Pages

Back to Top


 கெட் டுகெதர்.


நாசிக் கிட்ட இருக்கும் தேவ்லாலி என்கிர சின்ன ஊரில் ஒரு கெட் டுகெதருக்கு போய் வந்தேன்.ரொம்பவே சின்ன ஊருதான். கண்டோன்மெண்ட் ஏரியா. பூரா, பூரா மிலிடரி ஆட்கள்தான் இருக்காங்க. கட்டுப்பாடான ஊரு. சுத்தமான ஊரும் கூட,எல்லா பாஷைக்காரங்களும் ஆர்மில இருப்பாங்கதானே. 15-ம் தேதி சாயங்காலம் கிளம்பி இரவு போயிச்சேர்ந்தோம்.பெரியவங்களும் சின்
நவங்களுமா ஒரு 35 பேரு போனோம்.பஸ்ல குழந்தைக எல்லார்மே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்.150-கிலோ மீட்டர். பாம்பேலேந்து. நாலு மணி நேரப்பயணம். நல்லா இருந்தது. நான் மட்டுமே தமிழ்.அங்க ஒரு பெரிய ரெஸ்டாரண்டில் எல்லாரும் தங்க ஏற்பாடுகள் செய்திருந்தாங்க.


போனதும் நல்லா சாப்பாடு. எனக்கு இரவு கொஞ்சமா தயிர் சாதம் மட்டுமே சாப்பிடமுடியும்.வேறு எதுவும்சாப்பிட்டா கஷ்டமாகும். யாரு சொன்னா கேக்குராங்க.இல்லைமா கொஞ்சமாவதுசாப்பிடுங்கன்னு அன்புத்தொல்லைகள்.சாப்பாடெல்லாம் முடிந்து நேரமாயிட்டதால ஹாலிலே
படுத்தோம்.பேசிப்பேசி தூங்கவே 2 மணி ஆச்சு.காலை7மணிக்குத்தான் ஒவ்வொருவராக எழுந்தோம்.இராத்ரில எதுவுமே பாக்கமுடியலை. பகல் வெளிச்சத்ல ஏரியாவே நல்லா இருந்தது. சுற்றி வர பசுமையான மரங்கள் .அதில் ஓடிப்பிடித்து விளையாடும் பலவிதமான பறவைகளின் சங்கீதம் என்று
சூழலே அருமையாக இருந்தது.பல் விளக்கினதும் சூடாக சாய் ரெடி.குடித்துவிட்டு ரெஸ்டாரண்டைசுற்றிப்பார்த்தோம்.
                        
                                    

ஆர்மிக்காரங்கல்லாம் எக்சர்ஸைஸ் வாக்கிங்க் மார்ச் பாஸிங்க்னு பிசியா இருந்தாங்க.டக், டக்னுஅவங்க ஷூ சப்தமே கம்பீரமா இருந்தது. 9 மணி வரை சுத்திட்டு ரூம் வந்து குளிச்சு ப்ரேக்ஃபாஸ்ட்டீ. கொஞ்ச நேரம் ரெஸ்ட் அரட்டை. என் தங்கை மகன் அந்த ஊரில் மிலிடரி ஆஸ்பிடலில் பெரிய
டாக்டரா இருந்தான். அவன் என்னைப்பார்க்கவந்தான். என்ன பெரிம்மா நம்ம வீட்டுக்கு வாங்கஎப்ப ஃபங்க்‌ஷன் இருக்கோ அப்ப வந்து கலந்துக்குங்கன்னான். கூடவந்தவங்களோ என்னைஅவங்க கூடத்தான் தங்கனும்னு சொல்ராங்க. அவங்களுக்கு சமாதானம் சொல்லி தங்கை மகன்வீடு போனேன். பெரிய வீடு. க்வார்ட்டர்ஸ்தான். ஆனாகூட சகல வசதிகளுடனும் நன்னா இருந்தது.

                      

மத்யானம் அங்கே சாப்பிட்டு சாயங்காலம் ஃபங்க்‌ஷனுக்கு போனேன். குழந்தைகளுக்கு பலவிதபோட்டிகள், ரன்னிங்க்ரேஸ், லெமன் ஸ்பூன் ரேஸ், ஃபேன்சி ட்ரெஸ் காம்பெட்டிஷன், பாட்டுஆட்டம் என்று போட்டிகள். பெரியவர்களுக்கும் மூயுசிகல் சேர்,அந்தாக்‌ஷரி, தம்போலா என்று
பலவித விலையாட்டுக்கள். ஜயித்தவர்களுக்கு என்னை பரிசு கொடுக்கச்சொன்னார்கள். இரவு11- மணி வரை நேரம் போனது தெரியாமல் விளையாட்டுக்கள். பிறகு டின்னர். நிலா சாப்பாடு
திறந்த வெளியில் அரட்டை அடிச்சுண்டே சாப்பாடு. பிறகு நான் தங்கை மகன் வீடு போனேன்.அவர்களுக்கு நான் இவ்வளவு பிரபலமா க இருப்பது நம்பமுடியாத விஷயமா இருந்தது. நான்வீட்டில் ரொம்பவே அமைதியான டைப். என்னைப்பார்த்ததும் அவர்களுக்கும் ரொம்பவே சன்தோஷம். அங்கும் குடும்பக்கதைகள் பேசி இரவு லேட்டாதான் தூங்கினோம்.
                
                            

மறு நாள் சாயந்தரம் வேறு இடத்தில் ப்ரோக்ராம் ஏற்பாடு பண்ணி இருந்தா. 6 மணிக்குத்தான் போனேன். எனாக்காக எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க.அன்றுஆளாளுக்கு மேடை ஏறி லெக்சர் பண்ணினாங்க. எனக்கு மேடை ஏறி பேசெல்லாம்தெரியாதுங்க. என்னை விட்டுடுங்கன்னேன். அதெப்படி நீங்கதான் சீப் கெஸ்ட் நீங்கபேசியே ஆகனும்னு சொல்லிட்டாங்க. மைக் கையில பிடிச்சோடனே கை, காலெல்லாம்நடுங்குது, எப்படி பேச்சு வரும்? திணறிப்போனேன்.அதுவும் ஹிந்தி இல்லைனா மராட்டில
என்ன ஒளறிக்கொட்டினேனோ தெரியலை பலமா எல்லாருமே கை தட்டினாங்க. சரி ஏதோசுமாரா பேசிட்டோம் போல இருக்குனு நினைச்சேன்.
                          
இதையெல்லாம் வேடிக்கை பாக்க சுத்திவர ஒரே மிலிட்டரி ஆளுங்க வேர கூட்டமா நிக்குராங்க.எந்தங்கை பையனும், பெரிம்மா உங்களை நா என்னமோன்னு நினைச்சேன் பிச்சு உதறிட்டீங்கன்னுகைதட்டி பாராட்டரான்.மிலிடரி ஆளுங்கல்லாமே அவனோட ஃப்ரெண்ட்ஸ்தான் எல்லாருமேஎன்கிட்ட வந்து மாஜி, சூப்பர். தமிழ்க்காரங்களா இருந்துகிட்டு எப்படி எங்க பாஷைல இப்படிபேசுரீங்கன்னு ஆளாளுக்கு புகழராங்க. எனக்கே வெக்கமா போச்சு.11-மணிக்கு டின்னர். நிறையஐட்டங்கள் என்னால முடியவே இல்லை. சில சமயம் ஓவர் அன்பு கூட அன்புத்த்தொல்லயா ஆகுது.

                      
                             

மறு நா காலேலயே இவங்கல்லாம் என்னைக்கூப்பிட்டாங்க. 10 மணிக்கு வந்தேன். எல்லாரும்வட்டமா உக்காந்து யாருக்கு எப்போ பர்த்டே, எப்போவெட்டிங்க்டே என்று பேசிண்டு இருந்தா.என்னைப்பாத்ததும் உங்க பர்த்டே எப்போன்னாங்க ஏப்ரல் 2 ந்னு சொன்னேன். ஐயோ ஜஸ்ட்
மிஸ்ட். என்றார்கள். அதுபோல உங்க மேரேஜ் டே எப்போன்னாங்க. ஏப்ரல்19(அன்றுதான்)என்ரேன். ஹோன்னு ஒரேகைதட்டல் வாழ்த்துக்கள், அதுவும் 50-வது வெட்டிங்க் டே. நான்சொன்னேன் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து கொண்டாடினாதானே சரியா இருக்கும்
இப்ப அவர் இல்லே, நான் மட்டு தானே இருக்கேன் அதனால நோ கொண்டாட்டம் என்ரேன்.அதெல்லாம் எங்களுக்குத்தெரியாது. எங்க சீப்கெஸ்டோட 50-வது வெட்டிங்க் டே நாங்க செலிபரேட் பண்ணத்தான் செய்வோம்னு ஆளாளுக்கு ஒரேஸ்வீட்டா ஆர்டர் பண்ணி அபிஷேகம்தான்எனக்கு அழுகையே வந்தது. ஒரு பாட்டு உண்டே அதுபோல நான் அழுதுகொண்டே சிரித்தேன்.
மறு நாளும் ஒரு ப்ஃங்க்‌ஷன், அதுக்கு மறு நாளும் ஒரு ஃபங்க்‌ஷன்னு ரொம்பவே அலைச்சல்எல்லாம் நல்லா கொண்டாடிட்டு 25 திரும்பவந்தோம் வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாக அமைந்தது, எனக்குத்தான் உடம்பு முடியவே இல்லை. ஏற்கனவேரெண்டு அட்டாக் ஒரே நாளில் சந்தித்தவள். இதுபோல ரெஸ்ட் இல்லாம சுத்த தெம்பே இல்ல்லே.
                      
இனிமேல யாரானும் கெட் டுகெதர்னு வந்தாலே சாரிம்மானு சொல்லிடுவேன். 4 நாளு தூங்கி
ரெஸ்ட் எடுத்தாதான் சரி ஆகும்.

16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய பயணத்தை பதிவாகித் தந்தமைக்கு நன்றி அம்மா...

தொடர வாழ்த்துக்கள்... நன்றி...(TM 2)

r.v.saravanan said...

நாசிக் பற்றிய பயண பகிர்வுக்கு நன்றி அம்மா

மகேந்திரன் said...

அழகிய பயண அனுபவங்கள் அம்மா..

Anonymous said...

நாங்களும் அந்த கெட்டுகதரில் கலந்து கொண்டது போன்ற ஒரு அனுபவத்தை தந்த பதிவு...

Anonymous said...

உள்ளத்து உணர்வுகளை பதிவில் பிரதிபலிக்கின்றது.அதனை எங்களாலும் உணரும் வண்ணம் பகிர்ந்தமைக்கு நன்றி!
http://www.krishnaalaya.com
http://www.krishnalaya.net

Lakshmi said...

ரவி கிருஷ்னா, வருகைக்கு நன்றி

Vijiskitchencreations said...

எப்படி இருக்கிங்க லஷ்மி அம்மா.
நலமா? நீண்ட நாட்களுக்கு பின் இப்ப தான் இங்கு வர முடிந்தது. தவறாக நினைக்க வேண்டாம். அப்பாவின் இழப்பு, இப்ப தான் கொஞ்சமா மனதை நிதானபடுத்தி கொண்டு மீண்டும் ப்ளாக் பக்கம் வருகிறேன்.
உங்க எழுத்து நடை எனக்கு ரொம்ப பிடித்திருக்கு, பக்கத்தில் இருந்து பேசுவது போல் அவ்வளவு அருமையாக இருக்கு.
ஹெல்த் தான் முதல் அதன் பிறகு தான் எல்லாமே. நிங்க முதலில் ரெஸ்ட் எடுங்க. நல்லா எழுதறிங்க. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கேரளா. உங்க குக்கிங், பேச்சு எல்லாமே கொஞ்சம் திருநெல்வேலி ஸ்டைலில் இருக்கு. டேக் கேர்.

Lakshmi said...

விஜி வருகைக்கு நன்றிம்மா. நானே திருனெல் வேலிக்காரிதானே என் எழுத்தும் அப்படித்தானே இருக்கும் ரசனைக்கும் நன்றி

vanathy said...

Aunty, super. Well written.

Lakshmi said...

வானதி நன்றிம்மா

மாதேவி said...

இனிய பயணம்.

Lakshmi said...

மாதேவீ நன்றி

இராஜராஜேஸ்வரி said...

Congratulationssssss for getting AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

Lakshmi said...

ராஜராஜேஸ்வரி தகவலுக்கு நன்றிம்மா.

ஹைதர் அலி said...

வாழ்த்துகள் பிளஸ்

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்க்ள்.......

Lakshmi said...

ஹைதர் அலி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...