Pages

Back to Top

பெட் அனிமல்(2)

பெட் அனிமல்(2)


இரவு12மணிக்கு, சின்னப்பையன் எல்லாருக்கும் ஜீனி கொடுத்து, இன்னிக்கு நம் வீட்டுக்கு புதுவரவு வந்திருக்கு,அதைக்கொண்டாட வேண்டாமா? அதுதான் எல்லாருக்கும் ஸ்வீட் கொடுக்கரேன்.என்று சொல்லி குட்டி நாய்க்கு
என்ன பேரு வைஇக்கலாம்னு என் 5 குட்டிகளும் டிஸ்கஸ் பண்ணினார்கள்.ஆளுக்கு ஒருபெயர் சொன்னார்கள்.கடைசியில் சின்னப்பையன் ப்ளாக்கின்னு பேர் வச்சான். முதல் பையனோ, ஏண்டா இது ப்ரௌன்&அழுக்கு
கலர்ல இருக்கு. ப்ரௌனின்னு பேரு வைக்கலாம்டான்னான். இல்லைடா, ப்ளாக்கி தான் நல்லா இருக்குடாஎன்றான். எல்லாரும் முழு மனதாக ப்ளாக்கியை ஏற்றுக்கொண்டார்கள்.1-மணிக்கு ப்ளாக்கியை வராண்டா
வில் படுக்கவைத்து தாலாட்டு மட்டும்தான் பாடலை. அவரவர்கள் தூங்கப்போனார்கள். அப்பா, குழந்தைகள் எல்லாருமே காலை 7-மணிக்கு கிளம்பனும். நாந்தினசரி காலை 5-மணிக்கு எழுந்தால் தான் எல்லாருக்கும்
ப்ரேக்ஃபாஸ்ட் ரெடிசெய்யமுடியும். அன்றும் அதுபோலவே 5-மணிக்கு எழுந்தேன். நான் வரும் சத்தம் கேட்டுப்ளாக்கியும் பின்னாடியே வந்தது.


6-மணீக்குமேல ஒவ்வொருவராக எழுந்துவந்து ப்ளாக்கி, குட் மார்னிங்க் என்றார்கள். அதுக்கும் எல்லாரையும்பார்த்ததும் ஒரே குஷி ஆச்சு.எல்லார்மேலயும் ஏறிக்குதிச்சு ஒரே விளையாட்டு.ஏய்,பசங்களா ஸ்கூலுக்கு நேரமாகுதுசிக்கிரமா ரெடி ஆகுங்கன்னு எல்லாரையும் விரட்ட வேண்டி இருந்தது. எல்லாரும் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட டைனிங்க்
டேபிளில் உக்காந்தார்கள்.ப்ளாக்கியும் டேபிளின் நடுவில் ஏறி உக்காந்தது. எல்லார்கூடவும் ப்ரேக்ஃபாஸ்ட்,பூஸ்ட்(!!!!)குடித்தது, எல்லாரும் ப்ளாக்கி, டாட்டா,பை,பை சொல்லி அரை மனதாக கிளம்பினார்கள். சின்னவன் என்னிடம் வந்துஅம்மா, ப்ளாக்கியை பத்திரமாபாத்துக்கோன்னு சொல்லிட்டு கிளம்பினான்.எல்லாரும் மதியம் 1-மணீக்கு வருவார்கள்.



அதுவரை நானும் ப்ளாக்கியும்தான். எனக்கோ அதை ஒரு நாய்க்குட்டியாகவேதான் பார்க்கமுடிந்தது. வீட்டில அசிங்கம்
பண்ணாம இருக்கனுமேன்னுதான் நினைச்சேன். குளித்து,10-மணிக்கு காய் நறுக்க உக்காந்தேன். உடனே குட்டி குழந்தைபோல மடியில் வந்து சுருண்டு படுத்துவிட்டது.ஐயோ,இதை மடியில் வச்சுட்டு எப்படி வேலை பண்ணமுடியும்? கீழேஇறக்கிவிட்டு, ப்ளாக்கி உன்னோடு இடத்தில்போயி படுத்துக்கோ என்ரேன். என்னபுரிஞ்சுண்டதோ பேசாம போயிஅதோட இடத்தில் சுருண்டு கொண்டது. காய் நறுக்கி தோல் எல்லாம் முறத்தில் போட்டு தனியா ஒரு ஓரமா வச்சேன்.
கொஞ்ச நேரம் படுத்திருந்த ப்ளாக்கி,உடனே எழுந்துவந்து, அந்த காய் தோல்களையெல்லாம் சாப்பிட ஆரம்பித்துவிட்டது.அரை மணி நேரத்தில் எல்லா காய்கறி தோல்களையும் சாப்பிட்டு விட்டது.ஓ. அதுக்கு பசிக்குதோ என்னமோஎன்று ஒரு அலுமினிய கிண்ணத்தில் பால் வைத்தேன். அதை திரும்பிக்குட பாக்கலை.



குக்கர் விசில் சத்தம் கேட்டதும் பயந்துபோயி பெட்ரூல போயி போர்வைகளுக்கு அடியில் ஒளிந்து கொண்டது. பாவமாஇரு ந்தது.1-மணிக்கு எல்லாரும் ப்ளாக்கின்னு கத்திண்டே வீட்டுக்குள்ள வந்தார்கள்.அதுக்கும் ரொம்ப நேரம் கழிச்சுஎல்லாரையும் பார்த்ததில் ஒரேகுஷி. எல்லார் மேலயும் ஏறிகுதிச்சு முகம் பூரா நக்கிவிட்டு சின்னக்குரலில் என்னமோகத்திட்டே இருந்தது. எல்லாரு சாப்பிட உக்காந்ததும் அதுவும் டேபிள் நடுல வந்து ஜம்முனு உக்காந்தது. அதுக்குன்னுஒரு பீங்கான் ப்ளேட் வாங்கி வந்தார். அதில் பால் சாதம் போட்டு அதுக்கு கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு சாப்பாடுபரிமாறினேன். பால்சாததை தொடக்கூட இல்லை ப்ளாக்கி. எல்லா குழந்தைகளும் அவரவர் தட்டிலிருந்து அதற்குதனியாக போட்டதும் அதை வேக, வேகமாக சாப்பிட்டது.சாம்பார், பொரியல்னு எல்லாமே சாப்பிட்டது, பால் சோறுபிடிக்கலை போல இருக்கு. அன்னிலேந்து சின்னப்பையன் அதுக்கு ட்ரெயினிங்க் பண்ணீனான். வீட்டுக்குள்ள சூச்சூபோகக்கூடாது,ஆய் போகக்கூடாதுசண்டாஸ்ல தான் போகனும் என்று சின்னக்குழந்தைக்குச்சொல்வதுபோல சொல்லுவன்.அதுவும் எல்லாம் புரிஞ்சதுபோல கேட்டுக்கும்.

20 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

masubmit your post to Thamilmanam and Ulavu

குறையொன்றுமில்லை. said...

இணைக்க முடிலீங்க. என்னபேருங்க ஓட்டை வட நாராயணன்?

எல் கே said...

இந்த மாதிரி வீட்ல வளக்கறது நெறைய கஷ்டங்களை தரும்

ஞாஞளஙலாழன் said...

>அதுவும் எல்லாம் புரிஞ்சதுபோல >கேட்டுக்கும்.

:-)

vanathy said...

நல்லா இருக்கு. தொடருங்கோ.... ஆவலா காத்திட்டு இருக்கிறேன்.

//என்னபேருங்க ஓட்டை வட நாராயணன்?//
அதான் எனக்கும் விளங்கலை!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அடுத்த பகுதி வந்திட்டதா///!!!
தொடருங்க...

ஓட்ட வட நாராயணன். என்ன பேருன்னு
கேட்குறீங்க? அவரு 'மாத்தி யோசி'க்கிறாராமாம்.
(வித்தியாசமாய் இருக்கு, அருமை, சூப்பர் - பேரு)

aavee said...

நாய்க்குட்டியின் செயல்கள் அருமை. அதைக் கூறிய விதம் நன்று.

குறையொன்றுமில்லை. said...

கார்த்தி, கஷ்டம்தான். ஆனா குழந்தைகளின் சந்தோஷத்தின் முன்னால கஷ்டம்லாம் பெரிய விஷயமே இல்லை.

குறையொன்றுமில்லை. said...

ஞா,ஞ,ள ங லா ழன் வருகைக்கு நன்றி. எல்லாரும் இப்படி புரியாதபடி பேருவச்சுண்டா எழ்தவே முடியலியே.

குறையொன்றுமில்லை. said...

வானதி வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

குறையொன்றுமில்லை. said...

நிஜாமுத்தீன் வருகைக்கு நன்றிங்க.

குறையொன்றுமில்லை. said...

கோவை ஆவி வருகைக்கு நன்றி.இது உங்க புனைப்பெயரா?

ம.தி.சுதா said...

/////அதுக்குன்னுஒரு பீங்கான் ப்ளேட் வாங்கி வந்தார். ////

கொடுத்து வச்சவன்யா.... என்னா ஒரு வாழ்க்கை..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

கால்கரி சிவா said...

நான் வளர்ப்பு பிராணிகளின் ரசிகன். கடந்த 5 வருடங்களாக 2 கிளிகளை வளர்த்து வருகிறேன். 3 மாதங்களுக்கு முன் ஒரு நாய் குட்டியை வீட்டிற்கு அழைத்து வந்தோம். இவ்வளவு வருடங்கள் நாய் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து வீணடித்துவிட்டோம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்.

எங்கல் ரயாவிற்கு எல்லாம் புரியும் டெட்டி பியரை எடுக்க சொன்னால் கரக்ட்டாக எடுக்கும். டக்கி என்று கேட்டால் வாத்து பொம்மையை எடுத்து வரும்.

நாய் என்றும் குழந்தையாய் இருக்கும் ஒரு குடும்ப உறுப்பினார்

குறையொன்றுமில்லை. said...

கால்கரி சிவா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

குறையொன்றுமில்லை. said...

ம. தி. சுதா, வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

நாய்க்குட்டி எங்களுக்கும் சந்தோஷம் கொடுக்கிறது.

குறையொன்றுமில்லை. said...

இராஜராஜேஸ்வரி வருகைக்கு நன்றிம்மா.

aavee said...

அன்னை தந்தை இட்ட பெயர் ஆனந்த ராஜா விஜயராகவன். இணையத்திற்காக சுருக்கமாக ஆவி.

குறையொன்றுமில்லை. said...

கோவை ஆவி, வருகைக்கு நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...