Pages

Back to Top

பரணீயம்(5)

பரணீயம்(5)

                                               


மறு நா காலையும் அதேபோல வைத்தியர் நல்ல ஒவ்வொருவருக்கும்

அழுத்தி, அழுத்தி எண்ணை மாலிஷ் பண்ணிவிட்டார். என்னிடம் என்னாச்சு

இன்னும் வலி தொடங்கலியா? எனக்கே ஆச்சரியமா இருக்கு. 24 மணி

நேரத்ல எண்ணை தன் வேலையைக்காட்ட தொடங்கிடுமே. உன்விஷயத்ல

ஏன் இப்படி ஆகுது? உனக்கு காங்கை சரீரமான்னு கேட்டார். ஆமா எனக்கு

காங்கை சரீரம்தான். உடம்பு எப்பவுமே சூடா தான் இருக்கும். என்ரென்.

ஆங்க்!!!!!!!!!1 அதனாலதான் இப்படி ஆகுதுன்னார். அப்ப எனக்கு சரி ஆகவே

ஆகாதான்னு கேட்டேன். அது எப்படி சரி ஆகாமப்போகும்.னான் விட்டிடிவேனா?

கொஞ்சம் டைம் எடுக்கும்.ரொம்ப வருஷமா ப்ராப்ளம் இருக்கு இல்லியா?

மெதுவா தான் குணம் தெரியுமென்றார். அன்னிக்கும் அதிகவலின்னு எதுவும்

இல்லை. நான் எப்பவும்போல அற்புதமான காலை வாக், காபி, பேப்பர் என்று

மனசில் வேறு எண்ணங்களுக்கே இடம் கொடாமல் ஈசியாவே இருந்தேன்.

பக்கத்து ரூம்காரா வந்து ஒருவாரம் ஆச்சாம். இன்னிக்கு டிஸ்சார்ஜ் ஆகி

கிளம்பரான்னு சொன்னா.




கிளம்ப ரெடி ஆயிண்டு இருந்தா. நிறைய மரங்கள் இருந்ததால பக்கத்துக்கு

பக்கம் குழாய் வச்சிருந்தது. அவர்கள். தென்னை மரத்திலிருந்து விழுந்திருந்த

தேங்கா மட்டையில் இருந்து தேங்கா நாரை பிச்சு கல்லால் தட்டி, தட்டி அதை

ஸாஃப்டா ஆக்கி ஷாம்புவில் முக்கி உடம்பு பூராவும் வரட், வரட்டுனு தேச்சுக்

குளிக்க ஆரம்பிச்சா. ஒருவார எண்ணை பிசுக்கேல்லாம் போக வேணாமா?!!!!!!!


வெளியில் உள்ள குழாய்களில் ஆளுக்கு ஒரு குழாயில் குளிக்க தொடங்கினா.

எனக்கு எங்க ஊரு வாய்க்காலில் வைக்கோலால், எருமை மாட்டை தேய்த்து,

தேய்த்து குளிப்பாட்டும் காட்ச்சிகள்தான் கண்முன்னே வந்தது. போட்டிருந்த

டிரெஸ்ஸில் மட்டும் எண்ணை பிசுக்கு போகவே இல்லை. ஒரே கச,கசதான்.

அதையும் ஒரு பெரிய ப்ளாஸ்டிக் பையில் போட்டு எடுத்திண்டா.2 மணி நேரக்

குளியல் முடிந்து அப்பாடான்னு ரூம்போயி நல்ல ட்ரெஸ் போட்டுண்டு வந்தா.




பக்கத்ல ஒரு லூர்து மாதா தேவாலயம் இருந்தது. சாமி கும்பிட்டு வரோம்னு

அங்கபோனா. அந்தக்கொவில்ல வருஷாந்திர திருவிழா நடக்கரதாம். அதனால

பூரா நாளும் ஸ்பீக்கரில் அவ்ர்களின் அயலூயா பாட்டூக்கள், தோதிரங்கள் ஜபங்கள்ஃபுல் சவுண்டில் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. அங்க போயிட்டு வந்து ரொம்பகுஷியா அவ கிளம்பி போனா. இப்ப இங்க நானும் உமாவும் மட்டுமே. கூட, காக்கா

குருவி,குயில்பாட்டு, கிளிசத்தம் அணில், பூனை, நாய்கள் என்று இருந்தோம்.

உமா அந்த அம்மிலேயே அரைச்சுதான் சமையல்பண்ரா. அதனால அவளுக்கு டைம்சரியா இருந்தது. எனக்குத்தான் என்ன பண்ணரதுன்னு தெரியாம இருந்தது.கொஞ்ச நேரம் நாவல், கொஞ்ச நேரம் டைரி எழுத்து, ஸ்பீக்கர் பாட்டு கத்திண்டுஇருந்ததால மொபைலில் பாட்டு கேக்க முடியலை. சுத்திவர இருக்கும் காட்ச்சிகளில்மனசை செலுத்திக்கொண்டு உக்காந்திருந்தேன்.




பகல் நேரம் எப்படியோ ஓட்டினோம். இரவு நேரம் கொஞ்சம் த்ரில்லிங்கா ஆச்சு.பக்கத்லவேர யாரும் இல்லியா வழக்கம் போல 8 மணிக்கு கரெண்ட் போச்சு.

கேண்டில் ஏத்திவச்சா காத்துல அணைஞ்சு, அணைஞ்சுபோரது. இவ்வளவு மரங்கசெடிகளுமா புதர்மண்டி இருக்கும்போது பெரிய பூச்சி பொட்டுக்களும் கண்டிப்பாஇருக்கத்தான் செய்யும். இருட்ல தெரியவும் தெரியாது.இருட்டுன்னா, அப்படிஒருகும்மிருட்டு.ஒரு பூனை வேர எந்த நிமிஷமும் குட்டி போடலாம்னு சுத்தி, சுத்திவந்துண்டே இருந்தது. இருட்ல ரூமுக்குள்ள போனா கஷ்டமாயிடுமேன்னு ரூம்

கதவை சாத்திட்டு வராண்டாவில் தான் உக்காந்து இருந்தோம். கொஞ்ச நேரத்லஒரு சிகப்பு புள்ளியா நெருப்பு மாதிரி தெரிஞ்சுது. வெள்ளை உடையும் தெரிஞ்சுது.ரெண்டு பேருக்குமே கொஞ்சம் பக், பக் தான். ஆனா காட்டிக்க முடியலை. உமாஇருட்ல பாக்காதே, கண்ணுக்கு கற்பனையா ஏதானும் தோனும். நாம ஏதானும்பேசிண்டு டைம் பாஸ்பண்ணலாம்னேன். அந்த நெருப்பு வெளிச்சம் நாங்கைருக்கும்பக்கமே வந்திண்டு இருந்தது.

29 comments:

வெங்கட் நாகராஜ் said...

எதிர்பார்ப்புகளைத் தூண்டும் விதத்தில் பரணீயம்… தொடருங்கள்.....

குறையொன்றுமில்லை. said...

ஆமா, நானும் பின்னூட்டங்களை எதிர்பார்க்கும் தொடர்தான்.அடுத்தவாரம் மங்களம்தான்.

vanathy said...

நல்லா இருக்கு. தொடருங்கோ, ஆன்டி.

குறையொன்றுமில்லை. said...

நன்றி வானதி.

Unknown said...

சுவாரசியமாக கொண்டுச்செல்கிறீர்கள்,

Unknown said...

இன்ட்லியில் இணையுங்கள்.

BalajiS said...

அம்மா,

எங்க அப்பா, அம்மாவுக்கும் மூட்டு வலி இருக்கு
அந்த மருத்துவர் முகவரி தர முடியுமா?

பாலாஜி

ஆமினா said...

ஆஹா... இந்த முறையும் சூப்பரா வந்துருக்கும்மா....

தொடர்ந்து எழுதுங்கோ

ஆனந்தி.. said...

ஆன்ட்டி...உங்க என்ன சிதறல்கள் அற்புதமா இருக்கு...நல்லா சொல்லிட்டு வரிங்க..

கணேஷ் said...

அம்மா உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்து இருக்கிறேன்..முடிந்தால் வாருங்கள்..

http://ganeshmoorthyj.blogspot.com/2011/01/blog-post_04.html

குறையொன்றுமில்லை. said...

பாரத் பாரதி நன்றி இண்டலியில் எப்படி இணைக்கணும். ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு பாஸ்வேர்ட் கேக்குதே.

குறையொன்றுமில்லை. said...

பாலாஜி கண்டிப்பாதரேன்.

குறையொன்றுமில்லை. said...

ஆனந்தி நன்றிம்மா.

குறையொன்றுமில்லை. said...

கணேஷ் ஐ வில் ட்ரை.

குறையொன்றுமில்லை. said...

பாலாஜி உங்கப்ளாக்ல வைத்தியர் போன் நம்பர் கொடுத்திருக்கேன். பாருங்க.

குறையொன்றுமில்லை. said...

ஆமி வருகைக்கு நன்றிம்மா.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Nice Write up Lakshmi maa...

குறையொன்றுமில்லை. said...

thank you thangkam.

எல் கே said...

எதிர்பார்ப்பை தூண்டும் இடத்தில் நிறுத்தி இருக்கீர்கள்.

குறையொன்றுமில்லை. said...

ஆமா கார்த்திக்.

சிவகுமாரன் said...

நலம் பெற வாழ்த்துக்கள் அம்மா.

சிவகுமாரன் said...

நலம் பெற வாழ்த்துக்கள் அம்மா.

ஹேமா said...

வணக்கம் அம்மா.இன்றுதான் உங்கள் பக்கம் வருகிறேன்.”பரணீயம்”தொடர் வாசிக்கத் தொடங்குகிறேன்.இன்னும் தொடர்வேன்.

என் கவிதைப் பக்கமும் வாங்களேன் !
http://kuzhanthainila.blogspot.com/

குறையொன்றுமில்லை. said...

சிவகுமாரன் வருகைக்கு நன்றிப்பா.
அடிக்கடி வாங்க.

குறையொன்றுமில்லை. said...

ஹேமா வருகைக்கு நன்றிம்மா. இதோ இப்பவே வரேன்மா.

Unknown said...

டைரி -2010 பற்றி தொடர் பதிவெழுத உங்களை அழைத்துள்ளோம், விருப்பமிருந்தால் ஏற்றுக்கொள்ளவும்.
அன்புடன் ரோஜாப்பூந்தோட்டம்.
http://bharathbharathi.blogspot.com/2011/01/15.html

குறையொன்றுமில்லை. said...

தொடர்பதிவெழுhத என்னை அழைத்ததற்கு நன்றி.

ம.தி.சுதா said...

வித்தியாசமாகத் தொடர்கிறது நன்றி அம்மா..
தங்களின் 51 வது தொடர்பவராக இணைவதில் மிக்க மகிழ்ச்சி...

குறையொன்றுமில்லை. said...

நன்றி சகோ. இந்த 51, 101 இந்த நம்பர்கள் எல்லாம் கொஞ்சம் ஸ்பெஷல் தெரியுமா?

Related Posts Plugin for WordPress, Blogger...