Pages

Back to Top

கல்யாணமாம் கல்யாணம் - 1

     சமீபத்தில் பாம்பேயில் ஒரு சொந்தக்காரா வீட்டு கல்யாணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பெண் வீட்டுக்காராளாக கல்ந்து கொண்டோம். பெண் வீட்டுக் கல்யாணம் என்பதால் கல்யாணத்துக்கு 4 - நாள் முன்பு சுமங்கலி பூஜை எல்லாம் முறையாக பண்ணினார்கள். அந்த ஃபங்க்‌ஷன் கோலிவாடா என்னுமிடதில் இருந்தது. ஆத்மார்த்தமாக, முறையாக எல்லாம் செய்தார்கள். பெண்ணின் அப்பாவுடன் பிறந்தவர் நவி மும்பை நெருல் என்னுமிடத்தில் வசித்து வந்தார். அவருடன் கூடப்பிறந்தவர்கள் 2 அண்ணா, 1 தம்பி. அந்த தம்பி வீட்டில் தான் பூஜை நடந்தது. எல்லாருமே குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டார்கள். 2 அண்ணாவும் வெளி நாட்டில் தோஹா கத்தாரில் இருந்து வந்திருந்தார்கள். சமையலுக்கும் ஆள் போட்டிருந்தார்கள். 

      அதிகாலையே எழுந்து எல்லா பெண்களும் அழகாக மடிசார்கட்டிண்டு குறிப்பிட்ட நேரத்தில் பூஜை ஆரம்பித்து சிறப்பாக நடத்தினார்கள். குட்டி குட்டி குழந்தைகள், பெரியவர்கள் என்று வீடு நிறையா மனுஷா நிறம்பி இருந்தா. சந்தோஷ கலகலப்பு, பேச்சு சிரிப்பு விருந்து சாப்பாடு எல்லாம் நல்லா நடந்தது. ஒவ்வொருவர் மும்பையின் ஒவ்வொரு இடத்தில் தங்கி இருந்தார்கள். சாப்பாடெல்லாம் முடிந்து அவரவர் தங்கி இருக்கும் இடம் சென்றார்கள். அந்தக் குடும்பத் தலைவரும் அனைவரையும் அன்பாக விசாரித்து வழி அனுப்பினார். மறு நாள் அந்தக் குடும்பத் தலைவரின் இரண்டாவது மகனின் பேரனுக்கு மட்டுங்கா குருவாயூரப்பன் கோவிலில் அன்னப்பிராசனம் பண்ணினா.    
        எல்லாரும் காலையில் சீக்கிரமே ரெடி ஆகி கோவில் போனோம். 6 மாச குழந்தைக்கு பட்டுகட்டி நெற்றியில் சந்தன நாமம் போட்டு குட்டி கிருஷ்ணன் போல க்யூட்டா இருந்தது. அப்பா அம்மா மடியில் குழந்தையை உக்கார வச்சு எல்லாரும் சோறு ஊட்டினோம். தங்க மோதிரத்தில் தேன் தொட்டு நெய்பாயசம் கொடுத்தோம். அதைச் சாப்பிடும் போது குழந்தை முகம் பார்க்க பரவசமா இருந்தது. அந்தஃபங்க்க்ஷன் முடிந்து எல்லாரும் பக்கத்தில் உள்ள ஹோட்டல் போயி ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டு அவரவர் தங்குமிடம் சென்றோம். என் எழுத்தை விரும்பி படித்துவரும் சிலர் என்னை ரொமப புகழ்ந்தார்கள். எனக்கு ரொம்ப வெக்கமா போச்சு.(ஹி, ஹி, ஹி) பிறகு வீடு வந்து எங்க பெட்டி எல்லாம் எடுத்துண்டு நேருல் கிளம்பினோம். 
          வீடு நேருல் ஸீஉட் பகுதியில் இருந்தது. பாம் பீச் ரோடில் லெசான மழைத் தூறலுடன் ஒருமணி நேர கார் பயணம் சூப்ப்ரா இருந்தது. வீட்டில் நிறைய சொந்தக்காரா கூட்டம். அண்ணாக்களின் சம்மந்திகள் அவர்களின் உறவுக்காரா, வெளிநாடுகளிலிருந்து இந்தக் கல்யாணத்தில் கலந்து கொள்வதற்க்காகவே வந்திருந்தா. சந்தோஷ கலகலப்பு. பேச்சு காபி டிபன் என்று டைம் போனதே தெரியலே. கல்யாணப் பெண்ணின் வயதுடைய அவ சொந்தக்கார பெண்கள் பட்டையைக் கிளப்பிண்டு இருந்தா. பாட்டு டான்ஸ் என்று அதகளம் தான். குட்டி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கும் சந்தோஷம் தொற்றிக்கொள்கிறது.
         டின்னருக்கு கேட்டரிடம் சொல்லி ஏற்பாடு செய்திருந்தா. வீடு நல்ல பெரிசா வசதியுடனே இருந்தது. கல்யாணப் பெண்ணும் அவதம்பியும் ஸோ ஸ்மார்ட். வந்திருந்த எல்லாரையும் அன்பாக உபசரித்து சிரித்து பேசி உற்சாகப்படுத்தி வந்தார்கள். பேச்சு சிரிப்புடனே டின்னர் முடிந்து கிடைத்த இடத்தில் அவரவர்கள் படுக்கை  விரித்து படுத்தோம். யாரு தூங்கினா. அரட்டைதான்  சளசள பேச்சுக்கள் சிரிப்புதான். மறு நாள் எல்லாரையும் சீக்கிரமே எழுப்பி விட்டா. அன்றுதான் சம்மந்தி வீட்டுக்காரா வரா. ஒவ்வொருவர் ஒவ்வொரு ஊர்லேந்து ஃப்ளைட், ட்ரெயின், டாக்சியில் வந்துகொண்டிருந்தா, ஒவ்வொருவரையும் சரியான நேரத்தில் போய் கூட்டிவர தகுந்த ஆட்களை அனுப்பி வருகிறவர்களை நல்ல வசதியான பெரிய வீடுகளில் தங்க வைத்து காபி, டிபன் சாப்பாடு எல்லாம் பாத்து பாத்து உபசரித்தார்கள் பெண் வீட்டு முக்கிய மனிதர்கள். மாப்பிளையும் சரியான நேரத்தில் வந்தார். 
          அன்று கல்யாணப் பெண்ணுக்கு மெஹந்தி ஃபங்க்‌ஷன் வைத்திருந்தார்கள். பக்கத்தில் உள்ள பெரிய வீட்டில் மெஹந்தி விட்டு விட 4  பெண்கள் ரெடியாக காத்துண்டு இருந்தா. முதலில் கல்யாண பெண்ணுக்கு  முழங்கை, முழங்கால் வரை மெஹந்தி இட்டார்கள். பெண்ணைப் பார்க்கவே அவ்வளவு அழ்கா இருந்தது. வந்திருந்த அனைவருக்குமே மெஹந்தி இட்டுக்கனும்னு சொல்லிட்டா. அப்போவும் ஆட்டம் பாட்டம் தான். அதுவும் குத்தாட்டம் செமை தூள் கிளப்பிட்டா. அதுவும் நம்ம தமிழ் பாட்டுக்களுக்கு அதுவும் குத்துப் பாட்டுக்களுக்கு எல்லாரும் அப்படி ஒரு ஆட்டம் போட்டா. கண்கொள்ளாக் காட்சிகள் தான். பெரியவா சின்னவா வித்யாசமில்லாம எல்லாருக்குமே மருதானி வச்சு விட்டா. ரெண்டு கையிலும் மருதாணி வச்சுண்டவால்லாம் செம காமெடி பண்ணினா எனக்கு தலேல சொரிஞ்சு விடு வாயில தண்ணி ஊத்து சாப்பாடு ஊட்டி விடுன்னு ஒரே ரகளைதான். சிலர் அன்று மாலை வரை வெளி ஊர்களில் இருந்து வந்து கொண்டே இருந்தா அவர்களை வரவேற்க மணப் பெண்ணின் தம்பி பொறுப்பா போயி கூட்டி வந்தான். 
         மதியம் க்ராண்ட் லஞ்ச். சாயுங்காலம் டீ ஸ்னாக்ஸ் முடிந்து எல்லாரும் ரெடி ஆகி கிளம்பினோம். வாஷி என்னுமிடத்தில் உள்ள பெரிய மால் ரகு லீலா. அங்கு ஒரு ப்ரோக்ராம் ஏற்பாடு செய்திருந்தா. 4, 5 கார்களில் எல்லாரும் கிளம்பினோம். மழை வேர ஜோரா கொட்டிண்டு இருக்கு. எங்க எல்லாரோட சந்தோஷத்தையும் பார்த்த வருண்பகவானுக்கும் குஷி கிளம்பிட்டது போல கொட்டி அடிச்சிண்டு இருக்கு மழை. அதுவும் ரசனைக் குறியதாகவே இருந்தது. பெர்ஃப்யூம் வாசனை எல்லாரிடமும். ஒவ்வொருவர் ஒவ்வொரு ஃப்ளேவர் போட்டிருந்தா. இந்தமேட்டர் எழுத ஆரம்பிச்சப்போ ஒரே பதிவா போடலாம்னு தான் நினைச்சேன். ஆனா கொஞ்சம் விரிவா நடந்தது எல்லாம் சொல்லி வருவதால் பதிவு நீளம் ஆதிகமா ஆரது. அதனால....
(தொடரும்)

33 comments:

கவி அழகன் said...

சப்பா இப்பவே கண்ண கட்டுதே

ஆமினா said...

first vote ;)

Priya said...

வாழ்த்துக்கள்!
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com

பலே பிரபு said...

தொடரட்டும்..... தொடர்கிறோம்...

Chitra said...

very nice to know.....

தொடருங்கள்!

Lakshmi said...

கவி அழகன் வருகைக்கு நன்றி. கண்ணைக்கட்டுதேன்னா என்னங்க
?

Lakshmi said...

ஆமி முதல் ஓட்டுக்கு நன்றி.

Lakshmi said...

ப்ரியா வருகைக்கு நன்றிம்மா.

Lakshmi said...

பிரபு, தொடருங்க, தொடருங்க, தொடர்ந்து வந்துகிட்டே இருங்க.

Lakshmi said...

வருகைக்கு நன்றி சித்ரா.

சி.பி.செந்தில்குமார் said...

பதிவு ஓக்கே, ஆனா படங்கள் இன்னும் தெளிவா இருக்கனும்,

RAMVI said...

அவர் அவர் வீடுகளில் உள்ள வழக்கங்களை விடாமல் (சுமங்கலி பிரார்தனை, அன்னப்ப்ராச்சனம் போன்றவை)எல்லோரையும் அழைத்து செய்வது நன்றாக இருக்கு.
நீங்க எழுதுவது நாங்களும் நேரில் திருமண விழாவில் கலந்து கொண்ட உணர்வினை தருகிறது லக்‌ஷ்மி அம்மா. தொடருங்கள்.

Lakshmi said...

ஆமா செந்தில் படங்கள் ஆல்பத்தில்
தெளிவாதான் இருக்கு. ப்ளாக்ல
அப்லோட் பண்ணும்போது இப்படி
ஷேக் ஆன மாதிரி வருதே.எப்படி
சரி செய்யனும். சொல்ரேளா.

Lakshmi said...

ரமா வருகைக்கும் கருத்துக்கும்
நன்றிம்மா.

Lakshmi said...

ரமா வருகைக்கும் கருத்துக்கும்
நன்றிம்மா.

தமிழ்வாசி - Prakash said...

கல்யாணமாம் கல்யாணம் சூப்பர் கல்யாணம்...

அடுத்த பார்ட் எப்போ வரும்? வெயிடிங்

Lakshmi said...

பிரகாஷ் தேங்க்ஸ்.

சி.பி.செந்தில்குமார் said...

இப்போ கரெக்ட்டா இருக்கு.. நீங்க ஒரிஜினல் இமேஜை அப்படியே போடாம பெரிசு பண்ணி இருப்பீங்க. இப்போ கரெக்ட்டட்.. குட் அண்ட் நீட்

Lakshmi said...

ஆமா செந்தில் நீங்க சொன்னது சரிதான்
அப்பப்போ இப்படி சுட்டி காட்டினாதானே
தவறு சரி செய்துக்கமுடியும் இல்லியா?
நன்றி.

Sumitra srinivasan said...

mami
manu foto pottu kritika kalyanam pathi manu anna pravachanam pathi ezhudinathuku romba thanks

ஹுஸைனம்மா said...

”ஹம் ஆப்கே ஹேன் கோன்” படம் போல, விவரிச்சு சொல்றது நல்லாருக்கு லஷ்மிம்மா.

Lakshmi said...

சுமி இப்பதான் உனக்கு மெயில்
அனுப்பிட்டு இங்க வந்தேன்.
நீ படிச்சு கமெண்டேபோட்டுட்
டே. சந்தோஷம்.

Lakshmi said...

ஹுஸைனம்மா ஆமாம்மா.
அப்படியேதான் இருந்தது,

renu said...

Amma so nice to c this...

renu said...

Amma super a iruku wink...

renu said...

Amma super a iruku wink...

Lakshmi said...

renu thanks

அமைதிச்சாரல் said...

ஹையோ!!.. நவி மும்பைக்கு வந்திருந்தீங்களா.. அதுவும் வாஷி, நெருல்!!!.. கல்யாண விவரணைகள் அசத்தல். ஜூப்பரு :-))

Lakshmi said...

ஆமா அமைதிச்சாரல் வஷி தான் வந்தேன். நீங்க கூட நவி மும்பைன்னு நினைவிருந்தது. எங்கன்னு சரியா தெரிஞ்சிருந்தா நாமளும் மீட் பண்ணி யிருக்கலாமில்லே?

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகான வர்ணனைகள். நேரில் கலந்து கொண்டதுபோல மகிழ்ச்சியாக உள்ளது. என் எல்லாக்குழந்தைகளும், பேத்தி பேரன்களும் ஊர்களிலிருந்து வந்துள்ளதால் என் வீடும் இப்போது ஒரே கலகலப்பாக உள்ளது. இந்த ஆகஸ்டு மாதம் முடிய இங்கும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். அதனால் தான் இந்தத்தங்களின் பதிவைப்படிக்க தாமதம் ஆகிவிட்டது. அன்புடன் vgk

புலவர் சா இராமாநுசம் said...

அன்புச் சகோதரிக்கு முதற்கண், வணக்கம் வாழ்த்து நன்றி!
வலைக்கண் வந்தீர் கருத்துரை
தந்தீர்!
மருந்துண்டு வாழும் எனக்கு
தங்கள் பதிவின்மூலம் விருந்துண்டு
மகிழ வைத்தீர்
நாளும் வருவேன் நல் விருந்து
உண்ண
வருக! நீரும் தருக கருத்துரை
புலவர் சா இராமாநுசம்

Lakshmi said...

கோபால் சார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஏன் வரலைன்னு நினைச்சுண்டே
இருந்தேன்.ஆத்துல குழந்தைகள்
வந்திருக்காளா. எஞ்சாய்.ஹா ஹா

Lakshmi said...

ஐயா, வருகைக்கு நன்றிங்க. ரொம்ப
அழகா பின்னூட்டம் கொடுத்திருக்கீங்க.
நல்லா இருக்கு. அடிக்கடி வாங்க ஐயா.

Related Posts Plugin for WordPress, Blogger...