Pages

Back to Top

கல்யாணமாம் கல்யாணம் - 2

      ரகு லீலா மால் ரொம்பவே பெரிசா பிரும்மாண்டமா இருந்தது. மூணாவது மாடியில் ப்ரோக்ராம் ஏற்பாடு செய்திருந்தா. எஸ்கலேட்டரில் மேலே போனோம். ஃபுல்லா ஏ சி. வெளியே மழையின் குளிர் ஒரு புறம், உள்ளே ஏ சி குளிர் ஒரு புறம்ன்னு ஒரே ஜிலு, ஜிலுப்புதான். மேலே ஒரு தனி இடமொதுக்கி அங்கே பூரா நம்ம கிராமத்தைப் போல வடிவமைத்து இருந்தார்கள். மேலே ஓலைக் கூரை வேய்ந்து, அங்கேந்து நிறையா அரிக்கேன் லைட்டுகளை தொங்க விட்டிருந்தா. கூடவே பேப்பர் ரிப்பனில் தோரணங்களையும் தொங்க விட்டிருந்தா. உக்கார நிறைய பிறம்பு நாற்காலிகள்  சில கயித்து கட்டில்களும் இருந்தது. தரையில் மணல் பரப்பி இருந்தார்கள்.  
      ஏதோ ஒரு தமிழ்நாட்டு கிராமத்துக்குள்ள வந்தது போலவே இருந்தது. உள்ளே நுழையும் போது எல்லார் கையிலும் ஒரு ஸ்டாம்ப் குத்தரா. இந்தஃபங்க்‌ஷன்க்கு வந்தவான்னு அடையாளம் தெரியனுமாம். ஒருபக்கம் பெரிய மேடை போட்டிருந்தார்கள். மைக் லைட் எல்லாம் ரெடியா இருந்தது. செப்பு சொம்பில் குடிக்க தண்ணீர் கொடுத்தார்கள். மரடேபிள்கள் சுற்றிவர பிறம்பு மோடாக்கள் போட்டிருந்தா. ஒவ்வொருவராக விருந்தினர்கள் வர ஆரம்பித்தார்கள். பிள்ளை வீட்டுக்காரர்களும் சரியான நேரத்தில் வந்தார்கள். முதலில் எல்லாருக்கும் குடிக்க நீர்மோர், ஜீரா வெள்ளம் உபசாரம் பார்த்து பார்த்து ஒவ்வொரு வரையும் நல்லா கவனிச்சா.  காலை யாருக்கெல்லாம் மெஹந்தி இடலையோ அவாளுக்கெல்லாம் இங்க இட்டா. குட்டி குட்டியா சமோசா, கட்லெட், நூடுல் பஜ்ஜி, கேரட் சுண்டல்னு வரிசையா ஏதானும் தட்டுக்களில் பரத்திவச்சுண்டு வெயிட்டர்கள் ஒவ்வொருவரையும் விசாரிச்சு கொடுத்தார்கள். 
          மேடையில் பெரிய லைட் போட்டு மணப்பெண், மாப்பிளையின் சிறுவயது போட்டோக்களை ஆல்பமாக வரிசையாக ஸ்லைட் போட்டு கம்ப்யூட்டர் மூலமாக காட்டினார்கள். இது கொஞ்சம் புது ஐடியாவாக இருந்தது. பெண்ணையும் பிள்ளையையும் கேலிக்கணைகளால் துளைத்து எடுத்தார்கள் இளவட்டங்கள். எல்லார் முகத்திலும் அப்படி ஒரு உற்சாகத் துள்ளல்தான். மெடையில் அடுத்து அடுத்து என்ன ப்ரோக்ராம் நடக்கப் போகிறது என்று ஒரு பெண் அப்பப்போ மைக் வச்சுண்டு அனவுன்ஸ் பண்ணிண்டு இருந்தா.  முதலில் ஒருவர் புல்லாங்குழலில் அருமையாக ஒரு ஹிந்தி பாட்டு வாசித்தார். ஏக க்ளாப்ஸள்ளிண்டு போனார். பிறகு மூணு பேர்கள் பழைய சினிமா பாட்டு பி ஓ ஒய் பாய், பாய்யுன்ன பையன் ஜி ஐ ஆர் எல் கேள் என்ற பாடலைப் பாடி கைதட்டலை அள்ளிக்கொண்டு போனார்கள். பிறகு மணப்பெண்ணும் பையனும் சூப்பராஒரு டான்ஸ் ஆட எல்லரையும் சந்தோஷப்படுத்தினார்கள். 
             வரிசையாக குத்தட்டப்பாட்டுக்கள் ஸ்பீக்கரில் அலற் அலற பெரியவங்க சின்னவங்க எல்லாருமே செமை ஆட்டம் போட்டாங்க. ஒருபுறம் சூடாக டின்னர் ரெடியாகிக் கொண்டு இருந்தது. அதன் வாசனை மூக்கைத் துளைத்தது. பஃப்பே டைப் டின்னருக்கு ஏற்பாடாகி இருந்தது. மேடையில் டான்ஸ் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் போதே பாதி பேரு தட்டுக்களை எடுத்துக் கொண்டு வரிசையாக பிடித்த உணவுகளை ப்ளேட்களில் அடுக்கிக்கொண்டு பேசி சிரித்தவாறே சாப்பிட ஆரம்பித்தார்கள். நல்ல சூடான சுவையான உணவு வகைகள் எல்லாம் முடிந்து அவரவர் வீடுகளுக்கு கிளம்பினார்கள்.    
          மணப்பெண்ணும் அவதம்பியும் ரொம்ப நல்லா சூப்பரா வளர்த்திருக்காங்க அவர்களை பெத்தவங்க. பெரியவர்களிடம் நல்ல மரியாதை, சிறுவர்களிடம் அர்களுக்குண்டான குறும்புத்தனம் பொறுப்புணர்ச்சி படிப்பிலும் புலிகளாக இருந்தார்கள் எளிமையான அழகுடனும் இருந்தாங்க. அவர்களை பார்க்க பார்க்க மனசு பூரா சந்தோஷமா இருக்கு. எல்லாரும் கிளம்பும் போது நல்ல ஜோர் மழை தான் . மழையில் நனையாமல் குடைபிடித்து எல்லாரையும் கார்களில் ஏற்றி பொறுப்பாக வழி அனுப்பினார்கள். எல்லாருமே மனசும் வயிறும் நிறைந்து சந்தோஷமாக வீடு திரும்பினார்கள். 
        மறு நாள் மாப்பிள்ளை அழைப்பு ஃபங்க்‌ஷன். காலேலேந்தே சில சடங்குகள் கல்யாண மஹாலில் ஆரம்பமாச்சு. செம்பூர் என்னுமிடத்தில் ஒரு ஹாலில் கல்யாண ஏற்பாடுகள் செய்திருந்தா. காலை முதலே எல்லாரும் பரபரப்பாக அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டே இருந்தார்கள். விஸ்தாரமான பெரிய ஹால். மாடியில் கல்யாணம், கீழே சாப்பாடு டைனிங்க் ரூம். காலை டிபன் மும்முரமாக நடந்து முடிந்தது. ஊரிலிருந்து இன்றும் சில சொந்தக்காரா வந்த வண்ணமே இருந்தார்கள். ஒவ்வொருவரையும் பார்த்து பார்த்து விசாரித்தார்கள். 
      பட்டு புடவைகளின் சரசரப்பு, மல்லிகை முல்லையின் மயக்கும் வாசனை பெர்ஃப்யூம் வாசனை என்று கலவையான மணங்கள் மூக்கை நிறைத்தன. மேலும் கீழே டைனிங்கில் ரெடியாகும் விருந்து சமையல் வாசனையும் சேர்ந்து கலவையான வாசனைகள். சந்தோஷமுகங்கள். இடை இடையே போட்டோக்காரர்களின், வீடியோகாரர்களின் ஓட்டம். வடை பாயாசத்துடன் மதிய லஞ்ச். இந்தக் கல்யாணங்களில் ஒரு கஷ்டம். 8 இல்லேனா 9 மணிக்குத்தான் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டு முடிதிருப்போம். உடனே 11 மணிக்கு லஞ்ச் சாப்பிட கூப்பிட்டுவாங்க. பசியே எடுக்காது (எப்படி எடுக்கும்) பந்தியில் சாப்பிடுவது இன்னமும் கஷ்டம். வரிசையா பரிமாறி வருபவர்கள் ஒரு வாய் பாய்சம் சாப்பிடும் போதே சாதத்தில் சாம்பாரை ஊற்றிவிட்டு ஓடிண்டே இருப்பா. ஒருவாய் சாம்பார்சாதம் சாப்பிட ஆரம்பிக்கும் போதே அடுத்து ரச வாளியுடன் வந்துடுவா. அதை ருசி பார்ப்பதற்க்குள் பாய்சம், உடனே தயிர் சாதம்னு எக்ஸ்ப்ரெஸ் வேகத்தில் பரிமாருவா. இது மிகவும் ரசித்து, ருசித்து சாப்பிடுபவர்களுக்கு மிகவும் தொல்லையாக இருக்கும். இது நிறைய கல்யாணங்களில் பார்த்த நொந்துபோன விஷயம். 
        இரவு ஒரு சங்கீத கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தா. மிருதங்கம் வயலின் பக்கவாத்தியங்களுடன் ஒரு அம்மா அருமையாக கச்சேரி செய்தார்கள். நல்லா இருந்தது.
அடுத்த பாகத்தில் முடியும்...






24 comments:

ஆமினா said...

super maami

Chitra said...

அருமையான பகிர்வு. போட்டோஸ் எல்லாம் நன்றாக இருக்கின்றன.


பின் குறிப்பு: ///இப்போ நெல்லையில் பாலா கடலை மிட்டாய்
தான் கிடைக்கிரது. //// இதை பற்றி சங்கரலிங்கம் அண்ணனிடம் சொன்னேன். அடுத்த முறை, காளி மார்க் கடலை மிட்டாய் வேண்டும் என்றால், சங்கரலிங்கம் அண்ணனிடம் ஆர்டர் கொடுக்க சொன்னார். எங்கே ஒரிஜினல் கிடைக்கும் என்று அவருக்குத் தெரியுமாம். :-)

RAMA RAVI (RAMVI) said...

//பந்தியில் சாப்பிடுவது இன்னமும் கஷ்டம். வரிசையா பரிமாறி வருபவர்கள் ஒரு வாய் பாய்சம் சாப்பிடும் போதே சாதத்தில் சாம்பாரை ஊற்றிவிட்டு ஓடிண்டே இருப்பா. ஒருவாய் சாம்பார்சாதம் சாப்பிட ஆரம்பிக்கும் போதே அடுத்து ரச வாளியுடன் வந்துடுவா. அதை ருசி பார்ப்பதற்க்குள் பாய்சம், உடனே தயிர் சாதம்னு எக்ஸ்ப்ரெஸ் வேகத்தில் பரிமாருவா. இது மிகவும் ரசித்து, ருசித்து சாப்பிடுபவர்களுக்கு மிகவும் தொல்லையாக இருக்கும். இது நிறைய கல்யாணங்களில் பார்த்த நொந்துபோன விஷயம்.//

அழகான படங்களுடன் அருமையான் பகிர்வு அம்மா.
பந்தியில் பரிமாறுதல் பற்றி நீங்க குறிப்பிட்டு இருப்பது முற்றிலும் சரி. இப்ப நடக்குற எல்லா கல்யாணங்களிலும் இந்த கஷ்டம் தான்.

vanathy said...

கிராமம் போன்ற செட் சூப்பரோ சூப்பர். நல்லா எஞ்சாய் பண்ணி இருக்கிறீங்க, ஆன்டி.

தமிழ்வாசி பிரகாஷ் said...

கல்யாணமாம் கல்யாணம் நிறைவான கல்யாணம்.


வந்தேமாதரம் சசி-யின் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி - விரைவில்!

குறையொன்றுமில்லை. said...

ஆமி நன்றி

குறையொன்றுமில்லை. said...

சித்ரா வர்கைக்கும் கருத்துக்கும் நன்றி.
பின் குறிப்புக்கும் நன்றி.

குறையொன்றுமில்லை. said...

ரமா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

குறையொன்றுமில்லை. said...

வானதி நன்றிம்மா.ரொம்ப நாளா காணோம்?

குறையொன்றுமில்லை. said...

நன்றி பிரகாஷ் இன்னும் கல்யாணம்
ஆரம்பிக்கவே இல்லேப்பா.

M (Real Santhanam Fanz) said...

பாட்டி, நம்ம பிளாகுக்கு வாங்க உங்களுக்கு ரொம்ப புடிக்கும்.....

எந்திரனில் வீராசாமியில் இருந்து சுடப்பட்ட சீன்

குறையொன்றுமில்லை. said...

வரேன் பேரா.

கவி அழகன் said...

அற்புதமான
படைப்பு

குறையொன்றுமில்லை. said...

கவி அழகன் வருகைக்கு நன்றி.

M.R said...

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் அம்மா

Unknown said...

""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..

அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

Unknown said...

இந்த பதிவுக்கு வாக்குகளும், வாழ்த்துக்களும்..

குறையொன்றுமில்லை. said...

பாரத் பாரதி வருகைக்கு நன்றி.

குறையொன்றுமில்லை. said...

M.R.சுதந்திர தின நல் வழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வரிசையா பரிமாறி வருபவர்கள் ஒரு வாய் பாய்சம் சாப்பிடும் போதே சாதத்தில் சாம்பாரை ஊற்றிவிட்டு ஓடிண்டே இருப்பா. ஒருவாய் சாம்பார்சாதம் சாப்பிட ஆரம்பிக்கும் போதே அடுத்து ரச வாளியுடன் வந்துடுவா. அதை ருசி பார்ப்பதற்க்குள் பாய்சம், உடனே தயிர் சாதம்னு எக்ஸ்ப்ரெஸ் வேகத்தில் பரிமாருவா. இது மிகவும் ரசித்து, ருசித்து சாப்பிடுபவர்களுக்கு மிகவும் தொல்லையாக இருக்கும். இது நிறைய கல்யாணங்களில் பார்த்த நொந்துபோன விஷயம். //

மிகவும் வாஸ்துவமான விஷயம்.
பரிமாறுபவர் அழகாக பொறுமையாக Sequence wise பரிமாறினால் தான், நாமும் நமக்குப்பிடித்ததை மட்டும் வாங்கி சாப்பிடமுடியும்.

பதார்த்தங்கள் வீணாவதும் தவிர்க்கப்படும்.

எல்லாவற்றையும் வேகவேகமாக, அவதிஅவதியாக பரிமாறி, பெரிய பொரித்த அப்பளத்தையும், எண்ணெய் ஒழுக, ஹெல்மெட் போல, பதார்த்தங்களின் தலைமேல் (இலைமேல்) கவிழ்த்து விட்டுப்போய் விடுவார்கள். மஹாகஷ்டம் தான்.

நல்ல பகிர்வு. அன்புடன் vgk

Ayyammal said...

நல்ல இருந்துச்சி அம்மா!!!!!!!!!!!!!!!!!

இராஜராஜேஸ்வரி said...

அருமையான பகிர்வு.

குறையொன்றுமில்லை. said...

ஐயம்மா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

நன்றி ராஜேஸ்வரி.

Related Posts Plugin for WordPress, Blogger...