Pages

Back to Top

பாடல்கள்.


9seetha kalyanam)


(maalai saaththinaal)


தை மாசம் கல்யாணமாசம் இல்லியா? கொஞ்சம் கல்யாணப்பாடல்கள்
பொங்கல் பாடல்கள் கொஞ்சம் பஜன் போட்டிருக்கேன்.

எங்கேயும், எப்போதும்..............

இந்த சண்டே(8-1-2012) மகன்கள் , மறு மக்ள்கள், பேரக்குழந்தைகளுடன் சேர்ந்திருக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.( பத்து வருடங்களுக்குப்பிறகு.) அதில் எங்க எல்லாருக்குமே ரொம்ப சந்தோஷம். அன்று திருவாதிரையாக வேரு இருந்ததா? பிள்ளைகள் எல்லாரும் அம்மா , நாங்க களி, தாளகம் வெண்ணையெல்லாம் சாப்பிட்டே 10- வருஷம் ஆச்சு. இன்னிக்கு எல்லாரும் சேர்ந்து இருக்கோம். களி தாளகம் எல்லாம் வேணும் என்றார்கள். இவ்வளவு ஆசையாக பசங்க கேக்கும்போது செய்து கொடுக்காமல் இருக்க முடியுமா?



காலை குளித்து மடியாக எல்லாம் செய்தேன். பசங்கல்லாம் ப்ரேக் ஃபாஸ்ட்டா சாப்பிட்டா கொஞ்சமாதான் சாப்பிட முடியும் . இதை லஞ்சுக்கு சாப்பிடலாம்னு சொல்லிட்டா அப்போதான் நிறைய சாப்பிட முடியுமாம். ஹா ஹா. சாபுதானா கிச்சடி ப்ரேக் ஃபாஸ்ட்டுக்கு பண்ணிக்கொடுதேன். பழயகதையெல்லாம் பேசினோம்..அம்மா, அப்பா இருக்கும் வரை எல்லா பண்டிகையும் க்ராண்டா பண்ணிண்டு இருந்தோம் என்னன்னென்ன பண்டிகைக்கு என்னல்லாம் பிரசாதம்லாம் பண்ணுவோம் அப்பா போனபிறகு ஆளுக்கொருபுற மாகபிரிஞ்சுட்டோம். என்னிக்கு என்ன பண்டிகைன்னே தெரிய மாட்டேங்குது. இயந்திர வாழ்க்கைக்கு பழக்கமாயிட்டோம். பண்டிகை நாட்களும் எல்லா நாட்களும் போல ஒரு சாதாரண நாளாதான் போகுது. அம்மாகைச்சமையல் டேஸ்ட் இன்னும் நாக்குலேயே ம் நிக்குதுன்னுலேல்லாம்பேசிண்டு இருந்தோம்.மதியம் எல்லாருமே ஆசை ஆசையா விரும்பி ரசித்து ருசித்து சாப்பிடுவதைப்பார்க்கும்போதே எனக்கும் மனசெல்லாம் நிறம்பிடுத்து.எல்லாரும் இப்போ 40+- வயசில் தான் இருக்கா. ஆனா அந்த நேரம் எல்லாருமே 10- வயசு குழந்தையாவே என் கண்களுக்குத்தெரிந்தார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...