Pages

Back to Top

எதிர்காலம்(6)



குழந்தையை வீட்டுக்கு கூட்டி வந்ததுமுதல் அவனுக்கு ட்ரெயினிங்க் கொடுப்பதிலேயே நாளின் பெரும்பகுதி கழிந்தது.வீட்டுக்கு யாராவது வந்தா எல்லாரும் மராட்டியிலும்ஹிந்தியிலும் பேசுவது குழந்தைக்கு ரொமவே குழப்பமாச்சு. அதனால என் பையன் பேங்கில் போய் தமிழ் நாட்டுக்கு டிரான்ச்பர் கேட்டான். பூனாவில்தான் ஹெட் ஆபீஸ்இருக்கு அங்க போயி பெரிய ஆபீசரைப்பாருன்னு சொன்னாங்க. அவனும் பூனா போயி

பெரிய ஆபீசரிடம் மகனின் ப்ராப்ளம் பற்றி சொல்லி தமிழ் நாட்டுக்கு டிரான்ஸ்பர்வேணும்னு கேட்டான். ஒரே ஸ்டேட்னா ஈசியாமாத்தலாம். தமிழ் நாடு கேக்கரீங்களேபோகவ்ர மத்தசெலவுகள் நீங்கதான் ஏத்துக்கணம். பேங்க் கொடுக்காது என்றார். எப்படியாவது மாத்தல் கொடுங்க சார்னு கெஞ்சி, கூத்தாடி 6 மாசம் கழித்து ட்ரான்ஸ்பர் வந்தது.

சாமான் களை மூட்டை கட்டிண்டு பஸ்ஸில் பல்லார்ஷா வந்து அங்கேந்து மெட்ராஸ்ட்ரெயினில்வந்து, அங்கேந்து நாமக்கல் போய்ச்சேர்ந்தார்கள். அங்கு மஹாராஷ்ட்ராபேங்க் ப்ராஞ்ச் இருந்தது. அங்குதான் மாத்தல் உத்திரவு கொடுத்தார்கள். அங்கு போயிவாடகைக்கு வீடு தேடி ஒருவழியா செட்டிலானார்கள்.




வீட்டிலிருந்து 5 கிலோ மீட்டரில் இருந்தது பேங்க். ஒரு டூ வீலர் வங்கிண்டு பேங்க்போய் வந்தான்.மருமகளின் பிறந்தவீடு மதுரையில் இருந்தது. இவர்கள் நாமக்கல்வந்ததும் மருமகளின் பிறந்தவீட்டினர் அடிக்கடி வந்து போனார்கள். அடுத்தவருஷம்மருமகளுக்குக்கு ஸ்பைனல் காடில் ப்ராப்ளம் உண்டாகி ஆப்ரேஷன் பண்ண வேண்டிவந்தது.மகனுக்கு பேங்கில் லீவே கிடையாது. புது இடம் வேர வேலை மிக அதிகம்.மருமகளை ஆஸ்பிடலில் சேர்த்து ஆபரேஷன் செய்தான். மருமகளின் அம்மா ,அக்காஅவாள்ளாம் தான் ஆஸ்பிடலில், வீட்டில் எல்லாம் பார்த்துக்கொண்டா.ஆப்ரேஷனில்என்னமோ ப்ராப்ளம் ஆகி திரும்ப ஒருமுறை ஆபரேஷன் பண்ண வேண்டிவந்தது.
  பண உதவி மட்டுமே எங்களால பண்ண மு்டிந்தது
கிட்டத்தட்ட 45- நாட்கள் ஆஸ்பிடலில் இருக்கும்படி ஆச்சு. வீட்டுக்கு வந்தாலும் பெட்ரெஸ்ட்ல இருக்கனும் குனிஞ்சு, நிமிந்து வேலைலாம் பண்ணக்கூடாதுன்னு ஆயிரத்தெட்டு கண்டிஷன்ஸ். மகனுக்கு ஒருவிதமான ப்ராப்ளம் நா, மனைவிக்கு இப்படி.மதுரை காரங்க எவ்வலவு நாள்தான் இங்க இருக்கமுடியும்? அவா அவா ஒருமாசம்இருந்துட்டு கிளம்பி போயிட்டா




பிறகு எல்லா வேலைகளும் எங்க மகனின் தலையில்தான்.காலை வீடுபெருக்கிமெழுகிபாத்திரம்தேய்த்து, சமையல்செய்து, மகனைகுளிப்பாட்டி,துணிகளை துவைத்து உலறப்போட்டுகுழந்தைக்குசோறு ஊட்டிமனைவிக்கு எல்லாம்ரெடியாக டேபிளில் எடுத்து வைத்து 10 மணிக்கு பேங்க் போவான் அங்கும் வேலை நெட்டி முறிக்கும் பணம் சம்பந்தப்பட்ட வேலை இல்லியா10 ரூபா கூட கூடவும் இருக்கக்கூடாது, குறையவும் கூடாது. அப்பல்லாம் கம்ப்யூட்டர்லாம்வரலைஎல்லாம் கையால்தான். நாமக்கல்லில் லாரி ஓனர்கள் நிறையா வந்து டெபாசிட் செய்வார்கள்.ரூபா நோட்டுக்களை சுருட்டி மடக்கிதான் கொண்டு வருவார்கள். அதை எண்ணி வாங்குவதற்குள் போறும் போறும்னு ஆகும். எல்லாவேலைகளையும் வீட்டிலும், பேங்கிலும் கொஞ்சம் கூடமுகம் சுளிக்காம பொறுமையாகச்செய்வான் 3 மணிக்கு டீ ப்ரேக்கில் வீடுவந்து எல்லாருக்கும்டீபோடுவான். கடையிலேயே ஏதானும் டிட், பிட் வாங்கி வருவான் டீ குடிச்சு திரும்ப பேங்க்போனா இரவு 7 மணி ஆயிடும் வீடுவர, மகனுடன் கொஞ்ச நேரம் விளையாட்டு மனைவியுடன் கொஞ்ச நேரம் பேசிட்டு இரவு சமையலில் பிசி ஆயிடுவான் குழந்தையை பக்கத்தில் உக்காரவச்சுண்டு பேச்சு பயிற்சி கொடுப்பான். காய் கட் பண்ணும்போதே இது பாவக்காய், பாவக்காய் பச்சைக்கலர் பாவக்காய் கசப்பு ருசி உள்ளதுன்னுபடிப்படியா பேச சொல்லிக்கொடுப்பான். அப்படியே அவன்
பெயர்,அம்மாபெயர்,அப்பாபெயர்னுமெதுவாகஒன்னொன்னாசொல்லிககொடுத்தன்




5 வயசு குழந்தைக்கு ஆனதும் படிப்பு பத்தி யோசனை. நாமக்கல்லில் எம். எஸ். உதய மூர்த்திஅவர்கள் ஸ்கூல் ஒன்று நடத்தி வந்தார்கள். டாக்டர் நார்மல் ஸ்கூலில் சேர்க்கசொன்னார்கள்.அந்தஸ்கூலில் சேர்த்தான்.ஒரே வாரம்தான் மத்தக்குழந்தைகள் அவனை சீண்டி விட்டு ”அஞ்சலி”பாப்பாவைப்போல பைத்தியம், பைத்த்யம்னு கேலி பண்ணவும் நம்ம குழந்தைக்கும் கோவம்வந்து எல்லாரையும் கடிக்கவும் அடிக்கவும் போனான்.பள்ளியில் இருந்து கம்ளைண்ட்.உங்கபையனை வீட்லயே வைச்சுக்கோங்க. படிக்கல்லாம் அனுப்பாதீங்கன்னு சொல்லிட்டாங்க.நாமக்கல்லிலேயே இதுபோல குழந்தைகளுக்காக ஸ்பெஷல் ஸ்கூல் ஏதானும் இருக்கான்னுதேடினார்கள் அவர்கள் இருக்க்கும் இடத்திலிருந்து 10 கிலோ மீட்டரில் ஒருஇடத்தில் ஒருஸ்பெஷல் ஸ்கூல் கண்ணில் பட்டது. அங்கே போய் விசாரித்தார்கள். அதுஒருபெரிய லாரி ஓன்ரோட பெண்குழந்தைக்கும் இதே ப்ராப்ளம் இருந்திருக்கு. அவர்களின் கார்ஷெட்டில் இதுபோல ஸ்பெஷல் குழந்தைகலுக்காகஒருஸ்கூல் நடத்திக்கொடிருந்தார்கள்.ரெண்டு டீச்சர், 10 குழந்தைக இருந்தாங்க. அங்கு சேர்த்த்தார்கள். படிப்புனு எதுவும் கிடையாது, நல்லபழக்கவழக்கங்கள்கீழஇறைக்காமசாப்பிடமத்தகுழந்தைகலுடன்சண்டைபோட்டுக்காம விளையாட என்று பழக்கினார்கள்.தன்னாலயே டாய்லெட்போய்க்ளீன் பண்ணிக்க சொல்லிக்கொடுத்தார்கள்.அதுக்கு போய்வர ஆட்டோ ஏற்பாடு பண்ணினார்கள்.

22 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வாழ்க்கை பதிவுகள்.....

vanathy said...

என் உறவினர் குழந்தைக்கும் இதே பிரச்சினை தான். பார்க்கவே பாவமா இருக்கு. கடவுள் மீது எரிச்சல் ஏற்படுவது கூட உண்டு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

போராட்டமான தங்கள் மகனின் வாழ்க்கை என் கண்ணில் கண்ணீரை வரவழைத்தது.

சோதனை மேல் சோதனை வந்தால் என்னதான் செய்வது?

மிகவும் அசாத்ய பொறுமை அல்லவா தேவை.

கடவுளாகப்பார்த்து கண் திறந்தால் மலைபோன்ற கஷ்டங்களும் பனி போல விலகிவிடும். தங்கள் மகன், மருமகள் & பேரனுக்காக நானும் பிரார்த்திக்கிறேன். அன்புடன் vgk

♔ℜockzs ℜajesℌ♔™ said...

வாழ்க்கைபோராட்டம் , வாழ்ந்துதான் பார்க்கணும் . . .
நீங்க வாழ்ந்தது மட்டும் இல்லாம வெற்றியும் அடைந்து இருக்கீங்க அம்மா . . .
வெற்றி அடியும் போது பின்னோக்கி பார்கிரதுக்கே ஒரு பெருந்தமை வேண்டும் அம்மா . அது உங்களிடம் . .

அமைதி அப்பா said...

இடையில் இரண்டொரு பதிவுகளைப் படிக்க முடியாமல் போய்விட்டது. அதையும் இன்றுதான் படித்தேன்.

கடைசியில் 'சுபம்' போட்டு முடிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன்!

எல் கே said...

எவ்வளவு கஷ்டம். பட்ட காலிலேயே படும்னு சொல்லுவா. அந்த மாதிரி இருக்கு

வெங்கட் நாகராஜ் said...

நிஜமாகவே போராட்டம்தான். உங்கள் மகனுக்கும் எத்தனை பொறுமை! கேட்க கஷ்டமாகத் தான் இருக்கிறது.

Asiya Omar said...

லஷ்மிமா தொடர்ந்து எழுதுங்க,நானும் ஸ்பெஷல் நீட் சில்ரன் பள்ளியில் ஒரு 3 மாதம் வேலை செய்திருக்கேன்...

குறையொன்றுமில்லை. said...

கவிதை வீதி சௌந்தர் வருகைக்கு நன்றி.

குறையொன்றுமில்லை. said...

வானதி கடவுளை குறை சொல்லி என்னங்க பிரயோசனம். நம்ம நேரம்
சரி இல்லே.

குறையொன்றுமில்லை. said...

கோபால்சார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. படிக்கிரவங்களுக்கே இப்படின்னா சம்பந்தபட்டவங்களுக்கு எப்படி இருக்கும் இல்லியா?

குறையொன்றுமில்லை. said...

ராஜேஷ் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா.

குறையொன்றுமில்லை. said...

அமைதி அப்பா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

குறையொன்றுமில்லை. said...

ஆமா கார்த்தி பட்டகாலிலே தான் பட்டுண்டே இருந்தது.

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

குறையொன்றுமில்லை. said...

ஆஸியா நீங்க அதுபோல ஸ்கூலில்
டீச்சரா இருந்திருக்கீங்களா? அப்போ நான் எழுதுவதை சரியாக புரிந்துகொள்ள முடியும் இல்லியா?

ஹுஸைனம்மா said...

வருத்தமாத்தான் இருக்கு. இறைவனருளால், குழந்தை நடக்கவும், ஓரளவு பேசவும் செய்கிறான் என்பது மகிழ்ச்சியான விஷயம். அதுவும் நார்மல் ஸ்கூலில் சேர்க்க மருத்துவர் பரிந்துரைக்கிறார் என்றால் ஓரளவு முன்னேற்றமே. கொஞ்சமாவது மனசுக்கு சமாதானமாக இருக்கும்.

குறையொன்றுமில்லை. said...

ஹுஸைனம்மா வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

Prabu Krishna said...

இப்போதான்மா இதை படிக்கிறேன். மற்றதையும் படித்து விட்டு பின்னர் வந்து சொல்கிறேன்.

குறையொன்றுமில்லை. said...

பிரபு வந்துட்டியா தேர்வெல்லாம் முடிஞ்சுதா?

இராஜராஜேஸ்வரி said...

மகன், மருமகள் & பேரனுக்காக நானும் பிரார்த்திக்கிறேன்.

குறையொன்றுமில்லை. said...

irajarajesvari nanri.

Related Posts Plugin for WordPress, Blogger...