Pages

Back to Top

ஆதார் அடையாள அட்டை.

இந்திய குடிமகன்,  இந்திய குடிமகள் என்பதற்கான அடையாள அட்டை..
என்பெண் மும்பை மெயின் சிட்டியில் வசித்து வருகிறாள் அவ ஜூன்மாசம்
 10-ம் தேதி வாக்கில் எனக்கு போன்பண்ணி சொன்னா. அம்மா இண்டியன் கவர்மெண்ட்லேந்து ஒரு பர்மனெண்ட் ஐ. டி. கார்ட் கொடுக்கப்போரா. அதுக்கு ஃபார்ம் உன் பேங்கில்போய்க்கேளு. அதை ஃபில் அப் செய்துகொடு. நாங்கல்லாம் இங்க கொடுத்தாச்சு. இது முக்கியமான ஐ. டி கார்ட். எல்லா இடத்திலும் செல்லுபடி ஆகும். உடனே போயிப்பாருன்னு சொன்னா. நானும் என்.அக்கவுண்ட் வச்சிருந்த கேனரா பேங்க்ல போயி முதல்ல கேட்டேன் ஆதார் ஃபார்ம் வேணும்ன்னேன்(U.I.D.-UNIQUE  IDENTIFI CATION  DRIVE).  சுருக்கமா ஆதார்.ஃபார்ம்
முதல்ல நான் என்ன கேக்கரேன்னே அவாளுக்கு புரியல்லே. மேடம் நீங்க சொல்வது இப்பதான் கேள்விப்படரோம். என்னன்னு சரியா புரியலே. நீங்க வேர எங்கியானும் கேளுங்கன்னு சொல்லிட்டா.னானும் விடாம ஸ்டேட் பெங்க், பேங்க் ஆஃப் மஹாராஷ்ட்ரா எல்லா இடத்திலும் போயி கேட்டேன். அவங்களுக்கும் இது பத்தி ஏதுமே தெரிஞ்சிருக்கலை. பெண்ணிடம் சொன்னேன். அவ  நீ நேரா முனிசி பாலிடில போயிக்கேளுன்னா. என் வீட்லேந்து முனிசிபா லிடி 5-கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. நான் இருப்பது ஈஸ்ட் பக்கம் அது வெஸ்ட்பக்கம். ஆட்டோக்காரன் 30- ரூவா போகமட்டும் கேப்பான். சரின்னு போனேன். உள்ள போயி கேக்கசொன்னா. போயி கேட்டேன் நீங்க கேக்கர ஆதார் ஃபார்ம் இன்னும் இங்க வரவே இல்லே. இன்னும் ரெண்டுமாசம் கழிச்சு வாங்கன்னு சொல்லி செப்டம்பர்15-ம்தேதின்னு வரச்சொல்லி ஒரு சீட்டில் எழுதிக்கொடுத்தான்.



 நானும் முந்தா நா 15-ம் தேதி அந்தசீட்டு கொண்டு முனிசிபாலிட்டி போனேன் கவர்மெண்ட் ஆபீசில் எல்லாரும் லேட்டாதானே வருவான்னு நான் 11-மணிக்கு போனேன். மேடம் இன்னும் இந்தஃபார்ம் இங்க வல்லே. நாளை வாங்கன்னான். நீங்கதானே இன்னிக்கு வர சொன்னீங்க  பாம்பே சிட்டிலலாம் ரெண்டுமாசம் முன்பே ஃபார்மெல்லாம் வெந்து எல்லாரும் ஃபில் பண்ணியும் கொடுத்திருக்கான்னேன். மேடம் மெயின் சிட்டிலல்லாம் சீக்கிரமா வேலை நடக்கும் இங்க நாம இருப்பது அவுட் ஆஃப் மும்பை இங்க எல்லாமே லேட்டாதான் வரும்.. சரி இன்னிக்குதானே நீங்க கூப்பிட்டீங்கன்னேன். ஆமா மேடம் கூப்பிட்டோம் ஆனா ஃபார்ம் வல்லைனா நாங்க என்ன செய்ய? வச்சுண்டா இல்லைன்னு சொல்ரோம்ன்னாங்க. திரும்ப வீடு. போக வர ஆட்டோ 60- ரூவா அரையும் அரையும் ஒருமணி நேரம் அலைச்சல் வேர என்ன பண்ண? வாசலில் ஒரு ப்யூன் உக்காந்திருந்தான் அவன் என்னிடம் பேச்சு கொடுத்தான் என்னாச்சு மாஜி ந்னான். ஆதார் ஃபார் கிடைக்கலேன்னே. மாஜி நீ 11-மணிக்க் வந்தா அந்தகௌண்டர் மூடிடுவாங்க நாளை காலை  சீக்கிரமா 9 மணிகுள்ள வா என்றான்.

 மறு நா திருமபவும் படை எடுப்பு. காலை 9 மணிக்குத்தான் குழாயில் மெயின் வாட்டர் வரும் ஒருமணி நேரம் தான் வரும் அப்போ பிடிச்சி வச்சித்தான் பூரா நாளும் சமா ளிக்கனும். இப்போ அங்க 9 மணிக்கு போணும்னா நான் வீட்லேந்து 8.30-க்கே கிளம்பினாதான் சரியா இருக்கும்.சீக்கிரம் எழுந்து சமையல் குளியல் வீடுபெருக்கி மெழுகி கிலம்பினேன். தண்ணி பிடிக்க முடியல்லே. கீழபோனா ஆட்டோவே இல்லே. ஸ்கூல் போற குழந்தைகள் கூட்டிண்டு ஆட்டோ எல்லாம் போயிடுத்து. கொஞ்ச நேரம் வெயிட்டிங்க். 8.45-க்கு ஒரு ஆட்டோ கிடைச்சது. முனிசிபாலிடி போனேன். ப்ஃஃர்ம் வாங்கும் இடத்தில் பெரிய க்யூ. நானும் போயி நின்னேன். அரைமணி நேரத்தில் ஃபார்ம் கிடைத்தது. முதல் பக்கம் இங்கிலீஷில்தான் இருந்தது. நாமே ஃபில் பண்ணிடலாம்னு நினைச்சேன். அங்க ஒருவர் சொன்னார் ஆண்டி எல்லா டீடெய்லும் மராட்டிலதான் ஃபில் பண்ணனும் நாம இருப்பது மஹாராஷ்ட்ரா இல்லியா என்றார். கொஞ்சம் தள்ளி ஒரு மேஜையில் ஒருவர் எல்லாருக்கும் ஃபார் ஃபில் அப் செய்து கொடுதுண்டு இருந்தார். அதுக்கும் 10 - பேரு க்ய்யுவில் இருந்தா. அங்க போயி நானும் நின்னேன்.  ஒவ்வொருவரும் 4, 5, ஃபார்ம்வரைவச்சிருந்தா. எல்லாம் ஃபில் பண்ண ரொம்பவே நேரம் எடுத்தது. என் டைம் வரும்போது ஒருமணினேரம் ஆச்சு. ரேஷன் கார்ட். பான்கார்ட் ஜெராக்ஸ் அங்கியே அட்டஸ்ட் பண்ணி தந்தா. ஒரிஜனல் கார்டும்செக்பண்ணீனா. அதெல்லாம் முடிஞ்சு ஒரு ஃபார்ம் ஃபில் பண்ண 10- ருப்பாகேட்டார். பார்ம் கொடுக்க க்யூ வந்தேன் 50- பேருக்கு மேல க்யூவில் நின்னுண்டு இருந்தா,.

நானும் அங்க நின்னேன். வெளில மழை வேர நச நசன்னு தூறிண்டே இருந்தது, வெளியேயும் உள்ளேயும் போயி வரவா கூட்டமும் சேந்து நிக்கும் இடம்பூரா ஒரே ஈர நசனசப்பு சகதி. உக்கார எந்த வசதியும் இல்லே. நின்னுண்டுதான் இருக்கணும்.பின்னாடிதான் டாய்லெட் இருக்கும்போல பேட் ஸ்மெல் வேர அடிச்சுண்டெ இருந்தது. இதுல இடையில் புகுந்து கலாட்டா பண்ரவா வேர வந்து தகராறுபண்ணீனா. மத்தவா அவர்களிடம் சண்டை போட்டு க்யூவில் வாங்கன்னு துறத்திண்டே இருந்தா. பெரிய சண்டை ஆயிடாம இருக்கணுமேன்னூ நினைச்சுண்டேன். எனக்கு முன்பு 10- பேரு இருக்கும்போது  1.30 மணி ஆச்சு. அவர்களி லஞ்ச் டைமாம். எல்லாரும் போயிட்டா. திரும்ப 3 மணிக்கு வாங்கன்னு சொல்லிட்டா.என்ன பண்ண நாந்திரும்ப வீடு போயிட்டு வரமுடியாது. போயிட்டு வரதுக்கு செலவு அலைச்சல் அதுக்குமேல க்யூவும் பெரிசாயிடுமே. அதனால முனிசிபாலிடி வாசல்ல ஒரு சிமண்ட் பெஞ்ச் இருந்தது அங்க போயி உக்காந்தேன். கையில் எப்பவுமே வாட்டர் கொண்டு போயிடுவேன். அதுபோல ஒரு புக்கும் வச்சுப்பேன். தண்ணி குடிச்சு புக் படிச்சு 3மணீ வரை எப்படியோ ஓடினேன். திரும்ப உள்ள போனேன். எனக்கு முன்னே நின்ன 10- பேரும் அங்கியே லைனில் நின்னுண்டு இருந்தா. நானும் அவாபின்னாடி போயி நின்னேன். என் நம்பர் வரும்போது4.30- மணீ ஆச்சு உள்ள ஒரு ரூமில் ரெண்டு கம்ப்யூட்டர் , காமராவுடன் வச்சுண்டு எல்லாருக்கும் பேர் பதிவு பண்ணிண்டு இருந்தா. அங்கியும் ஃபில் பண்ணின ஃபார்ம் செக் பண்ணி, ஜெராக்ஸ் ஒரிஜனல் கார்ட் எல்லாம் செக் பண்ணீனா.

 அப்புரமா கம்ப்யூட்டர் முன்னாடி உக்கார வச்சா. ரெண்டு கைஎல்லா விரல்களும் தனிதனியா பிரிண்ட்பண்ணீனா. கண் கருவிழிமட்டும் ஒரு இன்ஸ்ட்ரூமெண்ட் வழியா பிரிண்ட் பண்ணினா அப்புரம் நம்ம முகம்மட்டும் தனியா போட்டோ. எல்லாம் முடிய அரை மணீ நேரம் ஆச்சு. உடனே பிரிண்ட் அவுட் பண்ணி எல்லாம் அவாகிட்ட வ்ச்சிக்கரா நமக்கு நம்ம போட்டோவுடன் வீட்டு அட்ரசு எழுதிய ஒரு ரசீது பேப்பர் தரா. எப்போ கார்ட் கிடைக்கும்னு கேட்டேன் 3- மாசம் கழிச்சு கிடைக்கும்னா. வீட்டு அட்ரஸ், ரேஷன் கார்ட் பான்கார்ட், இல்லைனா ஓட்டர் கார்ட் இப்படி ஏதானும் போட்டோ ப்ரூப் கேக்கரா. இந்த கார்ட் ஆல் இண்டியா லெவலுக்கு எல்லா இடத்துலயும் நாம இண்டிய குடி உரிமை உள்ளவங்கதான்னு ப்ரூப் பண்ணுமாம். எல்லாம் முடிஞ்சு வீடுபோய்ச்சேர 5 மணி ஆச்சு. மூணாவது மாடில் வீடு மாடி எறவே அப்பாடான்னு ஆச்சு. இவ்வளவு நேரம்லாம் நிக்கவே முடியாது. கால் கெஞ்சரது. முத ரூம் சோபாவிலேயே படுத்துடேன் காபி குடிச்சா தேவலை போல இருந்தது நாந்தானே போட்டுக்கனும் சோம்பல் எழுந்துக்கவே இல்லே. 7.30- க்கு எழுந்து வென்னீர்போட்டு ஒரு குளியல் குளித்து கொஞ்சம் ஃப்ரெஷ் பண்ணிண்டு 8மணிக்கே கொஞ்சம் சாதம், மோர் விட்டு சாப்பிட்டேன். காலில் பெயின்பாம் தடவிண்டு ஹாட் பேக் வச்சுண்டு ஒருமணீ நேரம் ஒத்தடம்லாம் கொடுத்தபிறகுதான் கால் ஒரு வழிக்கு வந்தது. 10-மணிக்கு கம்ப்யூட்டர்முன்னால வந்தாச்சு அதை பதிவா எழுதி உங்க எல்லார்கிட்டயும் ஷேர் பண்ணீண்டாச்சு. 

57 comments:

பனித்துளி சங்கர் said...

ஆதர அடையாள அட்டைக்குள் இவளவு இருக்கா . வடிவேலு சொல்வது போல ஆணியேப் புடுங்கவேண்டாம் நிலைக்கு மக்கள் வந்துவிடுவார்கள் போங்க

அமுதா கிருஷ்ணா said...

இனிமேல் தான் எங்க ஏரியா தாம்பரத்தில் எங்க கொடுக்கிறார்கள் என்று தேடணும்.

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

me first....wow!!!
comment after reed

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அனுபவ பதிவு .
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

அருமை லக்ஷ்மி அக்கா.
இந்த வசதி நம்ம ஊர்ல உண்டா ?
உங்களை இந்த பாடு படுத்தியவன்
எங்களை என்ன பண்ணுவான்???
நல்ல விசியம் சொல்லி உள்ள்ரிகள்.
நானும் ட்ரை பண்ண உள்ளன் .
நன்றி
அன்புடன்
யானைக்குட்டி

தமிழ் உதயம் said...

இதெல்லாம் மக்களுக்கு அரசாங்கம் தானே சிரமம் எடுத்து தரணும். இதுக்கெல்லாம் மக்களை அரசாங்கம் சிரமப்படுத்தக்கூடாது.

மனசாலி said...

ஆதார் எடுக்க மதுரையில் ஒரு சிரமமும் இல்லை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

எல்லோருக்கும் இந்த விஷயம் தெரிந்து எல்லோரும் அதைப்பெற்று முடிப்பதற்குள், வேறு ஏதாவது புது கார்டு வந்துவிடும். மொத்தத்தில் Time & Energy waste. வேறு ஒரு பயனும் இருக்காது.

K.s.s.Rajh said...

பயனுள்ள பதிவு மேடம்,வாழ்த்துக்கள்

துபாய் ராஜா said...

பல நாடுகளில் வழக்கத்தில் உள்ள குடிமக்கள் அடையாள அட்டை முறை இந்தியாவிலும் வருவது குறித்து மகிழ்ச்சி. ஆனால் அரசாங்கம் முறையான அறிவிப்பு,அனைவருக்கும் தனிதனியாக குறிப்பிட்ட நேரம் ஒதுக்குதல், வாகன வசதி போன்ற எளிமையான நடைமுறைகள் மூலம் முறைப்படுத்தவேண்டும்.

பகிர்விற்கு நன்றி அம்மா.

கவி அழகன் said...

முத ரூம் சோபாவிலேயே படுத்துடேன் காபி குடிச்சா தேவலை போல இருந்தது நாந்தானே போட்டுக்கனும் சோம்பல் எழுந்துக்கவே இல்லே. 7.30- க்கு எழுந்து வென்னீர்போட்டு ஒரு குளியல் குளித்து கொஞ்சம் ஃப்ரெஷ் பண்ணிண்டு 8மணிக்கே கொஞ்சம் சாதம், மோர் விட்டு சாப்பிட்டேன். காலில் பெயின்பாம் தடவிண்டு ஹாட் பேக் வச்சுண்டு ஒருமணீ நேரம் ஒத்தடம்லாம் கொடுத்தபிறகுதான் கால் ஒரு வழிக்கு வந்தது. 10-மணிக்கு கம்ப்யூட்டர்முன்னால வந்தாச்சு அதை பதிவா எழுதி உங்க எல்லார்கிட்டயும் ஷேர் பண்ணீண்டாச்சு.

ஐயோ பாவம் உடம்ப பாத்துக்குங்க அம்மா

இராஜராஜேஸ்வரி said...

அனுபவ பகிர்வுக்கு நன்றி

ரிஷபன் said...

ஆதார் பற்றி தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி.

குறையொன்றுமில்லை. said...

பனித்துளி சங்கர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

அமுதா கிருஷ்னா, வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

யானைக்குட்டி ஞானேந்திரன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

நண்டு நொரண்டு வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

தமிழ் உதயம் சரியா சொன்னீங்க அரசாங்கம் என்னிக்கு ஜனங்களுக்கு சவுரியம் பண்ணிக்கொடுத்தது?

குறையொன்றுமில்லை. said...

மனசாலி மதுரையில் ஈசியா இருப்பது சந்தோஷம் எல்லா இடங்களிலும் அப்படி இருந்தா நல்லா இருக்கும்

குறையொன்றுமில்லை. said...

கோபால் சார் நாம் எந்த காரியத்திற்குபோனாலும் போட்டோ ஐடி கேக்கராங்களே. அப்போ இது தேவையான் அஒன்று என்று எண்ணித்தானே நாம மெனக்கெடரோம்.

குறையொன்றுமில்லை. said...

ராஜ், வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

துபாய் ராஜா நீங்க சொல்வது சரிதான் அரசாங்கம் இன்னும் கொஞ்சம் ஜனக்களுக்கு சவுரியம் பண்ணிக்கொடுக்கனும்தான்.

குறையொன்றுமில்லை. said...

கவி அழகன் வருகைக்கும் அன்பான பின்னூட்டத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

இராஜ ராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரிஷபன் நமக்குத்தெரிந்ததை எல்லாருடனும் பகிர்ந்து கொள்ளனும்னுதான் இந்தப்பதிவே போட்டேன்.

சம்பத்குமார் said...

பகிர்விற்க்கு மிக்க நன்றி

பதிவுலக அன்னையே..

தங்களின் அனுபவம்

அனைவருக்கும் முன்னுதாரண பாடமே..

நன்றியுடன்
சம்பத்குமார்

RAMA RAVI (RAMVI) said...

ஆதார் அட்டை வாங்க இவ்வளவு கஷ்டமா?
உங்க அனுபவத்தை அழகாக சொல்லியிருக்கீங்க அம்மா. இது எங்களுக்கும் உபயோகமா இருக்கும்.நன்றி பகிர்வுக்கு.

குறையொன்றுமில்லை. said...

சம்பத் குமார் வருகைக்கு நன்றி. என்னது இது பதிவுலக அன்னையேன்னுல்லாம் சொல்ரேள். நானும் ரொம்ப சாதாரணமானவதான்.

குறையொன்றுமில்லை. said...

ரமா இங்க நாங்க இருக்கர இடத்லதான் இவ்வளவு கஷ்ட்டம் கொடுக்கரா எல்லா இடத்திலும் இப்படி இல்லேன்னு நினைக்கிரேன்.

ஒதிகை மு.க.அழகிரிவேல் said...

படிசுட்டேன்...ஆதார அடையாள அட்டை நல்ல விஷயம்தான்,ஆனா மூணு மாசம் ரொம்ப அதிகம்.

குறையொன்றுமில்லை. said...

ஒதிகை மு க. அழகிரிவேல், வருகைக்கு நன்றி.மூணுமாசத்லயாவது கைக்கு வருமான்னு பாக்கனும்.

மாலதி said...

அனுபவ பதிவு .
பகிர்வுக்கு நன்றி .

ADHI VENKAT said...

நல்ல பகிர்வும்மா. இங்க எங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு பள்ளியில் ஜூலை மாதம் 1 மணி நேர காத்திருப்புக்கு பின் எங்கள் இருவருக்கும் முடிந்து விட்டது. கார்டு விரைவில் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.மகளுக்கு தனியாக ஃபார்ம் பூர்த்தி செய்து தர வேண்டும்.

குறையொன்றுமில்லை. said...

மாலதி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோவை2தில்லி ஒர்ரொரு ஊர்ல ஒரொருமாதிரி வழிமுறைகள் இருக்கு.

ஹுஸைனம்மா said...

இங்க அபுதாபிலயும் இதுபோல கைரேக, கண்ரேக எல்லாம் எடுத்து, ஒரு ஐடி கார்ட் கொடுத்தாங்க. கிரிமினல் மாதிரி நடத்துறாங்களேன்னு இருந்துது. ஆனா, அவசியம்தானே?

ஒரு மணி நேரத்துல எல்லாம் முடிஞ்சுது. ஆனா, இந்தியாவுல எத்தினி நாள் இழுப்பாங்களோன்னுதான் கவலை. இழுத்தாலும், செஞ்சுதான் ஆகணும்.

குறையொன்றுமில்லை. said...

ஹுஸைனம்மா இந்தியா எப்பவும் இந்தயாவாத்தான் இருக்கும் மாத்தவே முடியாது.ஜனங்களின் கஷ்ட்டம் புரிஞ்சு செயல் படவே மாட்ராங்க. என்னத்தச்சொல்ல?

shanmugavel said...

கொஞ்சம் கஷ்டமான அனுபவம்தான்.

ராம்ஜி_யாஹூ said...

நல்ல பதிவுங்க
அழகான நடை, விவரிப்பு
ஒரே ஒரு வேண்டுகோள்- அங்கங்கே பிராமண பேச்சு வழக்கு வார்த்தைகள் வருகின்றன. அவற்றைத் தவிர்த்துப் பொது வார்த்தைகள் பயன் படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

வெங்கட் நாகராஜ் said...

இங்கே தில்லியில் ஒவ்வொரு ஏரியாவுக்கும் தனித்தனியே நாட்கள் கொடுத்து விட்டார்கள். அதற்குத் தகுந்தபடி சென்று இதையெல்லாம் செய்ய வேண்டும். நானும் ஆதியும் முதல் முறை செல்லவில்லை. இரண்டாம் முறை சென்று ஒரு மணி நேரத்தில் எல்லாம் முடித்து விட்டு வந்தோம்...

எந்த அளவிற்கு உபயோகம் ஆகும் எனத் தெரியவில்லை.. வை. கோ. சார் சொன்ன மாதிரி ஆனாலும் ஆகலாம்... :(

சாந்தி மாரியப்பன் said...

இங்கே ரங்க்ஸுக்கு அவங்க ஆப்பீசுக்கே வந்து செஞ்சு கொடுத்தாங்க.

குடும்பத்தினருக்கும் அங்கியே செஞ்சு தரதா சொன்னாங்க. ஆனா, உடனேயே அதாவது அன்னிக்கு சாயந்திரத்துக்குள்ள போகணும்ன்னு சொன்னதுனால நிறையப்பேரால போக முடியலை( நாங்க உட்பட :-). ஸ்கூல், காலேஜ் போயிருக்கற பசங்க வர வேணாமா??

குறையொன்றுமில்லை. said...

ஷன்முகவேல் வருகைக்கு நன்றி.

குறையொன்றுமில்லை. said...

ராம்ஜி யாஹூ, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பிராமணாளுக்கு பிராம்மணபாஷைதானே வரும்?

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஒருவருக்கு பத்துபேர் சொல்லும்போது நமக்கும் ஓ, இது ரொம்ப முக்கியமான அட்டை போல இருக்கேன்னுதானே தோனும்.அதனாலதானே முயற்சி செய்யரோம் இல்லியா?

குறையொன்றுமில்லை. said...

சாந்தி, பாம்பேலயே எவ்வளவு முரண்பாடு பாரு. இது அவுட் ஆஃப் மும்பை, அது நவி மும்பை இது மெயின் மும்பைன்னெல்லாம் வேர பாகுபாடு இருக்கு.அதுக்குத்தகுந்த ஏற்பாடுகளிலும் ஏற்றத்தாழ்வுகள் நாம் சந்திக்கத்தான் வேண்டி இருக்கு.

ஜெய்லானி said...

யூ ஏ ஈயில இந்த கார்ட் கண்டிப்பா வேணும் இந்தியாவில இது சக்ஸஸ் ஆகுமான்னு தெரியல. ஷார்ஜாவுல 15 நிமிடத்தில மேட்டர் முடிஞ்சுது. ஆன் லைனில ஃபார்ம் ஃபில்லப் செய்ததில 40 திர்ஹம் லாபம் + டைப்பிங்க் செய்ய அலைய வேனாம் :-)

இங்கே இது மஸ்ட் என்பதால் ஆரம்பித்த நாட்களில் பயங்கர கூட்டம் . இரவில் 12 மணிக்கு போய் கியூவில் நின்ற ஆட்களும் இங்கே இருக்காங்க .

குறையொன்றுமில்லை. said...

ஜெய்லானி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு வழி முறை போல இருக்கு.

radhakrishnan said...

அருமையாiன,உபயோகமான பதிவு.
இதுவரை அலட்சியமாக இருந்துவிட்டேன்.ரேஷன்கார்டு,ஜ.டி.கார்டு ஆகியவற்றில் முதலில் அலட்சியமாக
இருந்துவிட்டு பிறகுகஷ்டப்பட்டு வாங்கினேன்.உங்கள்அனுபவத்தைப்பார்த்தால்பயமாகத்தான் இருக்கிறது.மதுரையில் எப்படி என்று
தெரியவில்லை.சரி,ஒருநாளைக்கு
எவ்வளவு நேரம்கம்ப்யூட்டரில் உட்காருகிறீர்கள்?எத்தனை பதிவுகள்
போடுவீர்கள்.எத்தனைபதிவுகள் பார்ப்பீர்கள்?followபண்ணுவதற்காக
கேட்கிறேன்.தவறாகஎண்ணவேண்டாம்.
எவ்வளவுநாட்களாக கம்ப்யூட்டர் பழக்கம் உண்டு.டைப்பிங் நன்கு தெரியுமா?இம்மோதுதான் உங்கள் பதிவுகள் அனைத்தையும் படித்துவருகிறேன்.மிகவும் அருமையாக உள்ளன.நன்றி அம்மா.

குறையொன்றுமில்லை. said...

ராதா கிருஷ்னன், வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி. கடந்த ஒருவருஷமாத்தான் கம்ப்யூட்டர்பத்தி தெரியும் தனியே கத்துகிட்டதுதான்.தமிழ் டைப் பண்ண எங்க என்ன இருக்குன்னு தேடித்தேடி பாத்து பாத்துதான் தெரிஞ்சிண்டேன்.காலைரெண்டு மணினேரம் 11-டு-1 வ்ரையும் இரவு9-டு 11-வரையும் கம்ப்யூட்டரில் உக்காருவேன். வாரத்தில் ரெண்டு பதிவு போடரேன்
மூனுப்ளாக்கில் எழுதரேன் இல்லியா?

குறையொன்றுமில்லை. said...

ராதாகிருஷ்னன், நீங்க ஏன் எதுமே எழுதரதில்லே. உங்கபக்கமும் வந்து பாத்துட்டுதான் இருக்கேன்.ஏதானும் எழுதிட்டே இருங்கோ.

ADHI VENKAT said...

ஜூலை மாதம் பூர்த்தி செய்து கொடுத்ததற்கு பிறகு எங்களுக்கு நேற்று தான் வீடு தேடி ஆதார் அடையாள அட்டை வந்து சேர்ந்ததும்மா.

இனி அது எந்த விதத்தில் உபயோகப் படப்போகிறது என்று பார்ப்போம்.:)

குறையொன்றுமில்லை. said...

கோவை2தில்லி அதிசயம்தான் சீக்கிரமே அடையாள அட்டை கிடைச்சுதே, நீங்க இருப்பது தலை நகர் இல்லியா அதான் சுறு சுறுப்பொ?

radhakrishnan said...

சகோதரி,
ஏதோ ஆசையில்பிளாக்ஆரம்பித்துவிட்டேன்.அதுவும் பையன் ஆரம்பித்துக்கொடுத்துவிட்டுப்போய்விட்டான்.நானாகஏதும் செய்யமுடியாதநிலை.
கித்தாப்பாக லாப்டாப் வாங்கிவிட்டேனேயொழியஎதுவுமேதெரியாமல்தட்டுத்தடுமாரி போனில்பையன்களிடம்கேட்டுக்கேட்டுசிலவற்றைத்தெரிந்துகொண்டேன்.கோர்ஸ்ஏதேனும் சேருவதற்கும் ஒத்துவரவில்லை.டைப்பிங்தெரியாததால்ஒவ்வொருஎழுத்தாகத்தான் அடிக்க முடிந்தது.ஒருவழியாக இப்போதுதான்
தமிழில் பின்னூட்டம் போடுமளவுக்கு
வளர்ந்துள்ளேன்.இந்நிலையில்நான் பதிவுபோடுவதற்குஎவ்வளவுநாட்களாகும்?முயற்சிசெய்கிறேன்.ஆசைக்கோளாறு.
இதற்கு முன்னோடியாக உங்களைத்தான் பார்த்துக்கொள்கிறேன்.
வீட்டுவேலைகளைப்பார்த்துக்கொண்டே
பதிவிடுவதிலும்அமர்க்களப்படுத்தும்
உங்களைப்பார்கும்போது ஏராளமாகப்பொழுதை வைத்திருக்கும்
நான் சாதிக்கமுடியாதா?என்று நினைத்துக்கொள்கிறேன்.பார்ப்போம்.
எங்கோபடித்ததாகநினைவு.நிறையப்படித்துவிட்டு ஒன்றுமேஎழுதாவிட்டால்
constipation போல,அதிகம்படிக்காமல்
தொடர்ந்துஎழுதுவது diarrhoea போல,
தங்கள்ஊக்குவிப்பிற்கு நன்றி அம்மா.

குறையொன்றுமில்லை. said...

ராதாகிருஷ்னன், எல்லாருமே எல்லாம் தெரிஞ்சுண்டு ப்ளாக் ஆரம்பிக்கலே. நான் மத்தவங்க பத்தி சொல்ல் முடியாது நான் ஸ்கூல்லாம் போனதே இல்லே.12-வயதில் கல்யானமாகி குடும்ப பொறுப்புகளை சுமக்க ஆரம்பிச்சேன்.என்பழைய பதிவில் என்னைப்பற்றி எல்லா விஷயங்களுமே சொல்லி இருக்கேன். ஆர்வவத்தில் நானாகவே தெரிஞ்சுண்டதுதான். அதுவும் என் 63-வது வயதில் என்னால் முடியும்னா உங்களாலயும் கண்டிப்பாக முடியும் ட்ரை பண்ணுங்க. ஏதானும் டௌட் இருந்தா கேளுங்க எனக்கு தெரிஞ்சா சொல்லித்தரேன்.எழுதிண்டே இருங்கோ. தன்னால பழக்கமாயிடும்.சாதிச்சு காட்டுங்க வாழ்த்துக்கள்,

Vijayan Durai said...

//ஆதார் அட்டைக்காக நீங்கள் அலைந்த அலைச்சலும்,உங்களின் மன உலைச்சலும் பதிவில் தெரிகிறது //

என்னோட Point of veiw ல இந்த அட்டை தேவையில்லத ஒன்னு னு தோனுது...இந்த அடையாள அட்டை தருவதற்கு வெறு ஒரு(voter ID ,pan card,...)தேவை என்றால் இது எதுக்கு??.

குறையொன்றுமில்லை. said...

விஜயன் வருகைக்கு நன்றி. இந்த அடையாள அட்டை பற்றி இருவேரு கருத்துக்கள் பலரிடமும் இருக்கு.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

கையில் எப்பவுமே வாட்டர் கொண்டு போயிடுவேன். அதுபோல ஒரு புக்கும் வச்சுப்பேன். //
ஹையா ! நாம ரெண்டு பேறும் ஒரு குரூப் தான் போல இருக்கு. எங்க போனாலும் இந்த ரெண்டு இல்லாம நானும் போறதில்லை

Related Posts Plugin for WordPress, Blogger...