல்லாவே எஞ்சாய் பண்ண முடிந்தது.

30 comments:

கோவை நேரம் said...

அருமை....கடவுளை பத்தின உங்களின் பார்வை ...அப்புறம் தாளகம் என்றால் என்ன ? சிறுவயதில் சினிமா கொட்டாயில் 75 பைசா கொடுத்து மணல் கூட்டிவைத்து படம் பார்த்த ஞாபகம் வருகிறது..

radhakrishnan said...

பேரனுக்கு ஓரளவு புரியும்படி நல்ல விளக்கம் கொடுத்தீர்கள.
10 வருடங்களுக்குப் பிறகு என்றால் நீண்ட நாட்களாகி விட்டனவே. ஏன் அப்படி?எல்லோருக்கும் ஒத்து வருவது
கஷ்டம்தான். ஈரோடு பையன் வந்திருந்தாரா?
நல்ல குடும்பம் பல்கலைக் கழகம் என்று
கூறுவார்கள்.தலைவராக இருந்து பல்கலைக் கழகத்தை நன்றாகப் பார்த்துக்
கொள்கிறீர்கள்.
மாலையில் எண்டர்டெயின்மெண்டஃ
மிக அருமை.கொண்டாட்டத்தின் உச்சம். மறக்க முடியாது.
ஒவ்வொரு நாளும் இயன்றவரை
மகிழ்ச்சியாககஃ கழிக்க வேண்டும்.
பின்னாடகளில் அதை அசைபோடலாம்.
இனிய பகிர்வுக்கு நன்றி அம்மா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//மேலே நிலாவெளிச்சத்தில் இப்படி ஒரு ப்ரோக்ராம் பார்ப்பது கூட நல்லாவே எஞ்சாய் பண்ண முடிந்தது.//

நல்லதொரு மகிழ்ச்சிப்பகிர்வு.

துளசி கோபால் said...

ரசித்தேன்!!! அருமை!

இங்கே வீடுகளுக்கு மதப்பிரச்சாரம் செய்யவரும் மக்கள்ஸ் கேப்பாங்க 'எங்களுக்கு ஒரே சாமி. உங்களுக்கு ஏன் இவ்ளோ சாமின்னு.'

அதுக்கு நீங்க சொன்னமாதிரிதான் விளக்கம் சொல்வேன். ஸ்ரீசங்கராச்சாரியாரின் தெய்வக்குரலில் இப்படித்தான் சொல்லிவச்சுருக்கார்.

இப்போ என் எதிர்க்கேள்வி ஒன்னு அவுங்களுக்குன்னு கேப்பேன்.

எங்களுக்கு ஏகப்பட்ட சாமி ஏகப்பட்ட கோவில். ஆனால் உங்களுக்கு ஒரே சாமின்னுட்டு எதுக்கு அதில் ஏகப்பட்ட பிரிவு?

கப்சுப்ன்னு இடத்தைக் காலி பண்ணிருவாங்க:-)

RAMVI said...

கடவுளைப்பற்றிய உங்க விளக்கம் அருமை, அம்மா.

அதென்ன சாபுதான கிச்சடி எங்களுக்கும் எப்படி செய்வது என்று சொல்லிக்கொடுங்களேன்..

மனோ சாமிநாதன் said...

கடவுளைப்பற்றிய விளக்கம் அருமை!
சோனு நிகாம் நிகழ்ச்சியின்போது டூரிங் டாக்கீஸ் நினைவு வந்தது இன்னும் அருமை!!

vanathy said...

ஆன்டி, சூப்பர் பதிவு.
இப்படி எல்லோரும் ஒன்று கூடுவது எவ்வளவு ஜாலியாக இருக்கும்.
என் சகோதரங்களும் ஒவ்வொரு திசையில் இருக்கிறார்கள். இப்படி ஒரு நாளுக்காக ஏங்கி காத்திருக்கிறேன்.

அமைதிச்சாரல் said...

ஸோனு நிகம் நிகழ்ச்சி அருமையா இருந்துருக்குமே..

தாளகம்ன்னா என்ன?.. விளக்குங்களேன்.

Chitra said...

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

Lakshmi said...

கோவை நேரம் வருகைக்கு நன்றி, டூரிங்க் கொட்டகையில் நானும் சின்ன வயசில் 25-பைசா டிக்கட் வாங்கி மணலில் உக்காந்து படம் பாத்திருக்கேன்.

Lakshmi said...

ராதாகிருஷ்னன் வருகைக்கும் ரசனையான பின்னூட்டத்திற்கும் நன்றி

Lakshmi said...

கோபால் சார் வருகைக்கு நன்றி

Lakshmi said...

துலசி கோபால் வருகைக்கு நன்றி. நீங்க கேட்ட கேள்விக்கு அவங்களிடம் பதில் இல்லியே? அதான் குழந்தைக எப்ப என்ன மாதிரி கேள்வி கேப்பாங்கன்னே சொல்ல முடியல்லே நம தான் நிறையா படிச்சு தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு.

Lakshmi said...

ரமா வருகைக்கு நன்றி. சாபுதானா வேர ஒன்னுமில்லே நம்ம ஜவ்வரிசிதான். நான் இன்னும் ரெசிப்பி சைட் பக்கம் ஆரம்பிக்கல்லே. அப்படி தொடங்கினா எல்லாருக்கும் நிறைய ருசியான சௌத் இண்டியன்ஸ், நார்த் இண்டியன்ஸ் ரெசிப்பி கொடுக்கமுடியும்.

Lakshmi said...

மனோ மெடம் வருகைக்கு நன்றி

Lakshmi said...

வானதி வருகைக்கு நன்றி

Lakshmi said...

சாந்தி வர்கைக்கு நன்றி. ஸோனு நிகம் சூப்பர். கடைசிபாட்டு ஹர் கடி பதல் ரஹி ஹை தூப் ஜிந்தஹி கல் ஹோ ந ஹோ பாட்டு ரொம்ப நெகிழ்ச்சியான பாட்டு இல்லியா ஹிந்திபாட்டு ரசிக்கிரவங்களால நல்லா ரசிக்க முடியும். உனக்கும் தாளகம்னா தெரியல்லியா முதல்ல கோவை நேரமும் கேட்டிருக்காங்க. வேர ஒன்னுமில்லே எழுகறி கூட்டுன்னு மத்த ஊர்கள்ல சொவாங்க திருன வேலி காரங்க தாளகம்னு சொல்வ்வாங்க. கொடியில் விளையும் காய்கள் , சில குறிப்பிட்ட கிழங்கு வகைகள் என்று ஏழு காய்கள் சேர்த்து செய்யனும். களி ஸ்வீட் இல்லியா இந்தக்கூட்டூ கார சாரமா பெஸ்ட் காம்பினேஷனா இருக்கும்.

Lakshmi said...

சித்ரா ரொம்ப் நாட்கள் கழிச்சு வந்திருக்கீங்க நன்றி

வெங்கட் நாகராஜ் said...

அருமை அம்மா... ஒரு நாள் முழுவதும் இப்படி எல்லோருடனும் இருந்து சந்தோஷமாக பண்டிகை கொண்டாடி மாலையில் இசை நிகழ்ச்சியும் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்... நீங்கள் ரசித்த விஷயங்களை நாங்களும் மனதளவில் ரசிக்கும்படி எழுதியதற்கு மிக்க நன்றிம்மா....

Lakshmi said...

வெங்கட் வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றி

அமைதிச்சாரல் said...

சின்ன வயசிலிருந்தே கன்னியாகுமரி மாவட்டத்துல இருந்ததால திருனேலி பக்கத்துல தாளகம்ன்னு சொல்லுவாங்கன்னே தெரியாமப் போச்சு. நாரோயில் பக்கத்துலயும் இதை கறின்னே பொதுப்பெயரால சொல்றதால இதான் அது.. அதான் இதுன்னே தெரியாம முழிச்சேன் :-))))

அமைதிச்சாரல் said...

சோனு நிகம் குரல் எனக்கும் ரொம்ப பிடிக்கும். அதுவும் அந்த 'கல் ஹோ நா ஹோ' ச்சான்சே இல்லை. ரொம்ப பிடிக்கும் :-)

Lakshmi said...

ஆமா சாந்தி எவ்வளவு நல்ல நல்ல பாட்டெல்லாம் கேக்க முடிஞ்சது தெரியுமா தானாலதான் போனோம். குட் எக்ஸ்பீரியன்ஸ் தான்

ananthu said...

இனிய பொங்கல் நல வாழ்த்துக்கள் !

சி.கருணாகரசு said...

வணக்கம்.... தங்களுக்கும் நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

வியபதி said...

குழந்தைகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதே ஒரு கலைதான். அது உங்களுக்கு நன்றாகவே வருகிறது

Lakshmi said...

அனந்து வருகைக்கு நன்றி

Lakshmi said...

சி. கருனாகரசு. வருகைக்கு நன்றி

Lakshmi said...

வியபதி, வருகைக்கு நன்றி

ஹேமா said...

எல்லாமே புதிதாக இருக்கிறது.மனதில் ஏதோ ஒரு ஏக்கமும் கூடுகிறது அம்மா !

Related Posts Plugin for WordPress, Blogger...