Pages

Back to Top

ராங்க் நம்பர்

 வெங்கட் சார் போன் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தாங்க. அப்போதான் என் இந்த பதிவையும் இன்னொரு தடவை போடலாமேன்னு தோனிச்சு.
ஒரு 15- வருடங்கள் முன்பு லேண்ட் லைன் போன் கனெக்‌ஷன்

புதிதாக கிடைத்த சமயம். 2, 3 பேருக்கு ஒரே நம்பர் கொடுத்திருப்பா

போல இருக்கு. ஒரு நாள் காலை 9 மணிக்கு ஒரு போன்கால் வந்தது.

”லஷ்மி பாட்டி ஹை?” என்று ஒருகுரல் எதிர் சைடிலிருந்து.(ஹிந்தியில்)

நானும் எஸ் நான் லஷ்மி பாட்டிதான் பேசரேன். நீங்க யாரு பேசரீங்க?

எனக்கு ஒருடௌட் எனக்கு 4 பேரப்பசங்க உண்டு. யாருமே என்னை

லஷ்மி பாட்டின்னு சொல்லமாட்டாங்க. அம்மம்மா, தாத்தி,அம்பர்னாத் அம்மா

என்று வித,விதமா கூப்பிடுவாங்களே தவிர லஷ்மி பாட்டின்னு சொல்லவே

மாட்டாங்க. எதிர் சைட் ஆளு மேடம் இது ஔரத்ஆவாஜ்( இது பொம்பிளைக்குரலா

இருக்கு.) எங்க லஷ்மிபாட்டி பெரியகம்பெனியோட மேனேஜிங்க் டைரக்டர்.

நான் கம்பெனி மேனேஜர் பேசரேன். ப்ளீஸ் அவரைக்கூப்பிடுங்க. ரொம்ப அவசரமா

அவர்கிட்ட ஒரு விஷயம் பத்தி பேசணும். ரொம்பவும் அர்ஜண்ட். என்றார்.

எனக்கு திரும்பவும் மண்டைக்குடைச்சல். கண்டிப்பா இது நமக்கு வந்த கால் இல்லை

சார் ப்ளீஸ் என்ன பேருசொன்னீங்க? ந்னு திரும்பவும் கெட்டேன்.

என்னம்மா உங்க கூட பெரிய தொந்தரவாபோச்சு. எங்க சார் பேரு

“லஷ்மண் பாட்டீல்” உடனே அவரைக்கூப்பிடுங்க மேடம் என்றார் அழாக்குரையாக.

எனக்குப்புரிஞ்சுபோச்சு. இது ஏதோ ராங்க் நம்பர் என்று. அசடுவழிய சாரிசார்

ராங்க் நம்பர்னுசொல்லி போனைக்கட் பன்ணிட்டேன்.

இந்தசம்பவம் நினைச்சு சிரிக்காத நாளே கிடையாது. என் பேரப்பிள்ளைகள்

எல்லாரும் . என்ன லஷ்மி பாட்டீல் சௌக்கியம்மானு இன்னும் கல்லாய்க்கிராங்க.

இதுமட்டுமில்லை போன் வந்த புதுசுல, மௌத்பீசை காதிலும்,காதில்வைத்துக்கொள்

வதை வாய்ப்பக்கமும் வச்சுண்டு கூட காமெடி பீசாகி இருக்கேன்.

ப்ளாக்ல சீரியஸ்மேட்டர்தான் எழ்தனுமா என்ன? அப்பப்ப இப்படி சில காமெடி பீஸ்

                                 எழ்தி நம்மை ரிலாக்ஸ் பண்ணிக்கலேமே? என்ன சொல்ரீங்க

15 comments:

Ramani said...

சுவாரஸ்யமான பதிவு
படிக்காத பதிவுகள் எல்லாம் புதிய பதிவுகள்தான்
இதுபோன்ற சுவாரஸ்யமான பழைய பதிவுகள்
இருந்தால் தாராளமாக மீள் பதிவிடலாம்
இப்போதெல்லாம் நல்ல பதிவரின் பதிவுகளாக
இருந்தாலும் நடப்பில் உள்ள பதிவு தாண்டி
ஒரு பதிவு கூட உள்ளே செல்வதில்லை
சுவாரஸ்யமான பதிவு.வாழ்த்துக்கள்

Ramani said...

tha.ma 1

Anonymous said...

திருமதி லட்சுமி அவர்களுக்கு,
வேடிக்கையான பதிவு. நிஜ வாழ்வில் இது போல எத்தனையோ முறை நாம் எல்லோருமே காமெடி பீஸ் ஆகியிருப்போம். அவரவர்கள் அனுபவங்களை எழுதலாம். எனக்கும் இந்த மாதிரி ஒரு வேடிக்கை நடந்திருக்கிறது. அதை எழுதுகிறேன்.
அன்புடன்,
ரஞ்சனி

vanathy said...

Super & very funny post, aunty.

வெங்கட் நாகராஜ் said...

”வெங்கட் சார்” அது எதுக்கும்மா சார் வேற... :(

நீங்க வெங்கட்னே சொல்லலாம்...

லக்ஷ்மி பாட்டீல்.. :) நல்ல நகைச்சுவை. முன்பே படித்த நினைவில்லை! படித்து ரசித்தேன்.

Athisaya said...

எனக்கு இது புதிய பதிவு தான்..!அருமையாக உள்ளது.

Lakshmi said...

ரமணி சார் ஒரு வருஷம் முன்பு போட்ட பதிவுகளில் நிறைய சுவாரசியம் காமெடி கலந்து இருக்கு. உங்க கமெண்ட் பார்த்ததும் அதெல்லாம் தூசி தட்டி போடலாம்போலதான் இருக்கு. ரெகுலரா வந்து கருத்து சொல்லி ஒட்டும் போட்டு என்னை உற்சாகப்படுத்துவதற்கு நன்றி

Lakshmi said...

ரஞ்சனி உங்க அனுபவமும் சொல்லுங்க நாங்களும் சிரிக்கிரோம். வருகைக்கு நன்றி

Lakshmi said...

வானதி எங்க போனே ரொம்ப நாளா காணோமே வருகைக்கு நன்றி

Lakshmi said...

வெங்கட் ஒக்கே இனி வெரும் வெங்கட் தான் சார் இல்லே போதுமா? வருகைக்கு நன்றி

Lakshmi said...

அதிசயா வருகைக்கு நன்றீ

துளசி கோபால் said...

;-))))))))))))))0

Lakshmi said...

துளசி கோபால் ஹா ஹா ஹா

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்... சுவாரஸ்யமான பதிவு அம்மா ...

பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...(த.ம. 4)

Lakshmi said...

திண்டுக்கல் தனபாலன் வருகைக்கு நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...