Pages

Back to Top

வாழ்த்துக்கள்.

அனைத்து பதிஉலக நண்பர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய  தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்

ஆச்சரியம்

போனவருடம்  என்ஃப்ரெண்ட் போட்ட பதிவு இது. அப்போதான் பதிவு எழுத ஆரம்பித்த புதிது. இந்தப்பதிவு நிறையபேருபார்க்கலே. அதான் அவ என்கிட்ட  இப்பதான் உன்பக்கம் நிரையபேரு வராங்களே இது கொஞ்சம் சுவாரசியமா இருக்கே மறுபடி உன்ப்ளாக்கில் போடுன்னு சொன்னா. அவகேட்டதற்கு இணங்க அதையே மீள் பதிவா போட்டிருக்கேன். இப்ப இங்க நிறையபேரு வரீங்க இல்லியா எல்லாரும் படிக்கமுடியுமே அதான்.

கொஞ்ச நாட்கள் முன்பு ஒரு பண்டிகை நாளில்(சதுர்த்தியோ,ஜன்மாஷ்ட்மியோி நினைவில்லை)

என்ஃப்ரெண்ட் வீட்டில் சமயலுக்கு கத்தரிக்காய் கட்செய்தப்போ

மேலே உள்ளதுபோல ஓம் என்று ஹிந்தியில் தெரிந்ததாம்.

இது ஒருஆச்சர்யமான விஷயமாகத்தோன்றவே செல்லில்

போட்டோ எடுத்து எனக்கும் அனுப்பினா. நானும் சில ஃப்ரெண்ட்ஸ்

களுக்கு அதை அனுப்பினேன். அன்று அவ வீ்ட்டில் நட்ந்த விஷயங்களை

பொனில் சொல்லிசொல்லி ஒரே சிரிப்பு.


மின்சாரம்.... அது மின்சாரம்

போனவாரம் ஒரு வெள்ளிக்கிழமை காலை10-டு இரவு10- வரை கரண்ட்கட். இரவு10- மணிக்கு கரண்ட்வந்தது. இவ்வளவு நேரம் போயாச்சே இனிமேல போகாதேன்னு  நினச்சு இன்வெர்ட்டர், கார்ட்லெஸ்போன், மொபைல்போன், எல்லாம் சார்ஜ் பண்ண வச்சேன். கம்ப்யூட்டர் ஆன்பண்ணி உக்காந்தேன். சடன்னா 10.30-க்கு லைட் எல்லாம் ரொம்ப பவர்ஃபுல்லா கண் கூசும்அளவுக்கு பளிச்சுனு எரிஞ்சுது. ஃபேனும் எக்கச்சக்கஸ்பீடில் சுத்த ஆரம்பிச்சது. என்னது இப்படி இருக்கேன்னு ஒவ்வொரு ஸ்விச்சா ஆஃப் பண்ணலாம்னு நினைச்சு எழுந்துபோரதுக்குள்ள  ஒயர் ஒன்னொன்னா ஸ்பார்க் வர ஆரம்பிச்சு எல்லாம் இயக்கத்தை நிறுதிச்சு. ஸ்பார்க் வந்துண்டே இருந்தது  எனக்கா, என்ன பண்ணனும்னே தெரியல்லே. ஸ்விச் ஆஃப் பண்ண தொடவே பயமாச்சு. எங்கியானும் ஷாக் அடிச்சு நம்மை தூக்கி எரிஞ்சா என்ன பண்ண? இரவு நேரம் வேர எங்க போக என்ன பண்ணனு ஒன்னும் புரியல்லே.

Related Posts Plugin for WordPress, Blogger...