Pages

Back to Top

ராம நாம மகிமை


வால்மீகி முனிவர் ராமாயணம் எழுதி முடித்தார்.உடனே அது ,யாருக்கு சொந்தம்

என்ற கேள்வி எழுந்தது. எங்களுடையது, உங்களுடையது, என்று தேவர், அசுரர்,

மானிடர் அடித்துக்கொண்டார்கள். கடைசியில் வழக்கைத் தீர்க்க சிவ பெருமானைக் கூப்பிட்டார்கள். அவர் பாகப்பிரிவினை செய்யலானார். கோடிஸ்லோகத்தில் தேவருக்கு33 லட்சம், அசுரருக்கு 33 லட்சம், மனிதருக்கு

33 லட்சம், பாக்கி ஒரு லட்சம், அதையும் மும்மூன்று கூறுகளிட்டுக் கொண்டே வரும்போது இறுதியாக ஒரு ஸ்லோகம் மிஞ்சிற்று. ஒருஸ்லோகத்திற்கு 32

எழுத்துக்கள். அதையும் 10, 10, ஆக பிரித்துக்கொடுத்தார். 2 எழுத்துக்கள் மிஞ்சின  .ரா............ம.............. அவற்றை என்ன செய்வது? வழக்கைத்தீர்த்ததற்கு

ஊதியம் வேண்டாமா? எனக்கு என்று சொல்லி எடுத்துக்கொண்டார். கோடி

ஸ்லோகங்களின் சாரம் அந்த 2 எழுத்துக்களில் இருந்தது.
அவற்றைப்பெற்றதால், ஞானத்தில் எந்த தேவனோ, அசுரனோ, எந்த மனிதனோ சிவபெருமானுடன் போட்டியிட்டு ஜெயிக்க முடியாமல் போயிற்று.

23 comments:

கோவை2தில்லி said...

நல்லதோர் பகிர்வும்மா. நான் தினமும் ராம ராம எழுதும் வழக்கத்தை நெடுநாட்களாக கடைபிடித்து வருகிறேன்.

எல் கே said...

அட இது புதுசா இருக்கே

இராஜராஜேஸ்வரி said...

ஸ்லோகங்களின் சாரம் .ரா............ம.!!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்கம்மா....

பகிர்ந்ததற்கு நன்றி.

s suresh said...

எங்கோ படித்தது! இப்போது மீண்டும் உங்கள் பதிவு வாயிலாக நினைவு கூர்ந்தேன்! அருமையான பகிர்வு! எல்லோரும் ராம நாமம் பாடுவோம்! நன்றி!

Lakshmi said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி

Lakshmi said...

கார்த்தி இது புதுசு இல்லே பழசுதான் தேடித்தேடி படிச்சு உங்க எல்லார்கூடவும் ஷேர் பண்ணிக்கரேன். நம்ம புராண இதிகாசங்களில் நாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கு நாம தான் நேரமில்லாம ஓடிண்டு இருக்கோம் நல்ல விஷயம் சொன்னா படிப்பவர்களும் கம்மியாதானே வராங்க.

Lakshmi said...

இராஜ ராஜேஸ்வரி நன்றி

Lakshmi said...

வெங்கட் வருகைக்கு நன்றி

Lakshmi said...

சுரேஷ் நல்ல விஷயங்கள் எவ்வளவு முறை படிச்சாலும் நல்லது தானே

திண்டுக்கல் தனபாலன் said...

அனைவரும் தெரிந்து கொள்ள சிறப்பான பகிர்வு...

நன்றி அம்மா...

Easy (EZ) Editorial Calendar said...

நல்ல பகிர்வு....பகிர்வுக்கு நன்றி......


நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Mohan P said...

மிகவும் அருமை என்கபக்கமும் வாங்க நன்றாக இருந்தது நன்றி சகோ

Lakshmi said...

திண்டுக்கல் தனபாலன் வருகைக்கு நன்ரி

Lakshmi said...

E Z வருகைக்கு நன்ரி

Lakshmi said...

மோகன் பி வருகைக்கு நன்றி உங்கபக்கம் இதோ வரேன்

ஸ்ரீராம். said...

பரமனே பங்கு பிரித்தாலும் (கமிஷன்) பாகம் எடுக்காமல் விடமாட்டார் போல!

:)))

Lakshmi said...

ஹா ஹா ஸ்ரீ ராம் வருகைக்கு நன்ரி

sury Siva said...

மிகப் பழமையான புராணக்கதை இது. எனக்கு என் அப்பா சொல்லியிருக்கிறார்கள்.
மிகவும் பொருள் பொதிந்துள்ள கதையும் இதுவேயாகும்.

இரண்டு விஷயங்கள் அடங்கியிருக்கின்றன இக்கதையில். ஒன்று மேலோட்டமாகத்தெரிவது.

ஒன்று. எதை பங்கு போட்டாலும் பாகப்பிரிவினை செய்தாலும் கடைசியில் ஒன்று நிற்கத்தான்
செய்யும். அதை எந்த விதமாகவும் பிரிவினை செய்ய முடியாது. அது யார்
உண்டு பண்ணினானோ அனுபவிக்கிறானோ அது அவனுக்கே சொந்தம். சொந்தக்காரன் அதை
மற்றவர்களுக்கு ஒரு செட்டில்மென்ட் டீட் பண்ணித் தந்து விடமுடியாது. அது அவர் அவருடைய‌
வினைப்பயன். ஒன்று ஆர்ஜிதம். பூர்வ ஜன்மப் பயன். இன்று சஞ்சிதம். இந்த ஜன்மத்தில் நம்ம‌
செஞ்சதனால் வந்தது. இந்த இரண்டையும் யாருக்கும் நம்ம தாரை வாத்துக்கொடுக்க முடியாது.
அவாவா தான் அனுபவிச்சாகணும்.

ரா ம என்கிற இரண்டு அக்ஷரங்கள் வால்மீகியின் புத்திக்கும் மனசுக்கும் கடாக்ஷம் ஏற்பட்டது
அவருடைய புண்ணியப் பலன். எவிடன்ட்லி அவர் தான் சொந்தக்காரர். அவர் அவருக்குப்பிறகு
யார் யாருக்கெல்லாம் அந்த ராம ராம என்னும் புண்ணிய அக்ஷரங்களை சொல்ல கொடுப்பினை
இருக்கிறதோ அவாவாளுக்கு அந்த இரண்டு அக்ஷரங்களும் சொந்தம்.

இரண்டாவது விஷயம், கொஞ்சம் சூக்ஷ்மமான விஷயம்.
என் அப்பா ஒரு வக்கீல் மட்டுமல்ல, அந்தக் காலல்த்துலே ஒரு பெரிய தமிழ் ஆசிரியர் கூட.
அவர் சொன்னார். டேய் சூரி. வள்ளுவர் என்ன சொல்லியிருக்கார் பாரு.
தக்கார் தகவிலர் என்பவர் அவரவர்
எச்சத்தாற் காணப்படும். ..
அப்படின்னு. எச்சம் அப்படின்னு சொன்னா மிச்சம் அப்படின்னு அர்த்தம்.
எல்லா சொத்துக்களையும் சம்பாதிச்சு, ஒரு நாளைக்கு இந்த உடலை விட்டு உயிர் நீங்கும்பொழுது
நம்ம சொத்துக்களுக்கெல்ல்லாம் ஒரு வாரிசுன்னு வந்து க்ளைம் பண்ணும். அதெல்லாம் நம்மை
விட்டு போயிடும். ஆனா, நம்ம உண்மையில தகுதி வாய்ந்தவனா இல்லையா என்று முடிவு பண்றதெல்லாமே
நம்ம விட்டுட்டு போற அந்த மிச்ச சொத்து, எதை பங்கு போட முடியாதோ அது, அது தான் முடிவு செய்யும்.
அது தான் நம்ம வினைப்பயன்.
காந்தி கடைசிலே சொன்ன இரண்டு எழுத்துக்களுமே அவை தான்.
ஹே ராம் !!

சுப்பு ரத்தினம்.

பின் குறிப்பு: தங்கள் இன்னொரு பதிவில் நான் இட்டிருந்த பின்னூட்டம் ஏதேனும் ஒரு கோணத்தில்
தங்களுக்கு வருத்தம் அளித்திருக்கிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.( as it is not published) அப்படி இருப்பின் என்னை
மன்னிக்க வேண்டுகிறேன்.

Gm Dinesh said...

very nice interesting

Lakshmi said...

gm diesh வருகைக்கு நன்றி அடிக்கடி வாங்க.

நம்பள்கி said...

என்கிட்டேயும் கைவசம் நிறைய கதைகள் உண்டு! என் அம்மாவும் தாத்தாவும் நொடிக்கு ஒரு கதை சொல்லுவார்கள்...வர வாரம் நானும் ஒன்னு எழுதிடுறேன்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

கோடி ஸ்லோகங்களின் சாரம் அந்த
ரா மா என்ற 2 எழுத்துக்களில் இருக்குது. ;)))))

Related Posts Plugin for WordPress, Blogger...