Pages

Back to Top

சினேகிதனே, சினேகிதனே........ 2

அடுத்த நாளே வீட்டு பெரியவர்களிடம் சொல்லிவிட்டு பெரிய பெண்ணீடம் வீட்டை கவனிச்சுக்க ச்சொல்லிவிட்டு வெங்கு இருக்கும் ஊருக்கு கிலம்பி போனார்கள்.வீட்டில் வெங்குவின் மனைவி ராதா மட்டு குழந்தைகளுடன் இருந்தா. எங்களைக்கண்டதும் வாங்கோ அவர் இப்ப தான் ஆபீஸ்வேலையா கல்கத்தா கிளம்பி போனார். என்றாள். ஓ, அப்போ என்ன பண்ரதுன்னு இருவருக்குமே யோசனை. இரவு தூங்க முடியாமல் படுக்கையில் ப்ரண்டு கொண்டிருந்தார்கள். இரவு 1- மணிக்கு காலிங்க் பெல் சத்தம் கேட்கவும் ராதா எழுந்து கதவைதிறந்தா. வெங்குதான் . வண்டில்லாம் ஓடலைன்னு ட்ரிப் கேன்சலாகி திரும்ப வீடுவந்தான். வாசு, லதாவுக்கு அப்பாடா இவன் வந்தது







நல்லதாச்சு காலைல பேசிக்கலாம்னு நிம்மதி யா இருந்தா. மறு நாள் காலை வெங்கு விடம் கல்யாணப்பத்திரிக்கை கொடுத்து பணம் தேவைப்படரதுன்னு வாசு சொன்னான். இவர்கள் எதிர்பார்த்ததுக்கு மாறாக வெங்கு ஒருமணி நேரம் தலையைக்குனிந்து யோசித்தவாரே இருந்தான். வாசு. இப்படி திடீர்னு வந்து பணம் வேணும்னு சொல்ரியே? நான் புது வீடு கட்டிண்டு இருக்கேன்பா. எல்லா பணமும் அதுல இன்வெஸ்ட் பண்ணிட்டேனே என்று இழுத்தாற்போல் கூறினான்.  அப்பவே வாசு, லதாவுக்கு இவன் பணம் தரயோசிக்கொரானேன்னு கலக்கமாக இருந்தது. வெங்கு முழு தொகை கூட நீதரவேண்டாம்பா, நவ்னீத்கூட நாங்க கேக்கும் முன்பே பணம் தந்தான். மீதி தான் உன்கிட்ட கேக்குரோம் என்றான். அதுவும் நீ முன்பே சொல்லி இருந்தே இல்லியா பொண்ணுக்கு கல்யாணம் என்றால் கண்டிப்பா உதவி செய்யரேன்னு. அதை நம்பிதானே இவ்வளவு தூரம் வந்தோம். என்றான் வாசு.


சரி வெங்கு நீ யோசிக்கரதைப்பார்த்தா உன்னால முடியாதுன்னு தெரியுது. ஹெல்ப் பண்ண முடியுமா முடியாதான்னு இப்பவே சொல்லிடு. நான் வேர யாரிடமாவது கேட்டு பார்க்கணும் டைம் வேர கம்மி யா இருக்கு. சரி வாசு நீ



உன் பேங்க் அக்கவுண்ட் நம்பர்தந்துட்டுபோ. நான் அனுப்பரேன்னு சொன்னான் வெங்கு. அதை நம்பிய வாசு நம்பர் எழுதிக்கொடுத்துவிட்டு உடனே கிளம்பிவிட்டான். . ஸ்டேஷனில் ரயிலில் அமர்ந்த வாசு லதாவிடம் எவ்வள்வு நம்பிக்கையா வந்தோம். இவன் இப்படி பண்ணிட்டானே. இவனை  எந்தம்பி போல நம்ம வீட்டில் முழு சுதந்திரத்தோட வச்சிருந்தோமே. நம்ம் பொண்ணுகல்யாணத்து அவன் உதவி செய்வான்னு எதிர்பார்த்தா அப்படி பார்த்துண்டோம் இல்லியே. ஒரு மனிதாபிமானம் தானே. எல்லாத்தையும் மறந்துட்டானே. போகட்டும். என்று வாசு புலம்பி கொண்டே வந்தான். ஊர்வந்தபிறகு யார் யாரிடமெல்லாமோ கையேந்தி கடன் வாங்கி கல்யாணத்தை சிறப்பாகவே நடத்தி முடித்தார்கள் அதுவரையிலும் வெங்குவிடமிருந்து பணமோ வேறு தகவலோ எதுவுமே வரலை

முடியாதுன்னா அதையும் வெளிப்படையாக சொல்லி இருக்க வேண்டியதுதானே. கடைசி நேரம் வரை இப்படி கழுத்தை அறுத்துட்டானேன்னு வாசுக்கு மனம் முழுதும் வேதனை. இவனை நினைக்கும்போது நவ்னீத்தையும் நினைக்கத்தான் வேண்டியிருக்கு. இடுக்கண் களைவதாம் நட்புக்கு நவ்னீத்தான் சரியான உதாரணம். இனியாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் வைக்கவே கூடாது..என்று வாசு நினைத்தான்.

13 comments:

Anonymous said...

படித்தேன் ரசித்தேன் அம்மா, நான் இந்தக் கதையில் கண்ட ஒரே பிழை எழுத்துப் பிழைகள் மட்டுமே. தொடர்ந்து எழுதுங்கள் தொடர்ந்து வருகிறேன்.

ஹுஸைனம்மா said...

எனக்கென்னவோ அவர் தன் நிஜமான இயலாமையை ”வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன்” என்று வெளிப்படுத்திவிட்டதாகவேத் தோன்றுகிறது. வீட்டைக் கட்டுவதும், கல்யாணம் பண்ணுவதும் ஒரே மாதிரியானது (செலவு, அலைச்சல்) என்றுதானே சொல்லிவச்சிருக்காங்க பெரியவங்க. மேலும் பணம் கொடுப்பதைவைத்து நட்பை அளவிடுவது சரியாகப் படவில்லை எனக்கு.

RAMA RAVI (RAMVI) said...

உடுக்கை இழந்தவன் கைபோல ---திருவள்ளுவர் சொன்னதுபோல இருக்க வேண்டும் நட்பு,என்று மிக அழகாக எடுத்துச்சொல்லும் கதை அம்மா. சிறப்பாக இருக்கு.

விச்சு said...

உண்மையான நண்பனை தெரிந்து கொள்ள கொஞ்சம் பணம் கேட்டாலே போதும் போல இருக்கிறது. நல்ல கதை.

குறையொன்றுமில்லை. said...

சீனு குரு வருகைக்கு நன்றி எழுத்துப்பிழைகள் சரிசெய்து கொள்கிரேன் சுட்டிக்காட்டியதற்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஹுசைனம்மா அவர் பணம் தர சவுகரியப்படாதுன்னு நேரிடையாக சொல்லி இருக்கலாம் இல்லியா?

குறையொன்றுமில்லை. said...

ரமா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

விச்சு வருகைக்கு நன்றி

Unknown said...

நல்லா இருக்கு லக்ஷ்மி அம்மா.. தொடருங்கள்.. உங்கள் சிறுகதைகளை..வாழ்த்துக்கள்..

குறையொன்றுமில்லை. said...

சதிஷ் பிரபு வருகைக்கு நன்றி

R. Jagannathan said...

கதை முடியவில்லையே? 2 மாதமாக பதிவுகள் இடவில்லையா? - ஜெ.

R. Jagannathan said...

கதை முடியவில்லையே? 2 மாதமாக பதிவுகள் இடவில்லையா? - ஜெ.

குறையொன்றுமில்லை. said...

ஜகன்னாதன் ஆமாங்க குறையொன்றுமில்லை ப்லாக்கில் பிசி ஆயிட்டேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...