Pages

Back to Top

தன்னம்பிக்கை

சுய மதிப்பீடு,


நமக்கு என்ன திறமை இருக்கிறது? நாம் எந்த அளவுக்கு கெட்டிக்காரர்கள்


என்பதை நாமே அறிந்து கொள்ள வேண்டும். அது தெரிந்து விட்டால், நம்முடைய


வெற்றி என்பது வெகு சுலபமாககைகூடிவிடும். நம்முடைய உண்மையான தகுதி


பொதுவாக நமக்குத்தெரிவதில்லை. மற்றவர்கள் அவ்வப்போது நம்மைப்பற்றிச்


சொன்ன கருத்துக்களின் அடிப்படையில்தான் நாம் நம்மைப்பற்றி மதிப்பீடு


செய்கிரோம். நம்மைப்பற்றி நாம் கொண்டுள்ள மதிப்பீடு என்ன? நம்முடைய


உண்மையான தகுதி என்ன? இந்த இரண்டையும் ஒரு காகிதத்தில் எழுதிப்


பார்த்தாலே பலௌண்மைகள் பளிச்சிடும்.பத்து வருடங்களுக்கு முன்னால்


நம்முடைய அப்பா ஒரு லெட்டரைக்கூட உன்னால் ஒழுங்காக எழுத முடிகிரதா/


என்று கேட்ட கேள்வி இப்போதும் உறுத்திக்கொண்டே இருந்தால் பயனில்லை.


நம்மால் ஒருகடிதத்தை சரியாக எழுத முடியாதது அன்று உண்மையாக இருந்திருக்கலாம். இன்றும் அதுவே உண்மை அல்ல. நம் முழு சக்தியை பயன்


படுத்தாமல், நாம் பல காரியங்களை செய்துவிட்டு, நம் முழு சக்தியே இவ்வளவுதான் என்று முடிவு செய்கிரோம். ஒருகாரை முதல் கியரிலேயே ஓட்டிக்கொண்டிருந்துவிட்டு, அதுதான் காரின் வேகம் என்று சொல்வது எவ்வளவு தவறோ, அவ்வளவு தவறுதான் இதுவும். பலமனோதத்துவ நிபுணர்கள்


சொல்கிறார்கள், ஒவ்வொரு மனிதனும் தன் திறமையில் நூற்றில் ஒரு பங்கைக்கூட உபயோகிப்பதில்லை. என்று. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது கூட சராசரி என்று உட்ரோ வில்சனை குறித்து


பேசினார்கள். அப்புறம்தான் அவருக்கே தன் உண்மைத்தகுதி புலப்பட்டது.


அமெரிக்காவின் சிறந்த ஜனாதிபதிகளில் அவரும் ஒருவராக மாறினார்.


நம்மை நாமே அறிந்தால் தான் முன்னேற்றம் வரும். தோல்வி என்னும் மூடு


பனியிலே அகப்பட்டுக்கொண்டிருக்கும் பலரை சில சமயங்களில் இதைப்போன்ற கட்டுரைகள் எழுப்பி விடும். சிலபேரை சில அறிவு நூல்கள்


பளிச்சென்று விழிக்கவைக்கும். உங்களைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிரீர்கள்


அந்த நினைப்பை ஒரு காகிதத்தில் எழுதுங்கள். உங்கள் கருத்துப்படி உங்களுடைய உண்மையான தகுதி என்ன என்பதை கண்டு பிடியுங்கள்.


நீங்க என்னவாக ஆசைப்படுகிரீர்கள் என்பதையும் ஒருகாகிதத்தில் எழுதுங்கள்.


இப்படி ஒரு புதிய உருவம் எடுக்க உங்களிடம் என்ன தகுதிகள் உள்ளன என்பதையும் யோசியுங்கள். இந்த புதிய தீர்மனப்படி வாழ்க்கையைத்தொடர்வது


என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

14 comments:

ஆமினா said...

//நம்மை நாமே அறிந்தால் தான் முன்னேற்றம் வரும்.//

அழகா சொல்லியிருக்கீங்க.

வாழ்த்துக்கள்

Lakshmi said...

நன்றி ஆமினா.அடிக்கடி வாங்க.

ஆனந்தி.. said...

நல்லா இருக்கு உங்க பதிவு...சுயமதிப்பீடு குறித்து நல்ல அலசல்...பகிர்வுக்கு நன்றி..

தேவன் மாயம் said...

அம்மா! நல்லாச் சொல்லியிருக்கீங்க!! தொடருங்கள்!

vanathy said...

அருமையா இருக்கு.

இலா said...

அட ! நீங்க யாரம்மா ?? என்னோட மனசின் எதிரொலி போல இருக்கு :)) Are you reading my mind ???
மீண்டும் வருகிறேன். தற்காலம் நேரமின்மையால் குறுகிய பின்னூட்டம் ...

அன்புடன் மலிக்கா said...

அருமையான சுயமதிப்பீடு குறித்து நல்ல அலசல் பதிவு.

பெரியங்க பெரியவங்கதான். பாராட்டுக்கள்மா..

polurdhayanithi said...

nallathu parattugal
polurdhayanithi

Lakshmi said...

ஆனந்தி வருகைக்கு நன்றிம்மா. அடிக்கடி வந்து பாருங்க.

Lakshmi said...

தேவன் மாயம். அடிக்கடி வந்து ஆலோசனைகள் சொல்லுங்க.

Lakshmi said...

வானதி வருகைக்கு நன்றிம்மா. எல்லாரும் அப்படியே என் இன்னொரு ப்ளாக்கிலும் வந்து பின்னூட்டம் கொடுங்க.(குறை ஒன்றும் இல்லை)

Lakshmi said...

இலா உங்க பின்னூட்டம் பார்த்து ரொம்ப சந்தோஷம். என்னை உங்க மனச்சாட்சின்னு நினைச்சுக்கோங்க. இது போல என் 2 ப்ளாக்கிலும் வந்துபாத்து கருத்தை சொல்லுங்க.

Lakshmi said...

அன்புடன் மலிக்கா உங்களின் வருகைக்கும் நன்றி அடிக்கடி வாங்க , இங்கும்,என் இன்னொரு ப்ளாக்குக்கும்.

Lakshmi said...

தயாநிதி உங்க வருகைக்கும் நன்றிகள். இன்னொரு ப்ளாக்கிலும் வந்து பார்த்து கருத்துக்களைச்சொல்லவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...