Pages

Back to Top

மே டே நிகழ்ச்சிகள்.

ஒரு 40- வருடங்கள் முன்பு மத்தியபிரதேசத்தில் இருக்கும் கமேரியா என்னும் இடத்தில் இருந்தோம்.அந்தகால கட்டத்தில் டி. வி. , கம்ப்யூட்டர், மொபைல் போன் இந்த வசதிகள் எதுவும் வந்திருக்கவில்லை. ஆபீசும் விட்டா வீடும்தான் ஒரே பொழுது போக்கு.. தீபாவளி, பொங்கல்,யுகாதி, மேடே என்று சில பண்டிகைகள் சமயங்களில் அங்குள்ள பெரிய மைதானத்தில் மேடை அமைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். ஏதோ திருவிழாவுக்கு போவதுபோல எல்லாரும் போய் ஆர்வமாக கலந்து கொள்ளுவோம். அந்தவருட மே டே ஃபங்க்‌ஷனுக்கும் அப்படியே எல்லாரும் போனோம். மாலை 7- மணி அளவுக்குதான் நிகழ்ச்சிகள் ஆரம்பிப்பார்கள். பார்வையாளர்கள் பகுதியில் அன்று சேர் எல்லாம் போடமாட்டார்கள் உழைப்பாளர்கள் தினம் என்று எல்லாரும் கீழேதான் உக்காரனும். நாங்களும் 7-மணிக்கு திடலுக்கு போனோம். எங்களைப்போலவே நிறையாபேரு வந்து திடலில் கூடி இருந்தார்கள். கலை நிகழ்ச்சி நடத்துபவர்கள் மேடையில் சங்கீத கச்சேரி நடத்த மைக், ஸ்பீகர் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் எல்லாம் அடுக்கி கொண்டிருந்தார்கள்.



எல்லாரும் சிரித்து பேசி மேடையை கவனித்துக்கொண்டிருந்தோம். கூட்டம் நிறைய சேர்ந்த்துவிட்டது. முதலில் யூனியன் லீடரில் ஒருவன் மைக் பிடித்து பேச ஆரம்பித்தான். பாயியோ, ஔர் பெஹனோ ஏற்கனவே நிறைய நேரம் ஆச்சு. ஆனாலும் உங்க மத்தியில் எனக்கு கொஞ்சம் பேசவேண்டிய விஷயங்கள் இருக்கு. தயவு செய்து யாவரும் கொஞ்சம் பொறுமையாக இருக்கவும் என்று சொல்லிவிட்டு பேச்சை ஆரம்பித்தார். இன்று உழைப்பாளர் தினம் அதாவ்து மஸ்தூர் திவஸ்.. நேற்று என்னை வேலையில் இருந்து ஸஸ் பெண்ட் பண்ணி இருக்காங்க.காரணம் நாங்க தொழிலாளர்கள் ஸ்ட்ரைக்கில் இறங்கினோம் என்று. எங்களுக்கும் ஸ்ட்ரைக்செய்ய விருப்பமா என்ன?இல்லவே இல்லே. எங்கள் தேவைகளை மேலிடத்தில் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்ல முடியும்? அதை நிறைவேற்றாமல் நாங்க சொல்லும் நியாயமான காரணங்களைபுரிந்து கொள்ளாமல் எங்கள் கோரிக்கைகள் மேலிடத்தில் மறுக்கப்படுகிரது. ஆபீசரும் ஜெனரல் மேனேஜரும் என்ன செய்யுராங்க காட்டிய இடத்தில் கையெழுத்து போடுவதுடன் அவங்க வேலை முடிஞ்சு போகுது. ஆனா அவங்களுக்கு தேவையான வேலைகளை செய்துகொடுப்பது எங்களைப்போல தொழிலாளர்கள் தானே. அப்போ எங்க தேவைகளை கவனிக்க வேண்டியது அவங்க கடமை இல்லியா. அவங்க கண்டுக்காம போகும்போது வேர வழியில்லாமதானே நாங்க வேலை நிறுத்தத்தில் இறங்க வேண்டி வருது.?எங்களுக்கும் குடும்பம் குழந்தைகுட்டிக இருக்காங்க. செய்யுர வேலைக்கு கூலியை கொஞ்சம் உயர்த்தி கொடுங்கன்னா அதெல்லா முடியாதுங்குராங்க நாங்க இல்லாம இவங்களால இந்த ஃபேக்டரியை நடத்தமுடியுமா?

தட்டி கேட்டதுக்குத்தான் எனக்கு ஸஸ்பெண்ட் உத்தரவு. இன்று உழைப்பாளர்கள் தினம் கொண்டாடுவதாகவே இல்லே. ஆனாலும் உங்க எல்லாருக்கும் எங்க நியாயமான கோரிக்கைகள் தெரியபடுத்த இதை விட்டா வேர வழி தெரியல்லே. எங்க கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும் வரையிலும் நாங்க போராடிட்டுதான் இருப்போம். பாயி யோ பெஹனோ உங்க வீட்டிலும்  உங்க அப்பா, அண்ணா,தம்பி, கணவர் யாரானும் நம்ம பேக்டரில் வேலை செய்பவராகத்தான் இருப்பார் இல்லியா?அவர்களிடமுசொல்லி எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க சொல்லுங்க.. என்று அவர்கள் பக்கத்து நியாயத்தை அழுத்தமாக பேசினார். கூட்டத்தில் எல்லாருமே நிசப்தமாக அவரின் பேச்சைக்கேட்டார்கள். அவர் பேச்சில் நியாயம் இருப்பதாகவே அனைவரும் நம்பினார்கள். அவரின் பேச்சு முடிந்ததும் ஆர்க்கெஸ்ட்ரா காரர்கள் வரிசையாக் சினிமா பாட்டுக்கள் பாடத்தொடங்கினார்கள் நல்லாவே பாடினார்கள் சிறியவர்கள் எல்லாரு எழுந்து கைதட்டி ஆடவே தொடங்கினார்கள் இறுக்கமான சூழ் நிலை உற்சாகமான பாடல்களால் சந்தோஷ மூடுக்கு மாறியது, விசில் சத்தம் கூடவே சேர்ந்து பாடினார்கள்.
ப்ரோக்ராம் முடியவே இரவு 1-மணி ஆனது. மே டே ப்ரோக்ராம்னா எப்படி இருக்குனுதான் நாங்க பாக்கப்போனோம். இனிமையான மாலைப்பொழுதாகவே அமைந்தது.
 அனைவருக்கு மே தின வாழ்த்துகள்.

8 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இன்று உழைப்பாளர்கள் தினம் கொண்டாடுவதாகவே இல்லே. ஆனாலும் உங்க எல்லாருக்கும் எங்க நியாயமான கோரிக்கைகள் தெரியபடுத்த இதை விட்டா வேற வழி தெரியல்லே//


அவர் சந்தர்ப்பத்தைப் சரியாகவே பயன் படுத்திக் கொண்டுள்ளார்.

நல்ல பகிர்வு.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வும்மா...

குறையொன்றுமில்லை. said...

கோபால் சார் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கு நன்றி

vanathy said...

நல்ல பதிவு, ஆன்டி.

radhakrishnan said...

ப்பஃளிசிட்டிக்கு நல்ல வழியைக் கண்டு
பிடித்துவிட்டாரே.பாராட்டலாம்.
நல்ல பகிர்வு நன்றி அம்மா

radhakrishnan said...

ப்பஃளிசிட்டிக்கு நல்ல வழியைக் கண்டு
பிடித்துவிட்டாரே.பாராட்டலாம்.
நல்ல பகிர்வு நன்றி அம்மா

குறையொன்றுமில்லை. said...

ராதா கிருஷ்னன் வருகைக்கு நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...