Pages

Back to Top

மின்சாரம்.... அது மின்சாரம்

போனவாரம் ஒரு வெள்ளிக்கிழமை காலை10-டு இரவு10- வரை கரண்ட்கட். இரவு10- மணிக்கு கரண்ட்வந்தது. இவ்வளவு நேரம் போயாச்சே இனிமேல போகாதேன்னு  நினச்சு இன்வெர்ட்டர், கார்ட்லெஸ்போன், மொபைல்போன், எல்லாம் சார்ஜ் பண்ண வச்சேன். கம்ப்யூட்டர் ஆன்பண்ணி உக்காந்தேன். சடன்னா 10.30-க்கு லைட் எல்லாம் ரொம்ப பவர்ஃபுல்லா கண் கூசும்அளவுக்கு பளிச்சுனு எரிஞ்சுது. ஃபேனும் எக்கச்சக்கஸ்பீடில் சுத்த ஆரம்பிச்சது. என்னது இப்படி இருக்கேன்னு ஒவ்வொரு ஸ்விச்சா ஆஃப் பண்ணலாம்னு நினைச்சு எழுந்துபோரதுக்குள்ள  ஒயர் ஒன்னொன்னா ஸ்பார்க் வர ஆரம்பிச்சு எல்லாம் இயக்கத்தை நிறுதிச்சு. ஸ்பார்க் வந்துண்டே இருந்தது  எனக்கா, என்ன பண்ணனும்னே தெரியல்லே. ஸ்விச் ஆஃப் பண்ண தொடவே பயமாச்சு. எங்கியானும் ஷாக் அடிச்சு நம்மை தூக்கி எரிஞ்சா என்ன பண்ண? இரவு நேரம் வேர எங்க போக என்ன பண்ணனு ஒன்னும் புரியல்லே. அக்கம்பக்கம் வீடுகளிலும் லைட்டோ சத்தமோ எதுவுமே இல்லே. எல்லாரும் வேலைக்கு போறவங்க. 10- மணிக்கே படுக்கபோயிட்டாங்கபோல இருக்கு. என்னபண்ணனு தெரியாம வெளில போயி மாடிப்படியில் உக்காந்துட்டேன். நான் இருப்பது மூனாவதுமாடி. எல்லா இடத்திலேந்தும் ஒயர் எரியற ஸ்மெல் வருது.11-மணிக்கு வீட்டுக்குள்ள வந்தேன் எல்லா ஒயரும் எரிஞ்சு முடிஞ்சு எல்லாம் ஆஃபாயிடுத்து. சார்ஜில் வைத்த, இன்வெர்ட்டர், கார்ட்லெஸ்போன், மொபைல் கம்ப்யூட்டர்  ஃப்ரிட்ஜ்   லைட் எல்லாமே எரிஞ்சு போச்ச்சு. இரவு பூரா இருட்டிலும் வேர்வையிலுமே கழிந்தது.இத்தனைக்கும் போனவருஷம்தான் வீடு பூராவும் புதுசா ஒயரின் சேஞ்ச் பண்ணி எர்த்திங்க்லாம் பண்ணி  பெயிண்டும் பண்ணியிருந்தேன். எல்லா சாமானும் ஒரே நைட்ல எரிஞ்சு போனது மனசுக்கு ரொம்ப கஷ்ட்டமா இருந்தது.

 காலையில் தான் பில்டிங்க்ல உள்ளவா ஒவ்வொருவர்வீட்டிலும் ஒவ்வொரு சாமான் எரிஞ்சு போச்சுன்னு தெரியவந்தது. ஹை ஓல்ட்டேஜ் தான் காரணமாம். மின் வாரியக்காரர்களின் அஜாக்கிரதையினால் கஷ்ட்டம் யாருக்கு? மறு நாள்  M. S. E.B. ஆட்களுக்கு போன் பண்ணினா பொறுப்பில்லாத பதில் சொல்றா. அன்று பூராவும் வீட்ல லைட்டோ ஃபேனோ வேறு எந்த எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் ஐட்டமோ ரிப்பேர்லதான் இருந்தது.அதுக்கும் மறு நாள் தான் மின்வாரிய ஆட்கள் வந்து சரிபண்ணினா. என்வீட்டில்தான் எல்லாமே எரிஞ்சு போச்சே. ஒன்னொன்னுக்கும் ஆட்களைத்தேடி, த்தேடிப்போயி கூப்பிட்டேன். உடனே வர்வாளா? எலக்ட்ரீஷியன் முதல் நாள் வந்து எரிஞ்சுபோன ஒயர் சரிபண்ணி வேர பல்ப்(டியூப்) எல்லாம் மாத்தி, ஃபேன் காயில் எல்லாம் சேஞ்ச் பண்ணி 2000- ரூபா சார்ஜ் பண்ணினான்.இப்போ லைட் ஃபேன் சரி ஆச்சு. அடுத்து ஃப்ரிட்ஜ் காரனைக்கூப்பிட்டேன் கம்ப்ரசர் எரிஞ்சுபோச்சு மாத்தனும்னான். அடுத்த நாள் பாம்பே போயி வாங்கி வரேன்னு சொல்லி மறு நாள் வாங்கி வந்து மாத்தினான், அதுக்கு ஒரு 5000 +1000- ரூபா சார்ஜ். அப்புரமா கார்ட்லெஸ் சரிபண்ணமுடியாதுன்னு சொல்லிட்டான். அது என்பையன் வெளி நாட்டிலிருந்து வாங்கித்தந்தான். இண்டியால அதுக்கு ஸ்பேர் பார்ஸ் கிடைக்கலியாம். மொபைலும் போச்சு. கம்ப்யூட்டர் ஆள் அடுத்த நாள் வந்து மோடம் போச்சு  சி.பி,யூ போச்சுன்னு 3000-ரூபா சார்ஜ் பண்ணீனான்செலவுக்கு செலவு, டென்ஷனுக்கு டென்ஷன்னு ஒருவாரம் எல்லாமா என்னை ஒரு வழி பண்ணிடுத்து. பசங்ககிட்ட சொன்னா உன்னையாரு தனியா இருக்கசொன்னா எங்ககூட வந்து இருக்கவேண்டியதுதான்னேன்னு  சொல்லிடுவா. அதனால யாருகிட்டயும் மூச்சே விடலை. வீட்ல சொல்ல முடியாத விஷயங்கள் கூட உங்க எல்லாரிடமும் சொல்லிக்கமுடியுது.ப்ளாக் எழுதுவதால் எனக்கு எவ்வளவு வசதி இல்லியா ?


 இப்போ வெய்யில்காலம் கூட இல்லே. ஆனாலும் டெய்லி 4 மணி நேரம் கரண்ட் கட் இருக்கு. அதுவும் வெள்ளிக்கிழமைன்னா ஸ்பெஷ்ல்ஃபுல் டைம் கட் தான்.புற நகர்பகுதில வசிக்கரவான்னாபாவப்பட்டவங்களா? எல்லாரையும் போலத்தானே வீட்டு வரி, தண்ணிவரி, லைட் பில் எல்லாம் கட்டராங்க.கரண்டும் தண்ணியும்(ஒரு நாளைக்கு காலை ஒருமணி நேரம்தான் தண்ணிவரும்) எப்பவுமே ரேஷந்தான். பாம்பே சிட்டி சைட்ல கரண்ட்கட்டோ, வாட்டர்ப்ராப்லமோ இல்லே. இங்க புற நகர்பகுதிகளில் ரொம்பவே அதிகமா இந்த தொல்லைகள் இருக்கு. மிடில் மிடில்ல ஹை ஓல்ட்டேஜ், கம் ஓல்ட்டேஜ் இதுகளையும் சமாளிக்கனும்.வெய்யில் வந்தா டெய்லி 6, மணி நேரம், 8 மணி நேரம்லாம் கரண்ட் கட் இருக்கும்.பொது ஜனங்கள் எல்லாத்துக்கும் பழகிண்டுட்டா. வேர என்ன சொல்ல?

  இவ்வளவு கரண்ட்கட்டிலும் எனக்கு மாசாமாசம் பில்மட்டும் 800- ரூபாக்கு மேலயே வருது. ஆபீசில் போயி கேட்டா, மீட்டர் ரீடிங்க்ல என்ன வருதோ அதுதானே நாங்க போட்டுருக்கோம்ன்னு சொல்ராங்க. என் ஒரு ஆளுக்கு இவ்வளவு பில் வரவே கூடாது. நாம  யூஸ்பண்ணீ  அதுக்கு செலவுபண்ணினாகூட ஓக்கே.  சும்ம அதிகமா பணம் கட்ட காசு என்ன மரத்லயா காய்க்குது?

37 comments:

suryajeeva said...

உங்கள் electrician கிட்ட tripper போட சொல்லுங்க.... அது எப்படி வேலை செய்யும்னு தெரிஞ்சுக்குங்க, பிரச்சினை வராது

பிற பிரச்சினைகள் கேட்க்காத வரை பிரச்சினை

Powder Star - Dr. ஐடியாமணி said...

இவ்வளவு கரண்ட்கட்டிலும் எனக்கு மாசாமாசம் பில்மட்டும் 800- ரூபாக்கு மேலயே வருது. ஆபீசில் போயி கேட்டா, மீட்டர் ரீடிங்க்ல என்ன வருதோ அதுதானே நாங்க போட்டுருக்கோம்ன்னு சொல்ராங்க.////////

கரெண்டையும் கட் பண்ணிட்டு இப்படி பொறுப்பில்லாம வேற பதில் சொல்றாங்களா?

ramalingam said...

அடாவடி+அட்டூழியம்+அநியாயம்+அல்பத்தனம்= அரசு ஊழியம்

ஹுஸைனம்மா said...

வாசிக்கும்போதே திகிலாருக்கு; நீங்க தனியா எப்படி பயந்துருப்பீங்க!!

ஸ்டெபிலைசர் இல்லையா? அல்லது இருந்துமா இப்படி ஆனது?

ஆபத்திற்குப் பாவமில்லையென்று, அடுத்த வீட்டுக்காரர்களை எழுப்பியிருக்கலாமே?

மெயின் சுவிட்சையும் ஆஃப் பண்ண தொட முடியாத அளவுக்கு இருந்ததா லெட்சுமி மேடம்?

மகேந்திரன் said...

இந்த பிரச்சனை இப்போ ஒரு பெரிய தொந்தரவு அம்மா...
பவர் கட் ரொம்ப அதிகமாயுடுச்சு..
ப்ளாக் எழுதுவதில் இது ஒரு சுதந்திரம் அம்மா..
மனதில் உள்ளதை அப்படியே சொல்லிவிடலாம்..
நீங்க சொல்வது ரொம்ப இயல்பா இருக்கு...

நிரூபன் said...

இனிய மதிய வணக்கம் அம்மா,

ஹைவோல்ட்டேஜ் மின்சாரத்தினால் கிடைத்த தீமைகளைப் பதிவிட்டிருக்கிறீங்க.
வருத்தத்திற்குரிய விடயம்,

மின்சார சபை ஊழியர்களின் கவனக் குறைவே இதற்கான காரணம் என்று நினைக்கிறேன்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

இது மாதிரி அனேகர் பாதித்துள்ளனர்.மோசமான நிர்வாகம் தான் காரணம் .

வெங்கட் நாகராஜ் said...

எங்குமே தரம் என்பதே இல்லாமல் போய்விட்டது. இங்கே தில்லியில் எப்ப என்ன வோல்டேஜ் வருகிறது என்றே அவர்களுக்கே தெரியாது. இத்தனைக்கும் மின்சாரம் டிஸ்டிரிப்யூஷன் தனியார் வசம்....

ஒரே நாளில் பல பொருட்கள் சேதாரம் ஆவது என்பது மிகவும் சோகமான விஷயம் அம்மா..

புலவர் சா இராமாநுசம் said...

தனிமை என்பது மிகவும் கொடுமை அதிலும்
வயதான காலத்தில் மிகமிகக்
கொடுமை
வேங்கடவன் துணையிருப்பான்

புலவர் சா இராமாநுசம்

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஒரே நாளில் பலருக்கும் இதுபோல பலவிதமான பிரச்சனைகள். சோதனை மேல் சோதனைகள். செலவு மேல் செலவுகள். கேட்கவே மனசுக்குக் கஷ்டமாய் உள்ளது. எல்லா சர்வீஸ்களிலும் இப்படி தரம் குறைந்து போய் விட்டதே! என்ன செய்வது? மொத்தத்தில் நமக்குப் போதாத காலம் தான் போலிருக்கு.

தனியாக இருந்து எப்படித்தான் இவற்றையெல்லாம் எதிர் கொள்கிறீர்களோ!! சமாளிக்கிறீர்களோ!! ஆச்சர்யம் தான்.

Avargal Unmaigal said...

ஒவ்வொரு வீட்டிலும் எலக்ட் ரானிக்ஸ் பொருட்கள் அதிகமாகி கொண்டே போகிறது. அதற்கு ஏற்ற அளவு உற்பத்தி இல்லை.மக்களுக்கு அவசிய தேவைகள் என்ன அதை எப்படி நிறைவேற்றுவது என்பதை பற்றி கவலைப்படாத அரசாங்கம். அரசாங்கம் எப்படி இருந்த நமக்கு என்ன நாம் நன்றாக சம்பாதித்தோமா அது போதும் என்று கவலைப்படாதா மக்கள். இப்படி இருந்தால் இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும்.

மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக கட்சி வேறுபாடு இன்றி ஓன்று சேர்ந்து போராட வேண்டும்.எங்களுக்கு தேவை இலவசமல்ல அடிப்படை வசதிகள்தான் தேவை என்று ஓன்று சேர்ந்து குரல் தர வேண்டும்.

எப்படி மின்சார உற்பத்தியை பெருக்க வேண்டும் + சேமிக்க வேண்டும் என்பதை படித்த அறிஞர்கள் ஐடியா தரவேண்டும்.

அப்படி இல்லாவிட்டால் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடப்பதை தடுக்க முடியாது.

kobiraj said...

மின்சார சபை ஊழியர்களின் கவனக் குறைவே இதற்கான காரணம் என்று நினைக்கிறேன்.

RAMVI said...

இதெல்லாம் பழுது பார்க்க செலவு செய்ய எவ்வளவு கொடுக்க வேண்டியிருக்கு? பேசமா புதுசே வாங்கிடலாம் போல இருக்கு.

நீங்க தனியாளா இதெல்லாம் சமாளிப்பதை பார்க்கும் போது எங்களுக்கும் அந்த மாதிரி தெய்ரியம் வர வேண்டும் என்று தோணுகிறது அம்மா.

Lakshmi said...

சூர்ய ஜீவா ட்ரிப்பர்லாம் போட்டும்கூடத்தான் இப்படி ஒரு பிரச்சனை.

Lakshmi said...

மணி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அவர்களின் பொறுப்பில்லாத்தனத்துக்கு நாம தான் கிடைச்சோமா?

Lakshmi said...

ராமலிங்கம் ரொம்பசரியா சொன்னீங்க.

Lakshmi said...

ஹூஸைனம்மா என்னபண்ண என்னதான் நடக்கும் நடக்கட்டுமேன்னுதான் இருக்க வேண்டி இருக்கு சில இக்கட்டான தருணங்களில்.

Lakshmi said...

மகேந்திரன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

நிரூபன் மின்சார ஊழியர்களின் கவன்க்குறைவுதான்னு நமக்கு தெரியுது. அவங்களுக்குத்தெரியல்லியே?

Lakshmi said...

நண்டு நொரண்டு அவங்க தப்புக்கு நமக்குதண்டனையா?

Lakshmi said...

வெங்கட் டெல்லியிலும் இதே நிலமையா? அப்போ இங்கெல்லாம் ஒன்னுமே சொல்ல முடியாது.

Lakshmi said...

புலவர் சா. ராமா நுசம் ஐயா, அந்தவேங்கடவனே என்னை அவரை தரிசிக்க விடலியே. உன்னைச்சொல்லி குற்றமில்லை பதிவு படிச்சு பாருங்க.

Lakshmi said...

கோபால்சார் தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்னதானே?

Lakshmi said...

அவர்கள் உணமைகள் நீங்க சொல்வது சரிதான். ஆனா நம்ம மக்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வரவே மாட்டாங்களே.

Lakshmi said...

கோபிராஜ் அவர்களின் கவனக்குறைவால் நாமதானே அவஸ்தைப்பட வேண்டி இருக்கு.

Lakshmi said...

ரமா இதுபோல யாருக்குமே எந்தப்பிரச்சினைகளும் வரவே வேண்டாம்.

வைரை சதிஷ் said...

என்ன செய்வது இவர்கள் இப்படி இருக்கிறார்களே

Lakshmi said...

வைரை சதீஷ் வருகைக்கு நன்றி

அமைதிச்சாரல் said...

இப்ப எல்லா இடங்கள்லயும் நினைச்சா கரண்ட் கட்தாம்மா. எப்போ வரும் எப்போ போகும்ன்னு யாருக்குமே தெரியறதில்லை.

ஆனாலும், இந்த சூழல்ல தைர்யமா இருந்த உங்களைப் பாராட்டணும்.

Lakshmi said...

சாந்தி நியூ பாம்பேலயும் கரண்ட் கட் இருக்கா? தைரியம்லாம் தன்னால வருது.

ஸ்ரீராம். said...

பதிவைப் படித்து நானும் திருப்பார் படவில்லையா என்றுதான் கேட்க நினைத்தேன். போட்டும் பிரச்னை என்பது கொடுமை. பவர் இல்லாக் கொடுமை ஒருபுறம் என்றால் என்னாகுமோ ஏதாகுமோ என்ற பயம் இலவச இணைப்பு போலும். தைரியமாகச் சமாளித்து விட்டீர்கள். அதற்கான செலவுத் தோகை தலை சுற்றுகிறது. கன்ஸ்யூமர் கோர்ட்டில் போடணும் இவங்களை எல்லாம்...

Lakshmi said...

ஸ்ரீ ராம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. கன்ஸ்யூமர் கோர்ட்டெல்லாம் போயி அலைய தெம்பில்லியே? நமக்கு நியாயம் கிடைக்கும்னு என்ன நிச்சயம்?

radhakrishnan said...

என்னம்மா,நான்உங்களை மிகுந்த மனதிடம்உள்ளவர்என்றுசொன்னதற்கு
அப்படியெல்லாம்இல்லை என்றுமறுமொழியளித்தீர்களே,இவ்வளவு
தொல்லைகளையும்தனியாக இருந்து,
சமாளித்திருக்கிறீர்களே,இதுஎல்லோராலும் முடியும் என்று நினைக்கிறீர்களா?
இதில்யாருக்கோ தேள் கொட்டியதுபோல
குழந்தைகளிடமும் சொல்ல முடியாது.இதிலிருந்து தெரிவது 'எல்லோரும்,எப்பொழுதும்,எதற்கும்
தயாராக இருக்க வேண்டும்'. எதற்கும்
கவலையேபடக்கூடாது.நடப்பதுநாராயணன் செயல் என்று இருக்க வேண்டும்.இல்லையா?

Lakshmi said...

ராதா கிருஷ்னன், அந்தசமயங்களில் எப்படியோ மன உறுதி வந்து எல்லாவற்றையுமே சமாளீக்கிரேன்.இன்னமும் ரிப்பேர்வெலைகள் முழுமையாக முடியவில்லை. பாக்கி இருக்கு.ஆள்காரன் கூப்பிட்டா உடனே எங்கவரா?

C.P. செந்தில்குமார் said...

இங்கும் எங்கும் அதே பிரச்சினைதான் மேடம்.

Lakshmi said...

செந்தில் வாங்க ரொம்ப நாளா கானோமே? பிசியா?

இராஜராஜேஸ்வரி said...

பொது ஜனங்கள் எல்லாத்துக்கும் பழகிண்டுட்டா. வேர என்ன சொல்ல?

Related Posts Plugin for WordPress, Blogger...