Pages

Back to Top

ஒன் டச் எஸ். எம். எஸ்


atb---------  all  the  best

j4f---------  just for fun

sus-------- see  you  soon

6 u 5 n------ are  you  fine

i  m  u------- i  miss  you

n i-----------nice  one

w@---------- what?

w 8---------  wait

kit----------  keep in tuch

l m k-----------   let  me know

b4 n------------  bye  for  now

w 8  4  m--------wait  for  me

l @ m------------- look  at  me

 i a s---------------   i am sorry

@  d aa-------------- ' appaa'  daa

j a m------------------ just  a minute

d d----------------don't  dis turb

 n b------------- no  balance

 h a y------------how  are  you

o t w-------------  on the  way

m c------------   missed  call

c u 2 m------------  see  you  to mo rro w

2   w @ i s---------- do what i say
 t s  4 u------------   its  for  you

ts  2 l t-------------- its  too  late

cn  v mt  2 mr-----------can we meet  tomorrow



 இதெல்லாம் என் பேரக்குழந்தைகள் என்னிடம் பகிர்ந்து கொண்ட எஸ் எம் எஸ்
 வார்த்தைகள். எல்லாருக்குமே தெரிந்திருக்கும் விஷயம்தான். மகன், மகள்
வயிற்று பேரன்கள் 20 வயதை நெருங்கி கொண்டிருப்பவர்கள். காலேஜில்
 முதல் வருடம் படிக்கிரார்கள். 10- வரை அவர்கள் இருக்கும் இடத்திலேயே
 படித்தார்கள். அதன்பிறகு வேறு காலேஜில் வேறு இடத்தில் ரயில் ஏறிப்போய்
படிக்கனும்.அப்போ ஒரு வசதிக்காக மொபைல் வாங்கி கொடுத்திருக்கா.
10- வது வரை எல்லா பாடங்களிலும் 85% மேலே வாங்கிவந்தார்கள். நல்ல
 படிக்கும் குழந்தைகள்தான்.

காலேஜில் முதல் வருட பரீட்சையில் மெயின் இங்க்லீஷ் பேப்பரில் 50%
 மார்க்தான் எடுத்திருந்தார்கள்.குழந்தைகள் நல்ல புத்தி சாலிகள்தான்.
 அவ அப்பா, அம்மவிடம் பேசதயங்கும் குழந்தைகல் என்னிடம் கொஞ்சம்
 ஓபனாக எல்லா விஷயங்களுமே ஷேர் பண்ணிப்பா. காலேல காலேஜ்
 போய்வந்ததுமுதல் இரவுவரை நடந்த எல்லா விஷயமுமே போன்ல சொல்லுவா. பாட்டியிடம் அவ்வளவு ஃப்ரீயா பேசுவா. அப்பா, அம்மாக்களுக்கு
 அவங்க ஆபீஸ் விஷயங்களே தலைக்கு மேல இருக்கும் குழந்தைகளின்
 பேச்சு கேட்க, பொறுமையும் இல்லெ. டைமும் இல்லெ.

இது எல்லார் வீட்டிலும் உள்ளதுதான். மார்க் குறைந்ததும் என்கிட்ட சொன்னா.
 காலேஜில் ரிக்வெஸ்ட் பண்ணீ ஆன்சர் பேப்பர் வாங்கி பார்த்ததில் எல்லா
ஆன்சர்களுமே கரெக்டாகவே  எழுதி இருந்தார்கள். ஒரெ ப்ராப்ளம் என்னன்னா
 ஒரிஜினல் இங்க்லீஷ் ஸ்பெல்லிங்கே எழுதாம எல்லாம் எஸ் எம் எஸ்
 ஸ்பெல்லிங்கில் எழுதி இருந்தா.மொபைல் கையில் கிடைத்ததில் இருந்து ஃப்ரெண்ட்ஸ் களிடம்  எஸ் எம் எஸ் சாட் பண்ணீ பண்ணீ அந்த ஷார்ட்
 எழுத்துக்களே நினைவில் வந்து பரீட்சையிலும் அப்படியே எழுதிட்டா.
 எந்தவாத்யார் மார்க் கொடுப்பா. பரீட்சை எழுதும்போதுகூட ஷார்ட் ஸ்பெல்லிங்க் தான் நினைவில் வருது.

 செல்போனில் நிறைய நல்லதும் இருக்கு, கெடுதலும் இருக்கு. அதில் இதுவும்
 ஒன்று.இந்தக்கால குழந்தைகள் நல்ல டேலண்டாவும் இருக்கா, இண்டெலி
 ஜெண்டாவும் இருக்கா அதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமே இல்லே.
படிக்கும் காலேஜிலேயே காம்பஸ் இண்டெர்வியூ கலந்து நல்ல வேலையும்
படிப்பை முடிச்ச்துமே ரெடியா கிடைச்சுடுது.அவர்களுக்கு பக்குவமா எடுத்துச்
சொல்லி புரிய வைப்பது மூத்ததலைமுறையினரின்முக்கிய கடமையாகும்.
நான் எடுத்து சொன்னதும் அவங்க இருவருமே சரியா புரிந்து கொண்டார்கள்.
 பாட்டி இனிமே கவனமா இருப்போம் என்றார்கள்.

யாருடனும் அவர்களை ஒப்பிட்டு பேசாமல் நிலமையை அவர்களுக்கு
 பக்குவமா புரிய வைத்தால் அவர்களின் எதிர்காலம் பற்றி வீணாக கவலை
 பட வேண்டிய அவசியமே இல்லைதான்.அவர்களுக்கு பிரகாசமான எதிர்
 காலம் சிவப்பு கம்பளம் விரித்து காத்துண்டுதான் இருக்கு.

14 comments:

Anonymous said...

குழந்தைகள் வெற்றி பெற.. சிவப்புக் கம்பளத்தில் கம்பீரமாய் நடைபோட... வாழ்த்துகள்...

Yaathoramani.blogspot.com said...

ஏற்கெனவே படிக்கவில்லை என நினைக்கிறேன்
அனைவருக்கும் பயன்படும் பதிவிது
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வும்மா..

இது மீள்பதிவோ?

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

ennatha soldrtathu pongo ...!

திண்டுக்கல் தனபாலன் said...

பயனுள்ள பகிர்வு அம்மா... (த.ம. 4)

அனைவருக்கும் அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

ம.தி.சுதா said...

மிக்க நன்றி அம்மா...

என்னைப் போல சோம்பேறிகளுக்கு கட்டாயம் உதவும்...

குறையொன்றுமில்லை. said...

hotline தமிழ்திரட்டி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரமணி சார் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் ஆமா இது மீள் பதிவுதான் நீங்க அப்பவும் பின்னூட்டம் கொடுதிங்க. நன்றி

குறையொன்றுமில்லை. said...

எம். எஸ் .ரஜனி பிரதாப்சிங்க் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

திண்டுக்கல் தனபாலன் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

ம. தி. சுதா. வருகைக்கு நன்றி என்னங்க நீங்க சோம்பேறியா யாரு சொன்னாங்க?

Athisaya said...

வணக்கம் அம்மா....உனக்கு இது புதிய கதிவ தான்.வாழ்த்துக்கள் அம்மா.!

குறையொன்றுமில்லை. said...

அதிசயா வருகைக்கு நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...