Pages

Back to Top

ஹெல் மெட் காமெடிபல வருடங்கள் முன்பு நாங்க லீவுக்கு கிராமத்துக்குபோயிருந்தோம்
 ஒவ்வொரு வருஷமும் பெரிய லீவில் கிராமம் போவோம். அதுபோலவே
என் தங்கை களும் குழந்தைகளுடன் வருவார்கள். வீடு கல்யாண க்களைகட்டும்.குழந்தைகளும் ஒருடசனுக்கு மேலே, பெரியவர்களும் அப்படியே.ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம்தான்.குழந்தைகளுக்கு ஊரில் ஒவ்வொரு விஷயமுமேஆச்சரியமா இருக்கும். அதுவும் எங்க வீட்ல கொல்லைப்புறம் மாடுகள் நிறையவளர்த்துவந்தோம். அடிக்கடி கன்னுக்குட்டி போட்ட்டு மாட்டுக்கொட்டிலும்எப்பவுமே நிறம்பி இருக்கும் குழந்தைகளுக்கு கன்னுக்குட்டியுடன் விளையாடுவது சந்தோஷமான பொழுதுபோக்கு.பிறந்து 4 நாட்களே ஆன கன்னுக்குட்டிகளகழுத்தில் கயிறு கட்டி தெருத்தெருவாக கூட்டிப்போவார்கள். மாடுகளுக்காக

பின்னால் வைக்கப்போரும் பெரிசா இருக்கும். குழந்தைகள் வக்கப்படப்பில்
 ஏறி விளையாடிவிட்டு, பிறகு ஐயோ உடம்பெல்லாம் சொறியரதுன்னு அடி
 பம்பில் குளிப்பார்கள். வேலைக்காரர்களுக்காக பின்னால் சர்வெண்ட் க்வார்ட்
டரும் உண்டு. அவர்கள் அங்கியே சமையல் சாப்பாடு எல்லாம் பண்ணிவிடுவர்
 கள். அவங்க எப்பவும் அலுமினிய பாத்திரத்தில்தான் சமையல் செய்வாங்க.
 ஒரு நாள் சாதம் பண்ணும் அலுமினிய குண்டானை வேலைக்காரி நன்கு
 பள, பளன்னு தேய்த்து வெயிலில் காய வைத்திருந்தா. அதைப்பார்த்த ஒரு
 குறும்புக்குழந்தை 4 வயசிருக்கும். அந்தகுண்டான் அவன் கண் களுக்கு
 ஹெல் மெட் போல தெரிஞ்சிருக்கு.
அதையெடுத்து விளையாட்டாக தலையில் மாட்டிண்டான். அந்தக்குண்டான்
 வாய்ப்புறம் குறுகலாகவும் உள்புறம் அகலமாகவும் இருக்கும். அவன் அதை
 தலையில் மாட்டிண்டதும் அது தலியிலிருந்து இறங்கி கழுத்தில் போய்
 உக்காந்து விட்டது.அவனைப்பார்த்துமத்தகுழந்தைகள் சிரிக்கவும் அவனுக்கு
 குஷி கிளம்பி ஓடி ஓடி எல்லரையும் விரட்டி விளயாடினா. கொஞ்ச நேரம்
 ஆனதும் அதை தைலையில் இருந்து வெளியே எடுக்கப்பார்த்திருக்கான்
அது வரலை நல்ல கழுத்தில் மாட்டிண்டு இருந்தது.உடனே பயந்துபோயி
 ஒரே கத்தல் அழுகைதான், வீட்டில் உள்ள எல்லாரு என்னாச்சுன்னுவந்து
 பார்த்தா, அடாடா ஏது இந்தப்பிள்ளை இப்படி பண்ணித்து, வேலைக்காரா
 10 பேர் அந்தசம்யம் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களைக்
 கூப்பிட்டு அதை மெதுவாக எடுக்கச்சொன்னார்கள். அந்தக்குழந்தையோ
 கண்மண் தெரியாம ஓடிண்டே இருக்கான். யாரையுமே பக்கத்திலேயே நெருங்கவிடமாட்டெங்கரான்.எல்லாருக்கும் ஒரே டென்ஷன். மூச்சு முட்டப்
 போரதேன்னு கவலை. அந்தக்குழந்தை வீட்டைவிட்டு தெரிவில் இறங்கி கண், மண் தெரியாம ஓடவே ஆரம்பிச்சுட்டான். வேலைக்காராளும் அவன்பின்னாடி
யே ஓடினார்கள்.
தெரு பூராசுத்தி சுத்தி நேரா வாய்க்காலில் போய் விழுந்துட்டான். அப்ப கோடை
 காலமானதால் வாய்க்காலில் முழங்கால் அளவுக்குத்தான் தண்ணி இருந்தது.
ஜோராக தண்ணீரில் விழுந்தவேகத்தில் அந்தகுண்டானுக்குள் தண்ணீர்
 நிறம்பி கழுத்திலிருந்து தனாகவே மேலே வந்து தண்ணியில் மிதக்க ஆரம்பித்துவிட்டது. வேலைக்காராளுக்கெல்லாம் பெரிய நிம்மதி, கூடவே
 சிரிப்பும். அந்தக்குழந்தைக்கோ பயம் போயி சந்தோஷம். வாய்க்காலில்
 நீச்சல் அடிக்க ஆரம்பிச்சுட்டான்.அதற்குள் வீட்டிலுள்ளவர்களோ பிள்ளையாரப்பா குழந்தைக்கு ஏதும் ஆகாம காப்பாத்துப்பா 108 கொழக்கட்டை
 பண்ணி தரோமென்கிர தினுசில் வேண்டுதல்களில் வேறு இறங்கி விட்டார்கள். குறும்புக்காரக்குழந்தைகளை கண்ணில் விளக்கெண்ணை விட்டுண்டு கவனிச்சுக்கத்தான் வேண்டி இருக்கு. இல்லைனாஇப்படித்தான்
 ஏதானும்பண்ணிடரா.

29 comments:

எல் கே said...

ஹஹாஹ் செம காமெடிதான்

angelin said...

//குறும்புக்காரக்குழந்தைகளை கண்ணில் விளக்கெண்ணை விட்டுண்டு கவனிச்சுக்கத்தான் வேண்டி இருக்கு.//சரியாய் சொன்னீங்க .
இப்படிதான் எங்க அண்ணன் மகன் தன முகம் தெரியுதுன்னு சின்ன தண்ணி
தொட்டிக்குள்ள எட்டி பார்த்து விழுந்துட்டான் .நல்ல வேளை கொஞ்சூண்டு தண்ணி தான் இருந்ததோ பிழைத்தான்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

குழந்தைகளின் குறும்புத்தனத்தை அழகாகச் சொல்லியுள்ளது அருமை.

கோவை நேரம் said...

கிராமத்து நினைவுகள் ...

Lakshmi said...

கார்த்தி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஏஞ்சலின் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி.

Lakshmi said...

கோபால்சார் வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோவை நேரம் நன்றி.

கவி அழகன் said...

குழந்தைகள் என்றால் சுவாரசியம் தான் அது சரி மோதகம் 108 அவிச்சிங்களா
பிள்ளையார் அப்பனுக்கு

சாகம்பரி said...

இது போன்ற 'தலை மாட்டல்' விசயங்கள் குழந்தைப் பருவ கட்டாய விளையாட்டு. எப்படியாவது கழண்டுவிடும். நாம்தான் யோசிக்க முடியாமல் தவித்துபோய்விடுவோம். இப்போ சிரிப்புதான் வருகிறது.

கோமதி அரசு said...

குறும்பு குழந்தையால் பிள்ளையருக்கு கிடைத்தது 108 கொழுக்கட்டை.

RAMVI said...

நல்ல வேடிக்கை.. இப்பொழுது படிக்கும் பொழுது சிரிப்பாக இருந்தாலும், அந்த பாத்திரம் குழ்ந்தையின் கழுத்திலிருந்து வெளி வராத போது நமக்கு வயிற்றை கலக்கியிருக்குமே...

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

விவரிப்பு ரொம்ப டமாஸா இருந்தாலும் ‘சுட்டி’க் குழந்தைகளை ரொம்பவே கவனம் எடுத்துப் பாத்துக்கணும்கிறதை அழகா சொல்லியிருந்தீங்க...

(கறுப்பு background-ல படிக்கறது ஸ்ரமமாயிருக்கே...)

Lakshmi said...

கவி அழகன் வருகைக்கு நன்றி.பிள்ளையார் மோதகம் வாங்காம விடுவாரா?

Lakshmi said...

சாகம்பரி, வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி.

Lakshmi said...

கோமதி அரசு ஆமாங்க.

Lakshmi said...

ஆமா ரமா அப்படித்தான் ஆச்சு.

Lakshmi said...

எல்லென் ஓபன் பண்ணும்போது கறுப்பாவந்தலும் உடனெ கலர் மாறுதே.

athira said...

கடவுளே படிக்கப் பயமாக இருக்கு எனக்கு மூச்சு முட்டுவதுபோல இருக்கு... குழந்தைகளோடு கவனமாகத்தான் இருக்கோணும்..

//பிள்ளையாரப்பா குழந்தைக்கு ஏதும் ஆகாம காப்பாத்துப்பா 108 கொழக்கட்டை
பண்ணி தரோமென்கிர தினுசில் வேண்டுதல்களில் வேறு இறங்கி விட்டார்கள்//

இது சூப்பர்:).

வெங்கட் நாகராஜ் said...

குறும்புக்கார பையன்.... அதை நீங்கள் சொல்லிச் சென்ற விதம் அருமை....

இங்கே தில்லியில் இப்படித்தான் ஒரு பையன் குக்கரை தலையில் மாட்டிக்கொண்டு விட, டாக்டரிடம் சென்று, குக்கரை அறுத்தே எடுக்க வேண்டி இருந்தது :(

Lakshmi said...

அதிரா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

வெங்கட் நானும் அந்த நியூஸ் பேப்பர்ல
பார்த்தேன்.

Ramani said...

குழந்தைகளின் குதூகலமும் விளையாட்டும்
ரசித்து மகிழும்படியாகத்தான் இருக்கிறது
ஆனால் இதுபோல் ஏதாவது ஏடாகூடாமாக
செய்து வந்து நிற்கும் போது அரை நொடியில்
பெற்றோர் படும் அவஸ்தை பதட்டம்
வேண்டுதல்கள் உண்மையில் ரொம்பக் கஷ்டம்
ஆனாலும் நீங்கள் குறிப்பிட்டு இருப்பதைப்போல
பிரச்சனை இன்றி முடிகிற போது நாம் கொள்ளுகிற
சந்தோஷம் மிக மிக அதிகம்
நீங்கள் சொல்லிப்போகும் விதத்தில் அதை
பூரணமாக உணர முடிந்தது
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

Lakshmi said...

ரமணி சார் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி

இராஜராஜேஸ்வரி said...

குறும்புக் குழ்ந்தையின் அட்டகாசம்..

அம்பாளடியாள் said...

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....

PUTHIYATHENRAL said...

லட்சுமி அம்மா உங்கள் இணையதளத்தை இப்போதுதான் முதல் முறையாக பார்கிறேன். நல்லா இருக்கு வாழ்த்துக்கள். நல்ல அமைதியா ஆன்மிகம் சொல்றீங்கள் வாழ்த்துக்கள். உங்கள் வயதில் இப்படி சமூக வலைதளத்தை நடத்தும் உங்கள் எண்ணம் உயர்வானது. நன்றி லட்சுமி அம்மா! உங்களை பார்க்கும்போது எங்கள் அம்மாவை பார்ப்பது போல் உள்ளது. பெண்மைக்கு தாய்க்கு நிகரா இந்த உலகில் என்ன இருக்க முடியும். நன்றி அன்புடன்- புதியதேன்ரல் - சிந்திக்கவும்.நெட்.

அமைதிச்சாரல் said...

இப்ப நினைக்கறச்சே வேடிக்கையா இருந்தாலும், அந்த நேரத்து பதட்டமும் மறக்கமுடியாதே.. வாலுகளை சமாளிக்கிறது பயங்கர கஷ்டம்தான் :-))

Lakshmi said...

இப்பதான் இந்தபக்கம் வரீங்களா?

Related Posts Plugin for WordPress, Blogger...