Pages

Back to Top

ஷஷ்டி அப்த பூர்த்தி










                    



                            





சென்னையில் 9-11-11-ல் சொந்தக்கராளுக்கு ஷஷ்டி அப்த பூர்த்தி இருந்தது.  எங்க குடும்பத்தில் நான் மூத்த உறுப்பினர் என்ற வகையில் எனக்கு போன் மூலமும் பத்ரிக்கை மூலமும் அழைப்பு வந்தது. நானும் போய் கலந்துகொண்டேன். மும்பையில் நான் இருக்கும் இடத்திலிருந்து ஏர்போர்ட் போக குறைந்தது 2 .1/2மணி நேரம் ஆகும். 8-ம்தேதி காலை 10- மணிக்கே சாப்பிட்டு வீட்டைவிட்டு கிளம்பி முதலில் ஆட்டோ, பிறகு லோக்கல் ட்ரெயின், பிறகு டாக்சி என்று பிரயானம் செய்து 1-மணி ஏர்போர்ட் போனேன். என் ஃப்ளைட் 2. 1/2 மணிக்கு இருந்தது. இண்டிகொ. பட்ஜெட் ஃப்ளைட் . செக்யூரிட்டி செக், பண்ணி, போர்டிங்க் பாஸெல்லாம் வாங்கிண்டு சேர்லபோயி உக்காந்துண்டு ஒருமணி நேரம் வேடிக்கை பாத்துண்டே டயம் பாஸ்.


                               

 கரக்ட் டயத்தில் ஃப்ளைட் கிளம்பியது. ரெண்டுமணி நேரம் சும்ம உக்காந்திருக்க வேண்டி வந்தது.4. 1/2 மணி சென்னை ஏர்போர்ட். வெரும் ஹேண்ட் லக்கேஜ் மட்டுமே இருந்ததால நேரா வெளில போனேன். கூட்டிப்போக சொந்தக்காரா வந்திருந்தா. நல்லவேளை வழி விசாரிச்சுண்டு அவஸ்தைப்பட வேண்டிய வேலை மிச்சம். நங்க நல்லூரில் குருவாயூரப்பன் கோவில் பக்கம் ஒரு பெரிய ஹாலில் ஃபங்க்‌ஷன் ஏற்பாடு செய்திருந்தார்கள். போனதுமே சிரித்தமுகத்துடன்  நல்ல வரவேற்பு. மேலபோயி டிபன்காபி சாப்பிடுங்கோன்னு விருந்து உபசாரம். காலை வீட்டில் 10-மணிக்கே பேருக்குன்னு என்னமோ சாப்பிட்டு கிளம்பினதில் இப்ப நல்ல பசி இருந்தது. மேல டைனிங்க் ஹால் போயி சூடு சூடாக போண்டா கேசரி சட்னி காபி சாப்பிட்டு கீழவந்து எல்லாருடனும் சிரிச்சு அரட்டை. ரொம்ப நாள் கழிச்சுப்பார்க்கம் உறவினர்கள் பழய கதைகள் பேசிக்கொண்டிருந்தோம். வெளி ஊர்களில் இருந்து வருகிரவர்கள் ஒவ்வொருவர் ஒவ்வொரு டைமில் வந்துகொண்டே இருந்தார்கள். எல்லாரையும் ஏர்போர்ட், ரயில்வே ஸ்டேஷன் போயி கூட்டிவர ஆட்கள் கார் எல்லாம் ஏற்பாடு செய்திருந்தார்கள்.இந்தமாதிரி பங்க்‌ஷன்கள் எல்லாமே உறவு ஜனங்கள் ஒன்றாக கூடிமகிழத்தான் செய்கிரார்கள் போல இருக்கு. இல்லைனா இந்தவசர யுகத்தில் யார்வீட்டுக்குயாருக்குப்போய்வர நேரம் ஒதுக்கமுடியுது?

                                             


                              7-மணிக்கு தீப பிரதட்சிணம் ஆரம்பம் ஆனது. தெரிந்த நண்பர்களே விரும்பி வந்து  நடத்தினார்கள். நான் இதெல்லாம் பார்த்தே வருஷ் கணக்காச்சு. இப்ப பார்க்க ரொம்ப ரசிக்க முடிந்தது.முதல் ஒரு மணி நேரம் பஜனைப்பாடல்கள் பாடினா, பிறகு ஒருவர் ஐந்துமுகம் குத்துவிளக்கை கையில் எடுத்துண்டு பாடலுக்கு ஏற்ற நடன அசைவுகளுடன் நடனம் ஆடினார். நல்ல தாளக்கட்டுடன் ஆட்டம் பார்க்கவே நல்லா இருந்தது. பிறகு விளக்கை நடுவில் வைத்துவிட்டு ஆண்கள் தனியாக, பெண்கள் தனியாக கோலாட்டம் கும்மி எல்லாம் அடித்து சுற்றி சுழன்ரு ஆடினார்கள். பிறகு ஸ்ரீ மஹாவிஷ்னுவின் தசாவதாரம் ஸ்லோகம் பாட்டாகச்சொல்லி அதற்கு அபினயம் பிடித்தார்கள். பிறகு கிருஷ்னர், கோபிகை மாதிரி கைகள் கோர்த்துக்கொண்டு ஒரு நடனம் என்று வெரைட்டி ப்ரோக்ராம் இரவு 10- மணீவரை நடந்தது.எல்லாருமே என்ஞாய் செய்து ரசித்துபார்த்தார்கள்.



                                 

 அது முடிந்து மேலே டைனிங்க் ஹால் போய் அனைவருக்கு டின்னர். டிபன் ஐட்டம், இட்லி, தோசை, சப்பாத்தி, வடை சட்னி, சாம்பார், தால் சக்கரபொங்கல் என்று சுவையான டின்னர் முடிந்து கீழே வந்தோம். விருந்தினர் எல்லாருக்குமே தங்குவதற்கு நிறைய ரூம்கள் இருந்தது.கட்டில் வசதியும் இருந்தது. எல்லாரின்லக்கேஜ்களும் கட்டில்மேல் ரூம்பூராவும் நிறம்பி இருந்தது. இரவு லேடீஸ் எல்லாரும் மருதாணி இட்டூகொள்ள ஆரம்பித்தார்கள். சிரித்துபேசி மருதானி இடவே 3-மணி ஆனது. நான் ஒரு சொந்தக்காரா வீட்லபோயி இரவு தூங்கி காலை 7மணிக்கு திரும்ப ஹால் வந்தேன்.வாத்யார்கள் நிறையபேர்கள் வந்து குடங்களில் புனித நீர் நிறைத்து பூஜைகள் செய்துகொண்டிருந்தார்கள். இந்த 60-வயதை ஏன் விசேஷ்மா விமரிசையா கொண்டாடரோம்னு விளக்கம் சொன்னார் ஒரு வாத்யார்.



                       
 ஷஷ்டி அப்த பூர்த்தி தம்பதிகள் சென்னைவந்து ஒருமாதம் தான் ஆகிரது அதனால் நிறைய  நண்பர்ள் பழக்கமாகலை. ரெண்டுபேரின் உறவினர்கள், உள்ளூர், வெளி ஊர்களிருந்து வந்துகலந்துகொண்டார்கள் அதிக கூட்டம் இல்லை. அவர்களுக்கு பிள்ளைக்குழந்தை இல்லை பெண் குழந்தகள் தான் பொறுபேத்துண்டு எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தார்கள்.மாப்பிளையும் பொறுப்பாக எல்லாரையும் நகு வரவேற்று உபசரித்தார். கலை ப்ரேக் ஃபாஸ்ட் மேலே போய் சாப்பிட்டு கீழே ஹாலில் வந்து ஃப்ங்க்‌ஷனை கவனித்தோம். வைதீக சடங்குகள் முறையாக ஒவ்வொன்றாக நடந்தது. தம்பதிகளுக்கு சிறியவர்கள் அபிஷேகம் செய்தார்கள். திருமாங்கல்ய தாரணாம் சிறப்பாக நடந்தது.எல்லாரும் வாழ்த்தி அட்சதை தூவினோம். வந்திருந்த உறவினர் எல்லாருக்குமே புது துணிமணிகள் கொடுத்து மறியாதை செய்தார்கள். தாம்பூல பையிலும் வெத்திலைபாக்கு பழம் தேங்காயுடன்  பெரிய முறுக்கு, அதிரசம் ம்னோகரம் லட்டு போட்டுக்கொடுத்தார்கள். சிரித்தமுகத்துடன் வரவேற்றதுபோல சிரித்தமுகத்துடன் வழி அனுப்பினார்கள்.

                                       
 ஒவ்வொருவருடனும்போட்டோ எடுத்து, பரிசுப்பொருட்கள் ஓதியிட்டு மதியம் லஞ்ச் விருந்து சாப்பிட்டு பாதிப்பேர் நங்க நல்லூர் ஆஞ்சனேயர் கோவில் குருவாயூரப்பன் கோவில் போய் தரிசனம் செய்துவந்தார்கள். நான் ப்ளாக் எழுதுவது தெரிந்த ஒருவர் என்னை அவர்வீட்டுக்கு கூட்டிப்போனார்.


                                                   





                                           


திரும்ப ஹால் வந்து பேச்சு. சிலர் என்போட்டோவை உன்ப்ளாக்ல போடுங்கோன்னு அன்பாக கேட்டுக்கொண்டார்கள், சிலர் போட்டோ போடாதீங்கோன்னு சொல்லிட்டா. கேட்டுக்கொண்டவா போட்டோமட்டும்

                                                




 போடரேன்னு சொன்னேன்.3-மணிக்குஹால் காலி பண்ணி அவாவா வேர வேர இடங்கள் போனா நான் என் தம்பி பெருகளத்தூர் என்னுமிடத்தில் ஒரு பெரியவரைப்பார்க்கப்போனோம். அங்கேந்து 5-மணிக்கு கிளம்பி ஏர்போர்ட் 6. 1/2 மணிபோனோம்.8-மணிக்கு மும்பை ஃப்ளைட் பிடிச்சு இரவு 12-மணி தம்பிவீடு.மறு நா என் வீடு வந்தேன் . இப்பல்லாம் எங்க போனாலும் எதைப்பார்த்தாலும் உங்க எல்லார்கூடவும் ஷேர்பண்ணிக்கனும்னுதான் தோனுது. அதான். இந்தப்பதிவு.

 வீடு வந்தபிறகு சின்னப்பேரன் போன் பண்ணி பாட்டி எங்கபோயிட்டுவந்தேன்னு கேட்டான். என் அத்தங்கார் வீட்டுல ஒரு ஃபங்க்‌ஷனுக்கு போயிட்டுவந்தேன் நான் அவாளுக்கு அம்மங்கார் முறை என்ரேன். உடனே பேரன், பாட்டி  எனக்கு மாருதி சென்கார், ஹூண்டாய் சாண்ட்ரோ கார்   டாடா நானோ கார்மட்டும் தெரியும் .இந்த அத்தங்கார் அம்மங்கார் எல்லாம் புதுகம்பெனி கார் பேர்போல இருக்குன்னு சொல்ரான்.
 என்னத்தைச்சொல்ல இந்தக்கால தலைமுறை குழந்தைகளிடம் உற்வு முறைகள் இந்த விதத்தில் இருக்கு. இதுவாவது தூரத்து சொந்தம். இன்னும் கொஞ்ச நாள் போனா அத்தை ,மாமா, அண்ணா, அக்கா, தங்கை தம்பின்னா கூட என்னன்னுகேக்குர நிலமை வந்துடும் போல இருக்கு. ஏன்னா இப்பல்லாம் பெரும்பாலான வீடுகளில் ஒரு குழந்தையோட நிறுத்திக்கரா. என்னோடது, எனக்கு, நான் என்னும் விதத்தில் தான் வளருது இந்தக்கால தலைமுறைகுழந்தைகள். இதுவும் காலத்தின் கட்டாயமென்று எடுத்துக்க வேண்டி இருக்கு. வேர என்ன சொல்ல?

40 comments:

K.s.s.Rajh said...

////பாட்டி எனக்கு மாருதி சென்கார், ஹூண்டாய் சாண்ட்ரோ கார் டாடா நானோ கார்மட்டும் தெரியும் .இந்த அத்தங்கார் அம்மங்கார் எல்லாம் புதுகம்பெனி கார் பேர்போல இருக்குன்னு சொல்ரான்.
என்னத்தைச்சொல்ல இந்தக்கால தலைமுறை குழந்தைகளிடம் உற்வு முறைகள் இந்த விதத்தில் இருக்கு. ////

ஹா.ஹா.ஹா.ஹா

ஆம் மேடம் இந்தக்காலத்தில் உறவுமுறைகள் இந்த விததில் தான் இருக்கு...
அருமையான பகிர்வு

RAMA RAVI (RAMVI) said...

உங்க பேரனின் அத்தங்கார்,அம்மங்கார் ஜோக் நல்ல வேடிக்கையாக இருந்தாலும்,உறவுகளைப்பற்றியே தெரியாமல் வளரும் இந்தத்தலைமுறையை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கு அம்மா. நல்ல பதிவு.

Angel said...

லக்ஷ்மி அம்மா எப்படி இருக்கீங்க .பகிர்வுக்கு நன்றிம்மா //இப்பல்லாம் எங்க போனாலும் எதைப்பார்த்தாலும் உங்க எல்லார்கூடவும் ஷேர்பண்ணிக்கனும்னுதான் தோனுது. அதான். இந்தப்பதிவு.//

நல்ல விஷயம் தானம்மா

.நீங்க சொல்றது சரியே அங்கேயாவது அத்தை/மாமா /சித்தப்பா பெரியப்பா என்று அழைக்க வசதி இருக்கு இங்கே எல்லாமே அங்கிள் ஆன்டி.என்ன சொல்ல .பகிர்வுக்கு நன்ன்றி

மகேந்திரன் said...

சரியாச் சொன்னீங்க அம்மா..
பொருளாதாரக் காரணம் காட்டி
ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொண்டு
அக்குழந்தையின் பல்வேறு இழத்தலுக்கு
காரணமாகிறார்கள்...
அருமையா சொல்லியிருகீங்க அம்மா...

Yaathoramani.blogspot.com said...

போட்டோவுடன் விளக்கங்களும் அருமை
நேரடியாகக் காண்பதைப் போன்றிருந்தது
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
த.ம 3

ப.கந்தசாமி said...

ஆமாங்க, எனக்குமே இந்த உறவு முறை புரியவில்லை. அத்தங்கார்னா யாரு, அம்மங்கார்னா யாரு, கொஞ்சம் விளக்கம் கொடுத்தா நன்னாயிருக்கும்.

இராஜராஜேஸ்வரி said...

இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல பதிவு. படிக்க சுவாரஸ்யம்.

வெங்கட் நாகராஜ் said...

சுவாரசியமான பகிர்வு... உறவு முறைகள் எல்லாம் இப்போதிருக்கும் குழந்தைகளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை... :) இருப்பதே ஒன்றோ இரண்டோ இல்லையா?

நல்ல பகிர்வும்மா....

raji said...

எங்களோட பகிர்ந்துண்டதுக்கு ரொம்ப நன்றிம்மா.அப்படியே அறுபதாம் கல்யாணம் ஏன் கொண்டாடறோம்கறதையும் சேர்த்து சொல்லியிருந்துருக்கலாம்.

அப்பறம் அந்த கார் பற்றி தங்கள் பேரன் கூறியதை ரசித்தேன்.என்ன செய்வது? இந்த காலத்துக் குழந்தைகள் வளரும் சூழ்நிலைதான் காரணம்.இதைத்தான் நான் 'உறவுகள் தொடர்கதை' என்று ஒரு சிறுகதைப் பதிவிட்டிருந்தேன்.காலம் அப்படி போய்க் கொண்டிருக்கின்றது.ஷஷ்டி அப்த பூர்த்தி பகிர்விற்கு நன்றி

மனோ சாமிநாதன் said...

நீங்கள் சொல்வது மாதிரி எல்லா உற‌வுகளும் சேர்வ‌து இந்த மாதிரி விசேஷங்களில்தான். உங்களின் பதிவு படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது!

ஸ்ரீராம். said...

முதல் நாள் நடத்தும் நடனம், அதுவும் ஆண்களும் சேர்ந்து ஆடுவது பார்த்ததில்லை. புதிய தகவல்கள் (எனக்கு) உறவுகளை இந்த மாதிரி ஒன்று கூடும் விழாக்களில் கண்டு மகிழ்வது ஒரு சுகம் என்றால் அதை நட்புகளுடன் பகிர்வது இன்னொரு வகை சுகம்தான். உறவுமுறைக் குழப்பங்கள் பற்றி சொல்லியிருப்பது உண்மைதான்.

குறையொன்றுமில்லை. said...

ராஜ் நீங்கல்லாம் ரசிக்கும்படி எனக்கு எழுத வருவதே சந்தோஷமான விஷயம் இல்லியா வருகைக்கு நன்ரி

குறையொன்றுமில்லை. said...

ரமா வலைச்சரவேலை பிசியிலும் இங்கவந்து கருத்து சொன்னதுக்கு நன்றிம்மா.

குறையொன்றுமில்லை. said...

ஏஞ்சலின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

குறையொன்றுமில்லை. said...

மகேந்திரன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரமணி சார் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கந்தசாமி சார் உங்களுக்கே உறவுமுறை பற்றித்தெரியல்லியா அப்போ குழந்தைகளுக்கு எப்படி தெரியவரும்? மாமா பொண்ணு அம்மங்கார், அத்தை பொண்ணு அத்தங்கார், மாமா பையன் அம்மாஞ்சி, அத்தைபையன் அத்தான்.

குறையொன்றுமில்லை. said...

இராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோபால் சார் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கும் கருத்துக்கும் நன்றீ

குறையொன்றுமில்லை. said...

ராஜி வருகைக்கும் அழகான கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

மனோ மேடம் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஸ்ரீ ராம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சென்னை பித்தன் said...

ரொம்ப விசேஷமா சம்பிரதாயப்படி கொண்டாடினா போலிருக்கு!மொத நாள் ஏகாதச ருத்ரமும் இருந்திருக்கும்!
எல்லாத்தலயும் அழகாச் சொல்லியிருக்கேள்!

ADHI VENKAT said...

நீங்க சந்திச்ச விஷயங்களை எங்களோட பகிர்ந்துக்கணும் நினைக்கிறது பற்றி ரொம்ப சந்தோஷம் அம்மா.

பேரன் அடிச்ச ஜோக் பிரமாதம். இப்ப இருக்கறவா இப்படித் தான் இருக்கறா.

குறையொன்றுமில்லை. said...

சென்னை பித்தன் சார் வருகைக்கு நன்றி ருத்ர ஏகாதசி பத்தி சொல்லமறந்துட்டேன். நினைவு படுத்துட்டீங்க,

குறையொன்றுமில்லை. said...

கோவை2தில்லி வருகைக்கு நன்ரி

LAKSHMINARAYANAN IYER said...

As usual a Beautiful presentation. It was a pleasure to be a part of the function and meet all relatives

குறையொன்றுமில்லை. said...

ஸ்ரீதரா வா வா படிச்சியா சுபாவுக்கு படிச்சு காட்டினயா.அடிக்கடிவா.

radhakrishnan said...

நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் உறவினர்
வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் ஒரே இடத்தில் நிறைய
உறவினர்களைப் பார்த்து விடலாம்,
மிக மகிழ்ச்சியாக இருக்கும். ஆனல்
இப்போது உள்ள பிரயாண அசௌகரியங்களைத் தாக்குப் பிடிக்க
எல்லோராலும் முடியவில்லை.ஆட்டோ,
டாக்ஸி,விமானப பிரயாணங்களை ஏற்பாடு செய்து கொள்வது அவ்வளவு
எளிதா? கில்லாடியாக அவ்வளவையும்
செய்து கொண்டு நல்ல பயணத்தையும்
என்ஜாய் செய்து இருப்பிடத்தையும்
விரைவாக அடைந்துவிடும் உங்கள்
திறமை வியப்பிற்குரியது. உங்கள்
வருகைக்கு உறவினர்கள் எவ்வளவு
மகிழ்ந்திருப்பார்கள்? நானும் இவ்வாறே
செய்ய நினைக்கிறேன் முடிந்தவரை.
இனிய பகிர்வு. நன்றி அம்மா.

radhakrishnan said...

தற்கால ஜெனரேஷனுக்கு உறவுமுறைகள் புரியாததோடு ,கேலியாகவும் இருக்கிறது. பெரியவர்கள்
தான் அவ்வப்போது உரியமுறையில்
எடுத்துக்கூற வேண்டும். பல நிகழ்ச்சிகளில் அடிக்கடி பார்த்துக்கொண்டால்தான் தொடர்பு இருக்கும்.நிகழ்ச்சிகளை விளக்கமாககஃ
கொடுத்தமைநன்றாக உள்ளது.

குறையொன்றுமில்லை. said...

ராதா கிருஷ்னன் சார் ரொம்ப நாளா காணோமே வெளி ஊர் போயிருந்தீங்களா? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சாந்தி மாரியப்பன் said...

பகிர்வுக்கு நன்றி லஷ்மிம்மா.. உங்க குட்டிப்பேரன் ஜோக்கா சொன்னாலும் இப்போதைய குழந்தைங்களோட குழப்பத்தையும் தெளிவா சொல்லிட்டார். அதுவும் ஊர்ல இருக்கறவங்களாவது அடிக்கடி சந்திச்சுக்கவும் உறவுகளைத் தெரிஞ்சுக்கவும் சந்தர்ப்பம் இருக்குது. தொலைதூரத்துல இருக்கற நம்ம பாடுதான் கஷ்டம் :-)

குறையொன்றுமில்லை. said...

சாந்தி வருகைக்கு நன்றி

PUTHIYATHENRAL said...

* இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே! குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே அட மறந்தே போச்சி.சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில் அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர்.ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும். please go to visit this link. thank you.

* பெரியாரின் கனவு நினைவாகிறது! முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது! தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே !. please go to visit this link. thank you.

* நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.

* இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று! இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்!. please go to visit this link. thank you.

* தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

* தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

* இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

* ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

* கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

Ananthi Raja said...

Thank you very much perima.... we felt very glad about your presence in our function.... after seeing this post... i felt very very happy....... Thank you once again....

குறையொன்றுமில்லை. said...

ஆனந்தி எல்லாரும் படிச்சுபாத்தீங்களா/ குட் நான் இது எழுதியே ஒருமாசம் ஆச்சு இப்பதான் நீ வரே.

Lakshmi Iyer said...

Thanku Periamma... Awesome presentation.Simply mind blowing.

குறையொன்றுமில்லை. said...

பிரபா வருகைக்கு நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...