Pages

Back to Top

மினி சந்திப்பு.                               


 நான் இப்போ மகன்வீட்டுக்கு வந்திருக்கேன். நான் இருக்கும் அம்பர் நாத்லேந்து மகன் இருக்கும் தாணா என்னுமிடம் 40 கிலோ மீட்டர் தள்ளி இருக்கு.லோக்கல்வண்டி பிடித்து ஒருமணி நேரம் ட்ராவல் பண்ணீதான் அங்க போகனும். அவங்க வீட்ல பிள்ளையார் 5 நாள் வச்சு பூஜை பஜனை அன்னதானம் எல்லாம் சிறப்பாகச்செய்வார்கள். என்னையும் வாரச்சொல்லி இருந்தா. போயிருந்தேன். சதுர்த்திக்கு முதல் நாள் பிள்ளையார் அழைத்து வருவதுதொடங்கி சிறப்பான வழிபாடுகள் எல்லாம் செய்தார்கள். தினசரி 3 வேளை பூஜை ஆரத்தி பிரசாதங்கள் என்று நடந்தது. பிள்ளையார பார்க்க நிறையபேர் வந்தார்கள். எல்லாருக்கும் மஞ்சள் குங்குமம் பிரசாதம் கிஃப்ட் ஐட்டம் எல்லாம் கொடுத்து உபசரித்தார்கள். பம்பேயில் யாராவது பதிவர்கள் இருக்காளான்னு தேடிப்பார்த்தேன். அமைதிச்சாரல் பாம்பேயில் இருப்பது தெரிய வந்தது. அவங்ககூட பேசினேன்
 எங்க வீட்டு பூஜையில் வந்து கலந்துக்கோங்க, நாம சந்திக்க சரியான சந்தர்ப்பம்ன்னு சொன்னேன். சந்தோஷமா வரேம்மான்னாங்க. சண்டே ஐயப்ப பஜன் அன்னதானம் எல்லாம் வச்சிருந்தா. சண்டே லீவாச்சே அன்னிக்கு வருவான்னு நினைச்சேன். அன்று வரலை அவங்கபில்டிங்க்ல பிள்ளையார்
 பூஜை இருந்ததுன்னாங்க. மண்டே மதியம் வரேன்னாங்க. அன்றுதான் நாங்க
 பிள்ளையார் விசர்ஜன் பண்ணுவோம். 5-ம் நாளில். காலலேந்தே எதிர் பார்த்தேன் , நம்மவீட்லயே லஞ்ச் சாப்பிடலாம் வாங்கன்னு சொல்லி இருந்தேன் அவங்களுக்கு  வீட்டை கவனிக்கனுமே. மதியம் 4.30க்கு வந்தாங்க.
அவங்க இடத்திலேந்து தாணா, 30- நிமிஷம் ட்ராவல் பண்ணனும். ஆனாலும் சிரமம்பாக்காம வந்தாங்க. க்யூட்டா ஒரு பிள்ளையார் பொம்மை கிஃப்டா கொண்டு தந்தாங்க.

என்வீட்டில் மகன் மறுமகள் ,பேரக்குழந்தைகளை அறிமுகம் செய்தேன். அவங்க வீட்டினர்பத்தியும் சொன்னாங்க. அவங்க மட்டுமே தனியாதான் வந்தாங்க. வழக்கம்போல சந்தோஷமான தருணங்கள். முகம் தெரியாம பழகின பதிவுலக நண்பர் களை நேரில் பாக்கரப்போ கிடைக்கும் சந்தோஷம் வார்த்தையில் சொல்ல முடியல்லே.ஜெயஸ்ரீன்னு இன்னொரு பதிவரும் வரேன்னு சொல்லி இருந்தாங்க. அவங்களுக்கு சவுரியப்படலை.அம்பர் நாட் என்வீட்டுக்கே வரேன்னு சொல்லி இருக்காங்க. பதிவுலக ஆண்கள் லாம் பதிவர் சந்திப்பு என்று ஏதானும் ஊர்களில் ஏர்பாடு செய்து சந்தித்துக்கொள்கிரார்கள் லேடீசுக்கு அது சரிப்படுவதில்லை. நாமிருக்கும் பக்கம் யாரானும் இருக்காங்களான்னு தேடிப்பிடிசு மினி சந்திப்பா நடத்திக்கரோம்.இதுவும் நல்லாதான் இருக்கு. ரொம்ப நேரம் பேசினோம்.
போட்டோக்களுமெடுத்துண்டோம். 6மணிக்கு ஆரத்தி பூஜைபண்ணி விசர்ஜன் பண்ணனும்னு நினைச்சிருந்தோம். பிள்ளையார் பார்க்க ஆட்கள் வந்துண்டே இருந்ததால டைம் ஆயிண்டே இருந்தது. 7-மணிக்கு அவங்க கிளம்பி போனாங்க. உண்மையிலேயே நிறைவான சந்தோஷமான சந்திப்பக அமைந்தது

33 comments:

RAMVI said...

//நாமிருக்கும் பக்கம் யாரானும் இருக்காங்களான்னு தேடிப்பிடிசு மினி சந்திப்பா நடத்திக்கரோம்.இதுவும் நல்லாதான் இருக்கு. /

மொத்தமாக எல்லோரையும் சேர்ந்து சந்தித்தால் வெறும் அறிமுகத்துக்கு மட்டுமே நேரம் கிடைக்கும் என நினைக்கிறேன்.தனியாக சந்திப்பதால் பேசி கருத்துக்களை பகிர்ந்து கொள்ள நிறைய நேரம் கிடைக்கும்.

நல்ல பகிர்வு அம்மா...

மகேந்திரன் said...

எப்போதுமே வெகுநாட்களாக பார்க்காத சிலரை
பார்த்து சிறிய சந்திப்பு நடத்துகையில்
மனதில் பேரானந்தம் குடிகொள்ளும்.
அழகாக புனைந்திருக்கிறீர்கள் அம்மா.

தமிழ்மணம் 1

கடம்பவன குயில் said...

பிள்ளையார் மட்டும் அங்கங்கே பில்ளையாராகவும் பிலையாராகவும் சற்றே துதிக்கை வளைத்துட்டார். ஆனாலும் உங்கள் சந்தோஷப்பகிர்வுக்கு நன்றி. கரும்புதின்ன கசக்கமா என்ன??உங்களைப் பார்த்து அளவளாவ யாரும் வரமாட்டேன்னு சொல்லிடுவாங்களா என்ன? நீங்க ஒரு அனுபவ பொக்கிஷமாச்சே.

அமைதிச்சாரல் said...

ஆஹா!!.. சுடச்சுட போட்டுட்டீங்களே :-)))

உங்களையும், குடும்பத்தினரையும் சந்திச்சது எனக்கும் ரொம்பவே சந்தோஷமாவும், நெகிழ்ச்சியாவும் இருந்தது. எங்க அம்மா வீட்டுக்குப் போன ஃபீலிங் :-)

கவி அழகன் said...

வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

தாங்கள் பரபரப்புடன் சென்ற இடத்தில் உங்கள் மேல் அமைதிச்சாரலே வீசியுள்ளதில், உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும், மனம் அமைதியானது ஜில்லிட்டுப்போனது. அன்புடன் vgk

குடந்தை அன்புமணி said...

மினி பதிவர் சந்திப்பா... ம்... கலக்கிறீங்க...போட்டோ எங்கே... போடலையே... (பதிவர் தென்றல் மாத இதழ் கிடைத்ததா?)

கோவை2தில்லி said...

பதிவர் சந்திப்பா சந்தோஷம் அம்மா.
மனதுக்கு நிறைவா இருந்திருக்கும்.

ரிஷபன் said...

கல்யாணில் இருந்த நாட்கள் நினைவில் வந்தன.. டிட்டுவாலா பிள்ளையார் மனக்கண்ணில் தெரிகிறார்.
உல்லாஸ் நகர்.. டோம்பிவிலி.. சுற்றிய நினைவுகளுடன்..

ஆமினா said...

மாமி.....

கூடிய சீக்கிரம் நாமளும் மினியா சந்திச்சுக்கலாம் :-)

நிரூபன் said...

பதிவர் அமைதிச்சாரலுடனான சந்திப்பினையும்,
பாம்பேயில் நீங்கள் பொழுதைக் கழித்த இனிமையான நினைவுகளையும் அழகாகப் பகிர்ந்திருக்கிறீங்க.

Lakshmi said...

ரமா நீங்க சொல்வது உண்மைதன். இடுபோல தனியா சந்திக்கும்போது நல்லா பேசி புரிஞ்சுக்க முடியுது.

Lakshmi said...

மகேந்திரன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

கடம்பவனக்குயில் தவறை சுட்டிக்காட்டியத்தற்கு நன்றி. சரி பண்ணிட்டேன். நானும் உங்க எல்லாரையும்போல ஒரு பதிவர்தான். ஓவரா புகழாதீங்க. சங்கோஜமா இருக்குங்க.

Lakshmi said...

அமைதிச்சாரல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

கவி அழகன் நன்றி

Lakshmi said...

கோபாலசார் நீங்க எப்பவுமே ரொம்ப அழகா பின்னூட்டம் கொடுக்குரீங்க. நன்றி

Lakshmi said...

குடந்தை அன்புமணி வருகைக்கு நன்றி
அவங்களுக்கு போட்டோ ப்ளாக்கில்
வருவதில் விருப்பமில்லே. அதான் போட்டோ போடலே. நான் இன்னிக்குத்தான் அம்பர் நாத் என் வீட்டுக்கு போரேன் அங்க போன பிறகு புக் வந்த்ததான்னு பாத்துட்டு சொல்ரேன்

Lakshmi said...

கோவை2தில்லி, வருகைக்கு நன்றி

Lakshmi said...

ரிஷபன் நீங்க மும்பையில் இருந்திருக்கீங்களா? வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஹை, ஆமி எங்க வீட்டுக்கு வரீங்களா ஜாலி ஜாலி. சீக்கிரமே வாங்க.

Lakshmi said...

நிருபன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

இராஜராஜேஸ்வரி said...

சந்தோஷப்பகிர்வுக்கு நன்றி.

அமைதி அப்பா said...

//அவங்க மட்டுமே தனியாதான் வந்தாங்க.//

ரொம்ப துணிச்சலானவங்க அமைதிச்சாரல் மேடம் என்பது அவங்க எழுத்தப் பார்த்தாலே புரியுமே!

**************

இப்பொழுது, அடிக்கடி பதிவர்களை சந்தித்து வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி அம்மா! தொடரட்டும் உங்கள் சந்திப்பு.

Lakshmi said...

அமைதி அப்பா வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க பதிவர்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு தன்னால அமையுது. ரொம்ப சந்தோஷமான விஷயம் இல்லியா?

வல்லிசிம்ஹன் said...

பிள்ளையார் சதுர்த்தியும் அதுவுமா பெண் பதிவர்கள் சந்திப்பு ஆரம்பம் இனிமே எல்லொரும் சந்திப்போம் என்று எதிர்பார்க்கலாம்.
அழகான பிள்ளையார் படம். சாரலும் உங்களைப்பற்றி எழுதி இருக்கிறதைப் படிச்சேன் லக்ஷ்மி. ரொம்ப சந்தோஷம்.

raji said...

பதிவர் சந்திப்பு சந்தோஷமான விஷயம்தான்.சந்திப்பை அருமையா தந்து இருக்கீங்க.எனக்கும் என்னிக்காவது உங்களை சந்திக்கற வாய்ப்பு வரணும்.
பகிர்விற்கு நன்றி

ராமலக்ஷ்மி said...

மகிழ்ச்சி தரும் பகிர்வு.

தானேயில் 2 வருடம் இருந்திருக்கிறோம் 20 வருடம் முன்னே:)!

வைரை சதிஷ் said...

சந்தோஷப்பகிர்வு வாழ்த்துக்கள்

இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5

தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5

Lakshmi said...

வல்லி சிம்ஹன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாய்ப்புக்கிடைத்தால் சந்திக்கலாமே.

Lakshmi said...

ராஜி நீங்க பாம்பேல இருக்கீங்களா? சொல்லுங்க எப்போ சந்திக்கலாம்?

Lakshmi said...

ராமலஷ்மி இப்போ எங்க இருக்கீங்க?

Lakshmi said...

வைரை சதீஷ வருகைக்கு நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...