Pages

Back to Top

பெட் அனிமல்(3)

பெட் அனிமல்(3)

அடுத்த நாள் முதல் ப்ளாக்கிக்கு சின்னபையன் ட்ரைனிங்க் கொடுத்தான். காலை அவன் குளிக்கப்போகும்போது அதயும் பாத்ரூம் கூட்டிப்போவான்.
அது நாலுகாலையும் தரையில் டைட்டாக ஊனிண்டு ஸ்ட்ரைக் பண்ணும். குளிக்க பிடிக்காது.பையன் விடுவனா? தாஜா பண்ணி உள்ள கூட்டிண்டு
போயி அதுக்குனு தனியா வாங்கின சோப்பு போட்டு,ஷவர்ல குளிப்பாட்டி, அதுக்கு வாங்கின தனி டவலால துடைச்சு விட்டு மொட்டை மாடில கொண்டு
கட்டிப்போட்டு காய விட்டுட்டு அப்பரமா அவன் குளித்துவருவன். அன்று சாயந்தரம் கடைகளில் தேடி பிடிச்சு, நாய்க்கு கழுத்துபட்டி, வாக்கிங்க் கூட்டிப்
போக பெரிய செயின் எல்லாம் இவர் வாங்கி வந்தார்.மொட்டைமாடிலேந்து ப்ளாக்கியைகூட்டிவந்து எல்லாருடனும் டிபன் சாப்பிட வைத்துஅதுகூட விளை
யாடி, கழுத்துபட்டையும் செயினும் அதனிடம் காட்டி, ப்ளாக்கி நீ சமத்தா இருந்தா சாயங்காலம் வாக்கிங்க் கூட்டிண்டு போவேன் வீட்ல சமத்தா இருக்கனம்
என்று சொல்லி எல்லாரும் ஸ்கூல் போவார்கள்.அதுவும் வீட்ல ஒரு செல்லக்குழந்தையாகவே வளர்ந்தது.தனியா எதுவுமே சாப்பிடாது.காலை,மதியம்,இரவுஎல்லாருடனும் சேந்து உக்காந்துதான் சாப்பிடும். அன்று சாயந்தரம் ப்ளாக்கியைக்கூட்டிண்டு குழந்தைகள் கீழேஇருக்கும் கார்டனுக்கு வாக்கிங்க் போனார்கள்.
கழுத்துப்பட்டி செயின் பாத்தோடனே அதுக்கு குஷி தாங்காது மேலுக்கும் கீழுக்குமா குதிக்கும்.(ப்ஃரெண்ட்செல்லாம் பாக்கப்போற குஷி).



ரோட்ல கொஞ்ச நேரம் அமைதியாபோகும். கொஞ்சம் பெரிய நாய்களை வழியில் கண்டு விட்டால் பெரிய குரலெடுத்து குலைக்கத்தொடங்கிடும். மத்த நாய்களும்பதில் குரல் கொடுத்து குரைக்கும். கொஞ்ச நேரம் சங்கீதக்கச்சேரிதான் களை கட்டும். ப்ளாக்கி கொஞ்சம் குட்டிசைஸா இருந்ததால கேட்,கீழ்வழியா நுழைஞ்சுஓடிடும்.அதுலயும் பெண்குட்டி வேர. மத்த நாய்களெல்லாம் துரத்திண்டு வரும். இது யாருக்கும் பிடி கொடுக்காம ஓடி விளையாட்டுக்காட்டும். பையனால செயின்பிடிச்சுக்கவே முடியாது.அவ்வளவு வேகமா ஒட்டிடும். ஓடி, ஓடி களைத்த பிறகு தன்னால வந்து பையன்கால்கீழ வந்து உக்கார்ந்துடும். செயினை மாட்டி வீடு வரும்.
வீட்ல மட்டுமில்லை அந்த ஏரியாவில் உள்ள எல்லா குழந்தைகளுமே, ப்ளாக்கி, ப்ளாக்கி என்று ரொம்ப தோஸ்த்தாகி விட்டது.காலை ரிக்‌ஷாவில் ஸ்கூல் போகும்குழந்தைகள் மாடியைப்பார்த்து ப்ளாக்கி டாட்டா, டாட்டான்னு கை ஆட்டிண்டே போவா. இதுவும் மாடிலேந்து ஒருகாலைத்தூக்கி ஆட்டும். மாடி ஜன்னல் எல்லாத்லயும்நெருக்கமா க்ரில் அடிச்சிருந்தோம். இது குதிச்சுடக்கூடாதே. மாடிலயும் பழகினவா வந்தா சும்மா வாலாட்டிண்டு இருக்கும். புதுசா ஏதானும் காலடி ஓசை கேட்டா உடனே
பெரிசா குலைக்க ஆரம்பிச்சுடும். போஸ்ட்மேன், சிலிண்டர் வாலா, மீட்டர் ரீடிங்க் வாலா எல்லாரும் இது குறைக்கும் சத்தம் கேட்டு பெரிய நாய் போல இருக்குன்னு எங்கவீட்டு பக்கம் வரவே பயப்படுவாங்க. வீட்டுக்கு யாருவந்து பெல் அடிச்சாலும் ப்ளாக்கியை கட்டிப்போட்டுட்டுதான் கதவையே திறக்க முடியும். இல்லைனா இடுக்கு வழியாகீழே ஓடிடு.ம். இந்த்தனை குட்டியூண்டு நாயா இவ்வளவு பெரிசா குலைக்குதுன்னு எல்லாரும் கேப்பாங்க. சாப்பிட என்ன கொடுக்குரீங்க்ன்னும் கேப்பாங்க. எங்க கூடசேந்து ப்யூர் வெஜி டேரியனாகத்தான் வளர்ந்தது.



ஒவ்வொரு ஜனவரி 26-க்கும் அக்கம் பக்கம் உள்ள குழந்தைகளைக்கூப்பிட்டு ப்ளாக்கிக்கு பர்த்டே கொண்டாட்டமெல்லாம்கூட கொண்டாடுவோம்.இப்படியே 3 வருஷம்வீட்ல ஒரு குழந்தையாகவே வளர்ந்தது. எப்ப நம்பர் ஒன்,டூ, வந்தாலும் நேரா டாய்லெட் போயி, போயிட்டு எங்க யாரையாவது ட்ரெஸ்பிடிச்சு இழுத்து அங்க கூட்டிண்டுபோகும். அதுக்கு குழாய் திறந்து க்ளீன் பண்ணிக்கத்தெரியாதே. நாங்க் போயி குழாய் திறந்து அங்கெல்லாம் அலம்பி விடுவோம். வீட்ல எல்லாரையுமே நல்லா மஸ்காபோடும்.மொத்தத்ல ஒரு அன்பான பாசமான ஒரு ஆளாகவே இருந்தது. எல்லாமே ஸ்மூத்தா தான் போயிட்டு இருந்தது. யாரு கண்ணு பட்டுதோ? வந்தது வினை.

22 comments:

Yaathoramani.blogspot.com said...

கடைசி மூன்று வரிகளில்
ஏதோ ஒரு திருப்பம் இருக்கு.
அது சோகமாக மட்டும்
இல்லாமல் இருக்க வேனுமாய்
ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்

குறையொன்றுமில்லை. said...

ரமணி சார் கரெக்டாகவே யூகம் பண்ணிட்டீங்க. வெரும் சோகம் இல்லை.மனதை உருக்கும் சோகம்.

வெங்கட் நாகராஜ் said...

அச்சச்சோ சோகமான முடிவா? ப்ளாக்கிக்கு என்ன ஆச்சு?

குறையொன்றுமில்லை. said...

வெங்கட், உங்களுக்கே இவ்வளவு ஃபீல் ஆகுதுன்னா வீட்டில் உள்ளவங்களுக்கு எப்படி இருந்திருக்கும் இல்லியா?

அஸ்மா said...

3 பாகத்தையும் ஒரே மூச்சில படிச்சு முடிச்சேன் லக்ஷ்மிமா! அடுத்து என்ன ஆனதுமா..?!

எல் கே said...

ஹ்ம்ம் சோகமான முடிவு வரும் என்று ஏற்கனவே தெரியும்.

நாம் வழக்கும் விதத்தில் நாய் வளரும். எங்கள் சொந்தக்காரங்க வீட்டில் இரண்டு நாய்கள் உண்டு. முழு சைவம்தான்

vanathy said...

மனதை உருக்கும் சோகமா?? சந்தோஷ முடிவல்லவா எதிர்பார்த்தேன்????

குறையொன்றுமில்லை. said...

அஸ்மா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

குறையொன்றுமில்லை. said...

கார்த்தி, அல்சேஷன் டாக் எல்லாம் நான்வெஜ் தான் சாப்பிடும்னு எல்லரும்
சொன்னாங்க. நீங்க சொன்னதுபோல நாம பழக்கரதுலதான் இருக்கு.

குறையொன்றுமில்லை. said...

வானதி,என்னபன்ரதும்மா.இனிமேல பெட் அனிமலே வளக்க கூடாதுன்னு முடிவே பன்னிட்டோம்.

இராஜராஜேஸ்வரி said...

அன்பான பாசமான பிளாக்கிகு பாராட்டு.

குறையொன்றுமில்லை. said...

இராஜேஸ்வரி, வருகைக்கு நன்றிம்மா.

கால்கரி சிவா said...

ஆர்வத்துடன் அடுத்தப் பதிவிற்கு காத்திருக்கிறேன்.

வந்தவுடன் என் யோசனைகளை சொல்கிறேன்.

சிவா

குறையொன்றுமில்லை. said...

கால்கரி சிவா, வருகைக்கு நன்றி. தகுந்த யோசனைகள் சொல்லுங்க.

போளூர் தயாநிதி said...

ஆர்வத்துடன் அடுத்தப் பதிவிற்கு காத்திருக்கிறேன்.

குறையொன்றுமில்லை. said...

போளூர் தயானிதி, வருகைக்கு நன்றி.

விழியே பேசு... said...

அம்மா எப்படி இருகீங்க...
மனசை தொடுற மாதிரி எழுதியிருகீங்கம்மா ...
நல்லா இருக்கு

குறையொன்றுமில்லை. said...

விழியே பேசு வருகைக்கு நன்றி. ரொம்ப நல்லா இருக்கேன்.

ஆனந்தி.. said...

அச்சோ...என்ன ஆன்ட்டி சோகம் வரபோகுது போலே...:(((

குறையொன்றுமில்லை. said...

என்ன ஆனந்தி இப்பதான் வரீங்களா?

ஹேமா said...

எங்கள் வீட்டிலும் இப்படியொன்று.ஏதும் ஆகிடவேண்டாம் பிளாக்கிக்கு !

குறையொன்றுமில்லை. said...

ஹேமா, வருகைக்கு நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...