Pages

Back to Top

சந்தேகம்

நம்ம எல்லாருக்குமே காஞ்சி பெரியவர்பற்றி நன்கு தெரியும்(தெரியும்தானே?)
 காஞ்சிபுரத்தில் கலவையில் பெரியவர் முகாம்இட்டிருந்தார்கள்.அப்போதுஒரு
வர் சென்னையில் இருந்து பெரியவாளை தரிசிக்க காஞ்சிபுரம் சென்றார்.அவ
ருக்கு பெரியவர் மேல் பெரிய மகான் என்று தனி மறியாதையே உண்டு. அங்கு
சென்று காலை பூஜையில் எல்லாம் கலந்துகொண்டார். அங்கு மடத்திற்கு பெரி
யவாளை சந்திக்க யார் வந்தாலும் மதிய உணவு தந்து உபசரிப்பார்கள். அவரும்
சாப்பாடு ஆனதும், பெரியவரிடம் சில சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள அங்கு
காத்திருக்கும் 20, 30 பக்தர்களுடன் சேர்ந்துஅமர்ந்துகொண்டார்.சாமிகள்மதியம்
2 டு 4 மணி வரை பக்தர்களின் சந்தேகங்களுக்கு விளக்கங்கள்கொடுப்பார். சாமி
கள் உள்ளே தள்ளி ஒரு இருட்டு ரூமில் அமர்வார். மற்றவர்கள் வெளியே ஒரு
 ஹாலில் வரிசையாக அமர்வார்கள். ஒவ்வொருவராக சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெற்றார்கள் .இவர் முறை வந்தது. சாமி நான் கேக்கற கேள்விகொஞ்சம் உங்களை சங்கடப்படுத்தும்.
 தவறாக எண்ணக்கூடாது என்றார். சாமிகளும் என்னப்பா கேட்டுக்கோயேன்
 என்றார். வந்து சாமி, இந்த காய்கறிகள், பழங்கள் ,பூக்கள்,இதுக்கெல்லாம்
 உசிர் உண்டா என்றார். அதிலென்னப்பா சந்தேகம். எல்லாத்துக்குமே உசிர்
 உண்டுப்பா என்றார். அப்போ சாமி, சில பேரு ஆடு, கோழி, மீன் வெட்டி சாப்பி
டராங்க இல்லியா? ஒரு உசிரைக்கொன்னுதின்னா பாவம்னு உங்களைப்போல
 பெரியவங்க சொல்ராங்க.அப்ப காய்,பழம்எல்லாத்துக்குமேஉசிர்இருக்குன்னா
அதுவெட்டி சாப்பிட்டா அதுபாவமில்லையான்னு கேட்டார். சாமிகள் கொஞ்ச
 நேரம் கண்மூடி யோசனையில் ஆழ்ந்தார். என்ன சாமி பதில் சொல்ல முடியலியா? என்றார். சாமிகள் பொறுமையாக, பதில் சொல்லலாம்பா. அதை
உனக்கு புரியும்படி எப்படி சொல்வதுன்னு யோசிச்சேன், என்றார். எதானாலும்
 சொல்லுங்க சாமி. என்றார்.

 சரி இப்ப விஷயத்துக்கு வரலாம், ஆடு கோழி வெட்டி சாப்பிடரவங்க, அந்த
பிராணி களை வெட்டும்போது அதுகளுக்கு வலி வேதனை உண்டாகுமா இல்லியாஅந்தபிராணிகளைதிரும்பவளரவைக்கமுடியுமா.முடியாதுஇல்லியா
 இப்போ காய் பழம் ஒரு மரத்லேந்து எடுக்கரோம். இதுக்கு உனக்கு புரியும்படி சொல்லணும்னா நம்ம உடம்புலயும் உசிர் இருக்கு எல்லா அவயவங்களிலும்
உசிர் இருக்கு. ஆனா மாசா மாசம் நாம முடி வெட்டிக்கரோம், நகம் வெட்டிக்கரோம். நம்ம உடம்புக்கு தேவை இல்லாததால அதை நீக்கரோம்.
முடி நிறையா வளந்தா எவ்வளவு க்‌ஷ்டமா இருக்கு தேவைக்கு அதிகமாகும்
 பொருளை வெட்டி எறிஞ்சுடரோம். நகமாகட்டும் முடி ஆகட்டும். அப்பா முடிக்
க்கோ, நகத்துக்கோ வலியோ வேதனையோ உண்டாகுமா? இல்லைய்தானே?
நம்ம உடம்புலேந்து நீக்கின பிறகு அதுகள் வளருமோ இல்லியே. நம்ம அதை
 நீக்கின பிறகு அதுக்கு எந்த சக்தியுமேஇல்லை.

 அதுபோல காய் பழம் மரத்ல இருக்கும்வரையில் அதுக்கும் உசிர் இருக்கு.
 மரத்துக்கு தேவைக்கு அதிகமாகி நாம பரிச்சப்பரம் அதுக்கு ஏது உசிர். தவிர
 திரும்பவும் அந்தமரத்ல காய் காய்க்கும் ,பூ பூக்கும் ,பழம் பழுக்கும். நாம
 மரத்தை வேரோட வெட்டிச்சாய்க்கலை. மரத்துக்கு தேவைக்கு அதிகமாக
இருப்பதை நாம எடுக்கறோம். நகதுக்கும், முடிக்கும் எப்படி வலி இருக்காதோ,
 அதுபோல காய்களுக்கும் பழத்துக்கும் வலிஇருக்காது.மரத்திலேந்துபரித்ததும்
அதுகளுக்கு உசிரும் இருக்காது. அதனால இது பாவம் கிடையாது என்றார்.
சுற்றி உள்ள பக்தர்கள் சாமியின் விளக்கம் கேட்டு திருப்தியுடன் தலையை
அசைத்து ஏற்றுக்கொண்டனர். ஆனா அந்த பக்தரோ சாமி புரியுது ஆனா
புரியலை. ஒரே குழப்பமாஇருக்கேன்னே  சொல்லிட்டு அங்கேந்து போனார்.

20 comments:

வெங்கட் நாகராஜ் said...

அருமையான விளக்கம்..

பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா...

RAMVI said...

பெரியவாளின் விளக்கம் மிகவும் அருமையாக எல்லோருக்கும் புரியும்விதமாக இருக்கு. பகிர்வுக்கு நன்றி அம்மா..

கோவை2தில்லி said...

நல்ல பகிர்வும்மா.

Chitra said...

நகதுக்கும், முடிக்கும் எப்படி வலி இருக்காதோ,
அதுபோல காய்களுக்கும் பழத்துக்கும் வலிஇருக்காது.மரத்திலேந்துபரித்ததும்
அதுகளுக்கு உசிரும் இருக்காது. அதனால இது பாவம் கிடையாது என்றார்.


...... அந்த மாதிரிதான் - For Non-veg. கொன்ன பாவம் தின்னா போச்சுனு சொல்லிடுறாங்களோ!

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஸ்ரீ மஹாபெரியவாளுடன் எனக்கு நிறைய நேரடி அனுபவங்கள் உண்டு. அவரைப்பற்றிய செய்திகள் பலவும் ஆர்வமாகப்படித்துள்ளேன். அவரின் அருள் வாக்குகள் திரும்பத்திரும்ப விரும்பிப்படிப்பதுண்டு. எனக்கு ஸ்வாமிகளுடன் ஏற்பட்ட அனுபவங்கள் சிலவற்றை (பிறருடன் பகிர்ந்து கொள்ளக் கூடியவற்றை மட்டும்) ஒரு சில புத்தகங்களில் கூட வெளியிட்டுள்ளேன்.

இந்த தங்களின் பதிவில் உள்ள விஷயம் மட்டும் இன்று நான் புதிதாகத் தெரிந்துகொண்டேன்.

பகிர்வுக்கு மிக்க நன்றி. சந்தோஷம்.vgk

இராஜராஜேஸ்வரி said...

பெரியவாளின் விளக்கம் மிகவும் அருமையாக எல்லோருக்கும் புரியும்விதமாக இருக்கு. பகிர்வுக்கு நன்றி அம்மா..

நிரூபன் said...

அடடா...இது பெரிய சந்தேகமாச்சே...

மரக்கறிகளுக்கும் உசிர் இருக்குத் தானே...

தமிழ் விரும்பி said...

நல்ல பதிவு...
காஞ்சிப் பெரியவரின் சிந்தனைகள் அவர்தம் அத்வைதக் கருத்துக்கள் அத்தனையும் அருமருந்து...
பகிர்ந்தமைக்கு நன்றிகள் அம்மா!

Lakshmi said...

வெங்கட், வருகைக்கு நன்றி

Lakshmi said...

ரமா நன்றிம்மா.

Lakshmi said...

கோவை2 தில்லி, நன்றி

Lakshmi said...

சித்ரா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

கோபால சார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நானும் இந்த விஷயம் ஒரு புஸ்தகத்தில் படித்தது தான்.

Lakshmi said...

இராஜராஜேச்வரி வருகைக்கு நன்றிம்மா

Lakshmi said...

தமிழ் விரும்பி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

நிரூபன் நன்றி

கவி அழகன் said...

அருமை அழகு வாழ்த்துக்கள்

Lakshmi said...

நன்றி, கவி அழகன்.

புலவர் சா இராமாநுசம் said...

நல்ல விளக்கம்
நன்றி!

புலவர் சா இராமாநுசம்

Lakshmi said...

புலவர் இராமனுஜம் ஐயா வருகைக்கு நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...