Pages

Back to Top

படித்ததில் பிடித்தது.

சில பாக்கியசாலிகள்,தியாகம் செய்யாமலேயே பெயர் வாங்கி விடுகிறார்கள். சில துர்பாக்கியசாலிகள்

கடுமையான தியாகத்துக்கும், விளம்பரமில்லாமல் மறைந்து விடுகிறார்கள். அவர்களை மன்னரும்

மறந்து விடுகிறார்கள்,கவிஞரும் மறக்கிறார், உறவினர்களும் மறக்கிறார்கள்.
ராமாயணம் முழுவதிலும் யார், யாருடைய பெருமைகளோ பேசப்படுகின்றன. கணவனோடு காட்டுக்குச்

சென்ற சீதாவைப்பற்றி கம்பன் உருகுகிரான், கம்பனைப்படித்த ரசிகன் உருகுகிரான், கம்பனது சிருஷ்ட்டியில்

ராமனும் உருகுகிரான்.


ஆனால் பதினான்கு ஆண்டுகள்கணவனைப்பிரிந்து, கைம்பெண் போலவே வாழ்ந்த இலக்குவன் மனைவி

ஊர்மிளாவுக்காக யார் கண்ணீர் வடித்தார்கள்.? கம்பனுக்கும் கூடக்கருணை இல்லாமல் போயிற்றே?

கணவனோடு காட்டுக்குச்செல்வதுமட்டுமே தியாகம் இல்லை. கணவனைப்பிரிந்து நோன்பு ஏற்பதே

அதைவிடப் பெரிய தியாகமாகும்.


கொஞ்சகாலமாவது ஆரணயத்தில் சீதா வாழ்ந்திருந்து,கணவனுடைய காதலைப்பெற்றிருக்கிராள்.

ஊர்மிளாவுக்கு அதுவுமில்லையே? சீதா அசோகவனத்தில் இருந்தது பெரிதாகப்பேசப்படுகிரதே?

ஊர்மிளா அயோத்தியில் கண்வனைபிரிந்திருந்து பட்ட அவதியை யார் எண்ணுகிரார்கள்?
ஊர்மிளா ஒரு தேவமகள். மாமியார் சுமத்திரையை விட பவித்ரமானவள்.சொல்லப்போனால்

சீதாவை விடவும் ஊர்மிளா உயர்ந்தவள். காட்டுக்குப்போகிரான், கணவன் என்றதும் நானும்

வருவேன் என்று அடம் பிடித்து சீதா சென்று விட்டாள். வாயைக்கூடத்திறக்காமல் ஒரு மூலையில்

நின்று விட்டாளே ஊர்மிளா. பிரிவினும் சுடுமோ, பெருங்காடு?என்று அவளோன்றும் ததுவம் பேச

வில்லையே?
சீதையின் உணர்வுகள் ஊர்மிளாவுக்கு இல்லை என்று அர்த்தமா? அவள் கணவனை நேசிக்கவில்லை

என்று அர்த்தமா? ஊர்மிளா ஒரு லட்சிய மனைவி. அவள்பாடியது ஒருதலை ராகம். கணவன் என்ன

சொல்கிரானோ அதுவே நியாயம், அங்கே கேள்விக்கே இடமில்லை. எண்ணிப்பார்த்தால் பெருமைக்

கணக்கில் ஊர்மிளாவுக்கே முதல் இடம். சீதாவுக்கு இரண்டாவது இடம்தான்.
இன்னொரு துர் பாக்கியசாலி சிலப்பதிகாரத்து மாதவி.கண்ணகி கற்போடு வாழ்ந்த மரபு.அது குலஒழுக்கம்.

மாதவிக்கு என்னதேவை? ஆயினும் அவள் வாழ்ந்தாள். தனதுமகள் மணிமேகலையை தன்மகளல்ல

என்றும் மாபெரும் பத்தினி மகள் என்றும் வாழ்த்தினாள். கற்புடையோர் மறைவத்போல நான் மறையவில்லையே

என்று கலங்கினாள். தன்மகளைத் துறவி ஆக்கினாள்.பேசப்பட வேண்டியது கண்ணகியா?, மாதவியா?.

கன்ணகி கடைப்பிடித்தது ஒரு நீதிபதி கடைப்பிடிக்கும் சட்ட நெறிகளே. மாதவி அனுசரித்தது குற்றத்தில்

பிறந்து ஞாயத்தில் வளர்ந்த சந்த்ரோதயம்.
எவ்வகையாயினும் களங்கமில்லாதவள் மாதவி. அவளுக்குத்தரப்படவேண்டிய நியாயமான இடம்

தரப்படவில்லையே? கண்ணகிக்கு கடற்கரையில் சிலை என்றால் மாதவிக்கு நதிக்கரையிலாவது வேண்டாமா?

வேண்டாம் உயர்ந்த மனிதர்களுக்கு இந்த விளம்பரங்கள் தேவை இல்லைதான்.
மேகங்க வைரங்களைச்சிந்துவதில்லை. ஆனால் அவை இல்லை என்றால் நீங்களும் இல்லை நானும் இல்லை.

19 comments:

ஆமினா said...

நல்லா இண்டஸ்டிங்கா இருக்கு லெட்சுமிம்மா!!!

ஊர்மிளாங்குறது.....??? கோச்சிக்காதீங்க. எனக்கு சரியா தெரியல.

Lakshmi said...

ஆமி ராமாயணம் படிச்சிருக்கீங்களா?? ஊர்மிளா ராமரின் தம்பி லட்சுமணரோட மனைவி.

பார்வையாளன் said...

நல்ல பகிர்ர்வு ,.. நன்றி

ஆமினா said...

//ஆமி ராமாயணம் படிச்சிருக்கீங்களா?? //
இல்ல லெட்சுமி! ஆனா மத்தவங்க சொல்றத வச்சு கொஞ்சம் தெரியும்... ஸ்கூலையும் பாடமா வந்ததால் ஓரளவுக்கு தெரியும். ஆனாலும் ஊர்மிளா பத்தி எங்கேயும் அவ்வளவா கேள்விப்பட்டதில்லை.....

உங்க இந்த பதிவு பார்த்த பிறகு தான் சீதைக்கு ஊர்மிளா எவ்வளவோ பெரிய ஆளுன்னு தெரிஞ்சுக்கிட்டேன்!!!

vanathy said...

ஊர்மிளா பற்றி இப்பதான் கேள்விப்படுகிறேன்.

Lakshmi said...

ஆமி காவியம் எழுதினவங்க ஊர்மிளாவை இருட்டடிப்பு செய்துட்டாங்க. அதனால யாராலயும் தெரிஞ்சுக்க முடியலை. ராமருடன்சேத்து அண்ணாத்ம்பிகள் நால்வர்.அதுபோல சீதையுடன்
சேந்து பிறந்தவர்கள் நாலுபேரு. அண்ணன் தம்பிகள் நால்வரும், அக்காதங்கை நால்வரை மணம் செய்து கொண்டனர். சீதைக்குக்கொடுத்த முக்கியத்துவம் வேறு யாருக்கும்கொடுக்கலை
இதுதான் உண்மை.

Lakshmi said...

வானதி உங்களுக்கும் ஊர்மிளா பற்றி தெரியலியா?
நான்கொஞ்சம் நிரைய தேடித்தேடி புக் படிப்பேன்,
அதில் தெரிய வந்ததுதான் இந்த விஷயமும் இன்னமும் நிரைய விஷயங்களும். அதை உங்க எல்லார் கூடவும் ஷேர் பண்ணும்போது உங்களுக்கும் தெரிய வருவது சந்தோஷமா இருக்கு.

Lakshmi said...

பார்வையாளன் உங்க வரவுக்கும் நன்றி.

ஆமினா said...

//அண்ணன் தம்பிகள் நால்வரும், அக்காதங்கை நால்வரை மணம் செய்து கொண்டனர். //

இதுவும் இப்ப தான் கேள்விபடுறேன்!!

நேரம் கிடைக்கும் போது பதிவா போடுங்க லெட்சுமிம்மா!!

Lakshmi said...

ஆமி உங்க ஆர்வம் புரியுது.முயற்சி செய்யுரேன்.

LK said...

ஹ்ம்ம். வித்யாசமான கோணம். இங்கு என் கருத்து. எப்படி சுமித்ரா (இலக்குவனின் தாய் )ஞானி என்று சொல்லப் படுகிறார்களோ அதே போன்றுதான் ஊர்மிளையும் ஞானி என்று கேள்விப் பட்டிருக்கிறேன்

Lakshmi said...

கருத்துக்கு நன்றி. ராமாயணத்தில் இன்னும் நாம் தெரிந்து கொள்ள பல விஷயங்கள் இருக்கு.

ஆனந்தி.. said...

/எண்ணிப்பார்த்தால் பெருமைக்
கணக்கில் ஊர்மிளாவுக்கே முதல் இடம். சீதாவுக்கு இரண்டாவது இடம்தான்.//

சபாஷ் ஆன்ட்டி...சபாஷ்..!! நானும் கூட இதை நினைச்சிருக்கேன்...ஊர்மிளாவின் த்யாகம் சீதாவை விட உசத்தி என்னை பொறுத்தவரை...சூப்பர் ஆன்ட்டி..மாமூலா இல்லாமல் வித்யாசமான உங்கள் கோணம் எனக்கு பிடிச்சிருக்கு...:)))

ஆனந்தி.. said...

/கண்ணகிக்கு கடற்கரையில் சிலை என்றால் மாதவிக்கு நதிக்கரையிலாவது வேண்டாமா?//

மாதவியும் கற்பில் சிறந்தவளாய் இருக்கலாம்...ஆனால் அவள் காதலித்தது வேறொருத்தியின் கணவனை...கற்பொழுக்கத்தை விட..பிறர் மனை நோக்கா கதாபாத்திரங்கள் தானே ஆன்ட்டி நமக்கு சிறந்த வழிகாட்டியா இருக்க முடியும்...:)))

மாதவியிடம் போனபிறகு கண்ணகியின் துயரம் ஊர்மிளாவின் மனநிலை போல தானே..தனிமை...தனிமை...))) மாதவி நல்லவளாய் இருக்கலாம்...ஆனால் வேறொருத்தியை மறைமுகமாய் வருத்தபடுத்தியவள்...:))) சோ..நோ சிலை...)))))))

Lakshmi said...

ஆனந்தி தொடர்ந்து உங்க கருத்துக்களைப்பதிவு பண்ரீங்க. இன்னும் கவனமாக எழுத முயற்சிக்கிரேன்.

♠புதுவை சிவா♠ said...

'ஊர்மிளாவுக்காக யார் கண்ணீர் வடித்தார்கள்.?'

லெட்சுமிம்மா இப்படி ஒரு கேள்வியை கேட்டுட்டிங்க ? டைரக்டர் ராம்கோபால் வர்மா ஊர்மிளாவுக்காக நடிப்பு சொல்லி கொடுத்து எவ்வளவோ கஷ்டபட்டு இருக்காரு . . .

just for fun :-)

Lakshmi said...

புதுவை சிவா சீரியஸ்மேட்டர காமெடி பீசா ஆக்குரீங்களே?

Nagasubramanian said...

A different perception.
great!

Gm Dinesh said...

well nice

Related Posts Plugin for WordPress, Blogger...