Pages

Back to Top

கோபம்(2)

இன்றைய கோபம்,  B.S.N.L.  காரங்க மேல. நான் ரெண்டு வருஷமா போன் பில்
  E.C.S. மூலமாகத்தான் கட்டி வரேன். இவ்வலவு நாளா எல்லாம் சரியாதான்
இருந்தது. இந்தமாதம் போன் பில் 5000-ரூபாய்க்கு வந்தது.எனக்கு ஒரே ஷாக்
என்னது இது இவ்வளவு பில் எப்படி? என்று மண்டைக்குடைசல்.பேங்க் பாஸ்
 புக் எண்ட்ரியை பார்த்தேன். நாலு மாசமா பில் கட் பண்ணவே இல்லே. நானும்
 பாக்கலே. பேங்க்ல போயி கேட்டேன்.  B. S. N. L காரங்க பில் அனுப்பலே, நாங்களும் கட்டல்லேங்கராங்க. போன் ஆபீசுக்குப்போயி கேட்டேன். எனக்கு
எப்பவும் குழந்தைகள் எல்லாரும்தான் போன் பண்ணுவாங்க .நான்யாருக்குமே
 பண்ண மாட்டேன். அப்படி இருக்க இவ்வள்வு பில் எப்படி வரும்??அங்கபோனா
 அவங்க E. C. S. பத்தி என்கொயரி கல்யாண்லபோயி போன் ஆபீசில் கேளுன்னு
 சொல்லிட்டாங்க.அம்பர் நாத்லேந்து கல்யாண் 20 கிலோ மீட்டரில் இருக்கு.
லோக்கல் ட்ரெயின் பிடித்து போனேன். ஆபீஸ்போரவா கூட்டம் வண்டில
 நிக்கக்கூட இடம் இல்லே.10.30-க்கு போனேன். சீட்ல யாருமே வந்திருக்கலை.
 வெயிட்டிங்க தான். 11.30-க்கு ஆடி அசைஞ்சுண்டு வரா. நான் என் ப்ராப்லம்
 சொன்னேன்.

போராட்டம்

ஜபல்பூரில் 5வருஷம் இருந்துட்டு சந்த்ரபூர் வந்து 10 வருடம் இருந்தோம்.
 ரெண்டாவதுமூனாவது பையன் இருவரும் பத்தாவது முடிந்ததும் பாம்பே
 போயி பாண்டுப் என்னுமிடத்தில் ஒரு ஒரு சாலில் ஒரு ரூம் வாடைகைக்கு
 எடுத்துண்டு ப்ரைவேட்கம்பனியில் வேலை தேடிண்டா. நெருங்கிய சொந்தக்
காரா வேலை கிடைக்க ஹெல்ப் பண்ணினா. 10டு5 ஆபீசில் வேலை. 6டு 9
நைட் காலேஜில் மேற்படிப்பு. காலை 5மணிக்கு எழுந்து சப்பாத்தி பாஜி பண்ணி
 பால்கவரில் சுருட்டி எடுத்துண்டு பேண்ட் பாக்கெட்டில் வச்சுண்டு போவா,10
மணி ஆபீசுக்கு 8 மணிக்குள்ள கிளம்பனும்.இரவு வரும்போது 11,, 12 ஆயிடும்.
 வந்து இரவு சாப்பாடு பண்ணி சாப்பிடனும். மழை நாள்னா இரவு ரொம்பவே
 நேரம் ஆகும். அண்ணன் தம்பியிடம், வீட்டுக்குப்போயி சமைக்க நேரமில்லே
 ஆலுக்கு ஒரு க்ளாஸ் பால் மட்டும் குடிச்சுட்டு போலாம் என்பான். தம்பியோ
 போடா பால் குடிச்சா ல்லாம் பசி அடங்காது. ரெண்டுக்ளாஸ் பால் 10 ரூவா
 ஆகும் அதுக்கு ஒருடசன் பழம் வாங்கி ஆளுக்கு 6, 6 சாப்பிடலாம் என்பான்.

 எந்த பொழுதுபோக்குகளிலும் மனசை திருப்பாமல் , ஒரு கெட்ட பழக்கங்களுக்கும் அடிமை ஆகாமல் முன்னுக்கு வரணும் என்ற வெறியோட
கடுமையான உழைப்புஎன்றே 10 வருடங்கள் ஓட்டினார்கள். அந்தவயசுக்கு
இவ்வளவு கட்டுப்பாடு. பாராட்டவேண்டிய விஷயம். அப்படி கஷ்ட்டப்பட்டதுக்கு இன்று இருவருமே நன்றாக இருக்கா. அவர்கள் நாலு
 பேருக்கு வேலை கொடுக்கும் நிலமைக்கு உசந்திருக்கா. கல்யாணம்
குழந்தை குட்டின்னு எல்லாரும் நல்லா செட்டிலாயிட்டா.

போராட்டம்(2)

பிறகு இவருக்கு மாத்தல் உத்திரவு வந்தது. குழந்தைகளி  படிப்பு காரணத்தினாலஒ
இவர் முதலில் கிளம்பி போனார். ஒருவருஷம் கழிச்சு  நாங்க போனோம்.
 பூனாவில் க்ளைமேட் எப்பவுமே கூலாகவே இருக்கும். ஜபல்பூரில்  எல்லா
க்ளை  மேட்டுமே எக்ஸ்ட்ரீம். நாங்கபோனது நல்ல வெய்யில் காலம். வெய்யில்
 நாஅப்படி ஒரு வெய்யில். உடம்பெல்லாம் கொதிக்கும்.வீட்லயும் தரை  யெல்லாம் கொதிக்கும்  . சாயங்காலம் மொட்டை மாடியில்  த்ண்ணீர் ரொப்பி
வைத்து இரவு  அலம்பி விட்டு அங்கதான் படுக்க முடியும்.வாரம் ஒரு முறை
தான் மார்க்கெட்டில் எல்லாம் கிடைக்கும்.எங்களுக்கெல்லாம் வெய்யில்
 ஒத்துப்போகாம சன் ஸ்ட்ரோக்கே வந்தது.  ஐயோ இங்உள்ளவங்கல்லாம்
 எப்படிதான் இருக்காளோன்னுதான் நினைக்கத் தோனிச்சு.  அப்படி  ஒரு
வெயில் இதுலயும் ஒரு   நல்லது, நடந்தது. பையனின் தோல் பிரச்சனை
  காணாமலே போச்சு.

போராட்டம்(1)



போன பதிவில் என் முதல் மகனின் வாழ்க்கை அனுபவங்களைபகிர்ந்து கொண்டேன். இப்போ 2,3- வது மகன்களின் அனுபவம்.ரெண்டாவது மகன் என் அம்மாவிடம் 5 வருடங்கள் வளர்ந்தான்.தமிழ் மீடியம் படிப்பு.3-வது மகன் 4 வயது வரையில் நல்லா வேஇருந்தான். பிறகு கொஞ்சம் ஹெல்த் ப்ராப்ளம் ஆரம்பமாச்சு.

கோபம்



முதலில் என்கோபம், பேங்க் காரங்கமேல. நான் கடந்த 20 வருஷமாக பென்ஷன்(ஃபேமிலிபென்ஷன்) பேங்க் போய் வாங்கிண்டு இருக்கேன்.பென்ஷன் ஹோல்டர்னா ஒவ்வொரு மாசமும் பாஸ்புக்ல எண்ட்ரி இருக்கணும்.காலை10 மணிக்குபோயி டோக்கன் வாங்கிண்டு ஒருமணி நேரம் க்யூவில் கால்கடுக்க நின்னுபணம்வித்ட்ரா பண்ணிட்டு, வேற கவுண்டர்போயி பாஸ்புக்ல என்ட்ரிபண்ணவும்பெரியக்யூவில் அரைமணி நேரம் நின்னு என்ட்ரியும் பண்ணிட்டு வருவேன்.முதல் வாரம் கூட்டம் இருக்கும் என்று 10- தேதிக்குமேலதான் போவேன். யாரிடமும் ஹெல்ப்புக்கு போகமாட்டேன். எல்லாருமே தெரிந்த முகங்கள்தான். யாரும் வன்து ஹெல்ப்பும் பண்ணமாட்டாங்க. இதுல ஒவ்வொரு வருஷமும் நவம்பர்மாதம்லைஃப் சர்ட்டிபிகேட்கொடுக்கணும். நான் உசிரோடதான் இருக்கேன் வேற ஒருஇடத்திலும் வேலை எதுவும் பாக்கறதில்லைனு ஒருஃபார்ம் ஃபில் பண்ணி கொடுக்க்கணும். அதையும் கரெக்டாவே கொடுப்பேன். இப்ப கடந்த நவம்பரில்ஃபார்ம் ஃபில் அப் செய்து கொடுக்கும்போது தலைவலி ஆரம்பம் ஆச்சு.




நீங்கதான் லஷ்மின்னு என்ன நிச்சயம். அதுக்கு என்னப்ரூஃப்? நீங்கதான் லஷ்மிஎன்பதை ஒரு க்ரேட் ஒன் ஆபீசர் கிட்டேந்து லெட்டர் வாங்கி வாங்க அனாதான்உங்க ஃபார்ம் ஏத்துப்பொம் என்று சொல்லிட்டாங்க. நானும் எவ்வளவோ சொல்லிப்பாத்தேன். எவ்வளவு வருஷமா பென்ஷன் வாங்கிண்டு இருக்கேன்இங்க உள்ளவங்க எல்லாருக்குமே என்னை நல்லா தெரியுமே என்றேன்.அவங்க காதிலேயே வாங்க தயாரா இல்லை. பேங்க் ஆர்டர் இது நீங்க கோவாபரேட் பண்ணுங்க மேடம்னு சொல்லிட்டாங்க. வீடு வந்து பையனுக்கு போன்பண்ணீ சொன்னேன்.பேங்கலயே யாரும் க்ரேட் ஒன் ஆபீசர் இல்லியா ஆவரிடம்கேட்டு பாருங்க. என்றான் . பேங்க் காரா அப்படி சர்டிபிகேட் எல்லாம் தர மாட்டாளாம்.




சரின்னுபையன்ஒருக்ரேட்ஒன்ஆபீசரைத்தேடிப்பிடிச்சுஎன்னைப்பற்றிசொல்லிஒரு சர்டிபிகேட்டும் வாங்கி தந்தான். வேடிக்கை என்னன்னா அவரு யாருன்னுஎனக்குத்தெரியது, நான் யாருன்னு அவருக்குத்தெரியாது. ஆனா சர்டிபிகேட்லஇவங்கதான் லஷ்மி, இவங்களை எனக்கு கடந்த 10 வருஷமா தெரியும் என்றுஎழுதிக்கொடுத்தார். பேங்க்ல கொண்டு கொடுத்ததும் அக்செப்ட் பண்ணிட்டாங்க.பென்ஷனும் ஒழுங்கா வர ஆரம்பித்தது. இது என்ன அசட்டுத்தனம். நான் முழுசா போயி நின்னு நாதான் லஷ்மின்னா உண்மையை நம்ப மாட்டாங்களாம்.யாரோ முகம் தெரியாத க்ரேட் ஒன் ஆபீசர் எழுதிக்கொடுக்கும் ”பொய்”சர்ட்டிபிகேட்டத்தான் நம்புவாங்களாம்.




சரிமாசாமாசம்இப்படிகாலகடுக்கக்யூலநின்னுஅவஸ்தைப்படவேண்டாமேன்னுஒரு ஏ. டி. எம் கார்டுக்கு அப்ளிக்கேஷன் பண்ணி கொடுத்தேன்.ஜனவரி10-தேதிக்கு ப்ஃஃர்ம் ஃபில் பண்ணி கொடுத்தேன்.அங்க உள்ள மேடம் 15- நாள்லகார்டு கிடைக்கும்னாங்க. நானும் வெயிட் பண்ணி பாத்தேன். அடுத்தமாதமும்கார்டு வல்லை. வழக்கம்போல பேங்க் போயி ஒன்னரை மணி நேரம் க்யூல நின்நு பணம் வித்ட்ரா பண்ணி பாஸ்புக் எண்ட்ரியும் பண்ணிட்டு அந்தமேடத்தைதேடினேன். அவங்க டேபிள் காலியா இருந்தது. பக்கத்து டேபிள் மேடமிடம்நான் ஏ. டி. எம் கார்டுக்கு அப்ளை பண்ணி ஒருமாசம் ஆச்சு கார்டுவல்லியேன்னுகேட்டேன். அவங்க அலட்சியமா எல்லாம் வரும்போது வரும்னுட்டாங்க.




அதுக்கு அடுத்தமாசமும் இதே கதை. அப்படியா மூணூ மாசம் ஆகியும் கூடகார்டு கிடைக்கலை. இப்ப இந்தமாசம் சீக்கிரமே பேங்க் போனேன் அந்த ஏ. டி. எம்டேபிளில் மேடம் இருந்தாங்க. நேரா அவங்ககிட்டபோயி கேட்டேன். அவ லெட்ஜர் எல்லாம் எடுத்துபாத்துட்டு மேடம் உங்க கார்டு ஜனவரி 25-ம் தேதியே வந்தாச்சே, என்று சொல்ரா. நான் மாசாமாசம் வந்து கேட்டுகிட்டே இருந்தேனேயாருமே சரியா பதிலே சொல்லலியென்னேன். அந்தன்தடேபிள்ள இருக்கரவங்களுக்கு அவங்கவங்க வேலை பத்தி தான் தெரியும். எல்லா டேபிள் வேலையும்தெரியாது. நீங்க நேரா என்கிட்ட கேட்டிருக்கணும் என்று சொன்னா. நான் வந்தநேரம் இந்தடேபிள் காலியா இருந்தது அதனால பக்கத்து டேபிள் மேடம் கிட்டகேட்டேன். என்றேன்.தவிர பாஸ்வேர்ட் போஸ்ட்ல வருனு சொன்னாங்களேஎன்ரேன். யாரு சொன்னா அப்படி, அதெல்லாம் ஒன்னுமில்லை நீங்கபேங்க்லவந்துதான் கலெக்ட் பண்ணிக்கணும் என்கிரா.எப்படியோ கார்ட் கையில் வன்தாச்சு.இனிமேலதான் யூஸ்பண்ண ஆரம்பிக்கணும்.

எதிர் காலம் (7)



நாமக்கல்லில் இப்படி 5 வருடங்கள்.பிறகு ஈரோடு டிரான்ஸ்பர் வந்தது.
அதேபோல வீடுதேடும் படலம் குழந்தைக்கு ஸ்பெஷல் ஸ்கூல் தே
டும் படலம். பாங்கிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் வாடகைக்
கு வீடு எடுத்து, செட்டிலான பிறகு குழந்தைக்கு ஸ்பெஷல் ஸ்கூல்
எங்க இருக்குன்னு தேடல். நாங்க இருக்கும் இடத்திலிருந்து 15 கிலோ
மீட்டர் தொலைவில் திண்டல்னு ஒரு இடத்தில் ஒருஸ்கூல் இருந்தது.
சக்திமசாலா தயார் செய்பவர்கள்தான் அந்தஸ்கூலை நடத்தி வந்தார்
கள். அங்கபோய்க்கேட்டோம். இங்க அட்மிஷனுக்கு காசெல்லாம் வாங்கரது
இல்லை இதை ஒரு தொண்டாகவே நடத்தரோம். ஒரே கண்டிஷன் என்னன்னா
குழந்தையின் அம்மாவும் அவன் கூட 10- டு 4 இங்கியே தங்கனும் என்றார்கள்.
குழந்தையின் அம்மாவுக்கோ உடல் நிலை அதற்கு இடம் கொடுக்கலை.

Related Posts Plugin for WordPress, Blogger...